காலம் - 52

415 39 70
                                    

அழுகுரல் வந்த திசையை நோக்கி அடி எடுத்து வைத்த தாஹினி அந்த இரயிலின் கதவை மெல்ல திறந்து உள்ளே செல்ல... பழைய காலத்து இரயில் தானென அதன் உட்புறமும் தெளிவு படுத்த... அந்த அழுகுரலிற்கு காரணமாய் ஒரு பெண் கீழே முட்டியிட்டு அமர்ந்து அழுவதை கண்டவள் அவளின் தோளை தொட... சட்டென நிமிர்ந்து கண்ணீருடன் அவளை பார்த்தாள் நூரா...

தாஹினியின் கண்கள் புதியவளை கண்டு ஆச்சர்யமாய் விரிய... நூராவிற்கோ ஆச்சர்யம் தாங்கவில்லை... கண்களை நாழு சென்ட்டிமீட்டர் விரித்து வைத்தவள் தான் காண்பது கணவில்லையே என்று தன்னையே கிள்ளி பார்த்து கொண்டாள்...

அந்த நேரம் " ஏ லூசு ... நா பசி மயக்கத்துல திட்டிட்டேன் டி... " என கத்தி கொண்டே உள்ளே வந்து தாஹினியை கண்டதில் ஸடன்னாய் நின்றாள் நம் வித்யா...

இவள் யாரென்பதை போல் தாஹினி வித்யாவை நோக்க... வித்யாவின் வேல்விழிகள் தாஹினியை காண்டதில் வெகுவாய் விரிந்தது...

நேரம் தவறாது தூக்கம் கலையாமல் கண்களை தேய்த்தவாறு கொட்டாவி விட்டு கொண்டே வந்து தாஹினியை கண்டதும் " பாரேன்... கணவுல கூட நம்ம இடத்துல வேற ஏதோ ஒரு பொண்ணிருக்குர மாரி இருக்கு " என பிதற்றினாள் ஹைடி...

ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட நூராவும் வித்யாவும் ஆஆஆ என அலர... அதில் தூக்கம் பறந்து விட பயந்து போய் ஹைடியும் அலர... உள்ளிருந்து என்ன ஆச்சு ஏதாச்சு என பதறி ஓடி வந்த வன்யா மற்றும் ஹரித்தாவும் தாஹினியை கண்டு அலர.... அதில் திடுக்கிட்டு தாஹினியும் அலர... இரயிலும் தான் இவ்விடத்தை விட்டு அகல போவதாய் அலரி விட்டு அந்நிலயத்தை தாண்டி தடதடவென்ற ஓசையுடன் கிளம்பியது...

வன்யா : ஏ ச்சீ கத்தாதீங்க... என நடுவில் நின்று கத்த... கப்சிப்பென வாயை மூடி கொண்ட மற்ற ஐவரும் முளித்து முளித்து பார்த்தனர்... பின்னே இரயில் நகர்வதை உணர்ந்து கொண்ட தாஹினி பறபறக்க தொடங்கினாள்...

தாஹினி : எக்ஸ்க்யூஸ்மி... கொஞ்சம் ட்ரைன நிறுத்துரீங்களா... நா இறங்கனும்... தப்பா ஏறீட்டேன் ப்லீஸ்... உதவி பன்னுங்.க...

காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது)Where stories live. Discover now