அழகியல்

By GuardianoftheMoon

12.8K 1K 675

" எவ்ளோ கஷ்டப்பட்டு நீ தான் வேணும்னு வீட்ல சண்ட போட்டு இப்போ engagement ல வந்து நிக்கிரோம். இப்போ வந்து பிரிஞ... More

அழகியல் - Preface
1. தூரம்
2. புதுமை
3. காத்திருப்பு-1
4. காத்திருப்பு-2
5. இரண்டாம் கணம்
6. மூன்றாம் முறை
7. குரல்
8. பார்க்கலாம்
9. செடி
10. சரிவு
11. வரவு
12. பிரிவு
13. உலக நியதி
நிறுத்தம் - Author's Note
14. மனப்பாடம்
ஒரு கதை சொல்லட்டுமா ?
15. சூரியோதயம்
16. STD booth
17. பூப்புனித நீராட்டு விழா
18. வேலை
19. நண்பன்:)
20. சென்னை
21. பணம்
22. ராவணா
23. ராவணா - 2
24. மன்னிப்பு
25. ராஜ் ஆபீஸ் போறானாம்
27. ஜொலித்த இரவு - 2

26. ஜொலித்த இரவு

246 16 3
By GuardianoftheMoon

டாக்ஸி என்னை அபார்ட்மெண்ட் வாசலில் இறக்கிவிட்டு தன் அடுத்த வருமானத்தை தேடிச் சென்றது. என் சௌகரியத்துக்காக இனாபா வீட்டு கூடத்திலிருந்து ஒரு ஸ்டூலை எடுத்து வாசலில் போட்டிருந்தான். அந்த ஸ்டூலில் அமர்ந்து crutches ஐ சுவற்றோடு சாய்த்து பின் பேண்ட் பாக்கட்டிலிருந்து வீட்டு சாவியை தேடியெடுத்து கதவை திறந்தேன். ஆண்களின் பேண்ட் பாக்கெட் பாதாளக்குழி போல பெரிதாய் பல பொருட்களைக் கொண்டிருக்கும். காலையிலிருந்து சாயங்காலம் வரை குளிரில் உரைந்திருந்த வீடு வெளியுலகத்தின் வெப்பத்தில் கொஞ்சம் குளிர் காய்ந்தது. தெரு விளக்குகளின் வெளிச்சத்தில் சுவிட்சைக் கண்டுபிடித்து என் வீட்டு விளக்குக்கு ஒலி கொடுத்தேன்.

முதல் வேலையாய் ரைஸ் குக்கரில் அரிசியை வைத்துவிட்டு அரிசி அவியும் நேரத்தில் உடை மாற்றி முகம் கழுவினேன். மீண்டும் கிட்சனுக்கு வந்து ப்ரிட்ஜை திறந்து டப்பாவை எடுத்து கையில் மோர் குழம்பை பிடித்தபோது ஜில் டப்பாவின் குளிர் என் மனதையும் குளிரவைத்தது. நீங்கள் எதிர்பார்த்தது போல் ஜனனி ஒன்றும் அனுதினமும் வந்து சமைத்து வைக்கவில்லை. அவள் சமைத்து டெலிவரி மூலம் டப்பாக்களை அனுப்பி வைத்தாள். ஆம், இரவுகளை அவளின் சமையலோடு கழித்தேனே ஒழிய அவளின் இன் முகத்தைக் கண்டு பத்து நாட்களாயிருந்தன. சோறு மல்லிகைப் பூவாய் மலர்ந்ததும் மோர் குழம்பை சுட வைத்து நான்கு frozen சிக்கன் பீஸை பொறித்து எல்லாவற்றையும் தட்டையில் குமித்து ஹாலுக்கு கொண்டுவந்தேன். அங்கே காபி டேபிளில் உணவை வைத்து இரு கால்களையும் நீட்டி தரையில் அமர்ந்தேன். இன்று ஜனனி போனை எடுப்பாளா என்பது 50-50 கேள்வி. அவளுக்கு ஒரு "ஹெலோ, ரெடி டு ஈட்? (hello, ready to eat?)" என மெசேஜ் அனுப்பிவிட்டு வீடியோ கால் பத்தானை அமுக்கினேன். யாரோ கடவுளின் கருணையை பெறவில்லை போலும் இன்று அவரிடம் கூடுதலாக இருந்த கருணையை எனக்கு அளிக்க இரு நிமிடங்களில் ஜனனி போனை எடுத்தாள்.

"ஹாய் ராஜ்! இரு, நான் கத்தரிக்காய பிரட்டிட்டு வர்ரேன்," என்றவள் திரையிலிருந்து மறைந்து 3 நிமிடங்களுக்கு பின் மீண்டும் தோன்றினாள். கிட்சனுடன் சேர்ந்து இருந்த island kitchen top இல் ஒய்யாரமாய் அமர்ந்தவள் என்னை நோக்கினாள்.

"நீ வெள்ளிக்கிழமை கொடுத்த மோர் குழம்பு தான், நீயும் அதை தான சாப்புடுற?," என சோற்றை ஒரு பிடி பிடித்துக் காட்டினேன்.

"அச்சோ ராஜ், மோர் குழம்பு அன்னைக்கே சாப்பிடனும். ரெண்டு நாள் கழிச்சு சாப்பிடுறீங்க. நான் இன்னைக்கு வேற சமைச்சிருக்கேன். சரி, முதல் நாள் வேலை எப்படி இருந்தது?"

"ஆ... குட் குட். நேரம் போனது தெரியல. நீ எப்போ வீட்டுக்கு ஒரு விசிட் வர்ர?"

"நேரம் இருந்தா வரமாட்டேனா? பார்க்கலாம்" அவள் திரையை பார்த்து புன்னகைத்தாளும் அவளின் புன்னகை என் ஏமாற்றத்தை குறைக்கவில்லை.

"நொண்டியானாலும் இவ்ளோ அக்கறை தான் கிடைக்கும் போல. அடுத்த தடவ பெருசா ஏதாவது டேமேஜ் பண்ணனும்" கிண்டலாய் கூறினாலும் ஏமாற்றத்தை மறைக்கவில்லை நான்.

"நீங்கள் என்ன உடைச்சாலும் இவ்வளவு அக்கறை தான் கிடைக்கும்." ஜனனி ஒளிவு மறைவின்றி சொன்னாள்.

"தனியா இருக்கேன் வந்து பார்க்கலாம், பேசலாம் நு சொன்னேன்."

"Patients களுக்கு பிஸியோ பார்ப்பது அதிக உடல் வலிமையும் எனர்ஜியும் தேவைப்படும். கையை தூக்குவது அவர்களின் உடல் எடையை தாங்கி அவர்களை நேராக நிற்கவைத்து நடக்க வைப்பது என நம் உடல் சார்ந்த வேலை பிஸியோதெரபிஸ்ட். உங்களை தாண்டி என் வாழ்க்கைல நிறைய பேர் இருக்காங்க ராஜ்: அமெரிக்கால பேமிலி, நண்பர்கள் நு எல்லார்கிட்டயும் வேலை பிறகு மிஞ்சி இருக்கிற கொஞ்ச நேரத்தை செலழிக்க விருப்புறேன். I also want to spend time with myself. ஒரு ப்ரெண்ட் கூட எவ்வளவு நேரம் செலவழிக்க முடியுமோ அவ்வளவு நேரத்தை தான் என்னால கிப்ட் பண்ண முடியும். இந்த பாவமாக முகத்தை வச்சிக்கிறது எங்கள் கிட்ட வேலைக்கு ஆகாது. " ஜனனி ஒற்றை புருவத்தைத் தூக்கி புரிந்ததா எனக் கேட்டாள்.

"செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு பட் நமக்கு தான் வெ.மா.சூ.சொ எதுவும் இல்லயே. என் கிட்ட பேச நேரம் இல்லாட்டியும் குழம்பு அனுப்புறத மறந்துராதீங்க."

ஜனனி பதிலுக்கு சிரித்தாள்.

எப்போதும் என்னையே சுற்றி வந்த வினோதினி, தன் முழு வாழ்க்கையை என்னை மய்யமாய் வைத்து வாழ்ந்த வினோதினி இப்போது நியாபகத்துக்கு வந்தாள். இது தான் வரைமுறை என தெளிவாய் ஜனனி கோடிட்டது எனக்கும் வினோதினிக்கும் புரியாத ஒன்று, நாங்கள் புரிய(செய்ய) மறுத்த ஒன்று. தேவையான நேரத்திலும் தேவையற்ற நேரத்திலும் என்னை சீண்டிக்கொண்டு, என் நலன் விசாரித்து, என்னோடு கூடவே இருந்ததால் எங்கள் இருவரிடத்த்தில் அன்போடு எரிச்சலும் பற்றிக்கொண்டது. கையில் இருந்து காசு கரைய சுயமரியாதையை பனையம் வைத்து மைக்கலில் அண்ணன், மதனின் பைக் வொர்க்‌ஷாப்பில், எனக்கும் ஒரு வேலை வாங்கி தருமாறு கேட்டேன்.

மதன், ஆச்சரியத்துடனும் கோபத்துடனும் மறுத்தான், " நீ டிகிரி படிச்சவன் டா. நான் பத்தாவது பெயிலு. நீ இதுலாம் பண்ண கூடாது. நல்ல வேலை சீக்கிரமே வரும் ராஜ்."

"அது வர்ரவரைக்கும் வயித்துக்கு என்ன பண்றது அண்ணே? வந்த மாதிரியே வெறுங்கையா ஊருக்கு திரும்புற அவமானத்துக்கு இங்கேயே பைக் மெக்கானிக்கா வேலை பார்த்திடுவேன்"

"ம்ம்ம்... முதலாளி கிட்ட பேசுறேன். நான் நாளைக்கு வேலைக்கு போகும்போது நீயும் கூட வா." நான் சென்னை வந்த புதிதிலிருந்து இன்றுவரை எனக்கு மதன் வழிகாட்டியாய் இருந்தான்.

அதிகாலையில் மதனின் தோளைப் பற்றிக்கொண்டு அவனின் பைக்கின் பின்னால் தொற்றிக்கொண்டேன். கொஞ்சம் பெரிய வொர்க்‌ஷாப் தான். கார்களும் அங்கு பழுதுப்பார்க்கப்பட்டன. மதன் என்னை அறிமுகப்படுத்தியபோது அவரும் கேள்விக் கேட்டார், "டிகிரி படிச்சிட்டு இங்க வேலை வேணும்னு கேட்குறியே பா?" காலேஜ் முடித்ததும் பட்டதாரி என்று பெருமைபீத்திக்கொண்ட எனக்கு இப்போது அப்பட்டம் வெட்கத்தைத் தந்தது.

"சரி, கூட இரு."

இந்த புது வேலையைப் பற்றி வினோதினியிடம் கூறவில்லை. கூறினாலும் அவள் ஆறுதலும் பாராட்டுமாய் பொழிவாள் ஒழிய அவள் எவ்வேலையையும் குறைவாய் எண்ணமாட்டாள். ஆனால் அவளிடம் என் கஷ்டத்தைக் கூற விருப்பமில்லை. தினமும் காரில் வேலைக்கு போகிறவளுக்கு, அனுதினமும் நன்றாய் உண்டு உறங்குபவளுக்கு வயிற்றுப்பொழப்புக்காக நான் பார்க்கும் இவ்வேலைப் பற்றி சொல்ல விருப்பம் இல்லை. அவளுக்கு புரியவும் போவதில்லை. இந்த வேலைக் கிடைத்ததற்கு வினோ பாராட்டுவாள் ஆனால் அப்பாராட்டல் எனது வலியை அதிகப்படுத்தும், எனது இல்லாமையை பெரிதாக்கும்.

ஆனால் அந்த வொர்க்‌ஷாப்பில் நான் மூன்று மாதம் வேலைப் பார்த்தது புத்தகப் பட்டதாரியான என்னை பிராக்டிகல் எஞ்சினியராக மாற்றியது. மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் பைக் கு ஆயில் மாற்றிக்கொண்டிருந்தபோது முதலாளி வந்தார்.

"இந்தாப்பா ராஜ் இத புடி. என்ன கையு ஆயிலா இருக்கு? சரி, இத இங்க வைக்கிறேன். அப்புறம் எடுத்துக்கோ."

"என்ன முதலாளி பேப்பரு?"

"ஹோண்டா கம்பனி பேக்டரில வேலைடா. எனக்கு அங்க ஆள் தெரியும், உன்ன பத்தி சொன்னேன். நாளைக்கு இண்டர்வியூ. எனக்கு தெரிஞ்ச ஆளுங்க தான். நாளைக்கு போய்ட்டு வா."

"ரொம்ப நன்றி முதலாளி. இத நான் சுத்தமா நினைச்சுப்பார்க்கல."

"இது பேக்டரி வேல தான். அவ்ளோ பெரிய உத்தியோகமில்ல. ஆனா இந்த வொர்க்‌ஷாப் நீ இருக்க வேண்டிய இடம் இல்ல. எதோ எனக்கு இந்த சின்ன சின்ன ஆளுங்கள தான் தெரியும் அவங்க மூலமா என்னால இந்த வேலைக்கு தான் இண்டர்வியூ வாங்கி தர முடியும் டா."

....
தொடரும். மன்னிச்சுங்க, இவளோ நாள் காணாம போனதுக்கு:( எனக்கும் ரொம்ப வருத்தமா இருக்கு :(

மைனா வுடன் தொடர்பு கொள்ள டிவிட்டர் இல் @_lilblackbird எனும் ஐடியை தேடவும். பறவை அங்கு தான் சுத்திட்டு இருக்கு இவளோ நாள் புக் எழுதலைன்னு வெட்கமே இல்லாம.

Continue Reading

You'll Also Like

58K 2.3K 36
காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உ...
61.5K 4.1K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...
163K 14.2K 63
A GIRL, "KADAVULE INDHA VELAYACHUM ENAKKU SET AAGANUM ADHUKKU MUNNADI INDHA VELA ENAKKU KIDAIKKANU.... NEE UN KULANDHAIYA KOODAVE IRUNDHU KAAPATHIRU...
508 10 3
என்னோட முதல் கதை... இப்போ அமேசான் re எடிட்க்காக மொத்தமா மாத்தி இருக்கேன்🧘🧘