காலத்தின் மாய மரணம்... (முடிவ...

By adviser_98

33.4K 2.6K 5.8K

இது என் ஐந்தாவது கதை.... பிழை புரியா பேதை அவள்... மனம் புரியா பாவை அவள்... விட்டால் போதுமென ஓடும் முயல் அவள்... More

காலம் -1
காலம்-2
காலம்-3
காலம்-4
பகுதி-5
காலம் -6
காலம் -7
information
காலம் -8
காலம்-9
காலம்-10
காலம் - 11
காலம் - 12
காலம்-13
காலம் - 14
காலம் - 16
காலம் -17
காலம் - 18
19
காலம் - 20
காலம் - 21
காலம் -22
காலம் - 23
காலம் - 24
காலம் - 25
காலம் - 26
காலம் - 27
காலம் - 28
காலம் - 29
காலம் -30
காலம் - 31
காலம் - 32
காலம் - 33
காலம் - 34
காலம் - 35
காலம் -36
காலம் - 37
காலம் - 38
காலம் -39
காலம் - 40
காலம் - 41
Channel update
காலம் - 42
காலம் - 43
காலம் - 44
காலம் - 45
காலம் - 46
காலம் - 47
காலம் - 48
காலம் - 49
important
காலம் - 50
காலம் - 51
காலம் - 52
காலம் - 53
காலம் - 54
காலம் - 55
காலம் - 56
காலம் - 57
காலம் - 58 (நிறைவுபகுதி -1)
காலம் - 59 (நிறைவு பகுதி - 2)
நன்றியுறை
வெரி இம்ப்பார்ட்டென்ட்

காலம் -15

491 45 108
By adviser_98

விட்டத்தை வெறித்து கொண்டு கொசுவர்த்தியை சுழல விட்டவாறு அமர்ந்திருந்த ராமலிங்கம்... தன் அண்ணனின் வார்த்தைகளே மீண்டும் ஒலிக்க... அன்று அவன் வயிற்றில் கத்தி இறங்கிய வேகத்திற்கு இரும்பு கம்பிகளையும் மீறி கொண்டு எகிரி குதித்து அக்கம்பியாலே தன் கழுத்தை நெறித்து பாதி கிழித்து விழ வைத்த அவனின் அதே காட்சி நினைவில் வர... சட்டென எழுந்தவர்... அவரின் மனைவி ஷீலா வைத்து விட்டு சென்ற தேனீரை எடுத்து அருந்த தொடங்கினார்...

அவ்வீட்டிலே ஒரு சோபாவில் அமர்ந்து தனக்கு தெரியாத ஆங்கிலத்தில் ஏதோ முதுகலை முடித்ததை போல் மூக்கு கன்னாடியை ஏற்றி இறக்கி ஆங்கில செய்தி தாளை தலை கீழாய் பார்க்கிறோம் என்று கூட கவனிக்காமேல் அதை பார்த்து கொண்டிருந்தார் வேதா...

ஷீலா அவரை கண்டு சலித்தவாறு சமையலை காண சென்றார்... ராஜலிங்கம் அவரின் அறையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்...

வாருங்கள் இக்குடும்பத்தை பற்றி ஒரு ப்ரோமோ பார்த்து விட்டு வருவோம்...

மூத்த வாரிசு ராஜலிங்கம் இளைய வாரிசு ராமலிங்கம்... இரண்டும் பெற்றோருக்கு அடங்காத தருதலைகள்..

தீரா : ஓவரா போறோமோ..... போவோம்.. என்ன பன்னிடுவாய்ங்க...

இருவது வருடத்திற்கு மேலாகவே இவ்வூரில் முக்கிய பதிவியில் நிலைத்து நிற்பவர் லிங்கம்... அவ்வூருக்கே லிங்கம் தான் கடவுள்.... அவர் சொல் தான் அவர்களுக்கு வேதவாக்கு... எது சொன்னாலும் கண்ணை மூடி கொண்டு நம்புவார்கள்...

தீரா : அவருக்கு இருவது வயசு தா ஆகுதுன்னு சொன்னா கூட நம்புவாய்ங்க....

பணத்திற்காக சுவாசிக்கும் காற்றை கூட விற்க தயங்க மாட்டார்... அந்த அளவிற்கு சுயநலவாதி... ஆனால் அவர் குடும்பத்திற்கு தீங்காய் எதையும் இழைத்து விட மாட்டார்... பாசமெல்லாம் இல்லை... கௌரவம் மட்டும் தான்....

இவர் குணத்திற்கு ஏற்றவாறே... அவருக்கு துணையும் அமைந்தது தான் தாமதம்... இருவரும் ஏதோ இக்கிராமத்தை தங்கள் காலடியில் உள்ள ஒரு ராஜ்ஜியம் என்ற ரேஞ்சிற்கு நினைத்து நடத்த தொடங்கி விட்டனர்...

வேதநாயகி குணத்தில் பித்தளை குண்டமென்று வேண்டுமானால் கூறலாம்... ஆனால் அதற்கு தங்க நிற பெயின்ட்டடித்து ஊரை ஏமாற்றி வருகிறார்... பார்க்க தான் அவர் நல்லவர்... ஆனால் உள்ளுக்குள் முழுக்க முழுக்க பேராசை நிறம்பியவர்.... பணத்தில் புறழும் ஆசை கனவில் வந்தது போல...  தகுதி தாரம் பார்த்து பழகுபவர்....

அனைவரிடமும் ஏதோ தியாக செம்மலை போட்டு காட்டி கொண்டாலும் சிலரிடம் நேருக்கு நேராகவே முகத்தை சுழிப்பார்... அப்படி ஒரு முறை சுழித்ததனால் மூக்கில் ஏற்பட்ட காயம் இன்றும் அழியவில்லை... கொஞ்சம் மறதி வேறு... அதை அவர் சாதாகமாய் தான் எடுத்து கொள்வார்.... ஏனெனில் மறதி இருப்பதை காரணமாய் கூறியே செய்து கொடுக்கிறேன் என கூறிய அனைத்து காரியங்களையும் தட்டி கழித்து விடுவார்... இதனால் ஊர் மக்கள் பலர் அவதி பட்டிருக்கின்றனர்....

ஆனால் இம்மறதி தான் அவர்கள் செய்த அனைத்து அட்டூழியங்களுக்கும் முற்று புள்ளி வைத்த நேரம் அது அடுத்த புள்ளி வைத்தும்... தானே அறியாமல் கமாவாக மாற்றி இப்போது மரண சாசனத்தை எழுத போகிறதென்று இவர்கள் அறியப்போவதில்லை....

ராமலிங்கம் அவரின் அண்ணன் குணத்தை ஒத்தவர்... பணத்திற்காக எது வேண்டுமானாலும் செய்வார்... தனக்கு என்றுமே மரியாதை இருக்க வேண்டும் என்ற அடங்காத்தனம் அவருக்கு... தன்னை கண்டால் அனைவரும் உடனே நடுங்க வேண்டும் என்ற பேராசை வேறு...

இதில் தன்னையே ஒருவன் நடுங்க வைத்து விட்டானே என அவ்வப்போது கழுத்திலிருந்த தழும்பை தடவி பார்த்து கொள்வார்....

வைத்தியநாதன்... லிங்கத்தின் பினாமி... அவர் செய்யும் அனைத்து காரியத்திற்கும் இவர் உடந்தை... லிங்கத்தின் வலது கை இடது கை அனைத்தும் இவரே... லிங்கத்தை அது செய் இது செய் என ஏற்றி விடுவதும் இவரே...

சுந்தராசு இருவது வருடத்திற்கும் மேலாக லிங்கம் செய்து வரும் அனைத்தும் குற்றங்களையும் அரசாங்கத்தின் பார்வையிலிருந்து மறைத்து வைத்திருக்கும் பாவி...

லிங்கம் மற்றும் வேதாவின் ஒரே மகள் தமையந்தி... இருவது வயது வரை அழகு பதுமையென எந்த கெட்ட எண்ணமுமின்றி ஒழுக்கமான பன்பான பெண்ணாய் சுற்றி திருந்தவர் அதன் பின் முற்றிலும் மாறி போனார்... மாறி போனார் என்பதை விட வெளிகாட்ட தொடங்கினார்... ஒரு பொருள் வேண்டுமென்றால் அது எப்பாடு பட்டாவது தன்னிடம் வந்தே தீர வேண்டும்... அதற்காய் எந்த எல்லைக்கும் செல்வார்... நகைகள் மேல் அளவு கடந்த ஆசை கொண்டுள்ளவர்.... என்றும் தனக்கொரு அவப்பெயரும் இருக்க கூடாதென பார்த்து பார்த்து இருப்பார்... ஆனால் செய்ய வேண்டியதை கொலை செய்தாவது முடித்து விடுவார்... அழகிருக்கிறதென்ற சிறு ஆணவம் உண்டு...

அவர் கணவர் பாலுசுந்தர்... பெரும்பாலும் அமைதியாய் தான் இருப்பார்... அவர் மனைவியின் பின்னே தா சுற்றி திரிவார்.... குடிக்கு அடிமையாவர்... சில முறை குடிக்க பணமில்லாமல் திருட முயன்று காவலர்களிடமும் சிக்கியுள்ளர்... தமையந்தி இன்று வரையும் ஏன் தான் இவரை திருமணம் செய்தோமோ என தலையிலடித்து கொள்வார்... ஆனால் தான் ஒரு கணவனாய் தமையந்திக்கு துரோகம் இழைக்காமல் பொருப்பாய் தான் இருந்தார்....

ஷீலா மட்டும் தான் இக்கூட்டத்திலே நல்உள்ளம் கொண்டவர்... அவருக்கு இவர்கள் செய்யும் சதி எதுவும் தெரியாது... அமைதியானவர் என்பதால் கை குள் போட்டு கொண்டு சுற்றுகின்றனர்... ராமலிங்கம் ஷீலாவிற்கு ஒரே ஒரு மகன் தான்... ஆனால் எங்கு ஆண் பிள்ளை என்பதால் மொத்த சொத்தும் அவனிடம் சென்று விடுமோ என்று பயந்த வேதா லிங்கத்துடன் ராமலிங்கத்திற்கும் ஷீலாவிற்கும் தெரியாமல் உணவில் விஷத்தை கலந்து உடல் நல குறைவால் இறந்து விட்டான் என கதையை மாற்றி விட்டனர்...

அடுத்த முறையாக வேதா மற்றும் லிங்கத்திற்கு பிறந்த ஆண் குழந்தையை எங்கு தனக்கு சொத்து கிடைக்காமல் இவனுக்கு போய் விடுமோ என பயந்து பிஞ்சாய் இருக்கும் பொழுதே ராமலிங்கம் யாவரும் அறியாது கொன்றுவிட்டார்....

தீரா : இதுங்க குடும்பம்ங்குர பேருல சுத்திக்கிட்டு இருக்குதுங்க....

ஆனால் ராமலிங்கம் உண்மையில் தமையந்தி மீது அதீத அன்பு கொண்டவர்.... வீட்டிற்கு ஒரே குழந்தை என்பதால் ராமலிங்கத்திற்கு மிகவும் செல்லம்... அந்த தழும்பை ராமலிங்கம் தடவியவாறு இருந்த போது குலுக்கலுடன் வந்து நின்றது அந்த மதிலுந்து.... அதிலிருந்து வேண்டா வெறுப்பாய் அவர் கணவரை அர்ச்சனை செய்து கொண்டே இறங்கினார் தமையந்தி...

ராமு : வாடா தமையந்தி... வாங்க மாப்பிள்ளை... வாங்க... என உடுனே சென்று வரவேற்த்தார்...

தமையந்தி : வரேன் சித்திப்பா... எப்டி இருக்கீங்க... சித்தி எப்டி இருக்காங்க...

ராமு : நல்லா இருக்கோம் டா... வா வா... எதாவது சாப்டியா... சித்திய எதாவது செய்ய சொல்லட்டா....

தமையந்தி : அதெல்லாம் வேண்டாம் சித்தப்பா... நீங்க ஏன் இப்டி மழை சாரலடிக்கிர இடத்துல உக்காந்துருக்கீங்க... உள்ள வாங்க...

ராமு : வரேன் மா... மாப்பிள்ளை பைய கொடுங்க...

பாலு : இருக்கட்டும் மாமா...

தமையந்தி : அதெல்லாம் அவரு தூக்கிட்டு வருவாரு... வேற எதுக்கு இருக்காரு வாங்க சித்தப்பா...

ராமு : அட என்னம்மா நீ... நீங்க குடுங்க மாப்பிள்ளை... என அவர் தூக்கி வந்த இரண்டு பைகளையும் வாங்கி கொண்டு உள்ளே சென்றார்.... மற்ற பைகளை ஓட்டுனர் வந்து வைத்து விட்டு சென்றார்...

தன் ஃபோனில் " ஓனர் பைய " என்று சேமிக்கப்பட்டிருந்த எண்ணை இதோடு இருவதாவது முறையாக அழுத்தி அழுத்தி விரல் தேய்ந்தது தான் மிச்சமென ஜன்னலில் அமர்ந்து தன் தனிமை தோழனுடன் உரையாடலில் இருந்தாள் ராதினா...

அவளருகில் வந்த அஃப்ரி அவள் தோளை தொட... தன் நிலையை அடைந்த ராதி அவளை திரும்பி பார்த்தாள்...

அஃப்ரி : என்னாச்சு டி...

ராதி : ஃபோன எடுக்க மாற்றாங்க டி...

அஃப்ரி : அதுக்கு ஏன் நீ மூஞ்ச தொங்க போட்டுட்டு உக்காந்துருக்க...

ராதி : நேத்துலேந்தே எடுக்கல டி... ஒருவேளை உடம்பு முடியாம போய்டுச்சோ என்னவோ... யாருன்னே தெரியாதவனுக்காக ரொம்ப கவலை பட்டுட்டு உக்காந்துருக்கேன்....

அஃப்ரி : ம்க்கும்... உனக்கிந்த பழக்கத்த யாரு பழக்கி விட்டான்னு தெரியல டி... தெருவுல வாரத்துக்கு வர பூக்கார பாட்டி ஒரு வாரம் வரலைன்னா அவங்க ஏதோ படுத்த படுக்கை ஆன மாரி கவல படுவ.. இப்போ இவரு ஒரு நாள் ஃபோன் எடுக்கலன்னு கவலப்பட்டுட்டு இருக்க...

ராதி : என்ன செய்ய பிறவி குணம்.... ஒரு நாள் ஃபோன் எடுப்பாங்கல்ல... அப்ப நல்லா கேட்டு விட்டுர்ரேன்...

அஃப்ரி : சரி இங்க தங்க இடம் கொடுக்க முடியாதுன்னு சொன்னா என்ன டி பன்றது...

ராதி : கண்டிப்பா சொல்ல மாட்டாங்க டி... அன்னைக்கே பொண்ணுங்க நைட்டு நேரத்துல வெளியே இருந்தா பாதுகாப்பில்ல... இங்கையே தங்கிக்கோங்கன்னு சொன்னாங்க... சோ இடம் கிடைக்கும்... என வாணை பார்த்தவாறு கூற....

அஃப்ரி : ஏன் டி இந்த மாரிலாம் நல்லது சொல்ற மாரி கடைசில மிஸ்யூஸ் பன்னுவாங்கன்னு சொல்லுவ.. இப்போ நீயே நம்பலாம்ங்குர...

ராதி : ம்ம் அதெல்லாம் ஆன்லைன் டி... தெரியாத யாரையும் உடனே நம்ப கூடாது... ஒருத்தன் நைட்டு பொண்ணுங்க வெளியே இருக்குரது சேஃபா இருக்காது... என் வீட்ல இருங்கன்னு அந்த வீட்ல இருந்துக்குட்டே சொன்னா... நீ சந்தேகப்படலாம்... அங்க இல்லாம எங்கையோ இருக்குரவன் வீட்டு சாவியோட தங்கீட்டு போய்டுங்கன்னுட்டு மேர் கொண்டு பேசாம வைச்சிட்டாங்கும் போது அவன் மேல சந்தேகப்பட அங்க என்ன தப்பா இருக்கு சொல்லு... அவன் பேச்சுலையும் தப்பு தெரியல... ஏதோ தெரிஞ்சிக்கனுமேன்னு கேட்டமாதிரி தான் இருந்தது... என தன் பார்வையை அவள் புறம் திருப்பியவள் அவளை காணாது விழிக்க... அஃப்ரி அங்கிருந்து அவள் பேச்சை முடிக்கும் போது சரியாக அங்கிருந்து ஓட்டம் பிடித்திருந்தாள்....

ராதி : அடியே எங்க டி ஓடுர...

அஃப்ரி : இனிமேலும் நா அங்க இருந்தா நீ எனக்கு சோசியல் மீடியாவில் எவ்வாறு பாதுகாப்பாய் இருப்பதுன்னு க்லஸ்ஸெடுக்க ஆரம்ச்சாலும் ஆரம்ச்சாடுவ.. என்ன விற்று தாயே... என கும்புடு போட்டு விட்டு ஓட.... புன்னகையினூடே திரும்பிய ராதி ஜன்னல் வழியே யாரோ ஒருவரின் மங்களான விம்பம் வெளியே நிற்பதை கண்டு பார்வையை கூர்மையாக்கினாள்... ஆனால் அவள் இமை மூடி திறந்த அடுத்த நொடி அங்கிருந்து அவன் மறைந்திருந்தான்...

இவ்வளவு நேரம் அவள் அழைப்பதை அறியாது இரயிலின் வரவிற்காய் காத்திருந்தவன் இவள் அழைப்பிற்கு பதிலளிப்பதற்காக வந்து தோழிகள் இருவரும் உரையாடுவதை தன்னையும் மறந்து நின்று கேட்டு கொண்டிருந்த தமிழ் ராதியின் பார்வை தன் மேல் விழுவதை உணர்ந்து அவள் இமை மூடிய நொடி ஒரே தாவில் கூரைக்கு தாவி விட்டான்....

ராதி என்னடா காணும் என ஆராய்ச்சியில் இருக்கும் போது சரியாக அவள் அலைபேசி ஒலிக்க... அட்டென் செய்து காதில் வைத்தவள் ஹலோ என்கும் முன்பே அப்புறத்திலிருந்து அவனின் உற்சாகமான ஹலோ வந்தது...

தமிழ் : ஹலோ... என்றான் சந்தோஷ மிகுதியில்...

ராதி : ஹலோ ஏன் ஃபோன் பன்னா எடுக்க மாற்றீங்க...

தமிழ் : என்னை மன்னிச்சிருங்க... சில வேலைகல்ல இருந்ததால ஃபோன எடுக்க முடியல... நீங்க சொல்லுங்க...

ராதி : ம்ம் எங்களால இந்த வீட்ட தவிற வேற எங்கையும் போக முடியல... தங்க இடமும் கிடைக்கல... நாங்க எப்டியும் ஒரு ஒரு மாசம் தா இங்க இருப்போம்... நீங்க அனுமதிச்சீங்கன்னா... என இழுக்க.... சில நிமிடம் அமைதி நிலவ...

தமிழ் : ம்ம் இந்த ஊர்ல இதான் உங்களுக்கு பாதுகாப்பான இடம்னு நா நெனைக்கிறேன்... சரி உங்க இஷ்டம் எவ்ளோ நாள் வேணா இருங்க... இந்த வீட்லையே நீங்க உக்காந்து இருக்க ஜன்னல் பக்கத்துல ஐந்தடி தூரத்துல இருக்க ரூம்ல ஒரு கபோர்ட் குள்ள சில பத்திரம் இருக்கும்... அது தான் இந்த வீட்டோட பத்திரம்... ஒரு வெள்ளை தாள்ள... இந்த வீட்ல நீங்க ஏழு பேரும் தங்குறதுக்கு நா முழு சம்மதம் குடுக்குறேன்னு எழுதி அங்க இருக்க கருப்பு சீல பதிச்சிருங்க... யாரும் வீட்ட விட்டு போங்கன்னு சொல்ல மாட்டாங்க... எனை கூற... அவன் கூறுவதையெல்லாம் மனதிலே குறித்து வைத்து கொண்டவள்...

ராதி : ம் ரொம்ப நன்றி... எங்கள புரிஞ்சிக்கிட்டதுக்கு...

தமிழ் : இருக்கட்டும்... ஆனா இந்த ஊர்ல இருந்து மூணு வாரத்துல கிளய்புறது உங்களுள்ளு நல்லது... இங்க உள்ள மனுஷங்க அவ்ளோ பாதுகாப்பானவங்க இல்ல...

ராதி : இங்க இருக்கும் போது எங்களுக்கு என்ன ஆபத்து வர போகுது... என அவள் ஏதோ ஒரு நியாபகத்தில் கூற...

தமிழ் : என்ன சொன்னீங்க...

ராதி : நீங்க தான இது எங்களுக்கு பாதுகாப்பான இடம்னு சொன்னீங்க...

தமிழ் : ம்ம் ஆமா... ஆனா எல்லா நேரத்துலையும் பாதுகாப்பு இருக்காது... அதான் சொல்றேன்.... இங்க இருந்து கிளம்பீடுங்க... என்க... சரியாக இவளை நெருங்கிய ஹனா இவனின் கடைசி கூற்றை கேட்டுவிட்டு ராதி பதிலளிக்கும் முன்னே அவளிடமிருந்து ஃபோனை பிடிங்க...

ஹனா : எதுவும் ஆகாம நாங்க பத்திரமா இருந்துக்குறோம்.... எங்களுக்கு எதுவும் ஆகாம இங்க தங்க மட்டும் அனுமதி கொடுங்க அண்ணா... என மனதிலிருந்து கேட்க....

அவளின் அண்ணா என்ற அழைப்பு அவனை ஏதோ செய்தது... பல நினைவுகள் அவன் கண் முன் வந்து செல்ல... இறுதியாய் தூக்கில் தொங்கி கொண்டிருந்தவளின் அந்த மரண காட்சி வேறு நினைவில் வந்து போக... அடுத்த நொடி அவன் கண்கள் கண்ணீரில் நிறம்பியது...

ஹனா : ஹலோ அண்ணா... அண்ணா... என அழைத்து கொண்டே போக....

தமிழ் : ஹான் சொல்லுமா...

ஹனா : நாங்க இங்கையே இருக்கோம் அண்ணா... எதுவா இருந்தாலும் நாங்க சமாளிச்சிப்போம்...

தமிழ் : பெரிய ஆபத்து வரும் டா மா என்கும் போதே அவன் குரல் உடைய தொடங்கியது... ஹனாவின் காதருகில் தன் காதை வைத்து கேட்டு கொண்டிருந்த ராதி அவன் குரலில் திடீர் மாற்றம் உண்டானதை கவனித்து புருவமுடிச்சிட குழப்பமாய் ஹனாவை பார்த்தாள்...

ஹனா : நாங்க பாத்துக்குவோம் அண்ணா... நீங்க அனுமதி மட்டும் கொடுங்க... என்றதும் ராதி அவளிடமிருந்து ஃபோனை பிடிங்கி தன் காதில் வைத்து...

ராதி : ஹலோ என்றாள்... இவளின் குரலை கேட்டவன் தன் உணர்வுகளை தனக்குள்ளே புதைத்து விட்டு...

தமிழ் : ம்ம் சொல்லுங்க...

ராதி : ம்ம் அது... நாங்க இங்க இருக்கலாமா... என தயங்கி தயங்கி கேட்க.... அவன் அமைதியை கடைப்பிடிக்க.... ப்லீஸ் என இழுக்க.... அவளுடனே ஹனாவும் அருகில் நின்று கொண்டு ப்லீஸ் என்க....

தமிழ் : சரி தங்கிக்கோங்க... ஆனா பத்திரம்... என கூற...

ஹனா : யாஹு... தன்க்ஸ் அண்ணா... என கத்தி விட்டு மற்றவர்களிடம் சொல்ல ஓடினாள்....

ராதி : பாத்து போ டி என அவளை எச்சரித்து விட்டு... புன்னகையுடனே... ரொம்ப தன்க்ஸ்.. என்க...

தமிழ் : இட்ஸ் ஓக்கே... பரவால்ல...

ராதி : ஃபோன் எடுக்கும் போது ரொம்ப ஹப்பியா பேசுனீங்க இப்போ அந்த ஹப்பி இல்லையே... என அவ்விடத்திலிருந்து எழுந்து நடந்து கொண்டே கேட்க...

தமிழ் : ம்ம் எல்லா நேரத்துலையும் எல்லா உணர்வுகளும் ஒரே மாரி இருந்துட்டா மட்டும் எல்லா உறவும் எல்லா நேரம் மாரி இருந்துராது இல்லையா....

ராதி : சத்தியம்மா எனக்கு ஒன்னுமே புரியல...

தமிழ் : நா கொஞ்சொ அப்டி தாங்க சிலருக்கு புரியாத புதிரு...

ராதி : ஓஹோ... புதிர்க்கு விடை காணுரவங்கள என்ன சொல்லுவீங்க... புரிஞ்சிக்குரவங்களுக்கு ஆட்கள் புரியாத புதிரா இருந்தாலும் அறியாத கதிரா (ஆளா )இருந்தாலும் உணர்வுகலாளையே எல்லாம் புருஞ்சிடும்...

தீரா : இப்போ நீ சொல்றத எனக்கொன்னும் புரியல டி....

தமிழ் : ஓஹோ... ம்ம்ம்

ராதி : கேக்கனும்னு இருந்தேன்... இந்த ஊர்ல உள்ளவங்க இந்த வீட்ட பத்தி ஏதேதோ சொல்றாங்களே அதெல்லாம் உண்மையா... இல்ல பொய்யா என மாடி படியில் ஏறி கொண்டு தான் எங்கு செல்கிறோமென்றே தெரியாமல் இவள் நடந்து கொண்டே பேச....

தமிழ் : ம்ம்ம் அப்டியும் சொல்ல முடியாது இப்டியும் சொல்ல முடியாது...

ராதி : எல்லாரும் நீங்க இறந்துட்டதா சொல்றாங்க... ஆனா இப்போ நீங்க என் கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க... சொன்னா சண்டைக்கு தா வராங்க...

தமிழ் : ஹ்ம்... நீங்களும் சண்டைக்கு போனீங்க போலருக்கே...

ராதி : பின்ன என்னப்பா... தெரியாத ஒருத்தர பத்தி யாரு எவருன்னு ஒரு சதவீதம் கூட தெரியாம அது இதுனு பேசுனா கோவம் வருவா வராதா... நா சும்மாவே தெரியாத யாரையும் தப்பா பேச கூடாது... மரியாதை குறைவா பேச கூடாதுனு என் ஃப்ரெண்ஸ்ஸுக்கு லெசென் எடுப்பேன்... என் கிட்டையே வந்து செத்தவன்ட்ட எப்டி பேசுனன்னு கேட்டும் போது சுருசுருன்னு கோவம் வந்துடுச்சு.. என பேசி கொண்டே போனவள் தன் முன் தூணிருப்பதை காணாது முன்னேற....

கீழே இவளை தேடி வந்திருந்த தஸ்னி அவள் முட்டி கொள்ள போவதை கண்டு பதறி யோய் ராதி என அழைக்க போக... அவள் முட்டி கொண்டு மாடி படியிலிருந்து கீழே விழுந்தாவது சாகட்டுமென என எண்ணிய சபீ தஸ்னியை ஏதோ பேசி திசை திருப்பினாள்...

சபீ : தஸ்னி... இதுல எத சஹாக்கு குடுக்கனும்... என மாத்திரைகளை காட்டி கேட்க

தஸ்னி : ஒரு நிமிஷம் இரு டி... ஏ ரா... என திரும்பும் முன்னே மீண்டும் பிடித்திழுத்து

சபீ : சொல்லு டி... சஹாக்கு ரொம்ப வலிக்கிதாம்... என கூறும் போது ராதிக்கும் அந்த தூணிற்கும் இரண்டடி இடைவேளை என இருக்க... சபீ தஸ்னி மாத்திரையை பார்த்து கொண்டிருக்கும் போது அவளறியாது ராதியை குரூரமாய் பார்க்க.... சபீயின் மனக்கண்ணில் ராதி அத்தூணில் இடித்து தடுமாறிய அதே வேகத்தில் படிக்கட்டிலிருந்து அப்படியே விழுந்து அவள் தலை கீழே இருக்கும் கன்னாடி டீபாயில் இடிப்பதை போல் காட்சி ஓட.... சரியாக பேசி கொண்டே முன்னேறிய ராதி...

தமிழ் : ம்ம்ம்ம் சரி தான்.... உன் முன்னாடி தூண் இருக்கு... இடது பக்கமா திரும்பு என கூறவும்... காலை வைக்க போன ராதி நிமிர்ந்து தூணை பார்த்து விட்டு....

ராதி : அட ஆமா... பேசீட்டே கவனிக்கல... என தலையிலடித்து கொண்டு அவன் சொன்னது போல் இடது பக்கமாய் சென்றாள்.... இவள் இடிக்க போய் சட்டெனை திரும்பியதை கண்ட சபீ அவளை குரோதமாய் முறைத்து விட்டு தஸ்னியை கண்டு கொள்ளாமல் சென்று விட்டாள்....

தமிழ் : ஹ்ம்... அதெல்லாம் இருக்கட்டும்... செலவுக்கு என்ன பன்ன போறீங்க...

ராதி : நல்லா கேட்டப்பா... அதுக்கு தா என்ன பன்றதுன்னே தெரியல....

தமிழ் : ஹ்ம்... நா வேணா ஒரு யோசனை சொல்றேன்... ஊரு பெரிய மனுஷர் ராஜலிங்கம்னு ஒருத்தர் இருப்பாரு.... அவர்ட்ட போய் வேலைக்கு கேட்டு பாருங்க... உங்களுக்கு ஏத்த மாரி பள்ளி கூடத்துலையோ இல்ல அலுவலகத்துலையோ வேலை வாங்கி குடுப்பாரு... என ஐடியா கூற....

ராதி : ரொம்ப தன்க்ஸ்ஸுங்க... நாங்க நாளைக்கே போய் பாக்குறோம்....

தமிழ் : ம்ம் சரி வேற எதாவதுன்னா கூப்டு... நா வச்சிர்ரேன்... என இவன் ஃபோனை வைக்க... ராதியும் ஃபோனை அணைத்து விட்டு நிமிர்ந்தவள் தான் மாடிக்கு வந்து விட்டதை கண்டு சுற்றி முற்றி பார்த்தாள்.... அன்று அவள் எறிந்த இடத்தில் அந்த புத்தகமில்லாததை கண்டவள் அங்கு அடி எடுத்து வைக்க... பின் ஏதோ நினைத்தவள் எதை பற்றியும் சிந்திக்காமல் கீழே சென்று விட்டாள்....

ஆக தமிழ் அவளை ஒருமையில் அழைத்ததையும்... அவள் எங்கிருக்கிறாள் எந்த இடத்திலிருக்கிறாளென்று அச்சு பிசகாமல் கூறியதையும் ராதி கவனிக்கவில்லை....

மரணம் தொடரும்...

ஈஈஈஈ தூக்க வரல இதயங்களே... அதான்... இது தூகத்த தொறத்துர மாரி பமாலாம் இருக்காது... தைரியமா படிக்கலாம்... குட் நைட்...

DhiraDhi

Continue Reading

You'll Also Like

33.4K 2.6K 64
இது என் ஐந்தாவது கதை.... பிழை புரியா பேதை அவள்... மனம் புரியா பாவை அவள்... விட்டால் போதுமென ஓடும் முயல் அவள்... காத்திருக்க தெரியாதவள்... பலரை ஆவலோடு...
735 32 9
ஒரு மறுஜென்மம் கலந்த திகில் கதை....
4.1K 347 8
Hi!!! hello!!வணக்கம்.😊😊😊 horror னா என்ன னு யோசிச்சிட்டு இருக்கேன்.எப்படியும் கதை எழுதி முடிக்கிறத்துக்கு முன்னாடி கண்டு பிடிச்சுருவேன் னு நினைக்...
149 4 7
காதலால் தடம் மாறிய வாழ்வை மகளாள் சரி செய்ய திட்டமிடும் தாய் ஆனால் சிவனின் சித்தம் வேறு. இதில் இருந்து மீண்டு அவள் பயணம் எதை நோக்கி செல்லும். அஹார்ய த...