அவளும் நானும்

By JkConnect

283K 7.5K 3K

காதலும் சுயமரியாதையும் போட்டி போட காதலை அடைய கண்ணன் செய்யும் வியூகம். அந்த வியூகத்தை கீர்த்தி அறிந்தால் அவனை... More

கல்யாணமாம் கல்யாணம்
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
A/U
18
19
20
21
22
A/U
23
24
25
26
27
A/U
28
29
30
31
31
33
34
35
36
A/U
37
38
A/U

39

16.5K 309 212
By JkConnect

கண்ணண் கீர்த்தியின் கண்கள் மூடியிருப்பதை கண்டு தன் தொடுகையை அவள் விரும்ப வில்லை என்று எண்ணியவன் அவள் கையில் இருந்த பால் செம்பை பிடுங்கி தரையில் வீசினான்.

பால் அறையெங்கும் சிதற,   பால் செம்பு அங்குமிங்கும் உருண்டு ஓடி கண்ணணிண் காலருகே வந்து நின்றது.

கீர்த்தியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. கோபத்துடன் கண்ணணை முறைத்தாள்.

" என்னடீ பார்க்கற? இந்த முட்டை கண்ணால முறைச்சு பார்த்தா நான் பயந்துடுவனா?  ஏன் நான் தொட்டா மேடம்க்கு பிடிக்கலையோ?... " என்று  கீர்த்தியை ஒரு பார்வை பார்த்து விட்டு

" எப்படி பிடிக்கும்.  சங்கர் சார்..." என்று ஆரம்பிக்க,  கீர்த்தியின் அக்கினி பார்வையில் அனல் அதிகமானது.

' என்ன இப்படி பார்க்கறா? என்ன சொன்னேன் ' என்று யோசித்தவன்,  தான் சொன்னதை எண்ணி அருவருப்படைந்து,

" Oh god. I didn't mean  keerthi . நான் உன்னை Insult பண்ணணும் சொல்லல " என்றவன் கீர்த்தியின் முகம் கொதிப்பில் இருந்து தணியாமல் இருப்பதைக் கண்டு இவனும் கொதிப்பாய்

"நான்    சொன்னதுக்கே இப்படி முறைக்கறியே? நான் போகாதனு கையை  பிடிச்சா, என் கைய தட்டி விடற? உன்னை....?  " என்று முறைத்தவன், 

" இன்னொரு முறை நான் தொடும் போது கையை தட்டி விட்ட, நான் மனுசனா இருக்க மாட்டேன் "

கீர்த்திக்கு கண்ணணிண் கோபத்தில் இருந்த நியாயம் சுட,  ' ஆனாலும் இவண் நான் என்ன சொல்ல வர்ரேன்னு கூட கேட்காதவன். என் குடும்பத்தை மதிக்காதவன். இவன நான் ஏன் மதிக்கனும்? '

" இப்ப  நீ மனுசன்னு யார் சொன்னது கண்ணா.  இப்ப நீ ராட்சசன். அதுவும் பைத்தியம் பிடிச்ச முட்டாள் ராட்சசன். " என்றாள் சுவற்றை பார்த்து.

அறைக்குள் வந்ததிலிருந்து பேசாதவள் திடீரென பேசவும், கண்ணணிண் கோபம் குறைந்து இயல்பானான்.

மெல்லிய குரலில் " மனுசனா இருந்தா தான் உங்களுக்கு என்னை பிடிக்காதே.  அதுக்கு நான் ராட்சசனாவே இருந்துட்டு போறேன்".

என்றவன் தனக்குள் பிடிவாதமாய்
' அதுவும் என் பொம்மை மேல பைத்தியம் பிடிச்ச ராட்சசனாவே இருந்துட்டு போறேன். ' என்று நினைத்தவன், கீர்த்தி 'முட்டாள் '  என்றதை தாமதமாக நினைவுக்கு கொண்டு வந்து 

" என்னை பார்த்தா முட்டாளா தெரியுதா உனக்கு? " என்றான் கேள்வியாய்.

கீர்த்தி அவனை  ஒரு கணம் அலட்சியமாய் பார்த்து விட்டு " இங்க பார்,  நான் ஒண்ணும் அந்த சங்கர் கூட டூயட் பாட போகல.  அவன் என்னை கல்யாணம் பண்ணாம இருந்ததுக்கு Thanks சொல்ல தான் போனேன். அப்புறம் கார்த்தி அவங்கள கூட்டிட்டு வந்தது கூட,  நாம நல்லாருக்கோம்னு காட்டறதுக்கு தான். இதெல்லாம் புரிஞ்சிக்காம பைத்தியம் மாதிரி நடந்துகிட்டா,  உன்னை முட்டை முட்டாள்னு சொல்லாம புத்திசாலினா சொல்வாங்க? "

கீர்த்தியின் இடத்தில் இருந்து  தான் செய்ததை எண்ணி பார்த்தவன்,  தான் நடந்து கொண்ட விதத்தை எண்ணி வருத்தமடைந்தான்.

'அதென்னது முட்டை முட்டாள்? இப்ப கேட்டா இன்னும் பேர் வைப்பா. வேண்டாம் இன்னொரு நாள் கேட்டுக்கலாம் . இப்போ பேசாம சமாதானமா போயிடலாம் '.  என்று நினைத்தவன் சமாளிப்பாய்,

"அதை நீ உன் புருசன்கிட்ட சொல்லிட்டு போக வேண்டியது தானே?" என்றான் .

" நீ என்ன என் காலேஜ் பிரின்சிபலா நான் எங்க போகனும்? யார்கிட்ட பேசனும்?  எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு போகனுமா? இல்ல பர்மிசன் வாங்கிட்டு போகனுமா? என்னை எங்க வீட்டுல கூட கேள்வி கேட்டது கிடையாது. " என்று வெடியாய் ஆரம்பித்து  கலங்கிய குரலில் முடித்தவள்,

தன்னை சமாளித்து உறுதியான குரலில் " உன்னை யாரும் என்னை கல்யாணம் பண்ணி தியாகம் பண்ண சொல்லல. நீ தியாகம் பண்ணிட்டங்கறதுக்காக நானும் என் குடும்பமும் நீ என்ன சொன்னாலும் கேட்கனுமா?  "

கீர்த்தியை கல்யாணம் செய்ததை 'தியாகம் 'என்று சொன்னதை பொறுக்க மாட்டாமல்,

" கீர்த்தி. Stop the nonsense ."

கீர்த்தி விடாமல் " கல்யாணம் பண்ணிகிட்டா, பொண்டாட்டி மேல நம்பிக்கை இருக்கனும். அப்படி நம்பிக்கை இல்லாத உனக்கு எங்க வீட்டுக்கு போக கூடாதுனு சொல்ல  உரிமை இல்லை . நாளைக்கே நான் என் வீட்டுக்கு போவேன். என்ன பண்ணுவ? " என்றாள் காட்டமாக.

பொறுமை இழந்த கண்ணண்,
" என்னடீ விட்டா பேசிகிட்டே போற. அண்ணணும் தங்கச்சியும் சேர்ந்து என்னை அவமானப் படுத்துவீங்க.  ஏன் உனக்கு தெரியாதா, செல்வி கல்யாணத்தில என்ன நடந்துச்சுனு? ஒவ்வொரு தடவையும் நான் பொறுத்து போனேன் பாரு. அப்ப நான் தியாகி தான். என்ன சொன்ன எனக்கு உரிமை இல்லையா? உன் மேல எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு . இனிமே நீ எனக்கு மட்டும் தான். வீட்ட விட்டு கால முடிஞ்சா எடுத்து வை. அப்போ தெரியும் கண்ணன் யாருன்னு?  "

என்று கோபமாய்  உருண்டு கிடந்த செம்பை உதைக்க அது நிறுத்தி வைக்கப் பட்டு இருந்த பெரிய பீங்கான் Flower vase மீது வேகமாய் சரிந்து  அங்கிருந்த  கீர்த்தியின் காலில் மோதியது.

Vaseன்  விளிம்பு கீர்த்தியின் காலில் பட்டு லேசாக கிழித்தது.  "அம்மா " என்று அலறியவளாய் காலை தூக்க,  இன்னொரு காலால் நிலையாக நிற்க முடியாமல், கொட்டியிருந்த பாலில் வழுக்கி தொப்பென அந்த பாலின் மீதே விழுந்தாள்.

"கீர்த்தி " என்றவாறே அவளின் அருகே மண்டியிட்டு அமர்ந்து  அவளை தன் மீது சாய்த்தான்.

" Don't touch me " என்றவாறு கீர்த்தி  கண்ணணை விலக்கினாள்.

"What? "

வலியினால் உண்டான அழுகையுடன் காலை பிடித்து கொண்டு " என்னை தொடாதீங்க "

கீர்த்தியின் கண்ணீரையும் வலியையும் கண்டவன், கீர்த்தி சொன்னதன் பொருளையும்,  தன் கோபம்,  எல்லாவற்றையும் மறந்தவனாய்,

"ஹேய் லூசு. முதல்ல கால காட்டு. "

என்று கீர்த்தியின் பாதத்தை பிடிக்க போக,  கீர்த்தி தன் பாதத்தை சேலையால் மூடினாள்.

"ஹேய் என்ன பண்ற? காட்டுடீ "

கீழே விழுந்த அவமானம், வலி, கண்ணணிண் மிரட்டல்,  எல்லாம் சேர்த்து கீர்த்திக்கு அழுகை வந்தது.

"இங்க பாரு முதல்ல என்னை டீ னு சொல்லாத. அப்புறம் என்னை தொடாத" என்றாள் வெறுப்புடன்.

கண்ணன்  கீர்த்தியின் வெறுப்பை கண்டதும் அவளின் இரு கைகளையும் தன் ஒரு கையால் பிடித்தவன், மற்றொரு கையால் கீர்த்தியின் பாதத்தை சுற்றியிந்த சேலையை விலக்கி காயத்தை பார்த்தான்.

தனது அறையில் இருந்த முதலுதவி பெட்டியை எடுத்து,  பேன்ட்எய்டை ஒட்டப் போக, கீர்த்தி கைகளால் காயத்தை மறைத்தாள்.

" போ நீ வேணும்ணே தான் எனக்கு காயம் ஆகட்டும்னு இப்படி செஞ்ச. இப்ப எதுக்கு மருந்து போடற?  போ. சரியான சைக்கோ சாத்தான்  "

' கடவுளே இன்னும் எத்தனை பேர் வைக்க போறாளோ? ' என்று பரிதாபமாய் அவளை பார்க்க,

தேம்பி தேம்பி அழுதவளாய் " நான் எங்க வீட்டுக்கு போறேன்னு சொன்னதுக்கு தான நீ என் கால உடைச்ச "

" என்னது கால் உடைஞ்சிருச்சா? காட்டு "

கண்ணணிண் தோளில் அடித்து மீண்டும் கேவியவளாய் " அப்போ என் கால் உடையலனு தான் உனக்கு Feeling ஆ . இப்போ நான் என் வீட்டுக்கு போக முடியாதது உனக்கு ரொம்ப சந்தோஷம் தான "

" கீர்த்தி முதல்ல உளற்றத நிறுத்து " என்று அவள் கண்ணீரை துடைக்க, மீண்டும் அவன் கையை தட்டி விட்டாள்.

கண்ணணுக்கு அவன் கூறிய  வார்த்தை நினைவு வர சிரித்தான்.

' இன்னொரு முறை நான் தொடும் போது கையை தட்டி விட்ட, நான் மனுசனா இருக்க மாட்டேன் '

' ம்ம்ம்  இன்னிக்கு நான் சொன்னத நினைச்சு நானே சிரிக்கறது தான் விதி போல '

"பாத்தியா நீ சிரிக்கற... " என்று மீண்டும் அழ, கீர்த்தியின் முகத்தை இரு கைகளால் ஏந்தியவன் அவள் கண்ணீரை இரு பெரு விரல்களால் துடைத்து,

" பொம்மை நான் எப்பவும் உன்னை காயப்படுத்த மாட்டேன் . நான் வேணும்ணு  எதுவும் செய்யல. தெரியாம நடந்ததுடா Sorry. "

என்று அவள் கண்ணோடு தன் கண்களை கலந்து காதலுடன் சொல்ல, கீர்த்தியின் கண்ணீர் நின்று, கண்ணணிண் கைகளின் மீது தன் கைகளை வைத்து பார்த்த படி அமர்ந்திருந்தாள்.

கண்ணன்  கீர்த்தியை தன் தோளில் வாகாக சாய்த்து கொள்ள, கீர்த்தி கண் மூடி இருக்க, அவள் தலையை வருடியவன் உச்சந்தலையில் முத்தமிட, மெல்ல கண் திறந்தாள்.

எதிரே தெரிந்த கண்ணாடியில் அவர்களிருவரும் இருந்த நிலை அவளுக்கு கண்ணன் ராதை போல தோன்றியது.

மெல்ல திரும்பி கண்ணணை பார்க்க, அவன் கண்களால் ' என்ன ' என்று கேட்க, தன் மனதில் உள்ள கண்ணண் ராதா ஓவியத்தை பற்றி கூற வாயெடுத்தவள்,

' வேண்டாம் அப்புறம் அந்த ராட்சசனுக்கு அவன்  ராதா ஞாபகம் வந்துடுச்சினா?  ம்ஹீம்...  நான் தானே இவன கல்யாணம் பண்ணி இவ்வளவு கஷ்டப் படறேன்....  அதனால அவன் என்னை தான் நினைக்கனும் '

என்று கண்ணணை பார்த்தவாறே யோசிக்க, கண்ணன் ' என்னோட காதல் இந்த தத்திக்கு புரிஞ்சிடுச்சா? கண்ணை பாரு முட்டை கண்ணி ' என்று நினைத்தவன்  மீண்டும் ' என்ன ' என்பது போல புருவத்தை உயர்த்த, அவள் சமாளிப்பாய்,

"இப்படியே பேசி என்னை ஏமாத்த பார்க்கறியா? "

ஒரு பெருமூச்சு விட்டவன் ' அதான,  இவ மனசுல நினைக்கறத அந்த நாசா விஞ்ஞானியால கூட கண்டுபிடிக்க முடியாது '

" உன்னை ஏமாத்திட்டாலும்.... " என்று அலுத்தவன்,

" சரி காலை காட்டு "

"மாட்டேன் " என்றாள் வீம்பாக.

கீர்த்தியை ஒரு வினாடி உற்று நோக்கியவன்,  ஒரு கையால் அவளது இரு கைகளையும் பிடித்து கொண்டு,  மற்றொரு கையால் லாவகமாய் பேன்ட் எய்டை ஒட்டி கைகளை விடுவித்தான்.

கீர்த்தி பேன்ட் எய்டிடம் கையை கொண்டு போக,  கண்ணண்,

" பேன்ட் எய்ட எடுத்த..... அவ்வளவு தான் சொல்லிட்டேன் " என்று உறுமினான்.

ஒரு நிமிடம் அரண்டவள் தன்னை சமாளித்தவளாய், " நான் ஏன் எடுக்க போறேன். நீ தொட்டத தான் அழிக்கறேன்" என்று பேன்ட் எய்ட்டை சேலையால் துடைத்தாள்.

கீர்த்தியின் செயலை கண்ட கண்ணண் தனக்குள் சிரித்தவனாய், 'பொம்மை இன்னும் நீ மாறவே இல்லடீ'. என்று நினைத்தவன், கீர்த்தி சிதறிய பாலில் அமர்ந்திருந்ததை கண்டு " ஹேய் கீர்த்தி, எழுந்திரு. பாரு. பாலெல்லாம சிந்தியிருக்கு "

கண்ணணிண் அதிகாரத்தை தாளாமல் கீர்த்தி

" அத பால கொட்டறதுக்கு முன்னால யோசிச்சிருக்கனும். "

' இவ விட்டா பேசிகிட்டே இருப்பா. இவள முதல எழுந்திருக்க வைக்கனும்'
என்று நினைத்தவன்,  இரு கைகளால் அவளை தூக்கினான்.

"ஹேய் கண்ணா விடு... " என்று திமிற அவளை கொண்டு போய் குளியலறையில் விட்டு,

" முதல்ல போய் குளி "

" என்கிட்ட வேற ட்ரெஸ் இல்ல "

" இரு. நான் செல்விக்கு கால் பண்றேன் "

"ம்ம்ம் "

செல்விக்கு கால் செய்ய அது Switch off ஆகியிருந்தது. நேரில் செல்லலாம் என அறையின் கதவை திறக்க, அதுவும் லாக் ஆகியிருந்தது.

குளியலறை வாசலில் நின்று  அவனை பார்த்து கொண்டே இருந்தவள்
" என்னாச்சு "

" ம்ம்ம் Mobile switch off ஆகியிருக்கு. கதவு Lock ஆகியிருக்கு "

" சரி நான் இப்படியே Clean பண்ணிக்கறேன். "

" இரு. நான் என் ட்ரெஸ் தர்ரேன் "

" உவ்வேவே....  நான்லாம் Boy dress போட மாட்டேன் "

" நீ ஒண்ணும் Boy dress போட. வேண்டாம்.  உன் புருசன் Dress போடு போதும்  "

" ஆமாமாம் நீ என் புருசன் இல்ல.... "

" ஹப்பா ஞாபகம் வந்திடுச்சா...  நான் பிழைச்சேன் " என்று சொல்ல, கீர்த்தி சிரித்து கொண்டே குளியலறைக்குள் சென்றாள்.

இருவரும் தங்கள் மனதிலிருந்ததை கொட்டியதால், இருவராலும் சற்று இயல்பாக பேச முயற்சி செய்தனர்.

கீர்த்தி உடை மாற்றி வருவதற்குள் தரையை சுத்தம் செய்து விட்டு படுக்கையில் படுத்தான்.

' கீர்த்தி வந்தானா எங்க படுப்பா? பேசாம தூங்கற மாதிரி இருப்போம். ' என்று தூங்கியது போல நடித்தான்.

குளியலறையில் இருந்து வெளிவந்த கீர்த்தி அறை சுத்தமாக இருப்பதை கண்டு

'ம்ம்ம் பரவாயில்லை.  Futureல எனக்கு நிறைய Help பண்ணுவான் போலருக்கு ' என்று நினைத்து கொண்டே படுக்கைக்கு வந்தவள் கண்ணன் தூங்கியிருப்பதை கண்டு என்ன செய்வது என புரியாமல் முழித்தாள்.

Continue Reading

You'll Also Like

58K 2.3K 36
காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உ...
163K 14.2K 63
A GIRL, "KADAVULE INDHA VELAYACHUM ENAKKU SET AAGANUM ADHUKKU MUNNADI INDHA VELA ENAKKU KIDAIKKANU.... NEE UN KULANDHAIYA KOODAVE IRUNDHU KAAPATHIRU...
61.5K 4.1K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...
199K 5.2K 130
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...