8

4.9K 157 9
                                    

"கண்ணண் "என்ற பெயர் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தான்.
"மாமா  நீங்க புரிஞ்சி தான் பேசறீங்களா ".
"வேற வழி இல்ல கார்த்தி. இங்கே அவன தவிர முறை மாப்பிள்ளை யாருமில்ல "
"வேண்டாம் மாமா அந்த வீட்டுக்கு என்னால பொண்ணு தர முடியாது. அதுவும் அவனுக்கு ம்கூம் "
"இங்க பாரு கார்த்தி இப்போதைக்கு இத தவிர வேறு வழி இல்ல. ஒருமுறை  கல்யாண மண்டபம் வந்து நின்னு போச்சினா அந்த பொண்ண எல்லோரும் ராசி இல்லாதவனு முத்திரை குத்திடுவாங்க. உனக்கு  இதெல்லாம் புரியாது. நாம முதல கண்ணண் அம்மா கிட்ட பேசலாம். வா ".
தனமும் சசியும் ராணியிடம் பேசி நிலைமையை புரிந்து  கொண்டு ஆறுதல் சொல்லி கொண்டிருந்தனர்.

மாணிக்கம் "அக்கா நடந்தத பத்தி பேசி ஒண்ணும் ஆகப் போறதில்ல, என்ன அண்ணி நான் சொல்றது " என்று  தனத்தையும் தன் பேச்சில் இழுத்தார்.

அவரும் தனது அண்ணிக்கு ஆறுதல் கூறும் பொறுப்புடன் மாணிக்கத்தின் பேச்சில் இணைந்து கொண்டார்.
"ஆமாம் அண்ணி மாணிக்கம் சொல்றது தான் சரி. இப்ப நாம அடுத்தது என்ன செய்யனும்கிறத பத்தி யோசிக்கணும்.  இப்படி நீங்க கவலை பட்டுகிட்டு இருந்தா உங்கள சமாதானப் படுத்திறது தான் ரொம்ப பெரிய வேலையா இருக்கும்.முதல்ல முகத்த கழுவி உட்காருங்க. அம்மா சசி ராணிய முகத்த கழுவ வைச்சி கூட்டிட்டு வா "என்று அவர்களை அனுப்பினார்.

"அண்ணி நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் "
"சொல்லுங்க தம்பி "
"அது வந்து இந்த கல்யாணம் நடக்கறது இப்ப உங்க கைல தான் இருக்கு.  அந்த மாப்பிள்ளை வீட்டுல இருந்து யாரும் வர மாட்டாங்க. நீங்க தான் கண்ணண மாப்பிள்ளையா அனுப்பனும். உங்க அண்ணண் இருந்து உங்க கிட்ட கேட்கறதா நினைச்சிக்கோங்க"
தனம்  சூழ்நிலையை புரிந்து கொண்டார். தன் கணவன் லக்ஷ்மணணை வர சொல்லி பிரச்சனை பற்றி கூறினார்.  அவரும் "சீதாராம் இருந்து கேட்டால் தன்னால் மறுக்க முடியாது . மேலும் கீர்த்தியை போய் யாராவது வேண்டாம்னு சொல்வார்களா. இருந்தாலும் கண்ணணிடம் யார்  பேசுவது "என்றார்.
தனம் "நாம எல்லோரும் சேர்ந்து பேசுனாதான் சரிப் பட்டு வரும்.இல்லனா அவன தனியா சமாளிக்க முடியாது "
கண்ணணுக்கு போன் செய்து வர சொன்னார்கள்
கண்ணண் "அம்மா கூப்பிட்டீங்களா "
"ஆமாம் கண்ணா, அது வந்து "
"என்னம்மா "
தனம் லக்ஷ்மணணிடம் கண் காட்ட அவரும் "கண்ணா இப்ப ஒரு இக்கட்டுல நாம இருக்கோம் "
"நமக்கென்ன "
நடந்த விசயத்தை கூறி தாங்கள் கண்ட தீர்வையும் கூறிய. போது அவன் கண்கள் சிவந்தது.உக்கிரமாக கார்த்தியை பார்த்த படி தன் தந்தையிடம் "வீட்டுக்கு கிளம்பலாம்".என்றான்.

அவளும் நானும்Where stories live. Discover now