இதய திருடா

Od kuttyma147

641K 17K 2.6K

எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இ... Více

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
:)
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
நன்றி
மீண்டும் ஒரு கதையுடன்

50.Epilogue

13.6K 420 132
Od kuttyma147

இரண்டு வருடங்களிற்குப் பிறகு......

சக்தி எழுந்திரி.,.டைம் ஆகுது பாரு.,.

ம்ம்ம் என முனங்கியபடியே ஆதிராவை  தன் மீதே இழுத்து சரித்தவன் அவளை இறுக்கி அனைத்தபடி.,.,

அதுக்குள்ளவா,...இன்னும் கொஞ்ச நேரம் ப்ளீஸ் ....என அவளை இன்னும் இறுக்கிக் கொண்டான்.

என்னடா பன்ற பக்கத்துல ஸ்ரீ தூங்குறா அவ மேல எதுவும் விழுந்துறப் போறேன்.என எழ முற்பட்டவளிடம்.,,

அதலாம் விழ மாட்ட ...கொஞ்ச நேரம் அமைதியா இரு எனக்கு தூக்கம் வருது,,.என்றவனின்  கன்னத்தைக் கடித்து வைத்தாள்,...

செல்விஸ்ரீ இவர்களது ஒன்றரை வயது குழந்தை.செல்வியின் முகசாயலில் இருந்தமையால் செல்விஸ்ரீ என பெயரிட்டனர்.

தூங்க போறியா.,உன்ன ,..இன்னக்கி நிஷாவோட மேரேஜ் .,நாம மண்டபத்துல இருக்கோம் அத மறந்துட்டியா..

ஆ ...ஆ,..என அலறியடித்து எழுந்தவன் எதுக்குடி இப்படி என்ன கடிச்ச..

அப்படி தான் கடிப்பேன். நீ முதல்ல குளிச்சிட்டு கிளம்பு. நான் அதுக்குள்ள ஸ்ரீய ரெடி பன்னி வக்கிரேன்.அப்றம் நான் கிளம்பனும்..டைம் இல்ல,..

மணி 5 தான ஆகுது அதுக்குள்ள கிளம்பனுமா என சலித்துக் கொண்டவனிடம்,.,

ஏழரைக்கு முகூர்த்தம் அது வரைக்கும் நான் நிஷா கூட இருக்கனும்.இன்னக்கி புல்லா ஸ்ரீய நீதான் பார்த்துக்கனும் .அதான் இவ்ளோ சீக்கிரம் கிளம்பச் சொல்றேன்.

என்ன அப்போ நீ என்கூட இருக்க மாட்டியா அப்ப நானும் ஸ்ரீகுட்டி மட்டும் தான் இருக்கனுமா இது என்ன நியாயம் என்றவனிடம்,..

வருஷம் புல்லா உன்கூட தான இருக்கேன் இன்னக்கி ஒரு நாள்ள ஒன்னும் ஆகிடாது.நீ பாப்பாவ பத்திரமா பார்த்துக்கோ.அப்றம் என் பின்னாடியே சுத்தாம போய் மதன் கூட கொஞ்ச நேரம் இரு என்றவள் சக்தியை குளியலறையினுள் தள்ளிவிட்டாள்.

முனங்கிக் கொண்டே கதவை தாழிட்டவன் மீண்டும் திறந்தபடி.,.

ஆதி ஒரு ஹெல்ப்.,..

இப்ப என்ன.,

அது டவல் என இழுக்கவும்,...

கொன்றுவேன் உன்ன.  டவல எடுத்துட்டு போயிட்டு இல்லனு பொய் சொல்லாத. நீ எதுக்கு கூப்பட்றேனு எனக்கு தெரியும்.உனக்கு இதே வேல...

உண்மையாலுமே டவல மறந்துட்டேன்டி. அங்க பாரு காட் மேல தான் இருக்கு என்றதும்...

டவலை நீட்டியவலை,...

டவலோடு சேர்த்து உள்ளிழுத்துக் கொண்டான் .

இழுத்த வேகத்தில் அவளை சுவரின் மீது தள்ளி தன் கரங்களால் அனைப்போட்டவன்.,,

அலைபாயும் தன் மனைவியின் கண்களை ரசித்தான்.

சக்தி.,.என்ன நீ,,ஒழுங்கா என்ன விடு.,என வார்த்தைகள் வராமல் தடுமாறியவளிடம் நெருங்கியவன்...

என்ன சத்தமெல்லாம் உள்ள போகுது,..இவ்வளவு நேரம் வந்த சவுன்ட் எங்க...

ந..நகரு சக்தி ...பாப்பா அங்க தனியா இருக்கா என மெல்ல சொன்னவளிடம்..,

ம்ஹீம் முடியாது...இன்னக்கி புல்லா நீ என்கூடவும் இருக்க மாட்ட. நானும் உன் பின்னாடியே வரக்கூடாதுனு சொல்லிட்ட..அதுக்கு.,என சக்தி நிறுத்தவும்..

அதுக்கு என்ன...

எனக்கு தேவையானத நான் எடுத்துட்டு உன்ன விட்டறேன் என ஹஸ்கி வாய்சில் அவன் கூறவும்,..

சக்தி நீ சும்,..என ஆதிரா முடிக்கும் முன்பே சக்தி அவள் இதழை தன் இதழால் மூடியிருந்தான்.

இதழோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அவள் கண்கள,நெற்றி,கன்னம், காதுமடல் என வலம் வந்தவனின் இதழ் அவளது கழுத்துவளைவில் படர,...அதுவரை அவனுள் கரைந்திருந்தவள்..,

அவனை தள்ளி விட்டு ,...

ச்சீ போடா.,என வெளியே வந்தவள் அவனைச் செல்லமாக கடிந்துக் கொண்டாள்.

சக்தி கர்பக் காலத்தில் ஆதிராவை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டான்.

ஏழாம் மாதம் வளைகாப்பு முடித்து ஆதிராவை மனமே இல்லாமல் அவளது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.

இருவருக்கும் இரண்டு நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காமல் போகவே பிறகு சக்தி ஆதிராவை தன் வீட்டிற்கு அழைத்து வர வசந்தியும் ஆதிராவை பார்த்துக் கொள்ள கூடவே வந்துத் தங்கிக் கொண்டார்.

ஸ்ரீ பிறந்து ஆறு மாதம் வரை ஆதிரா ஹாஸ்பிட்டல் செல்லவில்லை.அடுத்து வந்த நாளில் வேலைக்கு செல்கிறேன் என கிளம்பியவளை வேண்டாம் என தடுத்தவன் அவளை பீ ஜி நுழைவு தேர்வுக்கு பயிற்சி எடுக்க ஒரு கோச்சிங் சென்டரில் சேர்த்துவிடப் போவதாக சொல்ல அதை ஆதிரா மறுத்தாள்.

ஆதிராவிற்கும் எம் எஸ் எடுத்துப் படிக்க ஆசை என்றாலும் ஸ்ரீயுடனும் சக்தியுடனும் அதிக நேரம் செலவிட வேண்டும் என மறுத்துவிட்டாள்.இருவருக்காக தனது டியூட்டி நேரத்தையும் குறைத்துக் கொண்டாள்.

ஆதிரா மருத்துவமனையிலிருந்து வரும் வரை வசந்தி ஸ்ரீயை பார்த்துக் கொள்வார்.ராஜனும் தன் பேத்தியை கண்ணில் வைத்துப் பார்த்துக் கொண்டார்.சந்திராவிடம் பேச்சு வார்த்தை எதுவும் வைத்துக் கொள்வதில்லை.

ஸ்ரீயை ரெடி பன்னி சக்தியிடம் கொடுத்தவள்,.,.

அம்மாவும் அப்பாவும் கரக்டா முகூர்த்த டைம்க்கு வந்துருவாங்க .ஸ்ரீய அவங்க கிட்ட விட்டுட்டு நீ போய் மதன் கூட இரு என்றவள் குளியலறையில் புகுந்துக் கொண்டாள்.

குட்டி தேவதையாய் தன் மடியில் அமர்ந்திருந்தவளின் நெற்றியில் முத்தமிட்டவன்

இங்க பாரு ஸ்ரீகுட்டி உங்க அம்மா எனக்கு ஆர்டர் போட்றா.அப்பா ரொம்ப பாவம் இல்ல,,என்றதும்,..

ம்ம்ம் பா என ஸ்ரீ முகத்தை சுருக்கவும் ..மீண்டும் தன் பெண்ணின் முகம் முழுவதும் முத்தமிட்டவன்.,..

என் செல்லக் குட்டி என அனைத்துக் கொண்டான்.

இன்று நிஷாவிற்கு மதனிற்கும் தான் திருமணம்.

இவர்கள் இருவரும் இனைவதற்கு ஆதிரா சக்தியே காரணம்.

மதனும் சரி நிஷாவும் சரி வீட்டில் திருமண பேச்செடுத்தாலே அதை தவிர்த்து வந்தனர்.

நிஷாவிற்கு மதன் மீது கோபம் இருந்தாலும் அவனை மறக்க முயற்சித்தாலும் அவளால் முடியவில்லை.

பெற்றோரின் வற்புறுத்தலால் மீண்டும் சென்னை வந்திருந்தாள்.

மதன் நிஷாவிடம் பேச அவள் அவனை மன்னிப்பதாக இல்லை.ஆறுமாதக் காலம் இப்படியே போக ஆதிரா தான் நிஷாவிடம் பேசி புரியவைத்தாள்.

மதன் திருந்திவிட்டான் என்பது நிஷாவிற்குச் சந்தோஷத்தை அளித்தாலும் மதன் தன் முன் ஆதிராவிடமும் சக்தியிடமும் மன்னிப்புக் கேட்டால் தான் மதனை ஏற்றுக் கொள்வேன் என கூறிவிட மதன் எதிர்ப்பெதும் தெரிவிக்காமல் மீண்டும் மனமாற மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.

அதற்கு ஆதிரா.,..

நீ மட்டும் அன்னக்கி சக்திய விட்டு என்னக் கடத்த சொல்லலனா  நான் இப்படி ஒருத்தன வாழ்க்கைல மிஸ் பன்னிருப்பேன்.எனக்கு உன் மேல துளி கோவம் கூட இல்ல .சொல்ல போனா நான் தான் உன்கிட்ட தேங்க்ஸ் சொல்லனும் சக்திய எனக்கு தந்ததுக்கு.ரொம்ப தேங்க்ஸ் மதன் என ஆதிரா கண்ணீர் மல்க கூற சக்தி காதலோடு அவளை அனைத்துக் கொண்டான்.

ஆதிராவின் இந்த வார்த்தையில் நிஷாவின் மனம் நிறைந்துவிட காதலோடு மதனைப் பார்க்க அவனோ பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

சிரிப்போடு அவனைக் கட்டிக் கொண்டவள்.,..சாரி அன்ட் ஐ லவ் யூ மதன்...

அப்பாடி இத சொல்ல வைக்க எவ்வளவு போராட வேண்டியிருக்கு என பெருமூச்சொன்றை வெளியிட்டவன் தானும் அனைத்து.,.ஐ லவ் யூ என்றான்.

இதன்பின் சக்தி மதனின் அன்னையிடம் பேசி புரியவைத்து மதனிடம் அவரை பேச வைத்தான்.திருமணத்திற்கு மதன் வீட்டார் ஒத்துக் கொள்ள இங்கு ஆதிராவின் பாடு தான் திண்டாட்டமாகிப் போனது.

ஆம் ஆதிரா தான் மதன் திருந்தி மன்னிப்புக் கேட்டதை நிஷாவின் பெற்றோரிடம் கூறிட அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.மதனும் நிஷாவும் விரும்புவதாக கூறவும் தான் பூகம்பமே வெடித்தது.

மிகவும் சிரமப் பட்டு பேசி புரியவைத்த பின்பு அவர்களும் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டனர்.

அஸ்வினும் பாரதியிம் ஆறு மாதத்திற்குப் பின் தாயகம் திரும்பியிருந்தனர்.

வருண் மதியழகி, ஆதிரா சக்தி , அஸ்வின் பாரதி,மதன் நிஷா என நான்கு இந்த இரண்டு நல்ல நண்பர்களாகினர்.

அஸ்வின் பாரதி தம்பதியினருக்கு திலக் இரண்டு வயது புதல்வன்.

வருண் மதியழகி தம்பதியினருக்கு இரட்டைப் பிள்ளைகள். தர்ஷன் தர்ஷினி.

அனைவரும் மதன் நிஷா திருமணத்தில் சங்கமித்திருக்க அத்திருமண மண்டபமே கலைக்கட்டியது.

மதன் மணமேடையில் நிஷாவின் வருகைக்காக காத்திருக்க...முதல் வரிசையில் வருண் தர்ஷினியை வைத்துக் கொண்டும் ,அஸ்வின் திலக்கை வைத்துக் கொண்டும் அமர்ந்திருக்க ...அப்போது தான் சக்தி ஸ்ரீயுடன் வந்து சேர்ந்தான்.

வாடா நல்லவனே. என்ன ஸ்ரீய உன்கிட்ட விட்டுட்டு அண்ணி எஸ்கேப் ஆகிட்டாங்களா.

அவனை முறைத்துக் கொண்டே அமர்ந்தவன்...

அங்க மட்டும் என்ன நிலமையாம் என்றிட வருண் கப்சிப் என வாயை மூடிக் கொண்டான்.

எங்க தர்ஷு தான் இருக்கா தர்ஷன காணோம் என சக்தி கேட்க. ..

அவன அடக்க முடியலடா.சுழி சேட்டைக் காரனா இருக்கான்.அதான் அம்மாகிட்ட குடுத்துட்டேன்.

அப்படியே உன்ன மாதிரி என்ற அஸ்வினை முறைத்தான்.

ஜானகி தர்ஷனை வைத்துக் கொண்டு வசந்தியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

மதன் நிஷாவின் திருமணம் முடிய அந்நாளும் கலகலப்பாக முடிந்தது.

அடுத்தடுத்த சடங்குகள் நடந்து முடிய இரவு வேலையில் அந்த இதமான சூழலில் மதன் நிஷாவின் வருகைக்காக காத்திருந்தான்.

கையில் பால் சொம்புடன் உள்ளே நுழைந்தவள் மதனருகில் அமர்ந்து ...

மதன் நாம இதலாம் ஒரு வருஷத்துக்கு தள்ளிப் போட்டறலாமா என்றாள்.

ஒரு எதிர்ப்பார்ப்புடன் அமர்ந்திருந்தவனுக்கு ஏமாற்றமே கிடைக்க ம்ம்ம் போட்டவன் கட்டலின் ஒரு ஓரமாகப் புரண்டுப் படுத்துக் கொண்டான்.

அவன் செயலில் சிரிப்பை அடக்க முடியாமல் தன் கையால் வாயை மூடிக்கொண்டவள் மெல்ல நகர்ந்து அவனருகில் நின்று...

மதன் நான் சும்மா தான் சொன்னேன் என்றதும் தான் தாமதம் அவளை கட்டலின் மறுபுறம் இழுத்துப் போட்டவன் அதற்கு மேல் பேசவிடாமல் அவள் மீதுப் படர்ந்தான்.

.
.
.
.
.

குளியலையிலிருந்து முகத்தைத் துடைத்தபடி வெளியே வந்தவளை கவனித்தவன்....

ஸ்ரீமா உனக்கு தம்பி வேனுமா தங்கச்சிப் பாப்பா வேனுமா....

என்றவன் ஓரக் கண்ணால் ஆதிராவைப் பார்க்க அவள் எதையும் கண்டுக் கொள்ளாமல் ஸ்ரீயை சக்தியிடமிருந்து வாங்கி்....அவளுக்கு பசியாற்றினாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் பொதுவாக.,.,

பதில காணோம்,...

நீ காலையிலருந்து சரியே இல்ல பேசாமத் தூங்கு என்றவள் ஸ்ரீயைப் பார்க்க அவளோ தூங்காமல் கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டிருந்தாள்.

தூங்கு அம்மு நீயும் என்கிட்ட வாங்கிக்கட்டிக்காத.. என்றாள்.

அதற்கு ஸ்ரீ பல்லைக் காட்டி சிரிக்க சக்தியைப் போலவே அவள் கன்னத்தில் அழகாய் குழி விழுந்தது.

அதை வருடி முத்தமொன்று குடுத்து மிகவும் சிரமப்பட்டு தூங்க வைத்தாள்.

சக்தி முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அவனருகில் அமர்ந்து அவன் தோளில் சாய்ந்தவள்....

சக்தி நீ அன்னக்கி என் கழுத்துல தாலி கட்டாம போயிருந்தா அப்ப இருந்த மனநிலைல நான் கண்டிப்பா செத்துப் போயிருப்பேன் என்றவளை தன் நெஞ்சோடு அனைத்துக் கொண்டவன் ...

என்ன பேசற நீ  ,...

இல்ல அன்னக்கி அப்டி நடக்கலனா நான் உன்ன மிஸ் பன்னிருப்பேன் என்றவளின் கண்கள் கலங்கிப் போனது.

ஏய் ஷ் போதும் என்றவன் அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.

ஏன் உனக்கு இப்ப இந்த திடீர் சந்தேகம்.

தெரியல திடீர்னு தோனுச்சு...

ம்ம்ம் எனக்கென்னவோ எனக்கு நீ உனக்கு நான்னு ஆன்டவன் முடிவுப் பன்னதாதான் இருக்கும்னு தோனுது..நீ வேணா யோசிச்சுப் பாரேன்.மதன் ஏன் என்கிட்ட உதவி கேட்கனும் .அப்றம் அன்னக்கி நடந்தது .உன் கழுத்துல தாலி கட்டுனது இதலாம் ஏன் நடக்கனும் .நான் நினைச்சிருந்தா  உன்ன ஒரு ஹாஸ்டல்ல தங்கவச்சி ஹெல்ப் பன்னிருக்கலாம் .ஆனா நான் அப்படி பன்னலையே ...இதலாம் வச்சிப் பார்த்தா நாம மேட் பார் ஈச் அதர்னு தோனுது என்றான்.

லவ் யூ சக்தி என்றவளை தன்னோடு இறுக்கிக் கொண்டவன்...

நான் கேட்டதுக்கு பதிலே வரலையே என்றதும் வேகமாக நிமிர்ந்து பார்த்தவள்...அவன் குறும்பாக சிரிக்கவும் ...

எனக்கு குட்டி சக்தி தான் வேணும்...

ம்ஹூம் எனக்கு குட்டி ஆதிரா தான் வேனும் .

அதான் ஸ்ரீ இருக்காளே.

அவ அப்படியே அம்மா மாதிரி. உன் சாயல்ல ஒன்னு வேணும்.

போ இது போங்கு. எனக்கு குட்டி சக்தி தான் என்றவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டவன் தன்னவளை முத்தத்தால்  கிறங்கச் செய்தான்.

.
.
.
ஆதிராவின் விருப்பத்திற்கேற்ப இரண்டாவதாக குட்டி சக்தியே பிறக்க சக்திதரன் என பெயர்
சூட்டினர்.

                 முற்றும்


Pokračovat ve čtení

Mohlo by se ti líbit

91.9K 3.5K 49
அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில்...
367K 12.2K 54
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அ...
23.7K 1.1K 63
ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்த...
53.8K 3.2K 53
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?'...