இதய திருடா

By kuttyma147

641K 17K 2.6K

எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இ... More

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
:)
36
37
38
39
40
41
42
43
45
46
47
48
49
நன்றி
50.Epilogue
மீண்டும் ஒரு கதையுடன்

44

11K 336 69
By kuttyma147

கண்டிப்பாக சக்தி அழைத்தால் ஆதிரா அவனுடன் வரமாட்டாள் என்று தெரியும். வர மறுப்பவளை பைக்கில் அழைத்துச் செல்வது கஷ்டம் என்பதால் தான் வருணிடம் காரை வாங்கி வந்தான்.

வெகுநேரமாக சிரமப்பட்டு அழகையை அடக்கியவளுக்கு அதற்கு மேல் முடியவில்லை.ஜன்னலின் புறம் திரும்பியவள் மௌனமாக அழுதாள் சக்தியிடம் அப்படி பேசியதற்கு.இதை அனைத்தையும் கவனித்தபடி தான் சக்தி வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.

ஒரு ரெஸ்டாரன்டின் முன் காரை நிறுத்தி இறங்கியவன் பின் சீட்டின் டோரைத் திறந்துவிட்டு,..

இறங்கு கீழ..என கட்டளையிட
எங்கு வந்திருக்கிறோம் எனச் சுற்றும் முற்றும் பார்த்தவள்.,

என்னால வர முடியாது ...என்றிட...

அப்ப சரி உன்ன இழுத்துட்டு போகறத தவிர வேற வழித் தெரியல எனக்கு ...என்றவன்  அவளது கையை நோக்கி தனது கையைக் கொண்டுச்  செல்ல அவனது கையை தட்டி விட்டு..

வேண்டா நானே வரேன் என்றவள் வேண்டா வெறுப்பாக அவனுடன் நடந்தாள்.

உள்ளே கார்னரில் ஒரு டேபுள் காலியாக இருக்க அங்கு இருவரும் அமர்ந்தனர்.

அவள் வேண்டாம் என மறுத்தும் இருவருக்கும் ஜூஸ் ஆர்டர் செய்து அதைக் குடிக்கத் தொடங்கினான்.

திடீரென எதற்காக இங்கு அழைத்து வந்திருக்கிறான் என புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தவள் அவளை நோக்கி மதன் வருவதைக் கண்டு எழுந்து நின்றுக் கொண்டாள்.

அவள் எழவும் தானும் எழுந்துக் கொண்டவன் ....

என்னாச்சு .,,

சக்தி வா நாம கிளம்பலாம்.,சீக்கிரம்.,.

ஏன்,..

சொன்னாக் கேளு கிளம்பு..என ஆதிரா துரிதப்படுத்த..,

நாம மீட் பன்ன போரவங்க இன்னும் வரல.,அவங்க வரட்டும் பாத்துட்டுப் போயிடலாம்...

சக்தியின் கையை இறுகப் பிடித்துக் கொண்டவளின் கண்கள் கலங்கியது...

மதன் உன்ன எதாச்சும் பன்னிடுவான். எனக்கு பயமா இருக்கு. இங்கிருந்து போயிடலாம் ப்ளீஸ் சக்தி.,.ப்ளீஸ் புரிஞ்சிக்கோ..,.

அதலாம் ஒன்னும் பன்னமாட்டான் பர்ஸ்ட் நீ உட்காரு என அவளை அமர வைத்தவன் தானும் அமர்ந்துக் கொண்டான்.

மனதில் உள்ள குற்ற உணர்ச்சியோடு அவர்களுக்கு எதிரில் உள்ளச் சேரில் அமர்ந்தவன்...

என்ன மன்னிச்சிடு ஆதிரா .,..என்றான்.

அதுவரை மதன் சக்தியை எதாவது செய்து விடுவானோ என பயந்தவள் தற்போது மதன் மன்னிப்புக் கேட்கவும் குழம்பிப் போனாள்.

சக்தியை திரும்பிப் பார்க்க அவன் அவன் சொல்வது உண்மை என்பது போல் கண் சிமிட்டினான்.

நான் மனசார மன்னிப்பு கேட்டுக்கிறேன் ஆதிரா உனக்கு எவ்ளோ பெரிய கொடுமைய பன்னிருக்கேன். உன்ன அவமானப் படித்தி உங்க அப்பா அம்மாட்டருந்து உன்னப் பிரிச்சு.,ச்ச எவ்ளோ பெரியத் தப்புப் பன்னிடேன். என்ன மன்னிச்சிடு ஆதிரா ப்ளீஸ் என வருந்தி மன்னிப்புக் கேட்டான்.

இரண்டு நாட்களுக்கு முன் நீ சக்தியை விட்டுச் செல்லவேண்டும் இல்லையென்றால் அவனைக் கொன்று விடுவேன் என  மிரட்டியவன்  தற்போது அவளிடம் மன்னிப்புக் கேட்க ஆதிராவிற்கோ ஒன்றும் புரியவில்லை.

ஆ...ஆனா நீ இரண்டு நாளைக்கு முன்னாடி போன்ல நீ சக்திய என ஆதிரா தடுமாறவும்.

சக்தியை ஒரு முறைப் பார்த்துவிட்டு.,..

ஆமாம் மிரட்டுனது உண்மை தான்,..ஆனா சக்தி எனக்குப்
புரிய வச்சிட்டான். இப்ப உண்மையா நான் திருந்திட்டேன். என்ன மன்னிச்சிடு ப்ளீஸ்.,.என்றான்.

அவன் சொல்றது உண்மை தான் ஆதிரா அவன் திருந்திட்டான் என்ற சக்தியிடம்.,..

இல்ல உ..உனக்கு எப்படி தெ,..தெரியும் மதன் என்ன மிரட்டுனது.,.

அவன் மிரட்டுன அன்னக்கி நைட் மறுபடியும் உனக்கு கால் பன்னியிருந்தான்...அப்போ நான் தான் அட்டன் பன்னேனு தெரியாம உளறிட்டான் ...என்றவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

இனி சக்தியை விட்டு பிரிய தேவையில்லை என நினைத்தவளுக்கு சந்தோஷத்தில் வார்த்தை வரவில்லை.

நீ நிஷாவ என்கிட்டருந்துப் பிரிச்சிட்டனு தான் நான் உன்ன பழி வாங்கனும்னு நினைச்சேன்.என்ன மன்னிச்சிடு ப்ளீஸ் என மதன் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.

சரி விடு மதன் நீ திருந்துனதே எனக்கு சந்தோஷம் தான். நான் உன்ன மன்னிச்சிட்டேன் என்றாள்.,.

தேங்க்ஸ் ஆதிரா.,..என்றவன்,..

இருவரிடமும் ஓகே எனக்கு டைம் ஆகுது மீட்டிங் ஒன்னு அட்டன் பன்னனும். சோ நான்
கிறம்புறேன்
என எழுந்தவனிடம்,..

சக்தி மதனிற்கு மட்டும் கேட்கும் குரலில்
தேங்கஸ் என  கூற.,.
புன்னகை ஒன்றைத் தந்துவிட்டுக் கிளம்பினான்.

சக்தி வருணிடம் காரைப் பெற்று வீட்டிற்குக் கிளம்பும் முன் மதனிற்கு கால் செய்தான்..

ஹான் சொல்லு சக்தி. அவன கண்டுப் புடிச்சிட்டியா..எதாவது தெரிஞ்சதா..என கேட்க அவனிடம் நடந்ததைக் கூறியவன்...பின் தயங்கியபடி

மதன் எனக்கு நீ ஒரு ஹெல்ப் பன்னனும் என்றிட...

சொல்லுடா என்ன பன்னனும்...

அது நீ ஆதிரா கிட்ட மன்னிப்புக் கேட்கனும்...இதுவரைக்கும் நீ அவளுக்கு பன்னதுக்கும் பிளஸ் நீ நேத்து போன் பன்னி மிரட்டுனதுக்கும்...

நான் மன்னிப்புக் கேக்கறேன் .ஆனா நேத்து நான் தான் மிரட்டுனேனு ஏன் சொல்லனும் நான் தான் அதப் பன்னலயே...

இப்பத்திக்கு ஆதிராவுக்கு ரேஷ்மா பத்தியோ அவ தான் இப்படி ஆள் வச்சி மிரட்டுனானோ தெரியக்கூடாது அதான்.

ஏன்டா...

நீ தான் மிரட்டுனனு என்னவிட்டுப் போகனும்னு முடிவெடுத்தவ...அத ரேஷ்மா தான் பன்னா ,அதுவும் என்ன அவ விரும்புனதுனால தான் அப்படி பன்னானுத் தெரிஞ்சா அப்படியே என்ன அவக் கிட்ட தூக்கி குடுத்தாலும்  குடுத்துருவா பெரிய தியாகி மாதிரி அதான்
என சக்தி இழுக்க

மறுமுனையில் மதன் சிரித்தபடியே..

ஹாஹாஹா சக்தி நீயாடா இப்படி பேசற என்னால நம்பவே முடியல...

ஆதிரா என்ன அப்படி மாத்திட்டாடா...

ம்ம்ம் அது சரி ...இப்பத் தெரியலனாலும் ஆதிராவுக்கு ரேஷ்மாவப் பத்தி எப்பவாச்சும் தெரியத் தானப் போகுது அப்றம் என்ன...

எப்பவோ இல்லடா இன்னும் மூனு நாள்ள நானே ஆதிராக்கிட்ட எல்லா விஷயத்த சொல்லிடுவேன் என் காதல அவக்கிட்ட சொன்னதுக்கு அப்றம்...

அது என்னடா மூனு நாளுக் கணக்கு...என மதன் கேட்க..

அவ பர்த்டே வருது டா அதான் அன்னக்கி பிரப்போஸ் பன்னலாம்னு இருக்கேன்..என்றான்

சூப்பர்டா ஆல் தி பெஸ்ட் என்றவன் எங்கு வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டு இணைப்பைத் துண்டித்தான்.

தன் மனதிலுள்ளதை அவள் அறியுமுன்னரே ஆதிராவிற்கு ரேஷ்மாவைப் பற்றித் தெரிந்தால் ,விட்டுக் கொடுக்கிறேன் என்ற பெயரில் ஆதிரா ஏதேனும்
ஏடாகூடமாக
செய்து விடுவாளோ என பயந்தான்.

ரேஷ்மாவின் காதல் ஆதிராவிற்குத் தெரியும் என்பதும் அதை வைத்து முன்பே ரேஷ்மா ஆதிராவை மிரட்டியிருக்கிறாள் என்பதும் சக்திக்குத் தெரியாது...
.
.
.
..

ஜானகி மதியழகியைத் தன் சொந்தப் பெண்ணைப் போல் கவனித்துக் கொண்டார்.
மதியழகிக்கு அம்மா இல்லாத குறையைத் தீர்த்து வைத்தார்.

கண்ணாடியின் முன் நின்று தலைத் துவட்டிக் கொண்டிருந்தவளை பின்னிருந்து அனைத்து அவளது கூந்தளின் வாசனையை நுகர்ந்தபடி ....

அழகி... வருண் என அழைக்க...

அவனது அனைப்பிலும் கிறங்கிய குரலில் தானும் கிறங்கியவள்.,.

ம்ம்ம்...

அழகி.,

ம்ம்ம்,..

அழகி ...

என்ன புதுசா அழகினு கூப்பட்றிங்க என்றவளைத் தன் புறம் திருப்பியவன்...

மதியழகில மதிய கட் பன்னிட்டு அழகினு கூப்பட்றேன்..ஏன் உனக்கு புடிக்கலையா...

ம்ம்ம் புடிச்சிருக்கு .,ஆனா நீங்க என்ன மதினு கூப்பட்றது தான் ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு என இதழ் குவித்தவளை நோக்கி குனிந்தவன்,..

பின் ஏதோ நினைத்தவனாய் ...
மேடம் இன்னக்கி ஏதோ ஒரு மாதிரி இருக்கிங்க என்னாச்சு...

ஆம் மதி இன்று முழுவதும் ஏதோ யோசனையில் தான் இருந்தாள்.

அது வந்து நான் உங்க கிட்ட ஒன்னுக் கேட்கனும்.,என்றவளிடம்,..

ஆஹா நீ கேட்டு தராம இருப்பனா.,ஒன்னு என்ன நிறையா தரேன் என அவள் இதழ் நோக்கி குனிந்தவனைத் தள்ளிவிட்டவள்...

இது இல்ல...

வேற என்ன வேனும் மேடம்க்கு.,..

அது.,.நான் எப்பவும் போல ஆபிஸ் போகட்டா ...என்றவளை குருகுருவெனப் பார்க்கவும் தடுமாறியவள் ...

உங்களுக்குப் பிடிக்கலனா நான் போல எனத் திரும்பிக் கொண்டாள்.

அவள் முன் நின்று நெற்றியில் முத்தமிட்டவன்,,..

உன் விருப்பம் தான் என் விருப்பம் டார்லிங். நாம இரண்டுப் பேரும் ஒன்னா தான் ஆபிஸ் போக போறோம் ...என்றவுடன் முகம் மலர்ந்தவள்...

தேங்க்ஸ் என சொல்ல அவள இதழோடு தன் இதழை சேர்த்தனைத்துக் கொண்டான்.
.
.
.
.
.
.
இம்முறை ஆதிரா முன் சீட்டிலேயே அமர்ந்திருந்தாள்.

இருவரிடையே இருந்த மௌனத்தை யார் உடைப்பது எனப் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தனர்.

காரை பீச்சில் நிறுத்திவிட்டு  இறங்கியவன் ஆதிராவிடம் எதுவும் சொல்லாமல் கடல் அலைகளை வெறிக்கத் துவங்கினான்.

ரெஸ்டாரன்டில் சிரித்துப் பேசியவன் இப்பொழுது முகம் கொடுத்துப் பேசாமலிருக்கவும் இன்று காலையிலிருந்து மாலை வரை அவனிடம் கடுமையாக நடந்துக் கொண்டதற்குத் தான் கோவமாக இருக்கிறான் என நினைத்துக் கொண்டாள்.

ஆனால் உண்மையிலேயே ஒவ்வொரு முறையும் சக்தியை காயப்படுத்தும் போது் அவனுக்கு வலித்தை விட அவளுக்கு அல்லவா அதிகமாக வலித்தது.

அவனருகில் சென்று நின்றவள்...சக்தி என்றவளை திரும்பி அவன் முறைக்க.,.

சக்தி நான்,...

போதும் ஆதிரா எதுவும் பேசாத எனக்கு கோவமா வருது...என்றவன் வேகமாக நடக்க ஓடிச் சென்று அவன் முன் நின்றவள்...

சக்தி ப்ளீஸ் என்றவளின் கண்கள் கலங்கிப் போனது...

ஒரு வார்த்தை என்கிட்ட சொல்றதுக்கென்ன மதன் எனக்கு போன் பன்னி மிரட்டுறானு .அத விட்டுட்டு வீட்ட விட்டு போக முடிவெடுத்துட்ட...என் நிலைமைலருந்து கொஞ்சமாச்சும் யோசிச்சுப் பாத்தியா....

உள்ளுக்குள் அவனை மெச்சியவள்...

உன்ன காயப் படுத்திற மாதிரி பேசிருக்கேன். அத நினைச்சி கொஞ்சம் கூட உனக்கு என் மேல கோவம் வரலையா சக்தி...என்றவளிடம்

இல்லை என்றான்..

ஏன்...

உனக்கு அப்படி பேசத் தெரியாது.நீ நடிக்கிறனு எனக்குத் தெரியும் என சக்திக் கூறவும் ஆதிராவால் அதற்கு மேல் பேச முடியவில்லை...அவனையே பார்த்தபடி நின்றிருந்தவள்...

நான் ரொம்ப குடுத்து வச்சவ என்றாள்...

சக்தி காதில் சரியாக விழாமல் போகவே.,.

என்ன சொன்ன சரியா கேட்கல.,.என்றவனை முறைத்தபடி.,.

டியூப்லைட் என முணு முணுத்தவள் .,,.

ஒன்னு சொல்லல என்றாள்...

அதன் பின்பும் இருவருக்கிடையே சில நிமிடம் மௌனம் நிலவியது.

இன்றாவது சக்தியிடம் தன் மனதை வெளிப்படுத்திவிடலாம் என ஆதிரா வாயைத் திறக்க...சக்தியோ ஆதிராவின் மீதுள்ள காதலாலும் கோபத்தாலும் கடற்கரைத் தந்த சில்லென்ற சூழலாலும் அவளை விரும்புவதைக் கூறி விடுவோமோ என பயந்தவன்...

சரி டைம் ஆகுது வருண் வீட்டுக்குப் போய் காரக் குடுத்துட்டு நாம வீட்டுக்குப் போலாம் என்றவன் அவளது பதிலை எதிர்ப்பாராது காரை நோக்கிச் நடந்தான்.

முகம் வாடியவள் ஒருவித ஏமாற்றத்துடன் அவனைப் பின் தொடர்ந்தாள்.

Continue Reading

You'll Also Like

21.8K 637 58
ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை
496K 16.7K 62
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
212K 6.3K 43
அளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு
116K 4.2K 68
காதல் என்பது ஒரு மாயாஜாலம் இவர்கள் இவர்களுக்குத்தான் என்று இறைவன் முடிவு எடுத்து விட்டால் நாடுகள், கண்டங்கள் தாண்டி சேர்ந்தே தீருவார்கள். இதான் நம்ம...