இதய திருடா

By kuttyma147

641K 17K 2.6K

எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இ... More

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
:)
36
37
38
39
40
42
43
44
45
46
47
48
49
நன்றி
50.Epilogue
மீண்டும் ஒரு கதையுடன்

41

10.6K 300 45
By kuttyma147

அன்று மாலை ஆறு மணியளவில் வருணுடன்  பணிபுரியும் அனைவரும் வந்திருந்தனர்.

சக்தி தான் அவர்கள் தங்குவதற்கான அறைகளை தயார் செய்துக் கொடுத்தான்.

இன்பத்தின் போதும் துன்பத்தின் போதும் தனக்கு உருதுனையாய் இருந்த ஆருயிர் தோழனின் திருமணத்தில் ஓடி ஓடி வேலை செய்தான்.

ராஜேஸ் திருமணத்திற்கு சக்தி ஆதிராவை அழைத்துச் சென்றிருந்தமையால் வந்தவர்களுக்கு ஆதிராவை அறிமுகப்படுத்த அவசியமில்லை.

அன்று ஆதிராவை நடுவில் நிற்க வைத்து அரட்டையடித்தப் பெண்களும் வந்திருந்தனர் நிஷாவைத் தவிர.

நிஷா மதனைப் பற்றிய உண்மையை அறிந்த பின்பு பெங்களூரில் இருக்கும் தன் பெரியம்மாவின் வீட்டலிருந்தபடியே வேலைக்குச் செல்கிறாள்.

வருண் நிஷாவை போனில் அழைத்துத் திருமணத்திற்கு வருமாறுக் கூறினான்.

வருணிடம் கண்டிப்பாக வருகிறேன் என்றுச் சொன்னவள் சென்னை  வந்தாள் எங்கேனும் மதனை சந்திக்க நேர்ந்திடும் என்பதால் வரவில்லை.

மற்றப் பெண்களிடம் பேசும்போது அன்று போல் தயங்காமல் மிகவும் ஜாலியாகவே பழகினாள்.

நிஷாவும் இருந்திருந்தால் இன்னும் கலகலப்பாக இருக்கும் என நினைத்தாலும் அவளது நிலைமை என்னவென புரிந்துக் கொண்டாள்.

வருணின் பாடுதான் திண்டாட்டம் ஆகிப் போனது. இத்தனை நாள் காத்திருந்தவனால் இன்று ஒரு நாள் பொறுக்க முடியவில்லை.

ஒவ்வொரு நிமிடமும்  ஒரு யுகமாய் கடப்பதாக உணர்ந்தான்.

பொருமை இழந்தவன் நடு இரவில் மதியை எப்படியாவது பார்த்தாக வேண்டும் என அவள் அறை நோக்கிச் சென்றவன் அப்பத்தாவிடம் மாட்டிக்கொண்டான்.

வருணின் காதை திருகியபடியே அவனது அறை இழுத்து வந்தவர் வருணை அறையினுள் தள்ளி கதவை
வெளிப்புறத்தில் பூட்டி  நமட்டு சிரிப்புடன் மதியின் அறையில் நுழைந்துக் கொண்டார்.

கட்டலின் மீது பொத்தென்று அமர்ந்தவன்,,

இந்தப் பாட்டிக்கெல்லாம் தூக்கமே வராதா,,.என் டார்லிங்க பாக்கப் போன இங்க கொண்டுவந்து விட்டுருச்சி என புலம்பியபடியே உறங்கிப் போனான்.
.
.
,
.
.
.
.
.

இன்னும் சில நிமிடங்களில் தன்னவள் தன்னருகில் அமரப் போகிறாள் மாங்கள்யத்தை அணிவித்து அவளைத் தன் மனையாளாக்கப் போகிறோம் என்பதை நினைத்தவனுக்கு பூரிப்பாய் இருந்தது.

மணக்கோலத்தில் தங்க பதுமையாக வந்தவளை விழியாளே விழுங்கியவன் மதி அருகில் வந்து அமர்ந்ததும் ்...அவளுக்கு மட்டும் கேட்கும்படி

ஏன்டி இவ்ளோ அழகா இருக்க..அப்படியே கொல்ற என்ன ...

வெட்கத்தில் குனிந்துக் கொண்டவள் பதிலேதும் கூறவில்லை.

ஆதிரா தான் ஒருவித மயக்க நிலையிலேயே இருந்தாள் இருக்காதா பின்ன.. முதன்முதலாக தன்னவனை

பட்டுவேட்டி சட்டையில் கம்பீரமாக குழிவிழும் கன்னமும் வசீகரப் புன்னகையுடன் தன்னருகில் நின்றிருந்த சக்தியைப் பார்த்த மயக்கத்திலிருந்தாள்.

சக்தியும் லேவன்டர் நிறப் புடவையில் தேவதைப் போல் நின்றிருந்த ஆதிராவை தன் ஓர விழியால் வருடிக் கொண்டிருந்தான்.

இருவரும் ஒருவரை ஒருவர் அறியாவண்ணம் பார்வையாலே வருடிக் கொண்டிருக்க ., விதியோ இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை முடிப்பதற்காக திட்டம் தீட்டிக்
கொண்டிருந்தது.

கெட்டி மேளம் கெட்டி மேளம் என அய்யர் முழங்க  வருண் மதியழகியின் கழுத்தில் தாலி கட்டிட ஜானகியும் மதியழகியின் தந்தையும் கண்ணீருடன் அட்சதை தூவி இருவரையும் ஆசிர்வதித்தனர்.
.
.
.
.
.
.

அன்று மாலையே வருணின் கொலீக்ஸ் அனைவரும் கிளம்பிட அடுத்தடுத்த சடங்குகள் நடந்தது.

அறை முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க வருண் மதியின் வருகைக்காக காத்திருந்தான்.

மதி உள்ளே நுழையும் போது வருண் அங்கு இல்லாததால் சுற்றும் முற்றும் தேடியவளை பின்னாலிருந்து அனைத்தவன் அவளது காதருகில்

ஐ லவ் யூ டார்லிங் ...என்றவனின் குரலில் கிறங்கியவள் திரும்பி அவனது நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.

அவளைத் தன் கைகளில் ஏந்தியவன் படுக்கையில் கிடத்தி முழுமையாக அவளைத் தன்னவளாக்கிக் கொண்டான்.
.
.
.
.
.

ஆதிரா தான் மிகவும் சிரமப்பட்டு அப்பத்தாவிடம் தான் கர்பமாக இல்லையென்பதை புரியவைத்தாள்.

அவளது கன்னத்தை வருடியவர் அடுத்த முற வரும் போது நிச்சியமாக நல்ல சேதியோட தான் வருவ என நம்பிக்கையாக கூறியவரிடம்.,..வெட்கப் புன்னகையுடன் ம்ம்ம் கொட்டினாள்.

கூடிய விரைவில் சக்தியிடம் தன் மனதை வெளிப்படுத்த வேண்டுமென முடிவெடுத்திருந்தாள் ஆதிரா.

இருந்தாலும் அவள் மனதில் சிறு தயக்கம் இறுக்கத் தான் செய்தது.சக்தி மனதில் தன்னைப் பற்றிய எண்ணம் என்னவாக இருக்கும் என சிந்தித்தவளுக்கு பயம் தொற்றிக் கொண்டது.
ஒரு வேளை அடைக்களம் கொடுக்கவே தாலி கட்டினேன் மற்ற படி காதல் சேர்ந்து வாழும் எண்ணம் எதுவும் இல்லை என கூறிவிடுவானோ என.

இதை தாங்கிக் கொள்ளும் சக்தி அவளிடம் இருந்தாலும் ...இல்லை நான் ரேஷ்மாவைத் தான் விரும்புகிறேன் என்று அவன் கூறினால் அதை தாங்கக் கூடிய சக்தி அவளிடம் இல்லை.

எதுவாக இருந்தாலும் சரி அதை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என ஒரு முடிவெடுத்துக் கொண்டாள்.

திருமணம் முடிந்து மறுநாள் அனைவரும் குல தெய்வக் கோவிலில் பூஜை செய்துவிட்டு வந்தவுடன் சென்னை கிளம்ப ஆயத்தமாகினர்.

வருண்
மதியை சமாதானம் செய்ய அதில் தோற்றுப் போனான்.

தன் தந்தையையும் அப்பத்தாவையும் மாறி மாறி கட்டிக் கொண்டு அழுதவளிடம் என்ன தான் ஆறுதலாகப் பேசினாலும்
அவரது கண்கள் கலங்காமலில்லை.

கண்ணீருடன் மதியின் நெற்றியில் முத்தமிட்டவர் வருணுடன் அனுப்பி வைத்தார்.

முதலில் நேராக அனைவரும் வருணின் வீட்டிற்கு தான் சென்றனர்.

ஆதிரா மதியிடம் பேசிக் கொண்டிருக்க சக்தியும் வருணும் பால்கனியில் நின்றபடி.

நீ எப்பதான்டா உன்னோட லவ்வ அண்ணிக்கிட்ட சொல்லப் போற.,

சொல்லனும்டா ஆனா அதுக்கு முன்னாடி ஆதிரா அப்பா அம்மாக்கிட்ட பேசி புரிய வைக்கனும் .

அப்ப அதையாச்சும் பன்னு ...

நான் சொல்றத அவங்க நம்புவாங்களா மறுபடியும் ஆதிராவ தப்பா பேசிட்டா என்னால தாங்க முடியாது.,.எனக்கு ஒரு மாதிரி  பயமா இருக்குடா என்றவனின் கையை அழுத்தியவன்

இங்க பாரு நீ பயப்பட்றதுல நியாயம் இருக்கு. ஆனா இன்னும் எவ்ளோ நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் இப்படியே இருக்கப் போரிங்க .உங்களுக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு இல்லடா...ஒரு தடவ பேசிப் பாரு.

பெருமூச்சொன்றை வெளியேற்றியவன் ம்ம் கூடிய சீக்கிரம் பேசறேன்டா...என்றான்
.
.
.
.
.
இந்த வாரம் முழுவதும் விடுப்பு எடுத்திருத்தமையால் வேலை பழுவின் காரணமாக அடுத்து வந்த நான்கு நாட்களும் சக்தி வீடு வந்து சேர இரவு பத்தானது.

சக்தி தனக்காக காத்திருக்க வேண்டாம் என கூறியும் ஆதிரா கேட்கவில்லை.அவன் வந்தப்பிறகு தான் தூங்கச் செல்வாள்.

பேசிக் கொள்ளக் கூட இருவருக்கும் நேரம் கிடைக்காமல் போக ஆதிரா சக்தியை மிகவும் மிஸ் பன்னாள் சக்தியும் தான்.

இன்றோடு வேலை அனைத்து முடிந்துவிடும் ஆறு மணிக்கே வீடு வந்து சேர்வதாகக் கூறியிருந்தான்.

மணி ஏழைத் தொட்டிருக்க சக்தி இன்னும் வீட்டிற்கு வந்து சேராததால் ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டிருந்தாள்.

கொஞ்சமாச்சும் அக்கற இருக்கா வீட்ல ஒருத்தி தனியா இருக்காளேனு...

அட்லீஸ்ட் ஒரு போன் கால் வர லேட்டாகும்னு,..என்றவள் சக்திக்கு டயல் செய்வதற்காக போனை கையில் எடுத்தாள்....

ம்ஹூம் நான் கால் பன்ன மாட்டேன் அவனே பன்னட்டும் என போனை சோபாவில் தூக்கி எறிந்தாள்.

அடுத்த நொடி போன் சினுங்க சக்தியாகத் தான் இருக்கும் என எடுத்துப் பார்க்க

ஒரு அன்னோன் நம்பரிலிருந்து கால் வந்தது.

புருவம் முடிச்சிட அட்டன் செய்தவள் காலில் வைத்திட,..

ஹாய் டார்லிங்...ஒரு ஆணின் குரல் கேட்டது...

பதிலேதும் கூறாமல் ஆதிரா அமைதியாக இருக்கவும் ...

ஹலோ கூட சொல்லமாட்டியா
என்ன அதுக்குள்ள மறந்துட்டியா வாய்ஸ் கூட தெரியலையா. ம்ம்ம் எல்லாம் காதல் படுத்தறபாடு.என பேசிக் கொண்டே போக

ஹே யார் நீ தேவையில்லாம பேசற..

இந்த மதனையே மறந்துட்டியா
நீ...

ச்சீ நீயா..

ஆமா நானே தான்.

நீ எதுக்குடா எனக்கு கால் பன்ற...

காரணம் இல்லாமையா...

எரிச்சல் வர,.ம்ச் என்னதான் வேணும் உனக்கு

நீ அப்றம் உன்னோட சந்தோஷம் வேணும்.

மரியாதையா பேசு .நீ அன்னக்கி என்கிட்ட வந்து பேசுன உடனே நான் சக்திகிட்ட சொல்லிருக்கனும் தப்பு பன்னிட்டேன் .இப்பவும் ஒன்னு கெட்டுப் போல சக்திக்கிட்ட சொன்ன நீ இருக்கிற இடம் தெரியாம பன்னிடுவான்...

எதிர்முனையில் மதன் சிரிக்கும் சத்தம் கேட்க ஆதிராவிற்கு எரிச்சலாக இருத்தது.

ஹாஹா சக்தியா. என்னவோ அவன் இப்ப உன் கூட இருக்குற மாதிரி பேசற .அவன் இன்னும் அங்க வரல தான...

ஆமா எனத் தடுமாறினாலும் அதை அவனிடம் காட்டிக் கொள்ளவில்லை.

கவலப்படாத இனி அவன் வரவே மாட்டான்.என்றவுடன்...

என்ன மிரட்டுறியா உன்னால சக்திய ஒன்னும் பன்ன முடியாது.

ம்ம் அவ்ளோ லவ் உனக்கு அவன் மேல என்னபன்றது அதுதான அவன் இப்ப மேல போகறதுக்கு காரணாமா இருக்கப் போது.

வேண்டாம் மதன் நீ ரொம்ப எல்லை மீறிப் போற அது உனக்கு நல்லதுக்கில்ல .உன் மிரட்டல இதோட நிறுத்திக்கோ ...

இன்னும் கொஞ்ச நேரத்துல நீ அழுவ நான் அப்ப கால் பன்றேன் பாய் என போனை கட் செய்தவன் எதையோ சாதித்தது போல் சிரித்துக் கொண்டான்.

என்னதான் மதனிடம் தைரியமாகப் பேசினாலும் ஆதிராவால் நிஜத்தில் தைரியமாக இருக்க முடியவில்லை.

நேரம் ஆக ஆக அவளது இதயத்துடிப்பு அதிகமானது .பயம் தொற்றிக் கொண்டது.

வருவதற்கு நேரமாகும் என்றால் போனில் அழைத்து சொல்லுபவன் இன்று  கால் கூட பன்னவில்லை.

நடுக்கத்துடன் போனை எடுத்தவள் சக்திக்கு டயல் செய்ய ஸ்சுவிட்ச்டு ஆஃப் என வந்தது.

அவ்வளவு தான் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையை இழந்தவளின் கண்களில் கண்ணீர் பொல பொலவென கொட்டியது.

மதன் கூறியது உண்மையாக இருக்குமோ என நினைத்தவளுக்கு நெஞ்சு அடைத்தது.

வார்த்தைகள் எதுவும் எழாமல் தடுமாறினாள்.

மதன் மீண்டும் கால் செய்ய அட்டன் செய்தவள்

மதன் ப்ளீஸ் சக்திய எதுவும்
பன்னிடாத என அழுகவும்

மறுமுனையில் சிரித்தவன்

அழறியா ,..நல்லா அழு அதான் எனக்கு வேணும்...என ஆவேசமாகக் கூறியவனிடம்..

மதன் ப்ளீஸ் சக்தி ஒன்னும் பன்னிராத ப்ளீஸ் நீ என்ன சொன்னாலும் செய்யிறேன் ப்ளீஸ் ப்ளீஸ்.,என கெஞ்சினாள்.

அப்படியா நான் என்ன சொன்னாலும் செய்வியா என மதன் கேட்க.,.

ம்ம் கண்டிப்பா நீ சக்திய விட்டுடு ப்ளீஸ் கெஞ்சிக் கேட்டுக்குறேன்.

ஒன்னுல்ல நீ சக்திய விட்டுட்டுப் போனும் .சக்திய காயப்படுத்தற மாதிரி பேசிட்டு போனும் .அதனால அவன் உன்ன தேடிக் கூடப் பார்க்கக்
கூடாது.உனக்கு இன்னும் இரண்டு நாள் டைம் தரேன்.திருப்பி கால் பன்னுவேன் என்றவன் ஆதிராவின் பதிலை எதிர்ப்பார்க்காது கட் செய்தான்.

Continue Reading

You'll Also Like

76.9K 2.5K 44
திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...
134K 3.5K 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே க...
84K 4.6K 61
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு...
117K 5.5K 25
பேரன்பின் உருவமாக அவள் வாழ்வில் நுழைபவன் அவன்..❤❤