இதய திருடா

由 kuttyma147

641K 17K 2.6K

எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இ... 更多

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
32
33
34
35
:)
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
நன்றி
50.Epilogue
மீண்டும் ஒரு கதையுடன்

31

10.1K 291 44
由 kuttyma147

வெளியே நின்றபடி சந்திரா ஆதிராவை கடிந்துக் கொண்டிருக்க, வசந்தி தன் கணவனின் நிலைக் குறித்து வருந்திக் கொண்டிருக்க, அறுவை சிகிச்சை அறையினுள் நுழைந்த ஆதிராவோ வெறும் பார்வையாளராகிப் போனால்.

அறுவை சிகிச்சை முடிந்தவுடன் மருத்துவர் வாசுதேவனிடம் தன் தந்தையின் நிலையைப் பற்றிக் கேட்டு அறிந்துக்கொண்டாள்.

அவர் சுயநினைவிற்கு (conscious) வருவது சாத்தியம் என்றாலும், அது எப்பொழுது என்று கூற முடியாது என்றும், அதற்கு ஒரு மணி நேரம்,ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது பல வருடங்கள் ஆகலாம் என்றும் கூறியவர் தன்னால் முடிந்தவரையிலான ஆறுதல் வார்த்தைகளை தந்துவிட்டுச் சென்றார்.

அறுவை சிகிச்சை அறையிலிருந்து ராஜனை ஐசியு(ICU)விற்கு மாற்றினர்.

மயக்கநிலையிலிருந்தவரின் முன் மண்டியிட்டு அமர்ந்தவள் அவரது வலது கரத்தினை இறுகப் பற்றியபடி

சாரிபா.,,,நான் எந்தத் தப்பும் பன்னலபா.,.உங்க பொண்ணுப்பா நான்...நீங்க வேதனைபடற மாதிரி நான் நடந்துக்கமாட்டேன் பா.,.என் மேல உள்ள வெறுப்புல என்ன விட்டுட்டுப்  போயிடாதிங்கப்பா ப்ளீஸ் ...நீங்க எனக்கு வேணும்பா.,..நீங்க எனக்கு வேணும்பா.,,.ப்ளீஸ்.,,என்ன நீங்க ஏத்துக்கலனா கூட பரவாலபா.,.நான் தூரமா நின்னு உங்களப் பாத்துக்கிறேன்.,.ப்ளீஸ் பா ஒரு தடவ கண் முழிச்சி எங்கிட்ட பேசுங்கப்பா ப்ளீஸ் .,,.ப்ளீஸ் .,ப்ளீஸ்...என கதறி அழுது ஓய்ந்தவள் அவரது கரத்தின் மீது தன் தலையை சாய்த்துக் கொண்டாள்.

அவளது தோளின் மீது யாரோ கை வைக்க அதை உணர்ந்தவள் நிமிர்ந்துப் பார்க்க அங்கு சக்தி நின்றுக் கொண்டிருந்தான்.

அவனது கண்களும் கலங்கியிருந்தது.

சக்தி அப்பாவ கண்முழிக்கச் சொல்லு  ப்ளீஸ்....நான் சொன்னா  கேக்கமாட்றாரு.,நீயாச்சும் சொல்லு ப்ளீஸ்.,..என்றவளின் தோளைப் பற்றி நிற்கச் செய்தவன்

ஷ்,.,அழக் கூடாது. உன் அப்பாக்கு நீ அழுதா புடிக்காது என அவளது கண்ணீரைத் துடைத்து விட்டு .,,

அவர் நிச்சயம் கண் முழிப்பாரு உங்கிட்டப் பேசுவாரு,,,எனக்கு நம்பிக்கை இருக்கு.,.அவரோட பொண்ணு நீ  உனக்கந்த நம்பிக்க இல்லையா என்றவனிடம்.

இருக்கு என தலையாட்டி வைத்தாள்.

டாக்டர் அவங்க இரண்டு பேரும் பேஷன்ட பார்க்கனும்னு பிரச்சன பன்றாங்க.இவ்வளவு நேரம் சமாளிச்சிட்டேன்.இதுக்கு மேல முடியல சோ ப்ளீஸ் .,..என முன்பு ஆதிராவிற்கு உதவிய செவிலியர் கூற .

தன் தந்தையின் நெற்றியில் முத்தம் ஒன்றைப் பதித்தவள் கண்ணீரைத் துடைத்தபடி சக்தியை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

சில மருந்துகளை வாங்க சென்றிருந்த வசந்தியும் சந்திராவும் சற்று முன் தான் அந்த செவிலியரிடம் உள்ளே செல்ல வேண்டும் என வாக்குவாதம் செய்தனர்.

சக்தியும் ஆதிராவும் ஜோடியாக ஐசியுவிலிருந்து வெளியே வருவதைக் கண்ட ஆதிராவின் அத்தை அவளை வழக்கம்போல் திட்டுவதற்காக வாயெடுக்க .

அண்ணி விடுங்க. இத அப்றமா பாத்துக்கலாம்.எனக்கு அவர பாக்கனும் போல இருக்கு என்றவர் சந்திராவை உள்ளே அழைத்துச் சென்றார்.

ஆதிராவை முறைத்தபடியே தான் சந்திரா உள்ளே சென்றார்.

தான் இங்கு தங்கிக் கொள்வதாகவும் சக்தியை வீட்டிற்குச் செல்லுமாறு கூறியவளை மிகவும் முயன்று சமாதானப்படுத்தியவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

வீட்டிற்கு வந்தவளின் மனம் அவளது தந்தையின் அருகிலே இருந்தது.

இரவு உணவை உண்ண மறுத்தவளை கெஞ்சி சாப்பிட வைத்தான்.

ராஜனின் நிலையை எண்ணி ஆதிரா தூக்கத்தை தொலைக்க சக்தியோ ஆதிராவின் நிலையை எண்ணித் தூக்கத்தைத் தொலைத்திருந்தான்.

இந்த நாள் அவனது வாழ்வில் மறக்கமுடியாத நாள். அன்று ஆதிராவை அவள் குடும்பத்தினர் ஒதுக்கிய போதுக்கூட அவளது கண்ணில் இத்தனை வலியை பார்த்திருக்கமாட்டான்.ஆனால் இன்று அவளது தந்தைக்காக அவள் அழுதது மற்றும் அவள் கண்ணில் பார்த்த வலி அவனை ஏதோ செய்தது.

இருவரும் தூக்கத்தைத் தொலைத்திருக்க அவர்களுக்கு நாளை ஒரு பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

விடிந்து இருவரும் மருத்துவமனைக்குச் செல்ல தயாராகினர்.

ஆதிராவின் முகம் தான் கலையிழந்துக் காணப்பட்டது.
இன்று அலுவலகத்திற்கு தான் வரப்போவதில்லை என்பதை அறிவிப்பதறகாக சக்தி வருணிற்கு  கால் செய்ய நாட் ரீச்சபுள் என வந்தது.

நேற்று இரவு கால் செய்தப்போதும் கூட நாட் ரீச்சபுள் என வந்தது.தற்போதும் நாட் ரீச்சபுள் என வரவும் கடுப்பாகியவன் மனதினுள் வருணைத் திட்டிக்கொண்டே ஆதிராவுடன் மருத்துவமனைக்கு கிளம்பினான்.

மருத்துவமனையினுள் நுழைந்தவுடன் ஐசியுவை நோக்கி விரைந்த ஆதிராவை சக்திப் பின் தொடர்ந்தான்.

ஆதிரா ஐசியுவிற்குள் நுழைய முற்படுகையில் அவளை தடுத்த அந்த செவிலியர் அவளிடம் ஏதோ ஒன்றைக் கூற அந்த இடத்திலேயே கீழே அமர்ந்தபடி கதறி அழத் தொடங்கினாள்.

படபடக்கும் மனதோடு ஆதிராவின் அருகில் வந்த சக்தி அந்த செவிலியரிடம் விஷயத்தைக் கேட்டு அறிந்துக் கொண்டான்.சக்திக்கோ ஆதிராவை தேற்றுவதற்கான வழிதான் தெரியவில்லை.
.
.
.
.
தாமதமானப் பதிவிற்கு மன்னிக்கவும்.

繼續閱讀

You'll Also Like

213K 9.9K 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயி...
77K 2.5K 44
திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...
496K 16.7K 62
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
91.9K 3.5K 49
அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில்...