இதய திருடா

By kuttyma147

641K 17K 2.6K

எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இ... More

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
31
32
33
34
35
:)
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
நன்றி
50.Epilogue
மீண்டும் ஒரு கதையுடன்

30

10.7K 312 34
By kuttyma147

இன்னக்கி எனக்கு கேஷுவால்டில டியூட்டி,...

அப்போ ஒரு ஆக்ஸிடன்ட் கேஸ் வந்ததுனு நான் பர்ஸ்ட் எய்ட் பன்னப் போன அப்ப,...அப்ப,...என திணறியவள் தன் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழத்தொடங்கினாள்.

ஆதிரா அழறா அதனால நானே சொல்றேன்.

முதலுதவி செய்ய வந்தவள் அந்த ஸ்டிச்சரில் இருந்தவரை பார்த்து திகைத்தபடி நின்றிருந்தாள்.

அவளது தந்தையின் முகத்தின் ஒரு பாதியும் அவரது ஆடையும் இரத்தத்தினால் மறைந்திருத்தது.
இரத்தம் அதிகம் வெளியேறியதால் அவரது உடல் வெளுத்திருந்தது.

உடல் நடுங்க நின்றிருந்தவளை அருகிலிருந்த செவிலியரின் குரல் நடப்பிற்குக் கொண்டுவர

ஒவ்வொரு நொடிகளையும் வீணடிக்காமல் கை நடுக்கத்துடன் தன் மருத்துவப் பணியை தொடங்கினாள்.

விஷயம் தெரிந்து ஆதிராவின் அன்னை வசந்தியும் அத்தை சந்திராவும் அங்கு வந்துச் சேர்ந்தனர்.

அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக ராஜனை ஆப்ரேஷன் தியேட்டருக்கு மாற்றுவதற்காக ஆதிரா வெளியே வரும் போது தான் அவளது அன்னையையும் அத்தையையும் கவனித்தாள்.

வசந்தி சுவரில் சாய்ந்தபடி அழுதுக் கொண்டிருக்க அழுதபடியே அவர் அருகில் சென்றவள் அவரை இருக்க அனைத்துக் கொண்டாள்.

அவள் அனைத்த அடுத்த நொடி ஆதிராவை பிடித்துத் தள்ளியவர்

சீ,,என்ன தொடாத .,.அவருக்கு மட்டும் எதாவது ஆச்சி உன்ன சும்மா விடமாட்டேன் என்றவர் மேல எதுவும் பேசாமல் கீழே அமர்ந்தபடி அழத்தொடங்கினார்.

சண்டாலி உன்னோட பேச்ச எடுத்தான் இன்னக்கி காலைல சொல்ல சொல்ல கேக்காம.அப்பயே என்னொட மனசு சொல்லுச்சு எதோ தப்பா நடக்கப் போவுதுனு.ஏன்டி அங்க இருக்கும் போதும் என் தம்பியோட நிம்மதிய கெடுத்த இப்பையும் உனக்கு என்னடி கேடு. அவன் மேல உன்னோட நிழல் கூட படக்கூடாது .அவனுக்கு ட்ரீட்மென்ட் பன்னும்போது நீ கூட இருந்தா அவன் எப்படி புழைப்பான்.நீ உள்ள போக்கூடாது.அப்படி நீ போகற மாதிரி இருந்தா இந்த ஹாஸ்பிட்டல் வேணா. நாங்க வேற ஹாஸ்பிட்டல் பாத்துக்குறொம்.

என்றதோடு மட்டுமில்லாமல் ஆதிராவை அங்கிருந்து பத்தடி தள்ளிக் கொண்டு வந்து நிறுத்தியவர்.

என் தம்பி குணமாகித் திரும்ப வர வரைக்கும் நீ இந்தப் பக்கம் வரக் கூடாது என்றவர் வசந்தியை தேற்ற சென்று விட ஆதிரா அழுதுக் கொண்டே தன்னறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

புகழ் பெற்ற நியூரோ சர்ஜன் வாசுதேவனை வரவழைக்கப் பட்டு அறுவை சிகிச்சை துவங்கப்பட்டது.

எங்கு தான் அங்கு சென்றாள் சந்திரா கூறியபடி வேறு மருத்துவமனைக்கு மாற்றிவிடுவாரோ என்ற பயத்தில் தான் தனக்கானஅறையில் நுழைந்துக் கொண்டாள்.

இது போன்ற சிகிச்சையில் காலத் தாமதம் ஏற்பட்டால் ராஜனின் உயிருக்கு ஆபத்து என அறிந்தவளாயிற்றே.

இருந்தாலும் தன் சிறு வயதிலிருந்து அவளது இன்ப துன்பங்களின் போது அருகிலிருந்தவர் ராஜன்.
அவளது அன்புத் தந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருக்க இந்நிலையில் அவருடன் உரு துனையாக தன்னால் இருக்க முடியவில்லையே என நொந்துக் கொண்டாள்.

நேரம் ஆக ஆக மனதில் சிகிச்சையின் பலன் என்னவாக இருக்கும் என பயம் தொற்றிக் கொள்ள கீழே சரிந்து விழுந்தவள் தனக்குத் தெரிந்த எல்லாக் கடவுளையும் வேண்டியபடி அழத்தொடங்கினாள்.

மொபைல் சைலன்ட் மோடில் இருந்தமையால் சக்தி அழைத்ததை அவள் அறியவில்லை.

அழுது ஓய்ந்தவள் பின்பு சக்தியின் நினைவு வர போனில் அவனிடம் விஷயத்தைக் கூறினாள்.
.
.
.
.
.
.

அனைத்தையும் கூறி முடித்தவள்

நான் அப்பாவ பார்க்கனும் சக்தி .இப்பவே பார்க்கனும்.நான் பாக்கனும்.எனக்கு பயமாருக்கு.என்ன அப்பாக்கிட்ட கூட்டிட்டுப் போ சக்தி ப்ளீஸ்... என விம்மியடி அவனது நெஞ்சில் அவள் முகம் புதைத்துக் கொள்ள ஆறுதலாக அவளை அனைத்துக் கொண்டவனின் கண்களும் கலங்கிப் போயிற்று.

அவளது முகத்தை தன் கைகளில் ஏந்தியவன் கண்ணீரைத் துடைத்தபடி

அப்பாக்கு ஒன்னு ஆகாது எனக்கு நம்பிக்கை இருக்கு.நீ பர்ஸ்ட் அழாத .உனக்கு அப்பாவ பார்க்கனும் அவ்வளவு தான. ஆப்ரேஷன் முடியட்டும் பார்க்கலாம்.

ஆனா அவங்க,.,என அவள் முடிக்குமுன்னே.

நீ ஒரு டாக்டர்.நீயே அவங்க இவங்கனு பயந்தா எப்படி. இந்த ஹாஸ்பிட்டல்ல இருக்கற ஒவ்வொரு பேஷன்டோட ஹெல்த்த பத்தின அக்கற உனக்கு இருக்குல.அப்றம் என்ன அந்த உரிமைல நீ போய் பாரு. யாரு என்ன சொன்னாலும் காதுல வாங்கிக்காத என்றதோடு மட்டுமில்லாமல் டேபுளின் மீதிருந்த வெள்ளை நிற கோட்டை எடுத்து அவளது கையில் கொடுத்தான்.

அதை வாங்கி அணிந்துக் கொண்டவள் கதவை நோக்கி நகர சக்தியும் அவளைப் பின் தொடர்ந்தான்.

நீயும் வரியா சக்தி.

ம்ம்ம்....ஆமாம்.

இல்ல நீ வரவேண்டா. நா மட்டும் போய் பாத்துட்டு வரேன். என்னையே கண்டபடி பேசறவங்க உன்ன பேசாம இருக்கமாட்டாங்க.சோ நீ இங்கையே இரு என்றவள் நடையில் வேகத்தைக் கூட்டினாள்.

இந்த நிலையிலும் தன்னைப் பற்றி சிந்திப்பவளின் மீது சக்தி மீண்டும் காதலில் விழுந்தான்.

தயங்கியபடி ஆபிரேஷன் தியேட்டர் அருகே சென்றவளை சந்திரா கவனித்துவிட ஆதிரா அதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்து வைக்காமல் நின்றுவிட்டால்.

உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா என சந்திரா மீண்டும் கத்த ஆரம்பிக்க,அந்த சத்தத்தில் ஆபிரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்த செவிலியர்

ஏன்மா இங்க கத்திட்டு இருக்கிங்க .உள்ள ஆபிரேஷன் நடக்கறது தெரியுமா தெரியாதா.பர்ஸ்ட் நீங்க இந்த இடத்த விட்டுக் காலிப்பன்னுங்க. வெளிய போய் வெயிட் பன்னுங்க என்றவர் ஆதிராவின் புறம் திரும்பி,,..

டாக்டர் நீங்க ஏன் இங்க நிக்கிறிங்க உள்ள வாங்க. சார் உங்கள அப்பவே கூப்டாரு.

தேங்க்ஸ் சிஸ்டர்,.,.ரொம்ப ரொம்ப தேங்கஸ்.,,என கண்ணீருடன் கையெடுத்துக் கும்பிட்டாள்.

டாக்டர் என்ன இது பர்ஸ்ட் கைய கீழ இறக்குங்க என கையை எடுத்துவிட்டவர்

நீங்க அழுத அழகைலையே தெரிஞ்சது அவர் உங்க அப்பானு. வாங்க வந்து அப்பாவ பாருங்க என உள்ளே அழைத்துச் சென்றார்.

முதல் தடவை சந்திரா கத்திய போதே அந்த செவிலியர் தடுத்திருக்கலாம் தான் ஆனால் எமர்ஜென்சி என்பதால் வாக்குவாதத்தை தவிர்த்துவிட்டு ராஜனை ஆபிரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்வதில் கவனம் செலுத்தினார்.

ஆதிராவின் அன்னையும் ,சந்திராவும் வேறு வழியின்றி வெளியில் நின்றபடி காத்துக்கொண்டிருந்தனர்.

Continue Reading

You'll Also Like

77K 2.5K 44
திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...
23.7K 1.1K 63
ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்த...
333K 9.8K 66
அகல்யா ஓடும் நதி... அமைதியின் சொருபம்... அவள் வாழ்க்கை ஒரு பார்வை
134K 3.5K 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே க...