இதய திருடா

By kuttyma147

641K 17K 2.6K

எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இ... More

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
27
28
29
30
31
32
33
34
35
:)
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
நன்றி
50.Epilogue
மீண்டும் ஒரு கதையுடன்

26

10.9K 300 28
By kuttyma147

இரண்டு நாட்கள் அங்கு தங்குவதற்கு தேவையானதை தன் பையில் அடுக்கி வைத்தவள் சக்தியின் வருகைக்காக காத்திருந்தாள்.

இன்னும் இரண்டு நாட்களில் பாரதிக்குத் திருமணம். அதற்குத் தான் ஆதிரா கிளம்பிக் கொண்டிருந்தாள்.

சக்திக்குத் தான் இந்த எட்டு நாட்களும் சோகத்திலே கழிந்தது ஆதிரா திருமணத்திற்கு தன்னையும் வருமாறு ஒரு முறைக் கூட கேட்கவில்லை என.அதே சோகத்திலே வீடு வந்துச் சேர்ந்தான்.

ஹாலில் உள்ள சோபாவில் ஒரு டிராவல் பேக் இருந்தது.அதைப் பார்த்தவுடன் சக்தியின் முகம் சுருங்கிப் போனது.

சுருங்கிய முகத்துடன் கிட்சனுள் எட்டிப் பார்க்க ஆதிரா அங்கு இல்லை. ஏமாற்றத்துடன் தன் அறையினுள் நுழைய ஆதிரா தலையை துவட்டிய வண்ணம் வாஷ் ரூமிலிருந்து வெளியே வந்தாள்.

சக்தி உள்ளே வருவதை கவனித்தவள்

வந்துட்டியா சக்தி .இரு நான் காபி எடுத்துட்டு வரேன் என்று கிளம்பிவளிடம்

இல்ல வேண்டா எனக்கு தலை வலிக்குது. நான் அப்பறமா போட்டுக் குடிச்சிக்கிறேன் என சோபாவில் தலை சாய்த்தபடி அமர்ந்துக் கொண்டான்.ஏனோ அவன் மனம் பாரமாக இருப்பதை உணர்ந்தான்.

அவனுக்கு பதிலேதும் கூறாமல் ஆதிரா அறையை விட்டு வெளியேறினாள்.

கண்மூடி அமர்ந்திருந்தவனின் அருகில் யாரோ அமர்வதைப் போல் உணர்ந்தவன் கண்ணைத் திறந்து தலையைத் திருப்ப அங்கு ஆதிரா காபி கப்புடன் அமர்ந்திருந்தாள்.

பர்ஸ்ட் இந்த காபிய குடி அப்பையும் தலை வலி சரி ஆகலனா நான் டேப்லட் தரேன் அத போட்டுக்கோ என்றவள் அவன் நெற்றியிலும் கழுத்திலும் கை வைத்துத் தொட்டுப் பார்த்து ஜுரம் அடிக்கவில்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டாள்.

எழுந்துக் கிளம்பாமல் தன்னருகிலேயே தயக்கத்துடன் அமர்ந்திருப்பவளை கவனித்தவன்.

என்னாச்சுக் கிளம்பலையா???

ஹாங்.,..கிளம்பனும் சக்தி. சிக்ஸ் தர்ட்டிக்குத் தான் டிரெயின் இன்னும் டைம் இருக்கு என்றாள்.

அவளது தயக்கம் இன்னும் கலையவில்லை என்பதனை உணர்ந்தவன்.

ஏதோ கேட்கனும்னு நினைக்கிற .....என்ன????

அது வந்து. எனக்கு ஒரு ஹெல்ப் பன்றியா என்றாள் தயங்கியபடி.

என்ன இவ இவ்ளோ தயங்குறா அப்படி என்ன ஹெல்ப் கேட்கப் போறா.அவள ஸ்டேசன்ல டிராப் பன்ன சொல்லிக் கேப்பாளோ. கேட்கலனாலும் நான் தான் கொண்டுப் போயி விடப் போறேன்.என தனக்குள் பேசிக் கொண்டிருந்தவனிடம்.

சக்தி நீயும் என் கூட மேரேஜ்க்கு வரியா.

அவள் அவ்வாறு கேட்கவும் சக்திக்கு இறக்கக் கட்டி பறக்கனும் போல இருந்தது.

நான் உனக்கும் சேத்துத் தான் டிரெயின் டிக்கெட் புக் பன்னிருக்கேன்.பாரதி உன்னையும் கூட்டிட்டு வரச் சொன்னா. நான் நீ டூ டேஸ் ஆபிஸ் லீவ் போடுவியோ மாட்டியோனு   தான்  கேட்கல. ப்ளீஸ் எனக்காக ஒரு டூ டேஸ் மட்டும் லீவ் போட்டுட்டு என் கூட வரியா ப்ளீஸ் என ஆதிரா கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

செல்லக் குட்டி நீ வானு சொன்னா நான் வரப் போரேன் அதுக்கு எதுக்குடி ப்ளீஸ் லாம் சொல்ற என மனதில் அவளை கொஞ்சியவன்.

எதுக்கு ஆதிரா இதுக்குப் போய் ப்ளீஸ் லாம். டூ டேஸ் லீவ் போட்றதுல என்ன வந்துடப் போகுது.நான் வரேன் என்றான் காதலை உள்ளடக்கி கெத்தை விடாமல்.

ஹை.. தேங்க்யூ என்றவள் கண்ணாடியின் முன் நின்று ரெடியாக ஆயத்தமானாள்.

அவளிடன் அழகியப் புன்னகை ஒன்றை உதிர்த்தவன் குஷியாகக் குளியலறையில் புகுந்துக் கொண்டான்.

சென்னை டூ மதுரை எக்ஸ்பிரஸ்ஸில் இருவரும் ஏறிக் கொண்டனர்.

ஏறியவுடன் சிறிது நேரம் அமர்ந்திருந்தவள்.

சக்தி ஒரு நிமிஷம் வாயேன் என அவனை கதவருகே அழைத்துச் சென்றாள்.

நுழைவில் உள்ள இரு கம்பிகளையும் பிடித்தபடி வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது பின் புறம் நின்றிருந்தவன்.

ஏய் என்னப் பன்ற அப்படிலாம் நிக்காத இப்படி வந்து நில்லு என சக்தி கத்திக் கொண்டிருக்க ஆதிரா அதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

அவனுக்கு இவ்வாறு படியில் நின்று பயணம் செய்வது பிடித்த ஒன்றுதான் என்றாலும் நிற்பது தன் மனம் கவர்ந்த காதலி என்பதால் மனதில் பயம் ஒட்டிக் கொள்ள அவளது கையைப் பிடித்து வேகமாக உள்ளே இழுத்தவன் அவள் சுதாரிக்கும் முன்பே திறந்திருந்த கதவின் மேல் சாய்ந்துக் கொண்டு எதிரில் உள்ள சுவரில் கையை வைத்துக் கொண்டான்.

அவன் அவ்வாறு போய் நிற்கவும் குழுங்கிக் குழுங்கிச் சிரித்தவள்

இது என்ன குறுக்க கை கேட்டு மாதிரி. அப்படியெல்லாம் ஒன்னும் விழுந்துற மாட்டேன் என அவன் எதிரில் சாய்ந்தபடி நின்று கொண்டவளின் சிரிப்பு நிற்கவில்லை.

சிரிப்பப் பாரு. எனக்கு ஒன்னுனா தாங்கிப்பேன்.அதுவே உனக்குனா என்னால தாங்கிக்க முடியாதுடி அதுக்குத் தான் இப்படி என தன்னவளிடம் மனதிற்குள் பேசியபடி அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.

அவள் வெளியே உள்ள வளங்களை ரசிக்க சக்தி ஆதிராவை ரசிக்க என அந்தப் பயணம் ரசனையில் நிரம்பியிருந்தது.

விடியற்காலை நான்கு மணியளவில் ரயில் மதுரையை வந்தடைய பாரதி அனுப்பி வைத்தக்காரில் இருவரும் வீடு வந்துச் சேர்ந்தனர்.

ஆதிராவிற்காக வாயிலில் காத்திருந்தவள் அவள் வந்து இறங்கியதும் ஓடி வந்து கட்டித் தழுவிக் கொண்டாள்.

சக்தியிடம் சிறு புன்னகையை உதிர்த்தவள்

எப்படி இருக்கிங்க சக்தி...

பைன்...அப்றம் கங்ராட்ஸ் என்றான் புன்னகையுடன்.

தேங்க்யூ என்றவள் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றாள்.

முதல் நாள் நிச்சயதார்த்தமும் மறு நாள் திருமணமும் என்றிருக்க அந்த வீடே உறவினர்களால் நிரம்பியிருந்தது.

ஆதிரா பாரதியுடனே இருக்க சக்தி தனிமையில் இருக்கவேண்டும் என்பதனால் பாரதி சதீஸ்ஸை அவனிற்கு அறிமுகம் செய்து சக்தி உடனே இருக்குமாறு கூறினாள்.

சதீஷ் பி இ மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருப்பவன்.

சதீஷ் அவனுக்குத் தரப்படும் வேலைகளைப் பொறுப்பாகச்   செய்ய சக்தி அதில் தன்னையும் ஈடுப் படுத்திக் கொண்டான்.

இதற்கிடையில் ஆதிரா சக்திக்கு கால் செய்து போர் அடிக்கிதா,சாப்டியா,நான் வரனுமா என விசாரித்தபடி இருந்தாள்.

போர் அடிக்குதா என்றக் கேள்விக்கு ஆம் என்றும் நான் வரனுமா என்ற கேள்விக்கு வரனும் என கூற தோன்றினாலும் அதை அடக்கிக் கொண்டான்.

இரண்டு நாட்களுக்குத்தான விடுடா பார்த்துக் கொள்ளலாம் என தனக்குத் தானே புலம்பி ஆறுதல் படித்திக் கொண்டிருந்தான்.

நிச்சயதார்த்தத்தில் பாரதி, அஸ்வின் இருவரும் மாறி மாறி மோதிரம் அணிவித்துக் கொள்ளும் பொழுதும் மற்ற சடங்கின் போதும் சக்திக்கு ஏக்கமாக இருந்தது.

இதுபோன்ற ஒரு சூழலில் தனக்கும் ஆதிராவிற்கும் நிச்சயதார்த்தமும் திருமணமும் நிகழ்ந்திருந்தால் எவ்வாறு இருந்திருக்கும்  நினைத்துப் பார்த்தவனின் மனம் முழுவதும் சந்தோஷம் நிரம்பியிருக்க அவனது கண்கள் ஆதிராவை தேடியது.

ஆதிரா இளம் பெண்களின் கூட்டத்தின் நடுவில் நின்றபடி கதையடித்துக் கொண்டிருந்தாள்.

மாலை ஆறு மணியளவில் அனைவரும் மண்டபத்திற்குக் கிளம்புவதற்காகத் தயாராகிக் கொண்டிருக்க சக்தி பால்கனியில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனருகில் வந்து நின்றவள் 

சக்தி நாம்பலும் மண்டபத்துக்குப் போகனும் ரெடியாகலையா.

இதோ கிளம்புறேன் என சக்தி அங்கிருந்து நகரும் வேளையில் பாரதி அங்கு வந்துச் சேர்ந்தாள்.

ஹே ஆதி உன்ன அம்மா கூப்பட்றாங்க என ஆதிராவை அனுப்பி வைத்தவள் சக்தியின் புறம் திரும்பி

சக்தி நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் என்றாள்.

ம்ம்ம் சொல்லுங்க பாரதி என்றான்.

பெருமூச்சொன்றை வெளியிட்டவள்.

நீங்க சூழ்நிலை கைதியாத்தான் ஆதிராவ கல்யாணம் பன்னிக்கிட்டிங்க.
அந்த சூழ்நிலைக்கு காரணம் கூட நீங்க தான்.

இப்ப என்ன சொல்லவரிங்க பாரதி.

என்னோட பிரண்டோட வாழ்க்கை மேல உள்ள அக்கறைல தான் சொல்றேன்.நீங்கதான் அவளோட வாழ்க்கை. பாஸ்ட் இஸ் பாஸ்ட். உங்க கடந்த காலத்த மறந்து நீங்க அவளோட வாழனும்னு  சொல்றேன் என்றாள் அக்கறையான கட்டளையுடன்.

அவள் கடந்தக் காலம் எனக் குறிப்பிட்டது ரேஷ்மாவை நினைவில் வைத்துதான்.

ஆனால் சக்தி அதை ஒருப் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

உங்க பிரண்டோட லைப்ப பத்தி இந்தளவுக்கு வருத்தப்பட அவசியமே இல்லை.ஏன்னா நான் உங்க பிரண்ட விரும்புறேன்.அவ என்னோட உயிருக்கும் மேல என்றான்.

அவன் கூற்றில் திகைத்தவள் பின் சந்தோஷத்தில்

நீங்க உண்மையாத்தான் சொல்றிங்களா.

உண்மை தான் நான் ஆதிராவ விரும்புறேன்.ஆனா இன்னும் அவக் கிட்ட சொல்லல.

ஓ மை காட் நான் எதை எதையோ நினைச்சி பயந்துட்டே இருந்தேன்.இப்ப தான் ரொம்ப நிம்மதியா இருக்கு என்றாள்.

ஏன் எத நினைச்சி பயந்திங்க என புருவம் முடிச்சிட வினவியவனிடம்.

நீங்க ரே  என பாரதி ஆரம்பிக்க ஆதிரா கோவமாக உள்ளே நுழைந்தாள்.

Continue Reading

You'll Also Like

213K 9.9K 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயி...
21.9K 637 58
ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை
333K 9.8K 66
அகல்யா ஓடும் நதி... அமைதியின் சொருபம்... அவள் வாழ்க்கை ஒரு பார்வை
117K 5.5K 25
பேரன்பின் உருவமாக அவள் வாழ்வில் நுழைபவன் அவன்..❤❤