இதய திருடா

By kuttyma147

641K 17K 2.6K

எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இ... More

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
:)
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
நன்றி
50.Epilogue
மீண்டும் ஒரு கதையுடன்

23

11K 302 24
By kuttyma147

வருண்  மதிக்கு முதுகை காண்பித்தபடி கடலலைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க அவளோ அங்கு அசையாமல் நின்றுக் கொண்டிருந்தாள்.

வருண் அவளை உலுக்கி கத்தியதில் முதலில் பயந்தவள் பின்பு அவன் வார்த்தைகளை உள்வாங்கினாள்.அதுவும் அவன் கடைசியாக தன் பாதுகாப்பிற்காக பின் தொடர்ந்தேன் என்றுக் கூறியது அவள் மனதில் ஆழமாகப் பதிந்தது.மீண்டும் மீண்டும் அந்த சொற்களே நினைவிற்கு வர யாருக்கும் என்மேல வராத அக்கறை இவருக்கு மட்டும் ஏன் வருது என தனக்குள் குழப்பிக்கொண்டிருந்தாள்.

திரும்பி அவனைப் பார்த்தாள் தன்னையும் மீறி சிறு புன்னகை மலர அவனருகில் சென்றாள்.

அவன் வலது புறத்தில் சென்று நின்றவள்

அய்யோ அவர் என்மேல இருக்குற அக்கறைல தான கேட்டாரு. நான் தான் லூசு மாதிரி தப்பா நினைச்சி அழுதுட்டேன்.அவர் மட்டும் இன்னக்கி வரலனா என்னோட நிலைம ச்ச....சரி சாரி கேட்டுட்டு தேங்க்ஸ் சொல்லிடுவோமென கையை பிசைந்தபடி அவன் புறம் திரும்பினாள்.

பக்கத்தில் அவள் வந்து நின்றதும் திரும்பிப் பார்த்தான்.

அவன் கண்களைப் பார்த்துப் பேச முடியாமல் குனிந்தபடி சா என அவள் ஆரம்பிக்க அதுவரை அவளையும் பிசைந்து கொண்டிருக்கும் அவளது கையையும் அவளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தவன்
என்ன ஹாஸ்டல்ல விட்ருங்க அதைத் தான சொல்லப்போற வாமா வந்து வண்டில ஏறு உன்ன உங்க ஹாஸ்டல்ல விட்டரேன் என கடகடவெனப் பேசி அவள் சொல்லவருவதைக் காதில் வாங்காமல் காரில் ஏறி அமர்ந்துக் கொண்டான்.

ஹாங்.,. இல்ல நான் என நிமிர்ந்துப் பார்க்க வருண் அங்கு இல்லை.

என்ன இவரு சொல்ல வரத சொல்லவிடாமல் அவர் பாட்டுக்கு பேசிட்டு கார்ல உக்காந்துக்கிட்டாரு.என புலம்பியவள் அங்கேயே சில நிமிடங்கள் நிற்க கீங்ங்ங்ங்,,..என வருண் அடித்த ஹாரனில் அடுத்த நொடி காரில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

மிகவும் முயற்சி செய்து தைரியத்தை வரவழைத்துப் பேச வந்தாள்.  அறியாமல் வருண் அதை நலுவவிட்டான்.

மீண்டும் அவனிடம் பேச தயக்கமாக இருந்தது.எவ்வாறு பேச்சை ஆரம்பிப்பது என யோசனையிலிருந்தவள் வருண் தன் ஹாஸ்டலின் முன் காரை நிறுத்தியதுக் கூடத் தெரியாமல் அமர்ந்திருந்தாள்.

ம்ஹீம்ம்...என செருமிய வருண் ஹாஸ்டல் வந்துருச்சி என்றான் வெளியே கை காண்பித்தபடி.

திரும்பி ஹாஸ்டலைப் பார்த்துவிட்டு அவன் மீது பார்வையை வீசிவிட்டு இறங்கியவள் மெல்ல நடந்து விடுதியினுள் நுழைந்துக் கொண்டாள்.

அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவன் மெல்ல காரை நகர்த்தினான்.

முதல் தளத்திலிருந்த தன் அறைக்குள் நுழைந்தவள் முகம் கழுவி விட்டு வாஷ் ரூமிலிருந்து வெளியே வந்தாள்.

ஏதோ நினைத்தவளாய் விரைந்து வந்து ஜன்னலைத் திறந்துப் பார்த்தாள் வருண் கார் தன் விடுதியின் முன் நிற்குமா என்ற ஏக்கத்தில் ஆனால் அங்கு அவன் இல்லை.

ஏமாற்றத்துடன் திரும்ப வருண் கதவில் சாய்ந்தபடி கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தான்.

ஹா.,,என வாயைப் பிளந்தவள் தான் கண்ட காட்சியை நம்பாமல் கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் பார்க்க வருண் அங்கு இல்லை.

ச்ச...என தன் தலையில் அடித்துக் கொண்டவள் கட்டிலில் அமர்ந்தபடி இந்த மாதிரிலாம் தோனுச்சுனா காதல்தானு சினிமாவுலலாம் அடிச்சு சொல்லுவாங்க அப்பனா இது.....மதி என்ன யோசிக்கிற நீ தப்புத் தப்பு. அவர் ஏதோ மனிதாபிமானத்துல உதவுனாரு அவ்வளவு தான்.அத நீ அட்வான்ட்டேச்சா எடுத்துக்காத அதுவும் இப்ப நீ இருக்குற நிலமைல இதலாம் ஓவர் எனத் தனக்குத்தானே அறிவுறைக் கூறிவிட்டு உறங்க முயற்சி செய்ய தோல்வியே மிஞ்சியது.

தன் பெட்டில் பொத்தென்று விழுந்தவன் அவ பேரண்ட்ஸ் பத்தி கேட்டவுடனே அழுதா. ஏன் என்ன காரணமாக இருக்கும்.என்ன பிரச்சனை அவளுக்கு என சிந்தித்தவனுக்கு தூக்கம் வராமல் போனது.

அடுத்த நாள் என்றும் போல் நகர மதி வருண் கூறியதுப் போல் பயத்தை அகற்றிவிட்டு அனைவரிடமும் சகஜமாக பேச முயற்சி செய்தாள்.

நாள்முழுவதும் வருணிடம் பேச முயற்சி செய்தவளுக்கு தோல்வியே கிட்டியது.

அதற்கேற்றாற்போல் வருணும் பயிற்சி தொடர்பான விளக்கங்களை மட்டும் கொடுத்தவன் வேறு எதுவும் பேசவில்லை.ஆனால் அவளை சைட் அடிப்பதை தவறாமல் செய்தான் மதி கவனிக்காத வேளையில்.

ஓகே யூ கேன் கோ நௌவ் என வருண் சொல்ல கிளம்பாமல் அமர்ந்திருந்தவளின் முன் சொடக்குப் போட்டவன் என்ன என்பதைப் போல் புருவத்தை உயர்த்த

அவனைப் பார்க்காமலே தேங்கஸ் என்றாள்.

அவனோட கண்ணப் பாத்தாலே மனசு தடுமாறுதுல அதான் கன்ட்ரோல் பன்றாங்கலாமா.

எதுக்கு?????

நேத்து எனக்கு ஹெல்ப்பன்னிங்கல்ல அதுக்கு தான்.

ம்ம்ம்.,..

சாரி ...

இது எதுக்கு....

நேத்து அப்படி நடந்துக்கிட்டதுக்கு....

ஹோ.......என வருண் அவளையே பார்க்க அவன் பார்வை வீச்சை தாங்கமுடியாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

அவள் அவ்வாறு எழுந்து ஓடியதும் புரிந்துக் கொண்டவன் போல் தனியாகச் சிரித்துக் கொண்டான்.

அங்கு ஓட்டம் எடுத்தவள் மூச்சிறைக்க ஸ்டாப்பை வந்தடைந்தாள்.

இதயத்திடிப்பு அவள் காதை சென்றடையும் வரை எகிறியிருந்தது.தன் நெஞ்சில் கைவைத்தபடி தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டாள்.

என்ன கண்ணு அது ப்பா,.. நீ அவர் கண்ணப் பார்க்காத. ரொம்ப டேஞ்சரஸ் ஸ்சப்பா.

அவன் நேத்துக் கூறியது நினைவிற்கு வர தன்னைப் பின் தொடர்வதற்காக வருண் அங்கு இருப்பானா எனப் பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் கார் வந்து நின்றதும் மனதில் ஒரு வித உற்சாகத்துடன் எதையும் கவனிக்காததுப் போல் வேறுபுறம் திரும்பிக் கொண்டாள்.

இதை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தவன் பளேயரில் ஒரு மெலோடி சாங்கைப் போட்டுவிட்டு அவளையும் பாட்டையும் ரசித்தபடி அமர்ந்திருந்தான்.

சக்தியின் இல்லம்.

டியூட்டி முடிந்து வீடு வந்து சேர்ந்தவள் டயர்டாக சோபாவில் அமர்ந்தபடி டீவியை ஆன் செய்தாள்.

காலிங் பெல் அடிக்கும் ஓசையை கேட்டு புருவம் சுருக்கியபடி

சக்திக்கிட்டதான் இன்னொரு கீ இருக்கே அத வச்சு ஓபன் பன்னிடுவான் .அப்றம் யாரா இருக்குமென கதவைத் திறந்தவள் அங்கே நின்றிருந்தவளை கண்ணீர் மல்க கட்டியனைத்துக் கொண்டாள்.

Hi frds kutty update dha sorry next sathiyama long kudukren ....

Continue Reading

You'll Also Like

20.7K 861 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...
213K 9.9K 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயி...
56.6K 2.3K 36
காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உ...
21.8K 636 58
ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை