இதய திருடா

By kuttyma147

641K 17K 2.6K

எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இ... More

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
:)
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
நன்றி
50.Epilogue
மீண்டும் ஒரு கதையுடன்

18

12K 314 46
By kuttyma147

சக்தி "ஆதிரா"... என்றழைக்க .,,,அவளோ அவன் புறம் திரும்பாமலே துணி மடித்து வைத்தபடி.

"என்ன சக்தி நான் மறுபடியும் லிமிட்ட கிராஸ் பன்னிட்டேனா ..,. என்னனு சொன்னா இனிமே கிராஸ் பன்ன மாட்டேன்."...என்றாள் .

அவள் கூறிய வார்த்தைகளில் தான் அன்று அவன் அவ்வாறு பேசியதில் எந்த அளவுக்கு வருந்தியிருப்பாள் எனப் புரிந்தது.

"ஆதிரா..,ப்ளீஸ் நான் எதையும் மனசுலருந்து அத சொல்லல"... என்றான் நிஜமாகவே வருந்தியபடி.

அவன் புறம் திரும்பி இதழை சுழித்து விரக்தியான சிரிப்பொன்றை சிரித்தவள்.

"நான் எல்லாத்துக்கும் பாரமா தான் இருக்கேன் சக்தி"... என்றாள் ,,,வாழ்வின் வெறுமையை வார்த்தைகளுள் அடக்கியபடி.

அவள் பாரம் என்ற வார்த்தையை உச்சரித்ததும் சக்திக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

"ஏன் ஆதிரா இப்படிலாம் பேசற. நா,.,நான் என்னைக்குமே உன்ன பாரமா நினைச்சது இல்ல.உனக்கு ஒன்னு தெரியுமா. என் அம்மா போனப்றம் இந்த வீட்ல நான் மட்டும் தான் தனியா இருப்பேன் அப்படியே பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கும். நீ வந்தப்றம் தான் எல்லாமே மாறுச்சு"... என தடுமாறிய படி கூறியவன் பின் அவனே தொடர்ந்தான்.

"நான் அன்னக்கி உங்கிட்ட அப்படி கோவமா பேசுனது தப்புதான்.ஆனா நான் வேணும்னு கோபப்படல.அம்மா தொட்டு வச்சதெல்லாம் அப்படியே இருக்கட்டும்னு தான் நான் ரூம்ம பூ.,,பூட்டி வச்சிருந்தேன் ஆனா நீ "...என மேலும் மேசமுடியாமல் தடுமாறியவன். தலையை தாங்கியபடி பெட்டில் அமர்ந்தான்.

அதுவரை அமைதியாக அவன் பேசுவதையே உண்ணிப்பாக கவனித்துக் கொண்டிருந்தவள் அவன் இறுதியாக சொன்னதை கேட்டவுடன் " கடவுளே எவ்வளவு பெரிய தப்பு பன்னிற்கேன்.அவன் அம்மா நினைவா வச்சிருந்தத போய் ச"...என தன்னைத்தானே நொந்துக்கொண்டாள்.

சக்தி அங்கு அவ்வாறு அமர்ந்திருப்பதை பார்க்க பார்க்க தன் மீது வெறுப்புதான் கூடியது.

அவன் தாயின் நினைவில் மீண்டும் அழப் போகிறான் என அவன் அருகில் அமர்ந்து தோளைத் தொட்டு "சக்தி".... என்றாள்.

அவள் ஸ்பரிசத்தில் மீண்டு வந்தவன் நிமிர்ந்துப் பார்க்க அவன் கண்கள் கலங்கியிருந்தது.

"என்ன மன்னிச்சுறு ஆதிரா".... என்றான் தழுக்கிய குரலில்.

"நீ ஏன் மன்னிப்பெல்லாம் கேக்கற. தப்பெல்லாம் பன்னது நான். நான் தான் உன்கிட்ட மன்னிப்புக் கேட்கனும். என்ன மன்னிப்பியா."...என்றாள்.

பாரம் அது இதுவென்று பேசியவள் தன்னைவிட்டுப் போய்விடுவாளோ என்ற பயத்தில் மளமளவென பேசியவன் இப்போது தானாக ஆதிரா வந்து பேசவும் நிம்மதி அடைந்திருந்தான்.

"தேங்க்ஸ் "...என்றான் நிறைந்த மனதுடன்.

"எதுக்கு"...

"என்ன மன்னிச்சு என்கிட்ட பேசுனதுக்கு"...

"தப்புப் பன்னது நான் தானு சொல்றேன்ல மறுபடியும் அதையே சொல்ற.அதுவும் இல்லாம பிரண்ட்ஸ் குள்ள தேங்க்ஸ்லாம் சொல்லக்கூடாது".

சக்தி சட்டென ஆதிராவை நிமிர்ந்துப் பார்த்தான் அவள் பிரண்ட் என்று கூறியதும் ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னொரு புறம் வருத்தமாக இருந்தது.

ஏன் சக்தி இவ்வளவு ஷாக்கா பாக்கற இவளா இப்படி பேசறானா.அதுக்கு காரணம் இருக்கு. நான் காலேஜ் படிக்கும் போது கூட பசங்கள அவ்வளவா யாரும் எனக்கு பிரண்ட்ஸ் இல்ல. உன்கிட்ட பேசும்போது ஒரு தோழமைய உணர்ந்தேன் அதான் என்றாள்.

நீ எங்கிட்ட தோழமைய உணர்ந்த நான் உன்கிட்ட காதல இல்லடி உணர்ந்தேன்.கூடிய சீக்கறம் நீயே என்னப் புரிஞ்சிப்ப . நான் அதுவரைக்கும் வெயிட் பன்றேன்.என மனதினுள் தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொண்டான்.

ஏன் அப்படியே உக்கார்ந்திருக்க ஏன் என்ன பிரண்டா கூட ஏத்துக்கமாட்டியா என்றாள் குறும்புடன்.

ஹாங்.., அதெல்லாம் ஒன்னுமில்ல நீ இவ்ளோ பேசுவியானு யோசிச்சிட்டு இருந்தேன்.

அதெல்லாம் நல்லாவே பேசுவேன். இப்ப கொஞ்சம் கம்மிப் பன்னிட்டேன்

ஹோ,......

இருவருக்கும் இடையே கொஞ்சம் நெருக்கம் வந்திருந்தது. ஆனால் சக்தியின் மனதில் காதல் வடிவிலும்,ஆதிராவின் மனதில் நட்பு வடிவிலும்.

இந்த நட்புணர்வில் சிறு காதல் கலந்திருப்பதை ஆதிரா அறியவில்லை.

மறுநாள் ஆபிஸில் ஆதிராவுடன் சமாதானம் ஆகிவிட்ட சந்தோஷத்தில் என்றும் விட இன்னும் சுறுசுறப்பாக முகப் பொழிவுடன் சக்தி தன் வேலைகளைப் பார்க்க.

காக்காய்க்கு மூக்கில் வேர்த்தது போல் வருண் அங்கு வந்தான்.

என்னடா சமாதானம் ஆகிட்டிங்ளா.

எப்டிடா.

அதான் மூஞ்சில முப்பத்திரண்டுப் பல்லும் தெரியுதே. இதுலருந்தே தெரியல.

ஹிஹிஹிஹி ஆமா,,...

அப்றம் அவங்க மனசுல என்ன இருக்குனு எதாச்சும் தெரிஞ்சதா.

எங்கடா..,  என நேற்று நடந்த அனைத்தையும் சொல்ல

விரப்பா திரிஞ்சிட்டிருந்த உனக்கே லவ் வந்துருச்சு அவங்களுக்கும் வந்துரும் என சந்தடி சாக்கில் வருண் சக்தியை கலாய்க்க.

இங்க என்னடா வெட்டிப் பேச்சு போ போய் உன் வேலையப் பாரு என்று சக்தி முறுக்கிக் கொள்ள.

பார்ரா விரப்பு மோடுக்கு போய்டாறாமா என மீண்டும் கலாய்தபடி தன் இருக்கைக்குச் சென்றான்.

வருண் சென்று தன் வேலைய தொடங்கிய பதினைந்தே நிமிடங்களில் சக்தி வருணின் அருகில் நின்றுக் கொண்டிருந்தான்.

வருண்.,....

என்ன......

நாம ஒரு டூ ஹவர்ஸ் பர்மிஷன்  கேக்கலாமா....

எதுக்கு..,,

ஆதிராவ பார்க்கத்தான்....

டேய் நீயாடா இப்படி பேசற. என்னால நம்பமுடியலடா என்றான் கவுண்டமணி ஸ்டைலில்.

வரமுடியுமா முடியாதா.....

நீ உன்னோட வொய்ப்ப பார்க்க நான் எதுக்குடா வரனும்.

நான் மட்டும் போனா அவளுக்கு டவுட் வந்துரும் அதான் உன்னையும் கூப்டேன்.

நான் வந்தா மட்டும்....வருண் சக்திக்கு கேட்காத குரலில் முணு முணுக்க சக்தி அதை கண்டுக்கொள்ளாமல்

வருண் உனக்கு ரொம்ப வயிறு வலிக்குதாடா. கொஞ்சம் நேரம் பொருத்துக்கோ.

டேய் நான் எப்படா வயிறு வலினு சொன்னேன் .

உன்னோட முகத்தப்பத்தாலே தெரியுது. வா பர்மிஷன் வாங்கிட்டு ஹாஸ்பிட்டல் போலாம் என வருணைப் பிடித்து இழுத்துச் சென்றான்.

உன்னோட பிளான் என்னனு புரியுது.
காதல் படுத்தறபாடு. எல்லாம் என்னோட நேரம்.என புலம்பியபடி வருண் சக்தியுடன் சென்றான்.
டூ ஹவர்ஸ் பர்மிஷன் கேட்டு வாங்கியவர்கள் எஸ் கே ஹாஸ்பிட்டலை வந்தடைந்தனர்.

அங்கு ஆதிரா எதிரில் சக்தியும்,வருணும் வருவதைக் கூட கவனிக்காமல் கேஷ்வால்டியின் முன் பிரம்மை பிடித்தவள் போல் நின்று கொண்டிருந்தாள்.

அருகில் வந்த சக்தி ஓரிரு முறை அவளை அழைக்க அவள் அப்படியே தான் நின்றுக்கொண்டிருந்தாள்.

அவளைப் பிடித்து உலுக்கியவன் என்ன ஆச்சு ஆதிரா நான் கூப்பட்றது கூட தெரியாம அப்படியே நிக்கிற,..

அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்தவள் போல்

ஹாங் ச,,..சக்தி நீ எப்போ வந்த.

இப்பதான் எதுவும் பிரச்சனை இல்லையே ஒரு மாதிரி இருக்க.

இ..,இல்ல...ஒன்னுள்ள...என அவள் தடுமாற.

எதையோ மறைக்கிற ஆதிரா என்னனு சொல்லு என சக்தி வற்புறத்திக்கேட்டான்.

ஒரு ஆக்ஸிடன்ட் கேஸ் விஷயமா டென்சன் அதான் .இங்க இதெல்லாம் சகஜம் என நடந்ததை மறைத்தாள்.

ஹோ,... ஒகே.,,.ஒகே...

தன்னை சுதாரித்துப் பின்

நீ எங்க இங்க.

ஹாங் வருணுக்கு வயிறு வலி அதான் வந்தோம் என சக்தி கூற அப்போது தான் வருணை கவனித்தாள்.

வருண் சக்தியை முறைத்தபடி நின்று கொண்டிருக்க சக்தி கண்களால் கெஞ்சிக்கொண்டிருந்தான்.

அவனை முறைத்தபடியே
ஆமா அண்ணி ஒரு மணி நேரமா வலிக்குது என்றான்.

பின் வருணை பரிசோதித்து விட்டு ஒன்னும் இருக்கறமாதிரி தெரியல ....மஸ்ஸில் பெயினா கூட இருக்கலாம் பயப்பட ஒன்னுமில்ல உங்க சேட்டிஸ்பக்ஷன்காக இந்த. டேப்ளட் போட்டுக்கோங்க என்று மாத்திரைகளை எழுதித்தந்தாள்.

வருண் மனதில் அடப்பாவி இல்லாத வயித்துவலிக்கு மாத்திரையெள்ளாம் வாங்கவச்சிட்டியேடா என நினைத்துக் கொண்டான்.

சற்று நேரம் ஆதிராவிடம் பேசிவிட்டு இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.

அவர்கள் சென்றப்பின் கடவுளே நிஷாவ எப்படி இதுலருந்துக் காப்பாத்தறது என மனதில் புலம்பிக் கொண்டிருந்தாள்.

ஒரு மணி நேரத்திற்கு முன்பு.
.
.
.
.
.
.
.
.
.
.
ஆதிரா அவசர சிகிச்சைப் பிரிவில் முதலுதவிப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.

தன்னை யாரோ அழைப்பது போல இருக்க திரும்பியவள்
அங்கு சிரித்தமுகத்துடன் நிஷா நிற்பதை கவனித்தாள்.

அவள் பார்க்க பாரதிப் போல் இருக்கவே ஆதிரா அவளை மறக்கவில்லை.

ஹேய் நிஷா நீ எங்க இங்க என்றாள் அவளை மீண்டும் பார்த்த உற்சாகத்தில்.

வர வழில ஒரு பெரியவருக்கு சின்ன ஆக்ஸிடன்ட் அதான் அவர இங்க கூட்டிட்டு வந்தோம்.

என்னாச்சு உனக்கு ஒன்னுமில்லையே என்றாள் பதறியபடி

எனக்கொன்னுமமில்ல ஒரு கார்காரன் அந்த பெரியவரை இடிச்சிட்டு நிக்காம போயிட்டான் அதான் அழச்சிட்டு வந்தோம்.,

ஓ.... நீ மட்டுமா வந்திருக்க.

இல்லை என் உட்பிக் கூட வந்துருக்கேன் என்றாள் வெட்கம் கலந்த சிரிப்புடன்.

சூப்பர் எங்கேஜ்மென்ட் ஆகிருச்சா....என்றாள் உற்சாகமாக.

ம்ம்ம்....டூ வீக்ஸ்க்கு முன்னாடி .நெக்ஸ்ட் மன்த் கல்யாணம்.

செம்ம செம்ம,...என்ன லவ்வா என குறும்புடன் ஆதிரா வினவ
இல்ல வீட்ல பாத்தவங்கதான்.ரொம்ப நல்லவர். அதோ அங்க ஒரு டாக்டர்கிட்ட பேசிட்டு இருக்காறே புளூ சர்ட் அவர்தான் எனக் காட்ட.

நிஷா சுட்டிக் காட்டியவனை பார்த்த ஆதிரா  அதிர்ச்சியில் உறைந்தபடி  நின்றிருந்தாள்.

Apdi yaara dha paatha Aadhira next update la paapom frds

Continue Reading

You'll Also Like

134K 3.5K 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே க...
158K 5K 30
எல்லா ஆண்மகனின் வாழ்க்கையிலும் ஒரு பெண் இருப்பாள்.... அன்னையாக அக்கா தங்கையாக மனைவியாக தோழியாக... எந்த உறவுமுறையாக இருந்தாலும் அவளே அவனை வழிநடத்துகிற...
84.2K 4.6K 61
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு...
56.7K 2.3K 36
காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உ...