இதய திருடா

By kuttyma147

641K 17K 2.6K

எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இ... More

1
2
3
4
5
6
7
8
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
:)
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
நன்றி
50.Epilogue
மீண்டும் ஒரு கதையுடன்

9

12.6K 341 39
By kuttyma147

"இந்த லிஸ்ட்ல உள்ள திங்ஸ் லா வாங்கிட்டு வாடா".... என தன் நண்பனிடம் கொடுத்து அனுப்பியவன் ஆதிராவை பார்க்க உள்ளே சென்றான்.

உள்ளே வந்தவன் காலரை இறுக்கிப் பிடித்தவள்

"எதுக்குடா இப்படி செஞ்ச.நீ பன்ன வேலைல என் அம்மா அப்பா கூட என்ன நம்பமாட்றாங்க .இப்போ சந்தோஷமா."...என அந்த அறை அதிரும்படி கத்தியவள் முகத்தை மூடி அழத் தொடங்கினாள்.குனிந்து அழுது கொண்டிருந்தவள்  கண்ணில் சக்தி கட்டிய தாளி பட்டுவிட... அதை சுட்டிக் காட்டி

"இத யார கேட்டு என் கழுத்துல கட்டுன. சொல்லு யாரக் கேட்டு கட்டுன "...என்றவளின் கண்கள் கோவத்தில் சிவந்திருந்தது.

அதற்கு என்ன பதிலளிப்பது என தடுமாறியவன் ...

"உன்னையும் என்னையும் சேத்து வச்சி "...என அதை சொல்ல திணறியவன் ..."அதான் எனக்கு வேற வழி தெரியல "...

"இத கட்டுனா மட்டும் அவங்க பேசுனது எல்லாம் இல்லாம போயிடுமா.எப்போ என் அப்பாவும் அம்மாவும் என்ன நம்பலையோ அப்பவே நான் செத்துப் போயிட்டேன் "...என்றவளை வேகமாகத் தடுத்தவன் ...

"ப்ளீஸ் அப்படியெல்லாம் சொல்லாத .கண்டிப்பா எல்லா சரியாகிடும் ப்ளீஸ்  என்ன நம்பு"...

அவனை முறைத்துப் பார்த்தவள் அங்கிருந்து வெளியேற முற்பட அவள் முன் வந்து நின்றவன்...

"எங்க போற "...என்றதும் ....

"நான் எங்க போனா உனக்கென்ன "...என சீரியவள் மீண்டும் வெளியேற முற்பட ...

"ப்ளீஸ் நான் சொல்றத ஒரு நிமிசம் கேளு.அந்த மதனால உனக்கு மறுபடியும் ஆபத்து வரலாம்.நீ இங்க இருக்கிறது தான் பாதுகாப்பு.கண்டிப்பா என்னால உனக்கு எந்த பாதிப்பும் வராது.என்ன நம்பு "...என்றதும் அவன் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தவளுக்கு அதில் எந்தவித தவறான எண்ணமும் இருப்பதாகத் தெரியவில்லை.அவன் கூறுவதும் சரியெனப் பட அமைதியாக சென்று பெட்டில் அமர்ந்தாள்.

பெருமூச்சொன்றை வெளியேற்றியவன் ஹாலில் வந்து அமர்ந்துக் கொண்டான்.

சற்று நேரத்தில் வருண் ஆதிராவிற்கு தேவையான அனைத்தையும் வாங்கி வந்திருந்தான்.

"ரொம்ப தேங்க்ஸ்டா".,.

"சீன் போடாதடா. நமக்குள்ள எதுக்குடா தேங்க்ஸ்லாம் போ போய் இதெல்லாம் அவங்கக்கிட்ட குடு"...

"ம்ம்ம்,,... சரி வா வந்து நீயும் சாப்பி்டு"...

"வேண்டா மச்சி டைம் ஆச்சி நான் ராஜேஷ்ஷ பார்க்கப் போனும் அவன் பிராஜக்ட் விஷயமா பார்க்கனும்னு சொல்லிருந்தான். பாய் டா."...

"ம்ம்ம்,.... வருண் அப்றம் நான் கொஞ்ச நாளைக்கு ஆபிஸ்
வரல ஆதிராவ தனியா விட பயமா இருக்கு எதாது பன்னிப்பாளோனு .அதனால ஆபிஸ்ல எதாவது சொல்லி சமாளி ம்ம்ம்."...என்றிட அதற்கு

"ம் ஒகே மச்சி".. .என்றவன் விடைப்பெற்றுக் கொண்டான்.

கையில் சாப்பாடுடன் உள்ளே நுழைந்தவன் தட்டை டேபுளில் வைத்துவிட்டு ஆதராவின் புறம் திரும்பினான் அங்கோ அவள் குழந்தைப் போல் சுருண்டு படுத்திருந்தாள். அழுது அழுது கண்கள் வீங்கியிருந்தது. கண்ணீர் வழிந்தோடியத் தடம் அவள் கன்னங்களில் இருந்தது.

"ஆதிரா ஆதிரா"... என்றழைக்க அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாள் சக்தியின் குரல் அவள் செவியினுள் நுழையவில்லை.
தட்டி எழுப்புவதற்க்காக கையை அருகில் கொண்டுச் சென்றவன் பிறகு ஏதோ நினைவு வந்தவனாய் வெடுக்கென கையை பின் எடுத்துக் கொண்டான்.

"ஐயோ இப்பதான் அமைதியா தூங்குறா எழுப்பிவிடப் போய் மறுபடியும் அழ ஆரம்பிச்சிடப் போறா. ஆனா சாப்பிட வைக்கனுமே என்ன பன்றது"... என சற்று நேரம் சோபாவில் அமர்ந்து யோசித்தவன் இருந்தக்களைப்பில் தன்னையும் அறியாமல் தூங்கியும் போனான்..
.
.
.

விடிந்து எழுந்தவன் "கடவுளே தூங்கிட்டனா ச்ச எப்படி ம்ம்ம்.." திரும்பி ஆதிராவைப் பார்க்க அவ நித்திரா தேவியின் பிடியில் இருந்தாள்.

காபி கப்புடன் உள்ளே நுழைய ஆதிரா பெட்டில் அமர்ந்திருந்தாள் அருகில் சென்று கப்பை அவளிடம் நீட்ட "வேண்டாம் "...என்றவள் அவன் வற்புறுத்தளினால் ஒரு வித தயக்கத்துடன் கப்பை வாங்கிக் கொண்டாள்.

"இந்த கபோட்ல உனக்கு ட்ரஸ் இருக்கு எடுத்துக்கோ ஃபிரஷ் ஆகிட்டு வா சாப்பிடலாம் "...என அவள் பதிலை எதிர்ப்பாராமல் வெளியேறினான்.

அவன் போன திசையைப் பார்த்திருந்தவள் காபியை குடுத்துவிட்டு குளியல் அறையில் புகுந்துக்கொண்டாள்.

சாப்பிட மறுத்தவளை கெஞ்சி சாப்பிட வைத்தான் .

ஆதிரா அந்த அறையிலே அடைந்துக்கிடந்தாள்.

இதற்க்கிடையில் வருண் சக்திக்கு கால் செய்து விசாரித்தப்படிதான் இருந்தான்.

சக்தி நியூஸ் சேனலைத் திருப்பிக் கொண்டிருக்க காலிங் பெல்லின் ஓசைக்கேட்டு கதவைத்திறக்க...

அங்கு 24 வயது மதிக்கத்தக்க. ஒருப் பெண் நின்றிருந்தாள்.

"நீங்க சக்தியா?".,..

"ம்ம்ம் ஆமா."...

"நான் பாரதி.  ஆதிராவோட பிரண்டு"...

"ஓ உள்ள வாங்க "...என்ற சக்தி பாரதிக்கு வழிவிட்டபடி ஒதுங்கி நின்றவன் பின் ஆதிரா இருக்கும் அறையை காட்டிவிட்டு வந்து சோபாவில் அமர்ந்துக்கொண்டான்.

ஆம் ஆதிராவும் சக்தியும் ஆதிராவின் வீட்டிற்குச் சென்ற போது பாரதி அங்கு இல்லை. அவள் அங்கிருந்திருந்தால் ஆதிக்கு ஆறுதலாக இருந்திருக்கும்.

ஆதிராவின் வீட்டிற்குச்  சென்றவள் என்ன நடந்தது என அறிந்துக் கொண்டாள் ஆனால் சக்தியின் முகவரி அறியாதமையால் அழைந்துத் திரிந்து கடைசியில் இங்கு வந்துச் சேர்ந்தாள்.

பாரதி அறையினுள் நுழைய தாயைக் கண்ட சேயைப்போல் ஆதிரா பாரதியை ஓடி வந்து அனைத்தபடி வெடித்து அழுதாள். பாரதி  அவள் முதுகில் தடவிக்கொடுத்தபடி ஆறுதல் படித்துக்கொண்டிருந்தாள்.

"நீயாச்சும் என்ன நம்புறியா பாரதி,"...என்ற ஆதிராவின் மேல் பாரதிக்கு கோவம் வந்தது.

"அப்படியே அடிச்சனா உன்ன நம்பாம வேற யார நம்ப போறேன் .நீ என் பெஸ்ட்டி டி உன்னப் பத்தி எனக்கு தெரியாதா என்ன .நீ எந்த தப்பும் பன்னிருக்கமாட்டனு எனக்குத் தெரியும். என்னோட  கவலையெல்லாம் உனக்கு எதோ ஆபத்து வந்துருக்குமோனு தான். இப்ப உன்ன பார்த்தவுடனே தான் எனக்கு உயிரே வந்துச்சு."...என்றாள்.

தன் தோழி தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் மெய் சிலிர்த்தவள் நடந்த அனைத்தையும் கூறினாள்.

"ச்ச மனசாட்சி இல்லாதவன் அவன் மட்டும் என் கைல கிடைக்கட்டும் செத்தான்."...என மதனைத் திட்டித்தீர்த்துக் கொண்டிருந்தாள் பாரதி.

"எனக்கு இப்ப இங்க இருக்கறதுக் கூட சரியானு தெரியல. அடுத்து என்ன பன்றது எங்கப் போறதுனு ஒன்னும் புரியல.. அப்டியே பைத்தியம் புடிக்கிறமாறி இருக்குடி,"...

"இங்கப் பாரு எதுக்கு இப்படிலாம் பேசற. நான் வரும்போது விசாரிச்சிட்டு தான் வந்தேன் .எல்லாரும் சக்திய நல்லவனுதான் சொல்றாங்க. நீ இங்க இருக்கறது தான் சேப்.  நீதான  சொன்ன உண்மை தெரிஞ்சோன சக்தி மதன அடிச்சாங்கனு அப்றம் என்ன அவங்க கண்டிப்பா மதன உங்கிட்ட நெருங்கவிடமாட்டாங்க"...

"ஆனா".,. என ஆதிரா இழுக்க.

"என்ன ஆனா.   சரி நீ இங்க வந்ததுலருந்து சேபா தான இருக்க. சக்தி உன்கிட்ட தப்பா எதுவும் நடந்துக்கிட்டாங்களா"...என கேட்டவளிடம்

"ச்ச அதலாம் எதுவும் இல்ல"...

"ம்ம்ம்.... அதையும் மீறி வேற எதாவது பிராப்ளம் இருந்தா இப்பவே என் கூட கிளம்பு"...

சற்று நேரம் யோசித்தவள் தன்னால் அவளுக்கெந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என...

"இல்ல பாரதி நான் இங்கயே இருக்கேன். எனக்கு எந்த பிராப்ளமும் இல்ல"...என்றாள்.

"ம்ம்ம்,.. குட் கேர்ள் "...என ஆதிராவின் கன்னத்தைக் கிள்ளியவள் "அப்றம் சொல்ல மறந்துட்டேன் நீ இப்படி இந்த ரூம்  உள்ளையே அடஞ்சி கெடக்காம போய் பிராக்டீஸ் பன்னு ரிலாக்ஸா இருக்கும் சரியா"... என்றாள்.

"ம்ம்ம்... சரிடி"...

சிறிது நேரம் தன் தோழியுடன் ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்தவள்,

"சரி நான் கிளம்புறேன் எதாவதுனா கால் பன்னு "என தன் தோழியிடம் விடைப்பெற்று வெளியே வந்தவள் சக்தியிடம் தனிமையில் பேச வேண்டும் என வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்றாள்.

,இங்க பாருங்க சக்தி தெரிஞ்சோ தெரியாமலோ என் பிரண்டு லைப்ல நடந்த எல்லா பிராப்ளத்திற்கும் நீங்களும் காரணம். நான் அவ அழுது பார்த்தது இல்ல. அவ இப்ப அழறா. நீங்கதான் அவள பார்த்துக்கனும். அவளுக்கு மட்டும் எதாவது ஆச்சினா நான் உங்கள சும்மா விடமாட்டேன் ",.என எச்சரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அவள் தோழமையில் மெய்சிலிர்த்துப் போனான்.

பாரதி வந்து சென்றப்பின் ஆதிராவின் முகத்தில் கொஞ்சம் தெளிவு பிறந்திருந்தது.  சக்தியும் அதைக் கவனிக்காமல் இல்லை. அவன் மனம் சற்று நிம்மதி அடைந்திருந்தது.

.
.
.
.
.
.
ஆதிரா அறையினுள் தூங்க சக்தி ஹாலில் உள்ள சோபாவில் உறங்கினான்.
காலையில் கண் விழித்தவன் ஆதிராவை  சென்றுப் பார்க்க அவள் மெத்தையில் இல்லை.அதிர்ச்சியுற்றவன் வீடு முழுவதும் தேட எங்கும் இல்லாததால் மனதில் பயம் தொற்றிக் கொண்டது. தலையில் கைவைத்தப்படி ,...

"கடவுளே அவ எந்த தப்பான முடிவையும் எடுத்திருக்கக் கூடாது "...என எல்லாக் கடவுளையும் வேண்டிக்கொண்டான்.

ஆதிரா எங்கு போனாள் என்ன ஆனது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Continue Reading

You'll Also Like

20.8K 861 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...
15.8K 549 23
அக்கா தங்கையின் கதை... தாய் தந்தையை இழந்த சகோதரிகள் தங்கள் சொந்தங்களை தேடிச் செல்லும் கதை...
367K 12.2K 54
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அ...
117K 5.5K 25
பேரன்பின் உருவமாக அவள் வாழ்வில் நுழைபவன் அவன்..❤❤