அழகியல்

By GuardianoftheMoon

12.8K 1K 675

" எவ்ளோ கஷ்டப்பட்டு நீ தான் வேணும்னு வீட்ல சண்ட போட்டு இப்போ engagement ல வந்து நிக்கிரோம். இப்போ வந்து பிரிஞ... More

அழகியல் - Preface
1. தூரம்
2. புதுமை
3. காத்திருப்பு-1
4. காத்திருப்பு-2
5. இரண்டாம் கணம்
6. மூன்றாம் முறை
8. பார்க்கலாம்
9. செடி
10. சரிவு
11. வரவு
12. பிரிவு
13. உலக நியதி
நிறுத்தம் - Author's Note
14. மனப்பாடம்
ஒரு கதை சொல்லட்டுமா ?
15. சூரியோதயம்
16. STD booth
17. பூப்புனித நீராட்டு விழா
18. வேலை
19. நண்பன்:)
20. சென்னை
21. பணம்
22. ராவணா
23. ராவணா - 2
24. மன்னிப்பு
25. ராஜ் ஆபீஸ் போறானாம்
26. ஜொலித்த இரவு
27. ஜொலித்த இரவு - 2

7. குரல்

357 53 36
By GuardianoftheMoon

--------------------------------------------------------------
எனக்கானவை என்னைத் தேடி வரும், என் கஷடங்களையும் சேர்த்து.
--------------------------------------------------------------
"ஹலோ..? ராஜ்..?"
ஒரு நிமிடம் இதயத்துடிப்பு நின்றது.
"Yes..." இடது பக்கம் திரும்பி அவள் காரை நோக்கினேன். அவளின் கைகளில் போன் இருந்தது.
"நான் தான்," என அவள் சிரித்தாள் உறுதிபடுத்தும் வண்ணம். தெரு விளக்குகளின் மஞ்சள் அவள் முகத்தில் தங்கமாய் மின்னியது. என் வியப்பைக் கண்டு நாகரிகத்தைக் கருதி இதழின் ஓரம் சிறிதாய் ஒரு புன்னகை. கூர்ந்து கவனிக்காவிடில் இருட்டோடு கலந்து மறைந்திருக்கும் அப்புன்னக

எங்கள் இருவரின் காரும் மெல்ல முன்னாள் நகர்ந்தது. போனை எடுத்ததும் என்ன பேசுவதென்று தெரியவில்லை.

"உங்கள airportகிட்ட இருக்குற industry areaவில் பார்த்திருக்கேன். இருமுறை உங்கள பார்த்தும் உங்கக்கிட்ட பேசுற வாய்ப்பு கிடைக்கல"

"அதான் இப்ப கதைச்சிட்டு* இருக்கீங்களே.." அவள் சிரித்தாள்.

"ஜப்பான் வந்து ரெண்டு வருஷம் முடியபோகுது ஆனா நான் சந்தித்த தமிழர்களை விரல்விட்டு எண்ணிரலாம். அதான் உங்கள பார்த்ததும் அதுவும் என்னோட ஆபீஸ் பில்டிங்கில் பார்த்ததும் ஒரு craziness,"

"அந்த craziness வெளிச்சமா தெரியுது," என அவள் பதிலளித்ததும் என் மடியில் இருந்த marker and paperகளைக் கண்டு நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்.

"நீங்க போன் பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கல,"

"நான் போன் பண்ணக்கூடாதுண்டு தான் நீங்ஹள் நம்பர் எழுதி flash அடிச்சீன்ஹள்?" அவள் கிண்டலாய்க் கேட்டாள்.

"இன்னொரு தடவ உங்கள பார்க்கமுடியுமான்னு கூட தெரியல அதான் ஆர்வக்கோளாறுல அப்படி செஞ்சேன்."

பின்னாளில் இருந்து horn சத்தம் ஒலிக்க அவள் கார் ஒரு right turn எடுத்து என்னிடமிருந்து விலகியது.

"ஒரு டின்னர்? அல்ல coffee?" அவசரத்துடன் அடுத்த சந்திப்பை உறுதிசெய்ய மனம் பதற்றியது.

"இல்ல ராஜ். லேட் ஆச்சு. டின்னர் சமைக்க சாமான் வாங்கிட்டு போறேன். எனக்காக தான் வீட்ல அவிங்க* எல்லாரும் காத்திருக்காங்க,"

தனியாக இருக்கும் நான் எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம் ஆனால் குடும்பத்தோடு இருக்கும் பெண்களின் சூழ்நிலை வேறு.

"What's for dinner?"

"தேங்கா சோறும் சிக்கனும்,"

"தேங்கா சோறுலாம் கேள்விபட்டதே இல்ல."

"அது இலங்கை ஸ்பெஷல் ராஜ்! தமிழ்நாட்டுக்காரங்க கிட்ட இருந்து நாங்க ஒளிச்சு வச்சிர்கோம்!" அவள் சிரித்தாள் குழந்தைத்தனமாய்.

"நம்ம சமைச்சதை நம்மளே சாப்பிடுவதுலாம் கொடுமை. பல நேரம் இதுக்கு பதிலா பட்டினியாக்கூட இருந்திடலாம்னு தோனும் ஆனா நீங்க சிக்கன்லாம் சமைக்கிறீங்க," வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்று போட்டு வாங்க வலையை விரித்தேன்.

"அதுலாம் ஒண்டியா இருக்குறவங்களுக்கு. நாங்கலாம் நல்லா சாப்பிடுறோம்!" அவள் நாசூக்காக பேச்சைத் திருப்பினாள்.

"இங்க டிராபிக் clear ஆச்சு. நான் drive பண்ணனும். Good night," அவள் போனில் புன்னகைத்தது இங்கும் கேட்டது.

ம்ம்ம் என்று தலையசைத்தேன் போனை கையில் பிடித்துக்கொண்டே. போன் கட் ஆனதும் தான் மரமண்டைக்கு தோன்றியது, அவள் பெயரைக் கூட நான் கேட்கவில்லையென. 5 நிமிடம் 11 வினாடி என்று காட்டிய phone callஐ கண்டு மனதைத் தேற்றிக்கொண்டேன்.

[ *கதைப்பது=பேசுவது
இலங்கைத் தமிழில் ஓர் அழகுண்டு, கேட்கும்போது ஒரு நளினம் தென்படுவதுண்டு:)

Wattpadஇல் தமிழ் எழுத்தாளர்கள் நிறய எழுதிட்டு இருக்காங்கன்னு தெரியும். ஆன அவங்க கிட்ட Facebook, Twitter மாதிரி comments, interact பண்ண எனக்கு டைம் ரொம்ப கம்மி. கதைப் படிப்பதும் கொஞ்சம் கம்மி:/

ஹீரோ பெயர் இது, அவன் திமிரானவன், ஹீரோயின் பெயர் இது, அவ அப்பா செல்லம் அப்டின்னு எழுதுவது பெயர் கதையல்ல. கதை என்பது காட்டனும், சொல்லக்கூடாது. அதுனாலயே என் கதையில் நிறைய சின்ன சின்ன details add பண்றேன் which I don't think you even realise but it gives the whole story its feel.

Plot இல்லாம, ஒரு flowஇல் எழுதிட்டு இருக்கேன். Any suggestions or comments?

Continue Reading

You'll Also Like

200K 5.3K 130
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
40.4K 1.2K 45
காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r
79.2K 2.5K 46
திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...
46.4K 1.5K 35
உதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்...