காதலில் விழுந்தேன்!!

De sweetgirl2110

384K 12.9K 1.6K

நாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படில... Mais

Prologue
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
பிரிவுரை!!
கிழடுகள்!
🤣🤣🤣🤣
📢📢📢

55

4.5K 175 32
De sweetgirl2110

"அக்கா.. நான் சமைக்கிறேன். நீங்க போங்க."-நான்.

"நீ போய் ரெஸ்ட் எடு சாரதா"-ப்ரீதி..

"உங்களுக்கா தான் ரெஸ்ட் தேவை.. கர்ப்பமா இருக்க பொண்ணுங்க தான் நிறைய ரெஸ்ட் எடுக்கனும். போங்க. இந்தாங்க டீ.. அண்ணாவ எழுப்பி விடுங்க."-நான்.

சிரிச்சிட்டே அவங்களும் போய்ட்டாங்க.

"சாரதா..... டீ"-சூர்யா

இப்படி கத்துனா.. எப்படி எல்லாம் தூங்குறதாம்??

ஆஆஆஆ

"இதோ வர்றேன். "-நான்.

"கொஞ்சம் மெதுவா தான் கூப்பிட்டா என்ன?? இங்க தானே இருக்கபோறேன்.!இந்தாங்க."-

"யார் போட்டது??"-சூர்யா.

" யார் போட்ட மாதிரி தெரியுது??"-நான்.

" இல்லடீ.. ஒரு நாளாச்சும் நல்ல டீ குடிக்கலாம்னு ஆசை பட்டேன்."-சூர்யா.

" அஅ.. போதும் போதும்.. இந்த மாதிரி கலாய்லாம் நாங்க நிறைய பார்த்திட்டோம்.. இப்படி கிண்டல் பண்ணனும்னு பசங்ளுக்கு எதும் ரூல் இருக்கா??"-நான்.

" ஆமா டீ.. பசங்களுக்கு இன்னொரு ரூலும் இருக்கு.. கல்யாணம் ஆகி
. ஃப்ரஸ்ட் டே......"-சூர்யா.

" என்ன இழுவ?? போய் கிளம்புங்க வேலைக்கு. எனக்கு நிறைய வேலை இருக்கு"

"ஏய்..... எப்ப பார்த்தாலும் ஓடிட்டே இருக்காத. அங்க தான் வேலை பண்ணிட்டு இருந்தன்னு பார்த்தா. இங்கையுமா???நகர கூடாது... ஸ்டாச்யூ!!"

" உங்கள..... ஃபர்ஸ்ட் டே வேலைக்கு கொஞ்சம் சீக்கிரமா தான் போங்களேன். "

"என் பொண்டாட்டி கூட நான் ஹாப்பியா இருக்க முடியாத அளவுக்கு வேலைன்னா.. எனக்கு அந்த வேலையே வேண்டாமே!!"

"ப்ளீஸ்.. காலங்காத்தால மொக்கை போடாதீங்க!!"
.
.
.
"சாப்பாடு கட்டி தரட்டா??"-நான்.

"நான் என்ன ஸ்கூலுக்கு போறேனா?? இல்ல வேலைக்கு போறேனா??"-சூர்யா.

பல பல காமெடிகளோட அவர் வேலைக்கு கிளம்பிட்டார்.

இனிமேல் தான் என் வேலைய ஸ்டார்ட் பண்ணனும்.

"ஹலோ!!"-நான்.

" சாரா.. எப்படி டீ இருக்க??"-ராஜி.

" இன்னும் ஒரு வருஷம் களிச்சு கேளேன்.. "-நான்.

" ஷங்கர் ... சூர்யா கிட்ட பேசிட்டேன்னு சொன்னார். அதான் கொஞ்சம் ரிலாக்ஸா விட்டுட்டேன். "

"ஓஓஓஓ.. சரி.. ஹாப்பியா இருக்கியா அவர் கூட??"-நான்.

"அஅ... ம்ம்.. அதுக்கென்ன?? நல்லா தான் இருக்கேன். "

"சஞ்சீவ் பத்தி என்ன நினைக்கிற நீ??"-

"இப்ப எதுக்குடீ அவன பத்தி கேக்குற??"

"இல்ல.. சும்மா சொல்லேன். "

"அவன் தான் துரோகின்னு தெரிஞ்சிருச்சே டீ."

"தெரிஞ்சிருச்சா???? "-நான்.

"என்ன சாரா அப்படி கேக்குற?? நான் அவன் கூட... ம்ம் .. ஷங்கர் கூட வாழ ஆரம்பிச்சிட்டேனே!!"

"ஓஓ.. அப்படியா?,"-நான்.

"இப்ப என்ன தான் டீ உன் பிரச்சனை??-ராஜி.

"பிரச்சனை எனக்கு இல்ல டீ அறிவு கெட்டவளே!! மதி கல்யாணம் கேன்சல் ஆன அன்னைக்கு எங்க போன.. சாப்பிட்டதுக்கு அப்புறம்??"-நான்.

"எங்கையும்... இல்ல இல்ல.. ஹாஸ்டல் போய் ஃபிரண்ட்ஸ பார்க்க போலாம்னு போனேன். ஷங்கர் தான்டீ கூட்டிட்டு போனார். "

"உள்ள போய் என்ன பண்ண??"

"இப்ப உனக்கு என்ன.. நான் சஞ்சீவ மீட் பண்ணது உனக்கு தெரிஞ்சிருக்கு. அதுக்கு ஏன் இப்படி சுத்தி சுத்தி பேசிட்டு இருக்க??"-ராஜி.

"வெக்கமா இல்ல?? கல்யாணம் ஆன பொண்ணு தானே டீ நீ??"

"ம்ச்.. என்ன பேசினேன்னு தெரிஞ்சிட்டு என்ன திட்டு"-ராஜி.

" நீ வேற என்ன பேசிரபோற.. ? எப்ப ஓடி போலாம்னு கேட்டிருப்ப??"-நான்.

" சாரதா.. அவ்ளோதான். எதையுமே தெரிஞ்சிக்காம பேசாத. நான் தான் அவன வர சொன்னேன். இங்க இருந்து அன்னைக்கு ஷங்கர் கூட போறப்ப .. இங்க இருந்தா எல்லாரும் மாறி மாறி எதாச்சும் அட்வைஸ் பண்ணுவீங்கன்னு தான் கிளம்பி போனேன். என்னால டக்குன்னு லாம் மாறி அவன் கூட வாழ முடியாது. இப்பவும் அதே தான் சொல்றேன். ஆனா அதுக்காக சஞ்சீவ் கூட ஓடி போக போறேன்னு நினைக்காத. அவன்கிட்ட தெளிவா பேசிட்டேன். இனி என்ன டிஸ்டர்ப் பண்ணாதன்னு. "-ராஜி

"நம்ப முடில.. "

" நீ நம்புனா நம்பு நம்பாட்டி போ.. அத பாத்து தான் எவளோ உன்கிட்ட வத்தி வச்சிருக்கா!!"

"சரி .. நான் நம்புறேன்... எப்பதான் டீ உன் லைஃப் அ ஸ்டார்ட் பண்ண போற??"-நான்.

"ஆளாளுக்கு அதையே கேட்டு என்ன டார்ச்சர் பண்ணாதீங்க டீ??"

"மதி கேட்டாளா?? "-நான்.

"ம்ம்.. அவள நினைச்சா இன்னொரு பக்கம் பாவமா இருக்கு டீ. "

" அவளுக்கு என்னாச்சு ராஜி??"

" நம்மளாம் அன்னைக்கு அவள அப்படியே விட்டு விட்டு வந்துட்டோம்ல. அடிக்கடி அவகிட்ட போய் பேசு டீ. ."

நான் எங்க போய் பேச!! ம்ச்..

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில.. என்னால தானே டீ.. இவ்ளோ பிராப்ளமும்.. ம்ச். ஹாஸ்டல்ல இருந்து ஃபோன் வந்துச்சு டீ. நீ சஞ்சீவ் கூட பேசிட்டு இருந்தன்னு. அதான் அவள மீட் பண்ணி பேசிட்டு வந்தேன். அப்ப தான் .. மதி அப்பா என்ன வந்து இழுத்திட்டு போயிட்டார். "

" விடு டீ. பழச பத்தி பேசி ஒன்னும் ஆகபோறது இல்ல.. ஆனா அன்னைக்கு சூர்யா எப்படி தெரியுமா துடிச்சி போயிட்டான். எல்லாருக்குமே கஷ்டமா போச்சு. "

ஆகா!! நான் மாட்ட வேண்டிய நேரம் வந்திடுச்சு போல. அவளுக்கு இன்னும் எனக்கு கல்யாணம் ஆனது தெரியாது. தெரிஞ்சா!!!

" ராஜி .. உன்கிட்ட ஒன்னு சொல்லனும்.. "நான்.

" சொல்லு டீ. "

" நானும் சூர்யா வும் கல்யாணம் பண்ணிட்டோம் டீ."-நான்

"என்ன???????"

" ம்ம். ஆமா "

" என்ன டீ ஒரு வாரத்தை கூட சொல்லல. அன்னைக்கு அப்படி ஆனதுக்கப்புறம் நாங்க யாரும் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டியா??"-ராஜி

" அப்படிலாம் இல்லடீ. திடீர்னு எடுத்த முடிவு. அவருக்கும் சென்னைல வேலை கிடச்சிருச்சு. நான் மட்டும் தனியா அங்க என்ன பண்றதுன்னு?"

" தனியாவா.?? இந்த 2 மாசமா தானே அவன உனக்கு தெரியும். யாரோ ஒரு மதன் பேசினாங்குறதுக்காக நீங்க புதுசா வந்தவன் கூட போயிடுவீங்கல்ல?? "

" நான் அப்படி சொல்ல ராஜி..அவர் அப்படி ஃபீல் பண்றார்."-நான்.

"6 மாசமா உன்கூட இருந்த மதிக்கு இப்ப எப்படி இருக்கும்னு யோசிச்சு பாத்தியா. நானாவது உங்கள விட்டு சஞ்சீவ் கூட போகனும்னு நினைச்சேன். ஆனா.. ஆனா அவ நம்ம யாரையுமே விட்டு குடுக்காம இருந்தவ டீ. எப்பவுமே நம்ம நல்லதுக்காக மட்டும் தான் திட்டிருக்கா .. அட்வைஸ் பண்ணிருக்கா. அவ அங்க தனியா இருப்பா.. நீ அங்க நல்லா ஊர சுத்திட்டு இருப்ப??""

நான் எப்படி இதுக்கு சம்மதிச்சேன். நீ தான் சுயநலவாதி சாரதா!! சூர்யா கிட்ட பேசிருக்கனும் .. மதி மேல தப்பு இல்ல. அவள விட்டு வரமாட்டேன்னு.. ஆனா நீ!!!!

"மதன் கிட்ட கூட மதி பேச மாட்றா. அவ ரொம்ப கஷ்டபடுறா டீ. நாம யாரும் இல்லாம."

எல்லா விஷயத்திலையும் தப்பா தான் முடிவு பண்ற சாரதா. என்ன பத்தி மட்டும் தானே யோசிச்சிருக்கேன்.!!!

" சாரி டீ. என்னால சூர்யா ரொம்ப கஷ்டபட்டார் டீ அன்னைக்கு. அவர ஹர்ட் பண்ண கூடாதுன்னு தான்..."-நான்.

" ஓஓ.. அவகிட்ட கல்யாணம் பண்ணிட்டேன்னு சொல்லிட்டியா??"

" இன்னும் இல்லடீ. "

" தயவுசெஞ்சு சொல்லிராத.. "-

" ஏன் சாரதா நீ இப்படி இருக்க?? உனக்கு ஒரு பிராப்ளம் வந்தா உடனே அதுக்கு சல்யூஷன் கிடச்சிடனும் இல்லன்னா நீ உனக்கேத்த மாதிரி மாத்திக்கிற.. பட் அதனால மத்தவங்க ஹர்ட் ஆகுறது உனக்கு தெரிலையா?? விக்னேஷ் விஷயத்துல அம்மா அம்மாவ ஹர்ட் பண்ண அவனுக்காக.. இங்கையும் எங்கள ஹர்ட் பண்ற மதனுக்காக. "

" ராஜி.. ஹே!! நீ இவ்ளோ தூரம்லாம் யோசிக்காத டீ. நான்.. ம்ச். நான் இப்படிலாம் நினைக்கல "

" பிரச்சனைகள ஃபேஸ் பண்ண கத்துக்கோ சாரதா. எவ்ளோ நாள் மதிகிட்ட பேசாம இருப்ப?? நீ இருந்தாலும் இருப்ப மா.!"

" இப்ப அவர்கிட்ட அத பத்தி பேசினா கோவபடுவார் டீ."

" ஓஓ.. ஒரு வேளை அவருக்கு கடைசி வரைக்கும் கோவம் போகலன்னா.. ?? அப்படியே பேசாம இருந்திடுவ... கர்க்ட் தானே! எனக்காக நீ வந்த .. உனக்காக சூர்யா வந்தான். மதிகாக மதன் பேசினான். அதுக்காக.. யாருமே வேண்டாம்னு கல்யாணம் பண்ணிட்டு சென்னை போய் செட்டில் ஆயிட்டா.. எதும் மாறிடாது. "

இப்ப நான் என்ன பண்ணனும்னு நல்லா புரிஞ்சது.

" ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன்.. நீ கல்யாணம் பண்ணத என்னால எப்பவும் ஜீரணிச்சிக்க முடியாது. ஃபோன வைக்கிறேன். பை!!"

மண்டையில உரைக்கிற மாதிரி சொன்னா.. நான் எவ்வளவு பெரிய கோழைன்னு.

எனக்கு அப்பவே மதிகிட்ட பேசனும் போல இருந்துச்சு. ஆனா... சூர்யா.. தெரிஞ்சா கோவபடுவார்.

சோ .. சொல்லிட்டு பேசிட்டே திட்டு வாங்கிக்கலாம்.

வீட்டுல நானும் ப்ரீதி அக்காவும் தான் இருந்தோம். அரவிந்த அண்ணா வந்தாங்க. நான் மாடிக்கு வந்துட்டேன்.

8 மணிக்கு தான் வந்தான்.

" ஹலோ மேடம் இன்னிக்கு நாள் எப்படி போச்சு??"-சூர்யா.

" நானும் ப்ரீதி அக்காவும் பேசிட்டு இருந்தோம். டீவி பார்த்தோம். அப்புறம்.. ஈவ்னிங் கோவில போனோம்."

" அடிப்பாவி.. ஒரு கர்ட்டெஸிக்காவது.. உங்கள தான் நினைச்சிட்டு இருந்தேன்னு சொல்றியா??"-சூர்யா.

" அத சொன்னா தான் தெரியுமா என்ன??"-

"பழைய டையலாக் இது. பொய் டிபன் எடுத்து வை. வரேன்."

வீட்டுல ரொம்ப போர் அடிக்கிறதுனால நான் தான் சமைப்பேன்னு ப்ரீதி கிட்ட ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டேன்!!!!

" இன்னிக்கு வேலை எப்படி போச்சு??டெய்லி இப்படி தான் வருவீங்களா??லேட்டா?"-நான்.

" ஆமா டீ. கொஞ்ச நாள் மட்டும் லேட் ஆகும் அப்புறம் பிக் அப் பண்ணிட்டா சீக்கிரம் முடிஞ்சிடும். "

இப்ப எப்படி இவர் கிட்ட ஆரம்பிக்கிறது?????

நான் அவருக்கு முன்னாடி நின்னுட்டு இருந்தேன்.

"உன்ன எவ்வளவு தெரியுமா இன்னிக்கு மிஸ் பண்ணேன்!!"-சூர்யா.

" ஆககா!! ஒரு நாள்க்கு இவ்ளோ ஐஸ் ஆ?? போதும் போதும். "-நான்.

" என் பொண்டாட்டிக்கு நான் ஐஸ் வைக்காம வேற யாரு டீ வைக்க முடியும்??"

" கண்ண மூடுங்க ஒரு நிமிஷம்."

" ஏன் கிஸ் தர போறியா?? அத கண்ண திறந்திட்டே குடுக்கலாமே!!"-சூர்யா.

" உங்கள ... கண்ண மூடுங்கன்னு சொன்னேன்."

.
.
.
.
" இப்ப திறங்க.. "

"என்ன டீ இது??"

ஒரு கீ செயின் குடுத்தேன். SSன்னு போட்டு இருக்கும.

" பார்த்தா தெரில கீ செயின்.??

" மொக்க.. அது தெரியுது. எதுக்குன்னு கேட்டேன். "

" கொஞ்சம் சின்ன பிள்ளைத்தனமா இருக்கும்.. ஆனா நல்லா இருக்கும்.இன்னிக்கு நம்ம ஃபர்ஸ்ட் டே ஆனிவர்ஸரி.. ஸோ. அத ஸெலிபிரேட் பண்ண தான் இந்த கிஃப்ட்.. "

" அடிப்பாவி.. இப்படி தினமும் வாங்குனா.. நான் சம்பாதிக்கிறதெல்லாம் அவ்ளோதானா??"-சூர்யா.

" ஏதோ வித்தியாசமா டிரை பண்ணேன். பிளஸ்.. இந்த மூஞ்சிக்கு தினமும் குடுப்பேன்னு வேற நினைப்பு இருக்கா??"-நான்.

" எங்க என் மூஞ்சிய பாத்து சொல்லு.. "

ஏதோ கொஞ்சம் நல்ல மூடுல இருக்கார். ஸ்டார்ட்.

" சூர்யா..."

" இங்க தானே இருக்கேன் சொல்லு.. என்ன ரொம்ப டீப்பா யோசிக்கிற மாதிரி இருக்கு??"-

"ம்ம்.. ஊருக்கு போலாமா??"-நான்.

" எந்த ஊருக்கு?? " எரிச்சலான மாதிரி கேட்டார்.

" இது என்ன கேள்வி மதுரைக்கு தான்"

" எதுக்கு. ??"

" ம்ம்.. அம்மாவ பார்க்க தான். "

" உண்மையிலையே அம்மாவ மட்டும் தானா??"-

" அதான் தெரியுதுல.. மதியையும் பார்க்கனும். "

என் பக்கத்துல இருந்து நகர்ந்து கட்டில்ல போய் உட்கார்ந்தார்.

"தலைவலிக்கிது போய் டீ போட்டு எடுத்து வா. "

" சூர்யா.. "-நான்.

" டீ கேட்டேன். "

" என்னையும் கொஞ்ச பேச விடுங்க. இப்பதான் நமக்கு கல்யாணம் ஆயிடுச்சுல.. இனிமே என்ன பிரச்சனை வரபோகுது. "-நான்.

" அதுக்காக அன்னைக்கு நடந்ததெல்லாம் இல்லன்னு ஆயிடுமா??இந்த பேச்ச எடுக்காதன்னு எத்தன தடவ சொல்லிட்டேன். நானே ஒரு நாள் அம்மாகிட்ட கூட்டிட்டு போறேன். அது வரைக்கும் விடு."

" மதி பாவம் சூர்யா.. எல்லாம் ஒன்னா இருந்திட்டு இப்ப திடீர்னு.. "

சூர்யாக்கு ஒரு ஃபோன் வந்துச்சு...

" எப்போ?????"

"சரி உடனே வர்றோம். "

நான் ஒன்னும் புரியாம பக்கத்துல நின்னுட்டு இருந்தேன்.

" யாருக்கு என்ன ஆச்சு.?"

" டிரஸ் எடுத்து வை 2 3 நாளைக்கு.. நான் ஆஃபீஸ்க்கு லீவ் சொல்லிட்டு வர்றேன். "

" இன்னிக்கு தான் ஃபர்ஸ்ட் டே.. அதுக்குள்ள எதுக்கு லீவ்??என்ன ஆச்சு. "

" பார்த்துக்கலாம். கேள்வி கேக்காம கிளம்பு . இதோ வந்திர்றேன்."-சூர்யா.

லீவ் போடுற அளவுக்கு.......

Continue lendo

Você também vai gostar

9.8K 361 29
தேவதையின் மௌனமான அழுகை
94.9K 4.1K 25
கடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..
132K 4.7K 51
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வ...
213K 6.3K 43
அளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு