தனிமையிலே இனிமை காண முடியுமா...

By NiranjanaNepol

59K 4.1K 526

தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேற... More

1 திருமணம்
2 இழுபறி ஆட்டம்
3 இது தான் நான்
4 கடிதம்
5 முகுந்தனின் நண்பர்கள்
6 நஞ்சான உணவு
7 தேவதை
8 நேர்முகத் தேர்வு
9 பதில்
10 இனம் புரியா உணர்வு
11 மீராவின் பார்வையில்...
12 கேள்வி
13 தான் ஆடாவிட்டாலும்
14 விசித்திர எண்ணம்
15 முகுந்தனன் கோபம்
16 மாற்றம்
17 கணவனின் மனோநிலை
18 தொலைந்த நிம்மதி
19 முதல் அணைப்பு
20 உள்ளெழுச்சி
21 தெளிவு
22 கோபக்கார கணவன்
23 காதலா?
24 நண்பர்களின் காதல்
25 திருமணமானவள்
26 முகுந்தனின் செயல்
27 நிச்சயதார்த்தம்
28 முகுந்தனின் நெருக்கம்
29 தவறான கணிப்பு
30 தாம்பத்தியம்
31 முதல் உரையாடல்
32 தலைகீழ் மாற்றம்
33 என் மனைவி
34 இது நிரந்தரமா?
35 சொன்னபடியே
36 உணர்ச்சியா?
37 முகுந்தனின் அறையில்
38 உண்மை நிலை
39 உரையாடல்
40 காதலிக்கிறேன்
41 மாற்றம் ஒன்றே மாறாதது
42 அபாயம்
43 கொண்டாட்டம்
44 பொறாமை
45 முகுந்தனின் திட்டம்
46 இன்ப அதிர்ச்சி
47 சென்னையில்...
48 ஆர்வம்
49 மூக்குடைப்பு
50 மன்னிப்பு
52 மர்ம மனிதன்
53 யார் அவன்?
54 உடைந்த மூக்கு
57 செல்ல சண்டை
58 எவ்வளவு முக்கியம்...
59 மன்னிப்பு
60 மீராவின் உதவி
61 மூன்றாவது நபர்
62 சந்தேகம்
63 சம்பவம்
64 குழப்பம்
65 பொறி
66 தண்டனை
67 சுவற்றில் எறிந்த பந்து
68 விருந்தாளிகள்
69 விருந்தாளிகளா, எதிரிகளா?
70 முகுந்தனின் திட்டம்
71 உற்ற துணை
இறுதிப் பகுதி

51 யார் அவள்?

720 51 4
By NiranjanaNepol

51 யார் அவள்?

இரவு

அனைவருக்கும் உணவு பரிமாறினாள் மீரா.

"மீரா, நீ வந்து உட்காரு. நான் உனக்கு பரிமாறுறேன்" என்றார் ஜானகி.

"ஏன் மா?"

"உன்னால தான் இன்னைக்கு நம்ம எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம். இப்படி ஒரு நாள் எங்க வாழ்க்கையில வரும்னு நான் நினைச்சே பார்த்ததில்ல தெரியுமா?"

"அதனால?"

"உன்னை நாங்க மதிக்கணும்"

"அம்மா, நான் இந்த வீட்டோட மருமக. நான் செஞ்சது எதுவும் இந்த குடும்பத்துக்காக செய்யல. எனக்காக தான் செஞ்சுகிட்டேன். நான் என்ன செஞ்சேனோ அதை நம்பிக்கையோட செஞ்சேன். அவ்வளவு தான் அதுக்கு மேல நான் எதுவும் செய்யலையே"

"ஆமாம்... நீ நீயாவே இருந்து எங்க பிள்ளையோட மனசை கொள்ளை அடிச்சுட்ட... அதுவே ஒரு பெரிய சாதனை தான்" என்றார் கேசவன்.

"எது எப்படியோ, அவன் உன்னால தான் மாறினான்" என்றார் ஜானகி.

"அவர் ரொம்ப நல்லவருமா. இயல்பாவே அவர் நல்லவரா இருந்ததால தான் அவரால மாறமுடிஞ்சது. இல்லன்னா அவர் மாறனும்னு நினைச்சி இருக்க மாட்டாரு" என்று தன் கணவனின் பக்கம் நின்றாள் மீரா. அது அவளது மாமனார் மாமியாரையும் கூட பெருமை கொள்ள செய்தது.

சிரித்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான் முகுந்தன்.

"அவன் மாறணும்னு நினைச்சது மட்டும் அவன் மாற்றத்துக்கு காரணம் இல்ல... அவன் உன்னை ரொம்ப நேசிக்கிறான். அதனால தான் அவன் மாறணும்னு நினைச்சிருக்கான்"

மீரா சிரித்தபடி முகுந்தனை பார்க்க, அவன் ஆம் என்று தலையசைத்தான்.

"எல்லா புகழும் அவருக்கு தான். அவர் மாறணும்னு நினைச்சதால தான் மாறினாரு"

"அப்படியா மகனே?"

"நான் மீராவுக்காக மாறணும்னு நெனச்சேன். அவ மட்டும் என் வாழ்க்கையில வராம இருந்திருந்தா, நான் மாற்றத்தை பத்தி எல்லாம் யோசிச்சிக்கூட இருக்க மாட்டேன்"

"போதும் மா. நம்ம வேற ஏதாவது பேசலாம்" என்றாள் மீரா.

"ஏன் மா? இதைப் பத்தி பேசினா உனக்கு போர் அடிக்குதா?" என்றார் கேசவன்.

"எனக்கு இல்ல பா... இவருக்கு போரடிக்கும்னு நினைக்கிறேன்" என்று சிரித்தாள்.

"என் பொண்டாட்டியை பத்தி பேசினா எனக்கு ஏன் போர் அடிக்க போகுது?" என்றான் முகுந்தன்.

"எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. சீக்கிரம் சாப்பிட்டு எல்லாரும் அவங்க ரூமுக்கு போங்க" என்றார் ஜானகி கேசவனை பார்த்து சைகை காட்டியபடி.

அவர் கூறியதன் அர்த்தத்தை புரிந்து கொண்ட கேசவன், விரைவாய் சாப்பிட்டு முடித்தார்.

"குட் நைட் முகுந்தா" என்று தன் அறையை நோக்கி நடந்தார்.

மீராவை பார்த்த முகுந்தன்,

"வா நம்ம ரூமுக்கு போகலாம்" என்றான்.

"ஓ போகலாமே" என்று அவள் எழுந்து நிற்க,

"ஒரு நிமிஷம் இரு" என்றான்.

"என்ன?"

அவளை தன் கையில் தூக்கிக் கொண்டான்.

திடுக்கிட்ட மீரா,

"என்ன செய்றீங்க நீங்க? என்னை கீழே இறக்கி விடுங்க" என்றாள்.

"ஏன்?" என்று கேட்டபடி தன் அறையை நோக்கி நடந்தான் அவன்.

"நம்ம ஒன்னும் தனியா இல்ல. இங்க அம்மாவும் அப்பாவும் இருக்காங்க. அவங்க பார்த்தா என்ன ஆகும்?"

"இன்னும் அதிகமா சந்தோஷ படுவாங்க. அவங்க மகன் ரொம்ப ரொமான்டிக்கா இருக்கிறதா நினைப்பாங்க"

"நீங்க ரொமான்டிக்கானவரா?" என்று அவனது கழுத்தை சுற்றி வளைத்துக் கொண்டு சிரித்தாள் அவள்.

"நான் ரொமான்டிக்கானவன் இல்லையா?"

அவள் ஆம் என்ற தலையசைத்தாள்.

"இதுக்கு என்ன அர்த்தம்?"

"ஒன்னும் இல்ல"

"நான் எவ்வளவு ரொமான்டிக்கானவன்னு காட்டட்டுமா?"

"என்னைவிட உங்களைப் பத்தி யாருக்கு தெரிஞ்சிட போகுது?"

"அப்புறம் ஏன் ஒத்துக்க மாட்டேங்குற?"

"நீங்க ரொமான்டிக்கான ஆள் இல்ல. ஆனா ரொம்ப பேஷனேட் ஆன ஆளு"

"அப்படின்னா?"

"ரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு"

"அது என்னன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்..."

"பூவை முகர்ந்து பாக்குறதுக்கும், பிழியுறதுக்கும் இருக்கிற வித்தியாசம் தான்" என்று சிரித்தாள் அவள்.

"நான் உன்னை பிழியுறேன்னு சொல்றியா?"

"இல்லையா?"

"பிழியறதுன்னா என்னன்னு காட்டட்டுமா?"

"நான் உண்மையை தானே சொன்னேன்?"

"ஆமாம் உண்மை தான்"

"என் வார்த்தையை உங்களுக்கு சாதகமா எடுத்துக்காதீங்க"

"நீ என்ன வேணா நினைச்சுக்கோ"

என்று அவளை கட்டிலில் இட்ட அவன், தன்னால் பூவை முகர்ந்தும் பார்க்க முடியும் என்று காட்டினான்.

.......

அவள் நெற்றியில் முத்தமிட்டு,

"ரொம்ப தேங்க்ஸ்" என்றான்.

"எதுக்கு தேங்க்ஸ்?"

"என்னை ஒரு சாதாரண மனுஷனா மாத்தினதுக்கு, எதார்த்தத்தை புரிஞ்சுக்க வச்சதுக்கு, ஒரு மகனா என் கடமையை உணர வச்சதுக்கு, எங்க அம்மா அப்பாவை சந்தோஷபடுத்தினதுக்கு"

அவனது வாயை பொத்தினாள் மீரா.

"போதும், உங்களோட தேங்க்ஸ் சொல்ற லிஸ்ட்"

"எனக்கு போதாது... எந்த அளவுக்கு என் வாழ்க்கையில நீ வேணும்னு நான் நினைக்கிறேனோ, அந்த அளவுக்கு நான் உனக்கு கடமைப்பட்டிருக்கிறேன்"

"நானும் தான்"

"எத்தனையோ பசங்க உனக்காக எதையும் செய்ய தயாரா இருந்தாங்க. அவங்கள்ல யாரையாவது ஒருத்தரை நீ தேர்ந்து எடுத்திருந்தா, உன்னோட வாழ்க்கை வேற மாதிரி இருந்திருக்கும். ஆனா அவங்களையெல்லாம் நீ ஏன் யோசிச்சு பார்க்கவே இல்ல?"

"நான் நெறைய பசங்க பொண்ணுங்க பின்னாடி சுத்துறதை பாத்திருக்கேன். அவங்க எல்லாரும் ரொம்ப சின்சியரா தான் இருக்காங்க, தான் விரும்பின பெண் கிடைக்கிற வரைக்கும். ஆனா கல்யாணத்துக்கு பிறகு எல்லாருமே மாறி போறாங்க. அப்படின்னா அவங்களோட காதல் இதயம் சம்பந்தப்பட்டதில்ல... அவங்களுடைய எதிர்பார்ப்பு வேற ஏதோ. அப்படிப்பட்ட காதலை பார்த்து நான் ரொம்ப ஃபெட் அப் ஆயிட்டேன். நம்ம கதை அப்படி இல்ல. அது வித்தியாசமானது"

"எப்படி?"

"நீங்க உங்க தனிமையை எந்த அளவுக்கு நேசிச்சீங்கன்னு எனக்கு தெரியும். அதிலிருந்து உங்களை வெளியில கொண்டு வர்றது அவ்வளவு ஈசி இல்லனும் எனக்கு தெரியும்.  ஆனா ஒருவேளை அதை விட்டு நீங்க வெளியில வந்துட்டா, அதுக்கான காரணத்தை நீங்க மறக்க மாட்டீங்க... அதுக்கு காரணமா இருந்தவங்களையும் மறக்க மாட்டீங்க"

"அப்படியா?"

அவள் ஆம் என்று நம்பிக்கையுடன் தலையசைத்தாள்.அவள் கன்னத்தில் முத்தமிட்டு

"நீ எது செஞ்சாலும் அதுல நான் காதலை தான் பாக்குறேன். உன்னால மட்டும் எப்படி இப்படி இருக்க முடியுது?" என்றான்

"நான் இயல்பா இருக்கேன். உங்களுக்கு அப்படி தெரியுது" என்றாள்.

அவள் அருகில் படுத்துக் கொண்டு அவளை பார்த்துக் கொண்டிருந்த அவன்,

"நீ என்ன யோசிச்சுகிட்டு இருக்க?" என்றான்.

"நான் மனோகரை பத்தி யோசிச்சுகிட்டு இருக்கேன்"

"என்ன்னனது? எதுக்காக இப்ப அந்த கொசுவை பத்தி நினைக்கிற?" என்றான் கோபமாய்.

"நீங்க அவனை நல்லா நோஸ்கட் பண்ணி விட்டுட்டீங்க. ஒருவேளை அதுக்கு அவன் திருப்பி அடிக்க நினைச்சா என்ன செய்றது?"

"அவனால எதுவும் செய்ய முடியாது. ஏன்னா, நான் என் கூட படிச்ச யாருக்கும் லெட்டரும் கொடுக்கல, பொண்ணுங்க டிரஸ் பண்ற இடத்துல எட்டியும் பாக்கல" என்றான் கடுப்புடன்.

"நான் அதை சொல்ல வரல. அவன் வேணும்னே உங்களை பத்தி எங்க அப்பா கிட்ட பேச்சை ஆரம்பிச்சிருக்கான். நீங்க நடந்த உண்மையை சொல்லி அவன் வாயை அடைச்சிட்டீங்க. ஆனா அவன் உண்மையை மட்டும் தான் பேசி உங்களை திருப்பி அடிப்பானு நம்ம எதிர்பார்க்க முடியாது"

"அவன் அப்படி ஏதாவது  செஞ்சான்னா, அவனை நான் கொன்னுடுவேன்"

"நீங்க அவனைப் பத்தி கவலைப்படாதீங்க. நான் தான் உங்க கூட இருக்கேனே... அவன் என்ன செஞ்சா நமக்கு என்ன? யார் அவனை நம்ப போறது?"

"நீ என்னை நம்புறல?"

"அதுல உங்களுக்கு  சந்தேகமா?"

அவன் இல்லை என்று தலையசைத்து அவள் கையில் முத்தமிட்டான்.

"தூங்கு. நாளைக்கு உங்க அம்மா வீட்டுக்கு போகணும் இல்ல?"

"நீங்களும் தூங்குங்க. தேவையில்லாம மனோகரை நினைச்சி உங்க தூக்கத்தை கெடுத்துக்காதீங்க"

"ம்ம்" என்றபடி அவளை அணைத்துக் கொண்டான் முகுந்தன்.

மறுநாள்

மீரா இல்லம்

யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தார் ஜனார்த்தனன். அங்கு ஒரு பெண் நின்றிருந்தாள்.

"வணக்கம்" என்றாள்.

"யாருமா வேணும்?" என்றார் ஜனார்த்தனன்

"வாடகைக்கு வீடு காலி இருக்கிறதா கேள்விப்பட்டேன்"

"ஆமாமா" என்றவர், வைதேகியை அழைத்து,

"வீட்டு சாவியை கொண்டு வா" என்றார்.

சரி என்று தலைகசைத்த வைதேகி, சாவியை கொண்டு வந்தார்.

"இவங்க வீடு பார்க்க வந்திருக்காங்க. அவங்களுக்கு அந்த போர்ஷனை காட்டு"

"வாம்மா" என்று வீட்டின் பின்புறம் நோக்கி அவளை அழைத்து சென்றார்.

அந்த வீட்டை பார்த்த அந்த பெண்ணுக்கு வீடு பிடித்துப் போனது.

"பத்தாயிரம் ரூபாய் வாடகை, ஒரு லட்சம் அட்வான்ஸ்" என்றார்.

"கொஞ்சம் குறைக்க முடியுமா?"

"இல்லம்மா. நாங்க பிக்ஸ் பண்ணி வச்சிருக்கோம். உண்மைய சொல்ல போனா, இந்த ஏரியாவுல இது ரொம்ப கம்மி. இதே போர்ஷனுக்கு பக்கத்துல பன்னண்டாயிரம் வாங்குறாங்க"

"சரிங்க ஆன்ட்டி. நான் எங்க அம்மா கிட்ட பேசிட்டு முடிவை உங்களுக்கு சொல்றேன்" என்றாள் அந்த பெண்

"சரி, உங்க முடிவை சீக்கிரம் சொல்லுங்க. அப்புறம் வேற யாராவது வந்து அட்வான்ஸ் கொடுத்தா, அவங்களுக்கு கொடுக்க வேண்டி இருக்கும்"

"சரிங்க ஆன்ட்டி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சொல்றேன்"

சரி என்று தலையசைத்தார் வைதேகி.

"எனக்கு குடிக்க கொஞ்சம் தண்ணி கிடைக்குமா ஆன்ட்டி?"

"ஓ இருமா கொண்டுவரேன். உள்ள வந்து உட்காருங்க" என்று கூறிவிட்டு தண்ணீர் எடுக்க சமையல் அறைக்கு சென்றார்

அந்த வீட்டில் தன் கண்களை ஓடவிட்ட அந்தப் பெண், அங்கு சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு புகைப்படத்தை பார்த்தாள்.

அப்பொழுது அவளுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார் வைதேகி.

"இந்த போட்டோவில் இருக்கிறது யார் ஆன்ட்டி?" என்றாள் அந்தப் பெண் வைதேகியிடம்.

"என் மகளும் அவ வீட்டுக்காரரும்"

"அவர் பெயர் முகுந்தன் தானே?" என்றாள்

"ஆமாம் உங்களுக்கு அவரை தெரியுமா?" என்றார் வைதேகி ஆர்வத்துடன்.

"ரொம்ப நல்லா தெரியும்"

"உங்களுக்கு எப்படி தெரியும்?"

"நாங்க ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்ல தான் படிச்சோம்"

"அப்படியா?"

"ஆமாம், அவர் நிச்சயம் என்னை மறந்திருக்க மாட்டார். என் பெயரை அவர்கிட்ட சொல்லுங்க. நிச்சயம் அவருக்கு தெரியும்" என்றாள்.

"உங்க பேரு என்ன?"
என்ற கேள்வி பின்னால் இருந்து வந்தது. அங்கு ஜனார்த்தனன் நின்று கொண்டிருந்தார்.

"என் பேரு பார்கவி. செயின்ட் சேவியர் ஸ்கூல்ல டீச்சரா வேலை செய்றேன்"

"முகுந்தன் உங்களை மறந்திருக்க மாட்டார்னு அவ்வளவு ஆணித்தரமா ஏன் சொன்னீங்க?"

"நான் அவரை காதலிச்சேன். அவருக்கு ப்ரொபோஸ் கூட பண்ணேன்"

ஜனார்த்தனனும் வைதேகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"நான் மட்டுமில்ல, அவரை நிறைய பொண்ணுங்க விரும்புனாங்க. அவர் அவ்வளவு அழகா இருந்தா ஏன் விரும்ப மாட்டாங்க...?"  என்று சிரித்த அவள்

"எத்தனை பேர் அவரை காதலிச்சிருந்தாலும், நான் அவருக்கு ரொம்ப ஸ்பெஷல்"

"ஏன்?" என்ற கேள்வி இருவரிடமிருந்தும் ஒரே நேரத்தில் வந்தது.

அதைக் கேட்டு அவள் நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.

தொடரும்...

Continue Reading

You'll Also Like

72.6K 1.3K 36
இது ஒரு ஆன்ட்டி ஹீரோ வகை கதை...
94.5K 4.1K 25
கடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..
283K 9K 38
#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.