36 உணர்ச்சியா?

906 63 4
                                    

36 உணர்ச்சியா...?

முகுந்தன் அனுப்பிய புகைப்படத்தை பார்த்த மீரா வாயடைத்துப் போனாள். அவளது பெற்றோர் மும்பை வந்திருக்கிறார்கள் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. அதுவும், அவர்களை அழைக்க, அவளது கணவன் விமான நிலையம் சென்றிருக்கிறான். அவர்கள் எதற்காக மும்பை வந்திருக்கிறார்கள்? அவர்களது வருகை முகுந்தனுக்கு எப்படி தெரிந்தது? அவர்கள் அதைப் பற்றி ஏன் அவளிடம் எதுவும் கூறவில்லை? எப்படி அவர்கள் அவளை விட்டுவிட்டு முகுந்தனை தொடர்பு கொண்டார்கள்? பல கேள்விகள் அவள் மனதில் இருந்தது.

அழகு நிலையத்தை விட்டு வெளியே வந்த அவள், முகுந்தனுக்கு ஃபோன் செய்தாள். அவளது அழைப்பை கண்ட முகுந்தன், புன்னகையுடன் அதை ஏற்றான்.

"ஹாய்" என்றான்.

"எங்க இருக்கீங்க?"

"வாவ், ஒரு வழியா, நல்ல பொண்டாட்டியா என்னைப்பத்தி விசாரிக்க எல்லாம் ஆரம்பிச்சிட்ட போல இருக்கு???" என்றான் கிண்டலாக.

"நான் கேட்ட கேள்விக்கு தயவு செய்து பதில் சொல்லுங்க"

"நான் உனக்கு அனுப்புன ஃபோட்டோவை நீ பார்க்கலையா?"

"எப்படி? எங்க அம்மா அப்பா எப்படி மும்பைக்கு வந்தாங்க? அதைப்பத்தி ஏன் அவங்க எதுவும் என்கிட்ட சொல்லல?"

"நீ அதை நேரடியா அத்தை கிட்டயே கேட்டுடேன்" என்று தன் கைபேசியை அவளது அம்மாவிடம் கொடுத்தான் முகுந்தன்.

"இங்க பாருங்க, எனக்கு கெட்ட கோவம் வரும். ஃபோனை எங்க அம்மா கிட்ட கொடுக்கிற வேலை வச்சுக்காதீங்க. நான் கேட்கிற கேள்விக்கு நீங்க பதில் சொல்லுங்க" என்றாள் அவசரமாக.

"ஏய் மீரா, மாப்பிள்ளை கிட்ட நீ இப்படி தான் பேசுவியா?" என்றார் வைதேகி தன் குரலில் அதிர்ச்சி காட்டி. 

தனது நாக்கை கடித்த மீரா,

"அம்மா, எப்படி இருக்கீங்க?" என்றாள் தன்னை சுதாகரித்துக் கொண்டு.

"நாங்க ரொம்ப நல்லா இருக்கோம். இப்போ மும்பையில இருக்கிறதால, ரொம்ப சந்தோஷமா இருக்கோம். நீ எப்படி இருக்க?"

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Opowieści tętniące życiem. Odkryj je teraz