தனிமையிலே இனிமை காண முடியுமா...

By NiranjanaNepol

63K 4.2K 527

தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேற... More

1 திருமணம்
2 இழுபறி ஆட்டம்
3 இது தான் நான்
4 கடிதம்
5 முகுந்தனின் நண்பர்கள்
6 நஞ்சான உணவு
7 தேவதை
8 நேர்முகத் தேர்வு
9 பதில்
10 இனம் புரியா உணர்வு
11 மீராவின் பார்வையில்...
12 கேள்வி
13 தான் ஆடாவிட்டாலும்
14 விசித்திர எண்ணம்
15 முகுந்தனன் கோபம்
16 மாற்றம்
17 கணவனின் மனோநிலை
18 தொலைந்த நிம்மதி
19 முதல் அணைப்பு
20 உள்ளெழுச்சி
21 தெளிவு
22 கோபக்கார கணவன்
23 காதலா?
24 நண்பர்களின் காதல்
25 திருமணமானவள்
26 முகுந்தனின் செயல்
27 நிச்சயதார்த்தம்
28 முகுந்தனின் நெருக்கம்
29 தவறான கணிப்பு
30 தாம்பத்தியம்
31 முதல் உரையாடல்
32 தலைகீழ் மாற்றம்
33 என் மனைவி
34 இது நிரந்தரமா?
35 சொன்னபடியே
37 முகுந்தனின் அறையில்
38 உண்மை நிலை
39 உரையாடல்
40 காதலிக்கிறேன்
41 மாற்றம் ஒன்றே மாறாதது
42 அபாயம்
43 கொண்டாட்டம்
44 பொறாமை
45 முகுந்தனின் திட்டம்
46 இன்ப அதிர்ச்சி
47 சென்னையில்...
48 ஆர்வம்
49 மூக்குடைப்பு
50 மன்னிப்பு
51 யார் அவள்?
52 மர்ம மனிதன்
53 யார் அவன்?
54 உடைந்த மூக்கு
57 செல்ல சண்டை
58 எவ்வளவு முக்கியம்...
59 மன்னிப்பு
60 மீராவின் உதவி
61 மூன்றாவது நபர்
62 சந்தேகம்
63 சம்பவம்
64 குழப்பம்
65 பொறி
66 தண்டனை
67 சுவற்றில் எறிந்த பந்து
68 விருந்தாளிகள்
69 விருந்தாளிகளா, எதிரிகளா?
70 முகுந்தனின் திட்டம்
71 உற்ற துணை
இறுதிப் பகுதி

36 உணர்ச்சியா?

961 64 4
By NiranjanaNepol

36 உணர்ச்சியா...?

முகுந்தன் அனுப்பிய புகைப்படத்தை பார்த்த மீரா வாயடைத்துப் போனாள். அவளது பெற்றோர் மும்பை வந்திருக்கிறார்கள் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. அதுவும், அவர்களை அழைக்க, அவளது கணவன் விமான நிலையம் சென்றிருக்கிறான். அவர்கள் எதற்காக மும்பை வந்திருக்கிறார்கள்? அவர்களது வருகை முகுந்தனுக்கு எப்படி தெரிந்தது? அவர்கள் அதைப் பற்றி ஏன் அவளிடம் எதுவும் கூறவில்லை? எப்படி அவர்கள் அவளை விட்டுவிட்டு முகுந்தனை தொடர்பு கொண்டார்கள்? பல கேள்விகள் அவள் மனதில் இருந்தது.

அழகு நிலையத்தை விட்டு வெளியே வந்த அவள், முகுந்தனுக்கு ஃபோன் செய்தாள். அவளது அழைப்பை கண்ட முகுந்தன், புன்னகையுடன் அதை ஏற்றான்.

"ஹாய்" என்றான்.

"எங்க இருக்கீங்க?"

"வாவ், ஒரு வழியா, நல்ல பொண்டாட்டியா என்னைப்பத்தி விசாரிக்க எல்லாம் ஆரம்பிச்சிட்ட போல இருக்கு???" என்றான் கிண்டலாக.

"நான் கேட்ட கேள்விக்கு தயவு செய்து பதில் சொல்லுங்க"

"நான் உனக்கு அனுப்புன ஃபோட்டோவை நீ பார்க்கலையா?"

"எப்படி? எங்க அம்மா அப்பா எப்படி மும்பைக்கு வந்தாங்க? அதைப்பத்தி ஏன் அவங்க எதுவும் என்கிட்ட சொல்லல?"

"நீ அதை நேரடியா அத்தை கிட்டயே கேட்டுடேன்" என்று தன் கைபேசியை அவளது அம்மாவிடம் கொடுத்தான் முகுந்தன்.

"இங்க பாருங்க, எனக்கு கெட்ட கோவம் வரும். ஃபோனை எங்க அம்மா கிட்ட கொடுக்கிற வேலை வச்சுக்காதீங்க. நான் கேட்கிற கேள்விக்கு நீங்க பதில் சொல்லுங்க" என்றாள் அவசரமாக.

"ஏய் மீரா, மாப்பிள்ளை கிட்ட நீ இப்படி தான் பேசுவியா?" என்றார் வைதேகி தன் குரலில் அதிர்ச்சி காட்டி. 

தனது நாக்கை கடித்த மீரா,

"அம்மா, எப்படி இருக்கீங்க?" என்றாள் தன்னை சுதாகரித்துக் கொண்டு.

"நாங்க ரொம்ப நல்லா இருக்கோம். இப்போ மும்பையில இருக்கிறதால, ரொம்ப சந்தோஷமா இருக்கோம். நீ எப்படி இருக்க?"

"நான் நல்லா இருக்கேன் மா"

"நீ இப்போ எங்க இருக்க?"

"என் ஃபிரண்டு கூட இருக்கேன் மா"

"நீயும் மாப்பிள்ளையும் ஒரே ஆஃபீஸ்ல வேலை செய்றீங்க. நீ ஏன் அவர் கூட எங்களை கூப்பிட வரல?"

தன் தலையை சொறிந்தாள் மீரா.

"எங்களை கூப்பிட மாப்பிள்ளை ஏர்போர்ட்டுக்கு வந்திருக்காரு. நீயும் அவர் கூட வருவேன்னு நெனச்சேன்" என்று வேண்டுமென்றே கிண்டலாய் கூறினார் வைதேகி.

"நீங்க இப்போ மும்பையில..."

"ஆமாம், இப்ப தான் வந்தோம். எப்படி எங்க சர்ப்ரைஸ்?"

"இதை நான் சுத்தமா எதிர்பார்க்கவே இல்ல. நீங்க என்னை சர்ப்ரைஸ் பண்ணனும்னு வந்தா, எனக்கு எப்படி தெரியும்? என்கிட்ட சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேன்" என்று சமாளித்தாள் மீரா.

"மாப்பிள்ளை தான் உன்கிட்ட இதைப்பத்தி சொல்ல வேண்டாம்னு சொன்னாரு. அவர் உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தான் இந்த பிளான் பண்ணாரு. அவர் எவ்வளவு ஸ்வீட் இல்ல?" என்றார்.

"இப்போ நீங்க எங்க இருக்கீங்க?"

"இதோ ஏர்போர்ட்டில் இருந்து கிளம்புறோம். வீட்டுக்கு வந்து உன்னை பார்க்குறோம்"

மீரா அழைப்பை துண்டிக்க நினைத்த போது,

"மீரா ஒரு நிமிஷம் இரு. மாப்பிள்ளை உன்கிட்ட பேசணுமாம்"

"ம்ம்ம்"

கைபேசியை முகுந்தனிடம் கொடுத்தார் வைதேகி.

"மீரா..."

"சொல்லுங்க" என்றாள் சிணுங்களுடன்.

"நாங்க இன்னும் ஒரு மணி நேரத்துல வீட்ல இருப்போம். லெஃப்ட் சைடு இருக்கிற ரூமை அங்கிள் ஆன்ட்டிக்கு அரேஞ்ச் பண்ணிடு" என்றான் தன் சிரிப்பை அடக்கியபடி.

"ம்ம்ம்" என்றாள் அவளும் சிரிப்பை அடக்கியபடி.

"பை" அழைப்பை துண்டித்தான் முகுந்தன்.

ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறி அமர்ந்து கொண்ட மீரா, வேகமாக செல்லும்படி ஓட்டுனரை கேட்டுக் கொண்டாள். போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருந்தால், அவளது பெற்றோருக்கு வீடு வந்து சேர ஒரு மணி நேரம் ஆகும். மாலை நேரம் என்பதால், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அவர்கள் வீடு வந்து சேரும் முன், அவளது பொருட்களை அவளது அறையிலிருந்து எடுத்து, முகுந்தனின் அறைக்கு மாற்ற வேண்டும்.  அவர்களுக்குள் இருக்கும் எந்த பிரச்சனையும் அவளது பெற்றோருக்கு தெரியக்கூடாது.

மீரா தன்னுடன் இருக்க வேண்டும் என்று முகுந்தன் விரும்பியதை விட,  அவனுடன் இருக்க வேண்டும் என்று அதிகமாய் விரும்பியது மீரா தான். அவர்கள் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தார்கள். அந்த விளையாட்டு, வெகு விரைவில் முடிவடைய இருக்கிறது.

முகுந்தனின் *நீயா என் ரூமுக்கு வரலைனா, நான் உன்னை என் ரூமுக்கு வர வைப்பேன்* என்ற வார்த்தைகளை அவள் நினைவு கூர்ந்தாள். அவன் எப்படி அவளது பெற்றோரை மும்பைக்கு அழைத்து வந்தான் என்று புரியவில்லை அவளுக்கு. சிரித்தபடி தங்கள் இல்லம் நோக்கி பயணித்தாள் மீரா.

நாற்பது நிமிடத்தில் வீடு வந்து சேர்ந்த மீரா, தனது அறைக்குச் சென்று, அங்கு இருந்த அனைத்து பொருட்களையும் அள்ளிக் கொண்டு வந்து முகுந்தனின் அறையில் போட்டாள். அவளது பொருட்களை வைக்க, அவன் ஏற்கனவே அலமாரியில் இடத்தை ஒதுக்கி வைத்திருந்தான். அனைத்தையும் அலமாரியில் திணித்து, கதவை மூடினாள். மீண்டும் தன்னுடைய அறைக்குச் சென்று ஏதாவது விடப்பட்டிருக்கிறதா என்பதை சோதித்துப் பார்த்துக் கொண்டாள். படுக்கை விரிப்பையும், தலையணை உறையையும் எடுத்து வாஷிங் மெஷினுக்குள் எறிந்துவிட்டு, நிம்மதி பெருமூச்சு விட்டு சிரித்தாள்.

இரவு உணவை சமைக்கத் தொடங்கினாள், அவளது கணவனுக்கும் சேர்த்து தான். அவர்கள் வருவதற்குள், பாதி சமையலையாவது முடித்து வைக்க வேண்டும் என்று நினைத்தாள். முக்கால் வாசி முடித்து விட்ட நிலையில், அழைப்பு மணியின் ஓசை கேட்டது. ஓடிச்சென்று கதவை திறந்தவள், அங்கு அவளது பெற்றோர் முகுந்தனுடன் நின்றிருப்பதை கண்டாள்.

"அம்மா" என்று சந்தோஷமாய் வைதேகியை அணைத்துக் கொண்டாள்.

"எப்படி இருக்க மீரா?" என்றார் ஜனார்த்தனன்.

"போங்கப்பா, நான் உங்க கிட்ட பேச மாட்டேன். நீங்க வரப் போறீங்கன்னு ஏன் என்கிட்ட சொல்லல?" என்று உதடு சுழித்தாள்.

"மாப்பிள்ளை உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க ஆசைப்பட்டாரு. அதனால தான் அதை ரகசியமா வச்சோம்" என்றார் ஜனார்த்தனன்.

அவளைப் பார்த்து நம்முட்டு புன்னகை சிந்திக் கொண்டிருந்த முகுந்தனை ஏறிட்டாள் மீரா.

"மீரா, அங்கிளையும் ஆன்ட்டியையும் கெஸ்ட் ரூமுக்கு கூட்டிக்கிட்டு போ" என்றான் எகத்தாள புன்னகையோடு.

"வாங்க மா" சற்று முன்பு வரை அவளது அறையாக இருந்த  விருந்தினர் அறைக்கு அவர்களை அழைத்துச் சென்றாள் மீரா.

"என்ன மீரா நீ, கட்டில்ல பெட்ஷீட் எல்லாம் போட்டு ரெடி பண்ணி வச்சிருப்பேன்னு நெனச்சேனே... நீ அதை எல்லாம் செய்யலையா?" என்றான் முகுந்தன் கிண்டலாக.

"இதோ இப்ப செய்றேன் மா" என்றாள் மீரா வைதேகியை பார்த்தபடி.

"அதை நீ என்கிட்ட குடு. அதை நான் செய்றேன். நீ போய் மாப்பிள்ளைக்கு காபி போட்டு கொடு" என்றார் வைதேகி.

சரி என்று தலையசைத்த மீரா, அந்த படுக்கை விரிப்பை அவரிடம் கொடுத்துவிட்டு, சமையலறைக்கு சென்றாள். அவள் ஏற்கனவே பாலை அடுப்பில் வைத்து சூடேற்ற துவங்கி விட்டிருந்தாள்.  ஏனென்றால், ஜனார்த்தனனுக்கு வெளியில் சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பி வந்தவுடன் காபி வேண்டும். காபி போட்டு, முதலில் அதை ஜனார்த்தனனுக்கும் வைதேகிக்கும் கொடுத்தாள் மீரா.

"அம்மா, நீங்க எப்படி இங்க வந்தீங்க?" என்றாள் ஆர்வத்துடன்.

"நம்ம அதைப் பத்தி பொறுமையா பேசிக்கலாம். முதல்ல நீ போய் மாப்பிள்ளைக்கு காபி கொடு" என்றார்.

தன்னை தயார் படுத்திக் கொண்டு அவனது அறைக்குள் வந்தாள் மீரா. அப்பொழுது முகம் கை கால் கழுவிக்கொண்டு குளியலறையில் இருந்து வெளியே வந்தான் முகுந்தன். அவனிடம் காபி குவளையை நீட்டினாள். அதை அவளிடம் இருந்து பெற்றுக் கொள்ளாமல், புன்னகை புரிந்தான் முகுந்தன்.

"யாரோ என்னோட ரூமுக்கு எல்லா பொருளையும் மாத்திட்ட மாதிரி தெரியுது..." என்றான் தன் தலையை லேசாய் சாய்த்து.

"எங்க அம்மா அப்பா போன பிறகு, மறுபடியும் எல்லாத்தையும் மாத்திடுவேன்"

"அவங்க இங்க ஒரு மாசம் இருக்க போறாங்க" என்று சிரித்தான் முகுந்தன்.

"என்ன்னனது...??? ஆனா, ஏன்?" என்றாள் நம்ப முடியாமல்.

"இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமே இல்ல மீரா. அவங்க உன்னோட அம்மா அப்பா. அவங்க உன்னை பார்க்கறதுக்காக எவ்வளவு ஆசையா வந்திருக்காங்க...!  ஆனா நீ என்னடான்னா, அவங்களை திருப்பி அனுப்புறதுலயே குறியா இருக்க" என்றான் அவன்.

காபி குவளையை மேஜையின் மீது வைத்துவிட்டு, அவள் அங்கிருந்து செல்ல நினைத்தபோது, கதவை சாத்தி தாளிட்டு, அவளை செல்ல விடாமல் தடுத்தான் முகுந்தன்.

"என்ன செய்றீங்க? நீங்க இப்படி கதவை சாத்தினா அவங்க என்ன நினைப்பாங்க?"

"அவங்க, அவங்களோட ரூம்ல இருக்காங்க... அப்படியே அவங்க வெளியில வந்தாலும், அவங்க மக, அவ புருஷனோட ரொமான்ஸ் பண்றதா நினைப்பாங்க..."

"நீங்க என்ன நினைச்சுகிட்டு.." என்று அவள் கேட்க, மேலும் அவளை பேசவிடாமல் அவள் வாயை பொத்தினான்.

"உன்னை என் கூட தங்க வைக்கனும்னு நெனச்சேன். அதுக்கு மேல வேற எதுவும் இல்ல" என்றான்.

அவன் கையை பின்னால் இழுத்த அவள்,

"எப்படி அவங்களை இங்கே வரவச்சிங்க? அவங்ககிட்ட நீங்க என்ன சொன்னீங்க?"

"உண்மையை சொன்னேன்" என்று சிரித்தான்.

"என்னது??? உண்மையை சொல்லிட்டீங்களா?" என்று அதிர்ந்தாள் அவள்

"ஆமாம் நீ என்னை ரொம்ப டார்ச்சர் பண்றேன்னு அவங்க கிட்ட சொன்னேன். அதனால உன்கிட்ட இருந்து என்னை காப்பாத்த வந்திருக்காங்க"

"என்னது? நான் உங்களை டார்ச்சர் பண்றனா?"

"ஆமாம்... பின்ன, நானா உன்னை டார்ச்சர் பண்றேன்?" என்றான் சிரித்தபடி.

அவனைப் பார்த்து கண்களை சுருக்கினாள் மீரா.

"மறந்துடாத, நீ என்கிட்ட பெட்ல தோத்துட்ட. அதனால நீ எனக்கு முத்தம் கொடுக்கணும்" என்றான்

"கன்னத்துல தானே..."

"ஆனா, குடுக்க போறது நீயாச்சே... எனக்கு வேண்டியது அவ்வளவு தான்" என்று  சிரித்தபடி தன் கன்னத்தை காட்டினான்.

அவர்களுக்கு முன்னால் இருந்த கண்ணாடியை மீரா கவனிக்கவில்லை. ஆனால் முகுந்தன் அவளை அந்த கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை நோக்கி மெல்ல முன்னேறினாள் மீரா. அவள் அவனை நெருங்கிய போது, அவளது முகத்தில் மென்மையான புன்னகை மலர்ந்தது. கனிவாய் அவனது முகம் பற்றி, கண்களை மூடி, தான் செய்யும் செயலின் ஆழம் அறிந்து, அதில் மூழ்கியவளாய் அவன் கன்னத்தில் தன் இதழ்களை பதித்தாள் மீரா.

அந்த காட்சியை கண்ட முகுந்தன் மலைத்து நின்றான். அவன் கன்னத்திலிருந்து தன் இதழ்களை பிரிக்காமல் சில நொடிகள் அந்த முத்தத்தில் வாழ்ந்தாள் மீரா. அவனது முகத்தை பார்த்தபடி, மென்று விழுங்கினாள். அவள் அனுபவித்து அளித்த அந்த முத்தத்தை பார்த்து மிரண்டு போனான் முகுந்தன். அவள் வெறும் இதழ் ஒற்றித்தான் பிரித்தாள். ஆனால் அதில் தான் எவ்வளவு ஈடுபாடு... எவ்வளவு உணர்ச்சி பெருக்கு... அவனை முத்தமிடும் போது, அவள் அதை எந்த அளவிற்கு ஆழமாய் உணர்ந்தாள் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அது அவனுக்கு குழப்பத்தை விளைவித்தது.  *எனக்கும் உணர்ச்சிகள் இருப்பதால் தான் உன்னை தொட விட்டேன்* என்று அவள் கூறினாள். ஆனால் இப்பொழுது நடந்ததை பார்த்த பிறகு, அவனுக்கு அது வெறும் உணர்ச்சிகளாய் தெரியவில்லை. உணர்ச்சிகளைக் கடந்த... அவனது புத்திக்கு எட்டாத... ஏதோ ஒன்று அது...!

தொடரும்...

Continue Reading

You'll Also Like

139K 3.5K 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே க...
10K 361 29
தேவதையின் மௌனமான அழுகை
499K 16.8K 62
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..