தனிமையிலே இனிமை காண முடியுமா...

NiranjanaNepol

60.4K 4.1K 526

தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேற... Еще

1 திருமணம்
2 இழுபறி ஆட்டம்
3 இது தான் நான்
4 கடிதம்
5 முகுந்தனின் நண்பர்கள்
6 நஞ்சான உணவு
7 தேவதை
8 நேர்முகத் தேர்வு
9 பதில்
10 இனம் புரியா உணர்வு
11 மீராவின் பார்வையில்...
12 கேள்வி
13 தான் ஆடாவிட்டாலும்
14 விசித்திர எண்ணம்
16 மாற்றம்
17 கணவனின் மனோநிலை
18 தொலைந்த நிம்மதி
19 முதல் அணைப்பு
20 உள்ளெழுச்சி
21 தெளிவு
22 கோபக்கார கணவன்
23 காதலா?
24 நண்பர்களின் காதல்
25 திருமணமானவள்
26 முகுந்தனின் செயல்
27 நிச்சயதார்த்தம்
28 முகுந்தனின் நெருக்கம்
29 தவறான கணிப்பு
30 தாம்பத்தியம்
31 முதல் உரையாடல்
32 தலைகீழ் மாற்றம்
33 என் மனைவி
34 இது நிரந்தரமா?
35 சொன்னபடியே
36 உணர்ச்சியா?
37 முகுந்தனின் அறையில்
38 உண்மை நிலை
39 உரையாடல்
40 காதலிக்கிறேன்
41 மாற்றம் ஒன்றே மாறாதது
42 அபாயம்
43 கொண்டாட்டம்
44 பொறாமை
45 முகுந்தனின் திட்டம்
46 இன்ப அதிர்ச்சி
47 சென்னையில்...
48 ஆர்வம்
49 மூக்குடைப்பு
50 மன்னிப்பு
51 யார் அவள்?
52 மர்ம மனிதன்
53 யார் அவன்?
54 உடைந்த மூக்கு
57 செல்ல சண்டை
58 எவ்வளவு முக்கியம்...
59 மன்னிப்பு
60 மீராவின் உதவி
61 மூன்றாவது நபர்
62 சந்தேகம்
63 சம்பவம்
64 குழப்பம்
65 பொறி
66 தண்டனை
67 சுவற்றில் எறிந்த பந்து
68 விருந்தாளிகள்
69 விருந்தாளிகளா, எதிரிகளா?
70 முகுந்தனின் திட்டம்
71 உற்ற துணை
இறுதிப் பகுதி

15 முகுந்தனன் கோபம்

798 66 6
NiranjanaNepol

15 முகுந்தனின் கோபம்

ஜானகியிடம் பேசினாள் மீரா.

"சொல்லுங்க அத்தை"

"நீ முகுந்தன் கூட அவனுடைய ரூம்ல தங்கறது இல்லையா?"

அவருக்கு எப்படி தெரிந்தது என்று எண்ணிய மீரா,

"ஏன் அத்தை அப்படி கேக்குறீங்க? நான் கிச்சன்ல வேலை செஞ்சுகிட்டு இருந்தேன்" என்று ஜானகியிடம் பொய் கூறாமல் மழுப்பினாள் மீரா.

"ஒரு மோசமான உண்மையை, அழகான பொய்யால மூடி மறைக்க நினைக்காத மீரா. எனக்கு என் பிள்ளையைப் பத்தி நல்லா தெரியும்" என்று கூறி, மீராவை சங்கடத்தில் ஆழ்த்தினார் ஜானகி.

"நான் அவர் வீட்ல இருக்கேன். எனக்கு அது போதும். நான் சந்தோஷமா இருக்கேன் அத்தை" தனது வருத்தத்தை காட்டிக் கொள்ளாமல் தவிர்த்தாள் அவள்.

"எவ்வளவு நாளைக்கு?"

"அவர் என்னை ஏத்துக்குற வரைக்கும்"

"அப்படி நடக்கும்னு எனக்கு தோணல" என்றார் சலிப்புடன்.

"எது நடக்காதுன்னு சொல்றீங்க?"

"நான் சொல்றதை கேளு மீரா, உன் மனசுக்கு பிடிச்ச வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ. முகுந்தனை விட்டுடு" என்றார் அதிருப்தியுடன்.

மீராவுக்கு தூக்கி வாரி போட்டது. இப்பொழுது என்ன நடந்து விட்டது என்று இவ்வளவு விரக்தியுடன் பேசுகிறார் ஜானகி? காலையில் கூட சந்தோஷமாக தானே பேசினார்? தன்னை சமாளித்துக் கொண்ட மீரா,

"மிகச்சிறந்த மாமியாருக்கான விருதை பெறுகிறார் திருமதி ஜானகி கேசவன்" என்று சிரித்து அவரை திசை திருப்ப முயன்றாள்.

"இது விளையாட்டு இல்ல மீரா" ஜானகியின் குரல் கண்டிப்புடன் ஒலித்தது.

"நானும் விளையாடல அத்தை. உங்க பிள்ளையை விட்டுட்டு நீங்க எனக்காக பேசுறீங்க இல்லையா, நான் அதை நினைச்சு ரொம்ப சந்தோஷப்படுறேன். ஆனா, இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்கோன்னு மட்டும் சொல்லாதீங்க. அது நிச்சயம் நடக்காது. நான் அவரை ரொம்ப நேசிக்கிறேன்" என்றாள் சீரியஸாக.

"இல்ல மீரா. உன் வாழ்க்கையை நீ வீணாக்காத. அதுக்கு பதில் உன்னை நேசிக்கிற ஒருத்தரை, மதிக்கிற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ சந்தோஷமா இரு" என்றார் வருத்தத்துடன்.

"ஒரு நாள், நிச்சயம் அவரும் என்னை மதிப்பார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றாள் நம்பிக்கையுடன்.

"எப்போ? நீ கிழவி ஆயிடுவ... ஆனா அது மட்டும் நடக்காது"

"அவர் ரொம்ப நல்லவர் அத்தை"

"உன் புருஷனுக்கு சப்போர்ட் பண்ணாதேன்னு நான் சொல்லல... ஆனா இவ்வளவு சப்போர்ட் பண்ணாதம்மா..." என்றார் விரக்தியுடன்.

"என்ன நடந்துச்சுன்னு நீங்க இப்படி பேசிக்கிட்டு இருக்கீங்க அத்தை? எனக்கு அவர் ஆபீஸ்ல வேலை கிடைச்சதுன்னு தெரிஞ்ச உடனே, நீங்க சந்தோஷமா தானே இருந்தீங்க? திடீர்னு நீங்க இவ்வளவு கோவப்படுறதுக்கு என்ன காரணம்?"

"உன்கிட்ட நானா பேசல. உன்கிட்ட பேச சொல்லி அவன் தான் சொன்னான். நீ மும்பையை விட்டு போகணும்னு அவன் நினைக்கிறான். அதை உனக்குப் புரிய வைக்க சொன்னான்"

மீரா திகைத்து நின்றாள். அவளிடம் ஜானகியை பேச சொன்னது முகுந்தனா? அவளுக்கு தொண்டையை அடைப்பது போல் இருந்தது.

"அவரா உங்களை என்கிட்ட பேச சொன்னாரு?" அவளது குரல் மாறியதை உணர்ந்தார் ஜானகி.

"ஆமாம். நீ அங்க, அவன் கூட இருக்க வேண்டாம்னு அவன் நினைக்கிறான். அவனை விட்டுடு மீரா. நம்மளை மதிக்காத ஒருத்தர் கூட இருக்கிறதை யாருமே செய்யக்கூடாது"

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் மீரா.

"இது கொஞ்சம் கூட நியாயமே இல்ல அத்தை. நம்ம அவரை புரிஞ்சுக்காம பேசினா எப்படி?" என்று ஜானகியை சமாதானப்படுத்த முயன்றாள் மீரா.

"என்ன புரிஞ்சிக்கணும்னு நீ நினைக்கிற?"

"அவருடைய சம்மதம் இல்லாமலேயே அவருக்கு என்னை கல்யாணம் பண்ணி வச்சீங்க. எங்களுக்கு கல்யாணம் ஆனபோது என்னை பத்தி அவருக்கு எதுவுமே தெரியாது. என்னை புரிஞ்சுக்க நம்ம அவருக்கு அவகாசமே  கொடுக்கல. அப்படி இருக்கும் போது, எடுத்த உடனே அவர் என்னை புரிஞ்சுக்கணும்னு நம்ம எதிர்பார்த்தா எப்படி அத்தை? அவர் எல்லார்கிட்டயும் கலந்து பழகுற சாதாரண குணமுள்ள  மனுஷன் இல்லயே...! அப்படி இருந்தும், அவர் என்னை மும்பைக்கு கூட்டிகிட்டு வந்தாரு... அவர் வீட்ல தங்க இடம் கொடுத்திருக்காரு... சாப்பாடு போடுறாரு... அவர் இடத்துல வேற யாராவது இருந்திருந்தா, நிச்சயம் அப்படி எல்லாம் செஞ்சிருக்கவே மாட்டாங்க. அவர் ரொம்ப நல்லவர் அத்தை" மென்று விழுங்கினாள் மீரா.

ஜானகியின் கண்கள் கலங்கின. சர்க்கரைப்பாகில் தொய்த்து எடுக்கப்பட்ட மீராவின் வார்த்தைகளுக்கு என்ன கூறுவது என்று அவருக்கு தெரியவில்லை.

"அத்தை..."

"ஆங்...?" அவருக்கு தொண்டையை அடைத்தது.

"என்ன ஆச்சு அத்தை?" 

"நீ ரொம்ப நல்லா இருக்கணும் மீரா... உனக்கு கடவுள் எல்லா சந்தோஷத்தையும் தரட்டும்"

"தேங்க்ஸ் அத்தை" புன்னகைத்தாள் மீரா.

"ஆனா நான் சொன்னதை நிச்சயம் நீ மனசுல வச்சுக்கோ. அதை உடனே உன்னால் செய்ய முடியாது. ஆனா மூணு மாசத்துக்கு பிறகும், உங்க உறவில் எந்த முன்னேற்றமும் ஏற்படலைனா, நிச்சயம் நான் சொன்னதை பத்தி நீ யோசிக்கணும்"

"ப்ளீஸ் அத்தை..."

"எனக்காக செய்ய மாட்டியா?"

"சரி, மூணு மாசத்துக்கு பிறகு நான் அதை பத்தி யோசிக்கிறேன்"

"நான் இப்போ உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறதால இப்படி பேசுறன்னு நினைக்காதே. இதை நான் நிச்சயம் மறக்க மாட்டேன். மூணு மாசத்துக்கு பிறகு நான் மும்பைக்கு வருவேன். அப்போ உண்மையை நீ என்கிட்ட இருந்து மறைக்க முடியாது" எச்சரித்தார் ஜானகி.

"அவருக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நீங்க தானே ஆசைப்பட்டீங்க?"

"ஆமாம். ஆசைப்பட்டேன். புருஷன் பொண்டாட்டிகுள்ள இருக்கிற எந்த பிரச்சனையா இருந்தாலும், அது மூணாவது மனுஷங்க காதுக்கு எட்டாத வரைக்கும் தான் அதுக்கு மரியாதை. எப்போ அவன் அதை வெளியில கொண்டுவர தயங்கலையோ, அவன் இந்த உறவுக்கு ஒரு சான்ஸ் கொடுப்பான்னு எனக்கு தோணல. அப்படி இருக்கும் போது, நீ அவன் கூடவே இருன்னு உன்னை நான் கேட்கிறதுல என்ன நியாயம் இருக்கு? யார் உதவியும் இல்லாம, சொந்தக்காலில் நிற்கிற எல்லா தகுதியும் உனக்கு இருக்கு. உன்னோட ஒர்த் என்னன்னு தெரிஞ்சுக்கோ மீரா"

அவர் பேசுவதை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தாள் மீரா.

"உன்னை அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சதுக்கு பிறகு, நான் இப்படி பேசக்கூடாது தான். ஆனா நான் சுயநலவாதியா இருக்க விரும்பல மீரா. நீ ரொம்ப அழகா இருக்க... உனக்கு நல்ல வேலை கிடைச்சிருக்கு... உனக்கு சான்ஸ் கொடுக்க விரும்பாத ஒருத்தனுக்கு எதுக்காக உன்னோட வாழ்க்கையை நீ வீணாக்கனும்?"

"ரிலாக்ஸ் அத்தை... நீங்க உங்களை கொஞ்சம் அமைதிப் படுத்திக்கிறது  நல்லது"

"நீயும் உன்னை அமைதிபடுத்திக்கிட்டு தெளிஞ்ச மனசோட நான் சொன்னதை அலசி ஆராய்ஞ்சு பாரு. பாசிட்டிவ் பக்கத்தை மட்டும் பாக்காத. நெகட்டிவ் பக்கத்தையும் பாரு. அதுக்கப்பறம் முடிவு பண்ணு"

"ம்ம்ம்"

"நல்லா சாப்பிட்டு, உடம்பை பார்த்துக்கோ"

"சரிங்க அத்தை"

"பை"

அவர்கள் அழைப்பை துண்டித்துக் கொண்டார்கள். ஜானகியை குற்ற உணர்ச்சி கொன்றது. இப்படி எல்லாம் மீராவிடம் பேச அவருக்கும் கூட விருப்பமில்லை தான். ஆனால் அவர் இப்படி பேசினால் தான், மீரா தன் நடவடிக்கையில் மாற்றத்தை கொண்டு வருவாள். அவளது நடவடிக்கையில் ஏற்படும் மாற்றம், நிச்சயம் முகுந்தனை அசைத்து பார்க்கும். ஏனென்றால், தன் விருப்பப்படி நடக்கும் எவருடைய அருமை பெருமைகளையும் மனிதர்கள் மதிப்பதில்லை. அவர்கள் அப்படி நடந்துகொள்வதை நிறுத்தும் போது தான், தான் இழந்தது என்ன என்பது புரிய வரும். முகுந்தனின் விஷயத்தில் ஜானகி எதிர்பார்த்ததும் அதை தான். அவர் யூகம் தவறில்லை. அவர் எதிர்பார்த்தது தான் முகுந்தன் விஷயத்திலும் நடக்கப் போகிறது.

அதேநேரம், மீரா தன்னை கையால் ஆகாதவளாய் உணர்ந்தாள். தன்னை திருப்பி அனுப்பி விட வேண்டும் என்ற முகுந்தனது விருப்பத்தை கேட்டு அவள் உடைந்து தான் போனாள். அவள் அங்கு இருப்பதில் அவனுக்கு விருப்பமில்லை என்று அவளுக்கு தெரியும் தான். ஆனால் அதை ஜானகி வரை அவன் எடுத்து செல்வான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. ஜானகி கூறுவது தவறில்லை. கணவன் மனைவியின் பிரச்சனை, அவர்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும். எதற்காக முகுந்தன் அவள் அங்கிருந்து செல்ல வேண்டும் என்று நினைக்கிறான்? அவள் தான் அவனை எந்த தொந்தரவும் செய்வதில்லையே...? அவனுக்கு அவளைப் பிடிக்கவில்லை என்று அவளுக்கு தெரியும். ஆனால் காலம் செல்லச் செல்ல, அவன் அவளை புரிந்து கொள்வான் என்று அவள் எதிர்பார்த்தாள். இப்பொழுது அவளுக்கு ஏமாற்றமாய் போனது. அவள் அவனிடமிருந்து அளவுக்கு அதிகமாக எதிர்பார்த்து விட்டாளோ? அவன் ஜானகியை கடிந்து கொண்டிருக்க வேண்டும். அதனால் தான் அவர் அவ்வளவு வேதனையுடன் பேசினார். அவர் கூறுவதும் ஒரு விதத்தில் சரிதான். அவள் எல்லாவற்றையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். ஒருவேளை, முகுந்தன் அவளை ஏற்றுக் கொள்ளவே இல்லை என்றால் என்ன செய்வது? அவன் அவளை ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவள் மறுமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்பது என்னவோ நிச்சயம். ஆனால் அதற்காக அவள் ரொம்பவே இறங்கிப் போவதும் தேவையில்லாதது தானே...! அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதை அவள் தீர்மானித்துக் கொண்டாள். ஒருவேளை, அவள் தன் வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்று முகுந்தன் விரும்பினால், அதற்கான முயற்சியை அவன் செய்வான். அவன் எந்த விருப்பமும் காட்டாவிட்டால், அவனுடன் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் மாமியாருக்கும் மருமகளுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அவர்களுக்குள் நிகழ்ந்த அந்த உரையாடல், முகுந்தனின் மனதில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தப் போகிறது என்று...!

முகுந்தனின் அலைபேசியுடன் வந்த மீரா, அவன் வரவேற்பறையில் அமர்ந்து, தொலைக்காட்சியில் செய்தியை பார்த்துக் கொண்டிருப்பதை கண்டாள். அவனது கைபேசியை அவனுக்கு முன்னால் இருந்த டீப்பாயின் மீது வைத்துவிட்டு, ஒன்றும் கூறாமல் அங்கிருந்து நடந்தாள். அவள் அவனை திரும்பி கூட பார்க்கவில்லை. அது அவனது தலைக்குள் அலாரத்தை அடித்தது. கைபேசியை எடுத்துக்கொண்டு தன் அறைக்கு  ஓடினான்.

தனது அலைபேசியை இயர்ஃபோனுடன் இணைத்து, அவர்களது உரையாடலை கேட்டான். அவனது கோபம் எல்லையை கடந்தது.

அவன் செய்யச் சொன்னது என்ன? அவனது அம்மா செய்து வைத்திருப்பது என்ன? மீரா ஒப்புக்கொள்கிறாளா இல்லையா என்று பார்ப்பதற்காக, அவளை மும்பையில் இருந்து தானே போகச் சொல்லி சொல்ல சொன்னான்? தன் கையில் ஒரு பலூன் கிடைத்தது என்பதற்காக, அதை வெடித்து விடும் அளவிற்கு இப்படியா ஊதி வைப்பார் அவனது அம்மா? அவனது மனைவியை வேறொரு திருமணம் செய்து கொள்ளச் சொல்லி எப்படி அவர் கேட்கலாம்? மீரா எவ்வளவு தெளிவாக பேசுகிறாள்? அவளே அவனுக்கு அவகாசம் கொடுக்க தயாராக இருக்கும் போது, அவனது அம்மாவிற்கு என்ன வந்தது?  அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால், அவர்களது உறவில் முன்னேற்றத்தை காட்ட அவனுடைய அம்மா கொடுக்கும் கால அவகாசமோ வெறும் மூன்றே மாதம்...! மீராவின் குரலில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்தான் முகுந்தன். அவளுடைய முடிவு என்னவாக இருக்கும்? அவளை காதலிக்கும், மதிக்கும் வேறொருவரை திருமணம் செய்து கொள்வாளோ? அவனுக்கு பதற்றமாய் இருந்தது. ஏனென்றால் அவளுக்கு அந்த அறிவுரையை வழங்கியது அவனுடைய அம்மா. அவனுக்கு ஜானகியின் மீது கடும் கோபம் வந்தது. என்ன அம்மா இவர்? எந்த அம்மா, தன் மருமகளிடம் தன் மகனை விட்டுவிட்டு வேறு ஒருவரை மணந்து கொள் என்று கூறுவார்? அவனை விட்டுவிட்டு அவள் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வாளா? இல்லை... மாட்டாள்... அவள் அவனை மிகவும் காதலிக்கிறாள். அவனின்றி, மற்ற ஆண்களுடன் அவள் தனியாக உணவருந்த கூட விரும்பவில்லை. அதனால் தான் அவனையும் அழைக்குமாறு வாசுதேவனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாள். அப்படி இருக்கும் போது, அவள் இன்னொருவரை மணக்க நினைப்பாளா? மீராவை போன்ற குணம் உள்ள பெண் அப்படி நிச்சயம் நினைக்க மாட்டாள்.

முகுந்தனின் பதற்றம், கோபமாய் உருவெடுத்தது. அவனது கோபம் முழுவதும் அவனது அம்மாவின் மீது தான். அவனுக்கு விருப்பமில்லாமல் வலுக்கட்டாயமாய் திருமணம் செய்து வைத்து விட்டு, இப்போது அவனது மனைவி அவனை விட்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்...! என்ன முட்டாள்தனம் இது?

அந்த நேரம் பார்த்து, அவனுக்கு ஜானகியிடமிருந்து அழைப்பு வந்தது. தன் பற்களை நரநரவெனக் கடித்தான் முகுந்தன். எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த அழைப்பை ஏற்ற அவன், ஜானகி எதுவும் கூறும் முன்,

"இப்போ எதுக்காக எனக்கு ஃபோன் பண்ணிங்க? நீங்க எவ்வளவு நல்ல வேலை செஞ்சு வச்சிருக்கீங்கன்னு என்கிட்ட சொல்றதுக்காகவா?" சீறினான் அவன்.

தொடரும்...

Продолжить чтение

Вам также понравится

11.1K 329 33
இது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்
10.3K 339 22
ஆயிரம் அறிவுரைகள், ஆதரவு கரங்கள் நீண்டாலும் காதலாய் அவன் பார்க்கும் அந்த ஒரு பார்வைக்காக ஏங்கி தவித்தவள் கண்ணீர் கன்னத்தை தொட, அவள் கணவன் கையை கொஞ்சம...
Short Stories Anjali

Любовные романы

90.4K 7.6K 108
It's like a short story. There will not be any further parts. It's just a scenario based short story. Let me know your comments.
21.7K 867 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...