தனிமையிலே இனிமை காண முடியுமா...

Av NiranjanaNepol

58.9K 4.1K 526

தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேற... Mer

1 திருமணம்
2 இழுபறி ஆட்டம்
3 இது தான் நான்
4 கடிதம்
5 முகுந்தனின் நண்பர்கள்
6 நஞ்சான உணவு
7 தேவதை
8 நேர்முகத் தேர்வு
9 பதில்
10 இனம் புரியா உணர்வு
12 கேள்வி
13 தான் ஆடாவிட்டாலும்
14 விசித்திர எண்ணம்
15 முகுந்தனன் கோபம்
16 மாற்றம்
17 கணவனின் மனோநிலை
18 தொலைந்த நிம்மதி
19 முதல் அணைப்பு
20 உள்ளெழுச்சி
21 தெளிவு
22 கோபக்கார கணவன்
23 காதலா?
24 நண்பர்களின் காதல்
25 திருமணமானவள்
26 முகுந்தனின் செயல்
27 நிச்சயதார்த்தம்
28 முகுந்தனின் நெருக்கம்
29 தவறான கணிப்பு
30 தாம்பத்தியம்
31 முதல் உரையாடல்
32 தலைகீழ் மாற்றம்
33 என் மனைவி
34 இது நிரந்தரமா?
35 சொன்னபடியே
36 உணர்ச்சியா?
37 முகுந்தனின் அறையில்
38 உண்மை நிலை
39 உரையாடல்
40 காதலிக்கிறேன்
41 மாற்றம் ஒன்றே மாறாதது
42 அபாயம்
43 கொண்டாட்டம்
44 பொறாமை
45 முகுந்தனின் திட்டம்
46 இன்ப அதிர்ச்சி
47 சென்னையில்...
48 ஆர்வம்
49 மூக்குடைப்பு
50 மன்னிப்பு
51 யார் அவள்?
52 மர்ம மனிதன்
53 யார் அவன்?
54 உடைந்த மூக்கு
57 செல்ல சண்டை
58 எவ்வளவு முக்கியம்...
59 மன்னிப்பு
60 மீராவின் உதவி
61 மூன்றாவது நபர்
62 சந்தேகம்
63 சம்பவம்
64 குழப்பம்
65 பொறி
66 தண்டனை
67 சுவற்றில் எறிந்த பந்து
68 விருந்தாளிகள்
69 விருந்தாளிகளா, எதிரிகளா?
70 முகுந்தனின் திட்டம்
71 உற்ற துணை
இறுதிப் பகுதி

11 மீராவின் பார்வையில்...

778 63 6
Av NiranjanaNepol

11 மீராவின் பார்வையில்...

தன் மனைவியின் வருகையால் கடுமையான சங்கடத்திற்கு ஆளானான் முகுந்தன். வாசுவிற்கு அவளை பிடித்திருக்கிறது. நந்தாவிற்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அவள் தங்கள் அணியில் சீக்கிரமே இடம்பிடிப்பாள்  என்று ஜெகதீஷிடம் கூறினான் வாசுதேவன். அவன் கூறியது போல் மீரா அவர்கள் அணியில் இடம் பிடித்து விடுவாளா? அவள் நேர்முகத் தேர்வில் அளித்த பதிலை வைத்து பார்க்கும் போது, ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாக புரிகிறது. இந்த வேலை எந்த அளவிற்கு அவளுக்கு முக்கியமோ, அது போலவே, அவளது கணவனையும் முக்கியமாக கருதுகிறாள். தன் கணவனுக்கு உண்மையானவளாக இருப்பேன் என்று அவள் கூறினாள். இவர்களுடன் அவள் இணைந்த பிறகும் அவளுடைய கணவனுக்கு அவள் உண்மையாக இருப்பாளா? அப்படி இருக்கவும் முடியுமா? அவள் மனம் மாற நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை, அவள் வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டு, *அந்த கணவனுக்கு* அவள் உண்மையாக இருக்க நினைக்கலாம் அல்லவா? இவன் தான் அவளுக்கு விவாகரத்து அளிக்கவும் தயார் என்று கூறி விட்டானே...! ஒருவேளை அவள் அவனிடம் விவாகரத்து கேட்பாளோ? மதியஉணவு இடைவேளையின் போது தங்களுக்குள் விவாதிக்க, மிகவும் சுவாரசியமான தலைப்பு இருக்கிறது என்று வாசுதேவன் ஜெகதீஷிடம் கூறினானே...!  முகுந்தனுக்கு தெரியும், அவன் கூறிய அந்த சுவாரசியமான தலைப்பு அவனது மனைவி தான் என்பதும், அவள் நேர்முகத் தேர்வில் அளித்த பதிலும் தான் என்பதும். அவர்கள் மீராவைப் பற்றி என்ன பேசப் போகிறார்கள்? அவனது பாழாய் போன மனம், ஏன் மீராவை சுற்றி வருகிறது என்று அவனுக்கு புரியவில்லை.

.......

மறுபக்கம் மீராவுக்கு பயிற்சி அளிக்க தொடங்கி விட்டான் நந்தகோபால். *தேவதை* விஷயத்திற்கு அப்பாற்பட்டு, அவனுக்கு மீராவை ரொம்பவே பிடித்திருந்தது. அவளது புத்தி கூர்மையையும், எந்த ஒரு விஷயத்தையும் அவள் பார்க்கும் கண்ணோட்டமும், அவளிடம் இருந்த பொறுமையும், மற்றவர் மீது காட்டும் அக்கறையும், அனைத்தும் அவனுக்கு பிடித்திருந்தது. சீக்கிரமே, அவள் தேவதை தான் என்ற முடிவுக்கு அவன் வந்து விட்டான்.

கவனிக்கும் திறனோடு, கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இருந்ததால், அவன் கற்றுக் கொடுத்த விஷயங்களை கற்பூரம் போல் கப்பென்று பற்றிக் கொண்டாள் மீரா.

"உங்களுக்கு மூணு நாள் ட்ரெய்னிங்கே தேவையில்லனு நினைக்கிறேன். ஆனா அது நம்ம கம்பெனியோட ரூல்" என்றான் நந்தகோபால், மீராவுடன் பழக  அவனுக்கு கிடைத்த அந்த மூன்று நாள் சந்தர்ப்பத்தை நிறுவ விட மனமில்லாமல்.

"இல்ல நந்தா, வேலையை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, எல்லாத்தையும் ஆரம்பத்திலேயே நல்லா கத்துக்கணும்னு நான் நினைக்கிறேன்"

"நீங்க ரொம்ப சின்சியர்..."

"தேங்க்ஸ்"

"நீங்க, இப்படித்தான் வாசுவோட ஷெட்யூலை மெயின்டைன் பண்ணனும்"

"சரி"

"உங்களுக்கு ஏதாவது டவுட் இருக்கா?"

"இல்ல"

"சரி, போய் லன்ச் சாப்பிட்டுட்டு வாங்க"

"சரி "

"ஒரு நிமிஷம் இருங்க" என்று அவனது கைபேசியை எடுத்து யாருக்கோ ஃபோன் செய்து,

"உடனே பிஏ கேபினுக்கு வாங்க" என்றான்.

அடுத்த சில நொடிகளில் ஒரு பெண் அங்கு வந்தாள்.

"ஹாய் நந்து, எப்படி இருக்கீங்க?" என்று அவள் தமிழில் கேட்டாள்.

மும்பையில் இவ்வளவு தமிழர்கள் இருக்கிறார்களா என்று வியந்தாள் மீரா.

"நல்லா இருக்கேன். உங்க ஹாலிடேஸ் எப்படி போச்சு?"

"அதை மட்டும் கேட்காதீங்க. எங்க அம்மா என்னை காசிக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க" என்றாள் அலுப்புடன்.

நந்தகோபால் சிரித்தபடி,

"இவங்க வைஷ்ணவி. உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா அவங்க கிட்ட கேட்கலாம்" என்றான் மீராவிடம்.

வைஷ்ணவியை பார்த்து புன்னகைத்தாள் மீரா.

"வைஷ்ணவி, மீராவை பார்த்துக்கோங்க."

"ஹாய் மீரா" என்று அவளை நோக்கி தன் கையை நீட்டினாள் வைஷ்ணவி.

இருவரும் கைகுலுக்கி  கொண்டார்கள். அங்கிருந்து சென்றான் நந்தகோபால்.

"வாங்க மீரா, கேன்டினுக்கு போகலாம்" என்றாள் வைஷ்ணவி.

"நீங்க லஞ்ச் கொண்டு வரலையா?" என்றாள் மீரா.

"நான் கொண்டு வந்திருக்கேன். நம்ம ஷேர் பண்ணிக்கலாம் வாங்க"

"பரவாயில்லை வைஷ்ணவி. நான் கேன்டின்ல ஏதாவது வாங்கிக்கிறேன்"

"பயப்படாதீங்க மீரா, எங்க அம்மா நல்லாவே சமைப்பாங்க" என்றாள் கிண்டலாய்.

சிரித்தபடி அவளுடன் நடந்தாள் மீரா. அப்போது தனது அறையில் இருந்து வெளியே வந்த அவளது கணவனை பார்த்த மீராவின் கால்கள் சற்றே நின்றது. முகுந்தனும் அவளை பார்த்து சில நொடி நின்றான்.

மீரா வைஷ்ணவியுடன் கேன்டினை நோக்கி செல்ல, வாசுதேவனின் அறையை நோக்கி நடந்தான் முகுந்தன். ஏற்கனவே அங்கு ஜெகதீஷும், நந்தகோபாலும் இருந்தார்கள். அவனுக்கு உள்ளே செல்ல வேண்டும் என்று தான் எண்ணம். ஆனால் இவனை பார்த்தவுடன், அவர்கள் மீராவை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு, அர்த்தமில்லாமல் இவனை கிண்டல் செய்ய தொடங்கி விடுவார்கள். அதனால் வெளியில் இருந்தபடியே அவர்கள் பேசுவதை கேட்க்க முடிவு செய்தான். அவன் எண்ணியது சரி தான். அவர்கள் மீராவை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"நெஜமாவா வாசு சொல்ற?" என்றான் ஜெகதீஷ்.

"ஆமாம் ஜகா, நான் ஒரு நிமிஷம் திகைச்சி போயிட்டேன். செய்யுற வேலையையும் கல்யாண வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பேச முடியும்னு நான் நினைச்சு கூட பாக்கல. அவங்க அதை செஞ்சாங்க"

"அப்படின்னா என்ன அர்த்தம்? அவங்க தன்னோட கல்யாண வாழ்க்கையையும், புருஷனையும் ரொம்ப மதிக்கிறாங்கன்னு அர்த்தம். நான் சொல்றது சரிதானே?" என்றான் நந்தா.

"ஆமாம். எல்லாத்தையும் அவங்க வித்தியாசமான கண்ணோட்டத்துல பார்க்கிறாங்க" என்றான் வாசுதேவன்.

"அதை நானும் இன்னைக்கு கண்கூடா பார்த்தேன்" என்றான் நந்தகோபால்.

"அப்படியா?" என்றான் வாசுதேவன்.

"ஆமாம். யாராலயும் செய்ய முடியாத ஒரு விஷயத்தை அவங்க செஞ்சாங்க" என்று சிரித்தான் நந்தகோபால்.

வாசுதேவனையும், ஜெகதீஷையும் விட, அவள் என்ன செய்தாள் என்று தெரிந்து கொள்ள முகுந்தன் தான் அதிக ஆர்வம் கொண்டான்.

"நம்ம தனிமை விரும்பிக்கு அவங்க சப்போர்ட் பண்ணாங்க" என்றான் நந்தகோபால்.

"யாரை சொல்ற? முகுந்தனையா?" என்றான் ஜெகதீஷ் முகத்தை சுருக்கி.

"ஆமாம்"

முகுந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. மீரா அவனுக்கு சப்போர்ட் செய்தாளா? எதற்காக? ஏன்?

"அவங்களுக்கு முகுந்தனை பத்தி எப்படி தெரியும்?" என்றான் ஜெகதீஷ்.

"நான் தான் சொன்னேன்" என்றான் நந்தகோபால்.

"எதுக்காக அவனைப் பத்தி அவங்க கிட்ட நீ பேசுன?"

"அவங்களும் முகுந்தன் மாதிரியே பரேலிலிருந்து தான் வராங்க"

"அப்படியா?"

"ஆமாம். அதனால தான் நான் அவங்க கிட்ட அவனைப் பத்தி சொன்னேன். அவங்க பார்க்க ரொம்ப நல்லவங்களா தெரியுறாங்க. தேவையில்லாம அவங்க அவன்கிட்ட ஏதாவது பேச முயற்சி பண்ணி, காயப்பட வேண்டாம்னு தான் அவனைப் பத்தி அவங்க கிட்ட சொன்னேன். நமக்கு தான் முகுந்தனை பத்தி நல்லா தெரியுமே"

முகுந்தனுக்கு தொண்டையை அடைப்பது போல் இருந்தது.

"நீ சொல்றது ஒன்னும் தப்பு இல்ல. முகுந்தன் யாரையும் காயப்படுத்த தயங்கவே மாட்டான். ஸ்ரேயாவை தான் நம்ம பாக்குறோமே..."

"ஆனா, மீரா என்னை ரொம்ப ஆச்சரியப்பட வச்சாங்க. நான் முகுந்தனை டங்குன்னு கூப்பிட்டதை பார்த்து, அதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டாங்க. அவனோட வாழ்க்கையை மாதிரியே அவன் பெயருக்கும் அர்த்தம் இல்லைனு சொன்னேன். அதுக்கு அவங்க, ஒவ்வொருத்தருக்கும் விருப்பங்கள் மாறுபடும். அவர் மத்தவங்க கிட்ட இருந்து மாறுபட்டு இருக்காருன்னு சொன்னாங்க"

"அப்படியா?" என்று புருவம் உயர்த்தினான் வாசுதேவன்.

"அது மட்டும் இல்ல நம்ம எல்லாரும் ரொம்ப காமனானவங்க. நம்ம ஃப்ரெண்ட்ஸ் கூட இருக்கணும், சினிமா பார்க்கணும், மத்தவங்களோட காலத்தை கழிக்கணும்னு நினைப்போம். அதே மாதிரி அவருக்கு தனியாய் இருக்கிறது பிடிச்சிருக்கு. அவரை மாதிரி நம்ம இல்லாத வரைக்கும், அவருக்கு ஏன் அது பிடிக்குது நம்மால சொல்ல முடியாது. அதனால அவரோட வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லைன்னு சொல்லாதீங்க. எல்லாரும் ஒரு அர்த்தத்தோட தான் வாழறோம்னு சொன்னாங்க" என்றான் நந்தகோபால் மலைப்புடன்.

அதைக் கேட்ட முகுந்தனின் கண்கள் சிரித்தன. இனம் புரியாத மகிழ்ச்சி அவன் உள்ளத்தை ஆடக்கொண்டது. அவளை தன் மனைவியாக ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்று கூறிவிட்ட பிறகும், அவள் அவனைப் பற்றி தவறாய் பேசவில்லை. உண்மையிலேயே அந்த பெண்ணிடம் நல்ல குணங்கள் இருக்கிறது என்று நினைத்தபடி அந்த இடத்தை விட்டு புன்னகையுடன் அகன்றான் முகுந்தன்.

"அவங்க ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான கேரக்டரா இருக்காங்க இல்ல?" என்றான் ஜெகதீஷ்.

"நான் அதை தானே சொன்னேன்..." என்றான் வாசுதேவன்.

இதற்கிடையில்,

வைஷ்ணவியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் மீரா.

"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மீரா" என்றாள் வைஷ்ணவி.

"நீங்களும் தான்"

"பொய் சொல்லாதீங்க"

"நான் பொய் சொல்லல. உங்க ரெண்டு கன்னத்திலேயும் விழுற குழி, உங்களை ரொம்ப அழகா காட்டுது" என்று கூற, மனம்மகிழ்ந்த வைஷ்ணவி,

"இருக்கலாம்... ஆனா எல்லாரோட கண்ணும் உங்க மேல தான் இருக்கு" என்றாள்.

"நீங்க எங்கிருந்து வரீங்க வைஷ்ணவி?"

அவள் பேச்சை மாற்றுவதை கவனித்த வைஷ்ணவி புன்னகைத்தாள்.

"நான் பைக்குலாவில் இருந்து வரேன்"

"நான் பரேல்... "

"அப்படியா? நம்ம மேனேஜர் கூட அங்கிருந்து தான் வரார்னு கேள்விப்பட்டேன்"

"ஓ... அவர் உங்க கிட்ட சொல்லலையா..." என்றாள் வேண்டுமென்றே.

"யாரு? அவரா? அட போங்க" என்றாள் வெறுப்புடன்.

"ஏன், என்ன ஆச்சு?"

"அவர் வாயை திறந்து பேசுறதே அதிசயம். யார்கிட்டயும் பேசவே மாட்டாரு. இந்த கம்பெனியில் வேலை செய்கிறவங்க, அவர் கூட சேர்ந்து வேலை செய்றதை தான் ரொம்ப கொடுமையான தண்டனைன்னு நினைப்பாங்க. அப்படி ஒரு சிடுமூஞ்சி"

"யார்கிட்டயுமே பேச மாட்டாரா?"

"அவர் யார்கிட்டயும் பேச விரும்ப மாட்டாரு. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?"

"என்ன?"

அவளை தன்னருகில் வருமாறு சைகை செய்தாள் வைஷ்ணவி. அவளை நோக்கி நகர்ந்தாள் மீரா.

"ஒரு பொண்ணு அவரை ரொம்ப டீப்பா லவ் பண்றா"

"என்ன்னனது???" என்று தன்னை மறந்து அதிர்ந்தாள் மீரா.

"இந்த மாதிரி ஒருத்தரை, ஒரு பொண்ணு காதலிக்கிறது தெரிஞ்சா, எல்லாருக்கும் உங்களை மாதிரி தான் அதிர்ச்சியாய் இருக்கும்"

மீராவின் இதயத்துடிப்பு தாறுமாறாய் எகிறியது. முகுந்தனுக்கு ஒரு காதல் கதை இருக்கிறதா? இதனால் தான் அவன் அவளை ஒதுக்கி வைக்கிறானோ? அவளது இதயத்தை பயம் இறுக்கிப்பிடித்தது.

"யார் அந்த பொண்ணு?" என்றாள் தனது பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல்.

"ஸ்ரேயா" என்றபடி இங்கும் அங்கும் தேடினாள் வைஷ்ணவி.

அவளது பார்வை ஸ்ரேயாவின் மீது பதிந்தது.

"அதோ அந்த பொண்ணு தான்" என்றாள்.

ஸ்ரேயா தங்களை நோக்கி வருவதை கண்டாள் மீரா. தன் கணவனை காதலிக்கும் அந்த பெண்ணை பார்த்தவுடன் தனக்குள் ஏதோ விசித்திரமாய் உணர்ந்தாள் மீரா. அவளைப் பார்ப்பதை தவிர்த்து, சாப்பிட துவங்கினாள்.

"ஹாய் ஸ்ரேயா" என்றாள் வைஷ்ணவி.

"ஹாய்" என்றாள் சோகமாய் ஸ்ரேயா.

"ஏன் உன்னோட குரல் உள்ள போகுது?" என்றாள் வைஷ்ணவி ஹிந்தியில்.

"முகுந்தனுக்கு கல்யாணம் ஆயிடுச்சாம்" என்றாள் சோகமாய்.

அதைக் கேட்ட மீரா, திடுக்கிட்டு தன் தலையை உயர்த்தினாள்.

"என்னது கல்யாணமா?" என்று அதிர்ந்தாள் வைஷ்ணவி.

"ஆமாம்..."

"வாய்ப்பே இல்ல. அந்த சிடுமூஞ்சியை யார் கல்யாணம் பண்ணிக்குவா? அவருக்கு கல்யாணம் ஆன விஷயம் உனக்கு எப்படி தெரியும்?"

"அவர் தான் சொன்னாரு"

"என்ன்னனது???? அவ.....ரே சொன்னாரா?"

"அவர் லீவுக்கு போயிட்டு திரும்பி வந்தபோ, அவங்க அம்மா எப்படி இருக்காங்கன்னு நான் கேட்டேன். அப்போ தான் அவருக்கு கல்யாணம் ஆகிட்டதாகவும், என்னோட டைமை வேஸ்ட் பண்ண வேண்டாமுன்னும் சொன்னாரு"

"நெஜமாவா சொல்ற?"

"ஆமாம். ஆனா அவர் சொன்னதை நான் நம்பல. அவருக்கு உடம்பு சரியில்லன்னு நேத்து அவர் ஆஃபீஸுக்கு வரல. அதனால இன்னைக்கு காலையில அவர் உடல் நிலையைப் பத்தி நான் விசாரிச்சேன். அதுக்கு அவரு, அவரோட மனைவி அவரை நல்லா கவனிச்சுக்கிட்டதாகவும், நான் அவரைப் பத்தி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லைன்னும் சொன்னாரு" 

தனது உள் உதட்டை கடித்து, புன்னகையை கட்டுபடுத்தினாள் மீரா. அவளுக்கு சந்தோஷத்தில் தாவி குதிக்க வேண்டும் என்று தோன்றியது. தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை முகுந்தன் வெளிப்படுத்தி விட்டான்... அதுவும் அவனை காதலிக்கும் ஒரு பெண்ணிடம்... அப்படி என்றால், அந்த பெண்ணின் மீது அவனுக்கு விருப்பமில்லை. அவளை தவிர்ப்பதற்காக தனக்கு திருமணமான விஷயத்தை கூட அவளிடம் கூறி விட்டிருக்கிறான்.

"என்னை பொறுத்த வரைக்கும், நீ அவர்கிட்ட இருந்து தப்பிச்சிட்ட. அவரை விட நல்லவன் உனக்கு கிடைப்பான். அவர் உன்னோட டைப் இல்ல. அதை புரிஞ்சுக்கோ. அவரை மறந்துட்டு வேற வேலையை பாரு" என்றாள் வைஷ்ணவி.

பெருமூச்சு விட்டாள் ஸ்ரேயா.

"இவங்க மீரா. வாசுவோட பிஏ"

"ஹாய்" என்றாள் வைஷ்ணவி.

"ஹாய்" புன்னகைத்தாள் மீரா.

"இவங்களும் பரேலிலிருந்து தான் வராங்க"

"பரேலில் எங்க இருக்கீங்க?" என்றாள் ஆர்வமாக ஸ்ரேயா.

"எனக்கு அந்த ஏரியா பேர் தெரியல" என்றாள் மீரா தயக்கத்துடன்.

"முகுந்தன் கூட அங்கிருந்து தான் வராரு. அவருக்கு உண்மையிலேயே கல்யாணம் ஆயிடுச்சான்னு தெரிஞ்சுக்கிட்டு எனக்கு சொல்ல முடியுமா?" என்றாள் ஸ்ரேயா.

சரி என்று மெல்ல தலையசைத்தாள் மீரா. அவளுக்கு ஸ்ரேயாவை பார்க்க பாவமாய் இருந்தது. காதல் எல்லோருக்கும் சமமான வலியை தானே தருகிறது?

கேன்டினுக்கு வந்த முகுந்தன், மீரா வைஷ்ணவியுடனும் ஸ்ரேயாவுடனும் இருப்பதை பார்த்தான். அவனுக்கு வயிற்றை கலக்குவது போல் இருந்தது. ஸ்ரேயா அவனை காதலிப்பது அங்கு பணிபுரியும் அனைவருக்கும் தெரியும். அவள் அவனை காதலிப்பது பற்றி மீராவிடம் கூறிவிட்டு இருப்பாளோ? ஸ்ரேயாவும், வைஷ்ணவியும் தோழிகள். ஒருவேளை அவர்கள் தன்னை பற்றி மீராவின் முன்னிலையில் பேசிக்கொண்டால் என்னவாகும்? மீரா அவனைத் தவறாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வது? அந்த எண்ணம் அவனை வாட்டி வதைத்தது.

தொடரும்...

Fortsett å les

You'll Also Like

283K 9K 38
#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.
117K 5.5K 25
பேரன்பின் உருவமாக அவள் வாழ்வில் நுழைபவன் அவன்..❤❤
27.3K 1.8K 34
முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக...
193K 5.1K 127
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...