💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙

By LEESAKCHERRY143

9.8K 1.3K 856

கோடிஸ்வரர் விஜயகுமாரின் புதல்வன் அமரன்.. அன்றாட உணவிற்காக கிடைத்த வேலையை நேர்மையுடன் பார்க்கும் நாயகி சித்ராம... More

Part..1
part 2
Part 3
part..4
part 5
பாகம் 6
பாகம் 7
பாகம் 8
பாகம் 9
பாகம் 10
பாகம் 11
பாகம் 12
பாகம் 13
பாகம் 14
பாகம் 15
பாகம் 16
பாகம் 17
பாகம் 18
பாகம் 19
பாகம் 20
பாகம் 21
பாகம் 22
பாகம் 23
பாகம்,24
பாகம் 25
பாகம் 26
பாகம் 27
பாகம் 28
பாகம் 29
பாகம் 30
பாகம் 31
பாகம் 32
பாகம் 33
பாகம் 34
பாகம் 35
பாகம் 36
பாகம் 37
பாகம் 38
பாகம் 39
பாகம் 40
பாகம் 41
பாகம் 42
பாகம் 43
பாகம் 44
பாகம் 46

பாகம் 45

145 26 14
By LEESAKCHERRY143

சித்ரா - இல்ல எனக்கு பணம் சொத்து சுகம் எதுவும் வேண்டாம்... என் அமராவை மட்டும் ஒன்னும் பண்ணிடாதீங்க....நான் என் குழந்தைகளுடன் இங்கே இருந்து போய்விடுகிறேன்...அமரன் என்னை காதலித்தை தவிர வேற எந்த பாவத்தையும் பண்ணல.... நான் போறேன்.....

என்று சொன்ன சித்ரா குழந்தை அழகியையும் அமராவதியையும் அழைத்துக் கொண்டு பயத்துடன் அந்த இடத்தை விட்டு நகர முயன்ற அவளின் கரங்களைப் பற்றிய

விஜயகுமார் - நில்லுமா எங்க போற

சித்ரா - இல்ல நான் இங்க வந்து இருக்கவே கூடாது... எனக்கு அப்போவே தெரியும் நான் இங்க வந்தா கண்டிப்பா ஏதோ ஒரு பிரச்சனை நடக்கும் என்று நான் யூகித்துக் கொண்டே இருந்தேன். என்னை மன்னிச்சிடுங்க அமரனை மட்டும் ஒன்னும் பண்ணிடாதீங்க என் இரண்டு குழந்தைகளை நான் தனியாக வளர்த்திடுவேன்...ஆனா தயவு செய்து அமரனை ஒன்னும் பண்ணிடாதீங்க அவனுக்கு இப்போ உங்களுடைய பாசம் தேவை உங்களுக்கும் அமரனுடைய அன்பும் அரவணைப்பும் தேவை நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க நான் போறேன்..

என்று சொன்ன சித்ரா மீண்டும் அந்த இடத்தில் இருந்து நகர பார்த்தவளை விஜயகுமார் தடுத்து நிறுத்தியவர்
கண்கள் கலங்கி....

விஜயகுமார் - போது ம்மா இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படியே ஓடிக்கிட்டே இருக்க போற..பல வருஷத்துக்கு முன்பு என் மகன் என்னையும் உன்னையும் தவிக்க விட்டுட்டு போனதற்கு நான்தான் காரணம்..... அவன் வாழ்க்கையில நடந்த எல்லா கசப்பான சம்பவங்களுக்கும் ஒரே காரணம் நான் தான்......இந்த சொத்து சுகம் அதிகாரம் ஆணவம் அகம்பாவம் இது எல்லாம் என்னை ஒரு மிருகனாக மாத்திடுது....... பெற்ற பிள்ளை கட்டின பொண்டாட்டி இவங்களுடைய காதல் அன்பு பாசம் இவை எதையும் உணர முடியாமல் நான் இது நாள் வரை அரக்கனாக இருந்தேன்......ஆனா எப்ப என்னோட மகன் என்னை விட்டு பிரிந்து போனானோ, எப்ப நான் படுத்த படுக்கையாக இருந்து ஒரு கிளாஸ் தண்ணி கூட ஒருவரின் உதவியோடு குடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதோ....அப்பதான் புரிஞ்சிகிட்டேன்... நம் வாழ்க்கையில பணத்தை மீறி எவ்வளவோ விஷயங்கள் இருக்கு...... என்னுடைய மனைவியை நான் என்னுடைய அதிகாரத்தால் அடிமைப்படுத்தி அவளை நான் துன்புறுத்தி இருக்கிறேன்..... ஆனால் இந்த பணம் அந்தஸ்து இது எதுவுமே என் மனைவிக்கு பெரிதாக படல.... அவள் காதலுக்கு முன்னாடி இது எல்லாமே தூசாக மாறிடுது...... அவளை பார்த்து மன்னிப்பு கேட்டு அவளை மறுபடியும் இங்கே அழைத்துக் கொண்டு வர வேண்டும் என்று தான் நினைத்து அன்று அவளுடைய வீட்டிற்கு போனேன்.......ஆனா என் சூழ்நிலை அங்கே ஏற்கனவே தீ விபத்தில் அவள் சாம்பலாகிய நிலையில் தான் கிடந்தாள்....என்னால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல் என் மகனை மட்டும் நான் தூக்கிக் கொண்டு வெளிநாட்டில் அவனை சிறை வைத்தேன்........காரணம் எங்கே என்னுடைய மகன் என்னை விட்டு பிரிந்து விடுவான் என்று எண்ணிதான்.......ஆனால் பணத்தைக் காட்டி அவனை நான் அடிமையாக்க நினைத்தேனே தவிர....அவன் மீது எனக்குள்ள பாசத்தை வெளிப்படுத்த தெரியாத கையாலாகாத ஒரு தந்தையாகத் தான் நானும் இருந்தேன்.... அவன் உன்னை விரும்பியது எனக்கு தெரியாது..... என் பணம் பதவி அந்தஸ்து இது எல்லாம் என்னை பார்வை இருந்தும் குருடனாக வளம் வர செய்தது...நான் படுத்த படுக்கையாக ஆனதும் என் உடன் பிறந்த சகோதரி மாதிரி இதோ ஜானகி தான் என்னை குழந்தை போல பாத்துகிட்டாங்க....தனிமை என்னை பல விஷயத்தை சிந்திக்க வைத்தது...
என் மனைவியின் நேர்மை என் மகனின் கோவம் இது எல்லாத்திலும் உள்ள நியாயத்தை என்னால உணர முடிந்தது....
ஆனா கண் இழந்த பின் சூர்ய நமஸ்காரம் செய்து பிரயோஜனம் இல்லைனு சொல்ற மாதிரி.. என் மகன் என்னை முழுசா வெறுத்த பின் நான் அவனை நெருங்க பயந்தேன்... அது தான் உண்மை.... அவன் இந்த உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும் அவனை தேடி பிடிக்க எனக்கு 24 மணி நேரம் போதுமானதாக இருந்து இருக்கும்.... ஆனா நான் அவனை தேடல...காரணம் அவன் என்னை வெறுத்து நான் இறந்தாக கருதி தான் என்னை விட்டு அவன் பிரிந்து சென்று இருக்கிறான் என்பதை நான் உணர்ந்து இருந்தேன்.....அதனால தான் நான் அவனை நெருங்க ஆசை படவில்லை... அவன் என் அன்பு மகன்... ஆனால் என்னால அவன் மீது உள்ள அன்பை வெளி படுத்த முடியவே இல்லை.... அவன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு நினைத்து தான் இதுநாள் வரை அவனை நான் தொல்லை தராமல் இருந்தேன்.... ஆனா சில நாட்களுக்கு முன்பு தான் ஜானகி என் மகன் வெளிநாட்டிலிருந்து இங்கே வந்த செய்தியையும், பல வருடங்களுக்கு முன்பு அவன் சித்ரா என்ற பெண்ணை காதலித்ததாகவும், என்னால் அவன் வாழ்க்கையில் இழந்த நிறைய இழப்பிற்கு காரணம் அவனின் பிறப்பு மட்டுமே என்று நினைத்தவன், அவன் காதலித்த பெண்ணையும் நட்டாத்தில் விட்டு,என்னையும் தவிக்க விட்டு வெளிநாட்டிற்கு சென்றுவிட்டான் என்று ஜானகி அம்மா சொன்னதும் என்னுடைய வேதனை இன்னும் அதிகமாக மாறியது.....மீண்டும் திரும்பி வந்தவன்
சித்ரா சூழ்நிலை கைதியாக 2 பிள்ளைகளுக்கு தாயாக இருந்தவள் மீது இன்றும் குறையாத காதலை வைத்திருக்கும் என் மகன் அமரனின் உன்னதமான காதலை உணர்ந்த நான் ஜானகி மூலமாக உன்னையும் இதோ என் இரண்டு பேத்திகளையும் இவர்களுடன் சேர்ந்து என் அன்பு மகனையும் இங்கே வர வைக்க ஏற்பாடு செய்தேன்..

சித்ரா - என்ன..... என்ன சொல்றீங்க நீங்க

விஜயகுமார் - ஆமாம்மா இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ சொன்ன பாரு பணம் என்பது உனக்கு முக்கியம் இல்லன்னு.....அந்த ஒரே ஒரு வார்த்தை உன் வாயிலிருந்து வரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த நாடகம் எல்லாமே...

சித்ரா - என்ன சொல்றிங்க

ஜானகி - ஆமா சித்ரா அதுக்கு தான் நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னேன்....அங்கு என்ன நடந்தாலும் நீ வாயையே திறக்காதுன்னு..

விஜயகுமார் - ஆமா மா சித்ரா.... இது எல்லாமே நாடகம் தான்...

ஜானகி - ஐயா.... அமரன் தம்பி பாவம்... ஏதோ கோபத்துல பேசிடுது....அமரன் தம்பியை மன்னிச்சு வெளியே வர சொல்லுங்க

விஜயக்குமார் - ஆமா எங்க என் மகன் என் மகனை வெளியே அழைச்சிட்டு வாங்க

என்று விஜயகுமார் குரல் கொடுக்க....கோபம் கொண்ட அமரன் கதவை எட்டி எட்டி உதைத்துக் கொண்டு இருந்தவனை இவர்கள் வெளியே அழைத்து வந்ததும் அமரன் கோபமாக விஜயகுமாரை நெருங்கிவன் அவரின் சட்டையை பிடிக்க போக...விஜயகுமார் சற்றும் தாமதிக்காமல் அமரனை கட்டி அணைத்தவர் அவன் முகம் முழுவதும் முத்தமழை பொழிய.... அமரன் உயிரற்ற உடலாக நின்றவனை பார்த்த விஜயகுமார் அவன் கரங்களை பற்றியவர்..

விஜயகுமார் - என்னை மன்னித்து விடுடா அமரா.... நான் பாவி டா.... தங்கமான என் மகனை கூட இருந்து வளர்க்க கொடுத்து வைக்காத பாவி நான்....

அமரன் - என்ன... என்ன இது புது நாடகம்....

விஜயகுமார் - நாடகம் எல்லாம் இல்ல டா அமரா.... என்னைக்கு நான் கை கால் செயல் இழந்து நடை பிணமாக வாழ்ந்தோனோ அன்னைக்கே எனக்கு உன் அம்மா கிட்ட போய்டணும் தோன்றி விட்டது...... ஆனால் நான் சாகுறதுக்குள்ள ஒரு முறை உன்னை நான் பாக்கணும்னு தான் இத்தனை காலம் காத்துக்கிட்டு இருந்தேன் அதனால தான் ஜானகி மூலியமாக உன்னை நான் நீ விரும்பிய பெண்ணுடன் இங்கே வர வைத்தேன்...

அமரன் - ஜானகி அம்மா இவரு என்ன சொல்றாரு

ஜானகி - உண்மைதான் அமரா நான் ஊர்ல உன்னை பார்த்துட்டு இங்கே வந்ததுமே உன் அப்பாவிடம் உன்னை பற்றி எல்லா விவரத்தையும் சொல்லிட்டேன்....ஆனா உன் அப்பா பரிபூரணமா குணம் ஆகுற பட்சத்தில் மட்டும் உன்னை மீண்டும் சந்திக்கனும்னு ஆசைப்பட்டார்....ஒருவேளை அவரால் குணமே ஆக முடியாது என்ற சூழ்நிலை வந்தால் உன்னை கடைசிவரை அவர் தொல்லை கொடுக்க வேண்டாம் என்று எண்ணினார்....உன் அம்மாவுடைய ஆசீர்வாதமா உன் அப்பா இன்னைக்கு பரிபூரணமா குணமாகிட்டார்....அதனால தான் அவருடைய கடைசி காலத்தை அவர் பெற்ற மகன் உன்னுடனும் நீ ஆசைப்பட்ட பெண் சித்ரா மற்றும் உங்க ரெண்டு பேரை நம்பி இருக்கும் இரண்டு குழந்தைகளுடன் இவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று முடிவெடுத்ததால் தான் நான் உன்னிடம் உடனே இங்கு உன்னை வர சொன்னேன்...

அமரன் - ஆனா இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இவரு கோவமா அதே பணக்கார திமிர்ல அகந்தையில பேசினாரே

விஜயகுமார் - உண்மைதான் அமரா...நான் உன்கிட்ட சும்மா விளையாடி பார்த்தேன்... இதோ சித்ரா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பணம் எல்லாம் வாழ்க்கை இல்ல என் அமரன் நல்லா இருந்தா போதும்ன்னு சொன்னா...அந்த ஒரு வார்த்தையிலேயே அவளுக்கு உன் மேல எவ்வளவு காதல் இருக்கு என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.... கிட்டதட்ட சித்ராவை பார்க்கும் பொழுது எனக்கும் என் சாமந்தி உடைய நினைவு தான் வருது..

அமராவதி - அம்மா இங்கே என்ன நடக்குது.....இந்த தாத்தா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நம்பியார் மாதிரி கண்ணை உருட்டி உருட்டி பேசினாரு....இப்ப என்ன எம்ஜிஆர் மாதிரி நம்மகிட்ட பாசமா பேசுறாரு

குரேஷி - இந்த கதையில நம்பியாரும் இவர்தான் எம்ஜிஆர் ம் இவர் தான்

அமராவதி - மாமா இவ்வளவு நேரம் நீங்க எங்க இருந்தீங்க.....இங்க எவ்வளவு பெரிய பிரச்சனை நடந்துச்சு உங்களை ஆளையே காணோமே

குரேஷி - நானு எல்லாத்தையும் தூர நின்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு தான் மா இருந்தேன்..

அமராவதி - ஏன் மாமா கொஞ்ச நாள் முன்னாடி எங்க அம்மாவ அமரன் சாரு விட்டுட்டு போகும்போதும் நீங்க வேடிக்கை தான் பார்த்துக்கிட்டு இருந்தீங்க....இப்போ இந்த தாத்தா என் அம்மாவையும் எங்களையும் திட்டுற மாதிரி நடிக்கும் பொழுதும் நீங்க வேடிக்கை தான் பார்த்துக்கிட்டு இருப்பீங்களா...

ஜானகி - குழந்தையா இருந்தாலும் சரியான நேரத்தில் சரியான கேள்வி கேட்கிறா... குரேஷி சொல்லுப்பா ஏன் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்த

குரேஷி - அப்படி இல்ல அம்மா... இங்க நடக்கிறது உண்மையா? பொய்யான்னு தெரியாத பட்சத்துல நான் ஒளிஞ்சிருந்து என்ன நடக்குதுன்னு பாத்தா தானே அடுத்த கட்ட நகர்வுல நான் ஏதாவது செய்ய முடியும்......அப்புறம் நானும் வீர வசனம் பேசிட்டு என்னையும் இவங்க பிடித்து உள்ள தூக்கி போட்டுட்டாங்கன்னா என்னை யாருமா காப்பாத்துறது...

ஜானகி - எல்லாரும் நல்லா படம் பார்த்து கெட்டுப் போய் இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.... சரி சரி அமரா நீ போய் உன் அப்பாகிட்ட பேசு.... ஐயா உங்க மகனை ஆசை தீர கட்டி தழுவி முத்தமிட்டு அவர்கிட்ட பாசத்தோட பேசுங்க நான் போய் சாப்பாடு ரெடி பண்றேன்..

சித்ரா - அம்மா இருங்க நானும் வரேன்

விஜயகுமார் - இருமா சித்ரா...எங்க போற நீ இங்கே இரு....ஜானகி எல்லாம் பார்த்துப்பாங்க

ஜானகி - அமராவதி நீயும் என் கூடவே வா நம்ம போயி சாப்பாடு செய்யலாமா

அமராவதி - சரி பாட்டி... அம்மா நான் ஜானகி பாட்டி கூட போயிட்டு வரேன்.. குரேஷி மாமா நீங்க அழகி பாப்பாவை பார்த்துக்கோங்க...

என்று சொன்ன அமராவதி ஜானகியுடன் சமையல் அறைக்குச் செல்ல...... அமரனுக்கு விஜயகுமார் பேசும் பேச்சிலும் அவர் காட்டும் அன்பிலும் முழுவதுமாக நம்பிக்கை வராமல் இருக்க....சித்ராவும் குழம்பிய மனநிலையில் இருந்தவளை பார்த்த விஜயகுமார்

சித்ரா என்கூட வாமா அமரா நீயும் வா

என்று விஜயகுமார் அழைக்க.....

அமரன் - எங்க வர சொல்றிங்க

விஜயகுமார் - அட வாப்பா...

என்று சொன்ன விஜயகுமார் சித்ராவையும் அமரனையும் ஒரு அறைக்குள் அழைத்துச் செல்ல...அந்த அறையினுள் சித்ரா தயங்கியப்படி சென்றவளை பார்த்த விஜயகுமார் சிரித்த முகத்துடன்.....

விஜயகுமார் - வாமா இதுதான் உன் அத்தை என் மனைவி இதோ அமரனின் அம்மாவும் நானும் வாழ்ந்த அறை இப்போ இந்த அறை மட்டும் தான் எனக்கு சொர்கம்....

சித்ரா - அமரா உன் அப்பா அழறாரு பாரு...

அமரன் - அப்பா....

விஜயகுமார் - போதும் பா... இந்த வார்த்தை போதும்..... இதுநாள் வர உனக்கும் எனக்கும் இருந்த எல்லா கருத்து வேறுபாடும் மறந்து இனிமே நம்ம ஹாப்பியா இருக்கனும்...

அமரன் - கண்டிப்பா அப்பா இனிமே நமக்குள்ள எந்த பிரிவும் வராது

விஜயகுமார் - இது போதும் ப்பா....

சித்ரா - சரி நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருங்க.. நான் வெளிய காத்து இருக்கேன்

விஜயகுமார் - இரு மா இரு... இன்னைக்கு இந்த குடும்பம் சேர்ந்து இருக்க நீ தான் காரணம்...

சித்ரா - ஐயோ அப்படி எல்லாம் இல்ல சார்.... அமரன்னுக்கு உங்க மேல பாசம் எல்லாம் இருக்கு.. ஆனா அவனோட தாழ்வு மனப்பான்மை அவனை யாரிடமும் அவன் பாசத்தை வெளி படுத்த விடாமல் கட்டி போட்டுடுது...

விஜயகுமார் - சரி சரி அதெல்லாம் இருக்கட்டும்... என்ன மா நீ பேச்சுக்கு பேச்சு என்னை sir ன்னு கூப்பிடுற....

சித்ரா - அது....வந்து...

விஜயகுமார் - இந்த வந்து போய்ன்னு எல்லாம் இல்ல.... இனிமே நீ என்னை மாமான்னு கூப்பிடனும் புரியுதா

சித்ரா - இல்ல sir

விஜயகுமார் - என்ன மறுபடியும் sir மோர்ன்னு கூப்பிடுற

சித்ரா - இல்ல அது...

விஜயகுமார் - என்ன பா அமரா இது.... நம்ம வீட்டுக்கு வந்த மருமக அவ புருஷனையும் வாடா போடான்னு சொல்றா... மாமனாரையும் sir ன்னு சொல்றா ... என்ன இதெல்லாம் சரி இல்லையே

அமரன் - அப்பா... சித்து என்னை எப்போவுமே அமரான்னு தான் கூப்பிடுவா... பட் உங்கள...

சித்ரா - இல்ல இல்ல நான் இனிமே உங்கள மாமானே கூப்பிடுறேன்

அமரன் - சூப்பர் ..... அப்புறம் என்ன ப்பா.... உங்க மருமக உங்கள மாமான்னு சொல்லிட்டா... நீங்க happy தானே...

விஜயகுமார் - ரொம்ப சந்தோஷம் ப்பா.... சரி நீங்க போய் கொஞ்ச நேரம் rest எடுங்க.....

அமரன் - அப்பா நீங்களும் rest எடுங்க..

சித்ரா - ஆமா மாமா நீங்க rest எடுங்க..

அமரன் - சித்து நீ வா... அம்மா எழுந்து இருப்பாங்க..

விஜயகுமார் - என்னது அம்மாவா என்னப்பா சொல்ற

அமரன் - ஆமா அப்பா...உங்களுக்கு விஷயம் தெரியாதா சித்ரா வயிற்றில் பிறந்த குழந்தை வேற யாரும் இல்ல நம்முடைய அம்மா தான்... என்னுடைய அம்மா சாமந்தி தான்... எனக்காக மறுபடியும் பிறந்து இருக்காங்க

சித்ரா - ஐயோ அமரா சும்மா இரு

விஜயகுமார் - என்னமா என் மகன் என்ன சொல்றான்..

சித்ரா - ஒன்னும் இல்ல மாமா... என் வயிற்றில் பிறந்த அழகி பாப்பாவை அமரன் அவனுடைய அம்மாவா நெனச்சு தான் பேசுவான் அத தான் சொல்றான்

விஜயகுமார் - என்னை மன்னிச்சிடு அமரா.....நீ இன்னைக்கு அம்மா இல்லாமல் இருப்பதற்கு நான்தான் காரணம்

அமரன் - அப்பா விடுங்க பழசை எல்லாம் பேசி என்ன ஆகப்போகுது....அழகி பாப்பா உடைய முகத்தை பார்த்தாலே நம் அம்மா ஞாபகம் தான் வரும்...நீங்க அழகி பாப்பாவ ஒரு முறை அம்மாவா நெனச்சு பாருங்க அடுத்த முறை அழகி பாப்பாவை நீங்க யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டீங்க..

விஜயகுமார் - அப்படியா...சரி அப்போ நான் என் பேத்திய சாயங்காலம் வந்து பாக்குறேன் இப்போ நீங்க போய் ரெஸ்ட் எடுங்க..

என்று விஜயகுமார் சொல்ல... சித்ராவும் அமரனும் விஜயகுமாரின் அறையில் இருந்து வெளியே செல்ல....

அமரன் - சித்ரா நீ என் கூட கொஞ்சம் வாயேன்....

சித்ரா - எங்க அழச்சிட்டு போற...

அமரன் - அட வானு சொல்றேன்ல

சித்ரா - அய்யோ அமரா குழந்தை உள்ள தூங்குறா

அமரன் - அட வா..

சித்ரா - இப்போ ஏன் உன் ரூமுக்கு அழைச்சிட்டு போற

அமரன் - ஏய் வாடி உள்ள....

என்று சொன்னவன் சித்ராவை அவன் அறைக்கு அழைத்துச் செல்ல..

அமரன் - வா சித்ரா உள்ள வா...

சித்ரா - என்ன அமரா இப்போ ஏன் என்னை இங்க அழைச்சிட்டு வந்த

அமரன் - இரு சொல்றேன்

சித்ரா - குழந்தை வேற தூங்குது அமரா

அமரன் - எனக்கு தெரியும் வா... அதான் ஜானகி அம்மா இருக்காங்க இல்ல அவுங்க பாத்துப்பாங்க நீ வா...

அமரன் விடப்பிட்டியாக சித்ராவை அவன் அறைக்குள் அழைத்து சென்றவன்... தன் அறையின் கதவை தாளிட...

சித்ரா - ஏய் ஏன் இப்போ கதவ சாத்துற

அமரன் - உஷ்..... இங்க வா...

அமரன் சித்ராவை அவன் அறையின் கட்டிலில் அமர வைத்தவன்... அவள் முன் மண்டியிட்டு அவள் கரங்களை பற்றியவன் கண்கள் கலங்க...

சித்ரா - என்ன அமரா... என்னாச்சு

அமரன் - நீ சந்தோஷமா இருக்கியா சித்ரா...

சித்ரா - என்ன

அமரன் - சிக்கிரமே நமக்கு கல்யாணம்.... ஆனா உன் முகத்துல அந்த ஒரு சந்தோஷமே இல்லாம இருக்கியே ஏன்

சித்ரா - அப்படி எல்லாம் இல்லையே....

அமரன் - உன் கழுத்துல தாலி கட்டுற வர... எனக்கு என் உயிர் என் கையிலேயே இருக்காது..

சித்ரா - ஒ... அப்ப உன் உயிர் உன் கையில தான் இருக்கா...

அமரன் - என்ன...

சித்ரா - நான் நினைச்சேன் உன் உயிர் என்கிட்ட தான் இருக்குன்னு

அமரன் - அதுவும் உண்மை தானே

சித்ரா - ம் ஆமா ஆமா உண்மை தான்...

அமரன் - ஏன் சித்ரா... என் அப்பா பேசுறது எல்லாம் உண்மையா இருக்குமா

சித்ரா - என்னடா சொல்ற

அமரன் - எனக்கு என்னமோ இப்போவும் முழுசா அவர நம்ப முடியல சித்ரா

சித்ரா - என்ன நம்ப முடியல

அமரன் - அவர் உண்மையாவே நம்ம கல்யாணத்தை நடத்த விடுவாரா

சித்ரா - அவர் தான் சொன்னாரே... இனிமே உன் சந்தோஷம் தான் அவரோட நிம்மதின்னு

அமரன் - ம் சொன்னார் தான் இருந்தாலும்

சித்ரா - அமரா.... ஒருவரை நம்பினால் அவுங்கள சந்தேக படாத.... அப்படி சந்தேக பட்டா அவரை நம்பாத...

அமரன் - அப்டி இல்ல....

சித்ரா - விடு அமரா... கெட்டதை நினைச்சு பயப்புடாத.... இனிமே எல்லாமே நன்மையா நடக்கும்னு நம்புவோம்

அமரன் - ம் நம்புவோம்

சித்ரா - சரி இதுக்கு தான் இங்க அழைச்சிட்டு வந்தியா...

அமரன் -

சித்ரா - சரி நகரு....

அமரன் - ஏய் இரு இரு எங்க போற...

சித்ரா - நேரம் ஆகுது அமரா பாப்பா எழுந்துடுவா

அமரன் - பாப்பா இப்போ எழ மாட்டாங்க... நீ கொஞ்ச நேரம் இங்கேயே இரு..

சித்ரா - இங்க இருந்து நான் என்ன பண்ண

அமரன் - சித்ரா நான் நிம்மதியா தூங்கி எத்தனை வருஷம் ஆச்சு தெரியுமா

சித்ரா - என்ன

அமரன் - எனக்கு நான் உன்கூட நிம்மதியா தூங்கணும்ன்னு ஆசை

சித்ரா - சீக்கிரமே என்கூட தூங்கலாம்... இப்போ நீ தனியா தூங்கு

அமரன் - இல்ல இல்ல... இன்னைக்கு நீயும் நானும் தூங்கலாம்..சீக்கிரமே நம்ம நாலு பேரும் ஒண்ணா தூங்கலாம்..

சித்ரா - என்ன நாலு பேரா

அமரன் - ஆமா... நீ நான் நம்ம ரெண்டு பிள்ளைங்க

சித்ரா - ம்..சரி இப்போ என்ன நீ என்கூட தூங்கணும் அவ்வளவு தானே

அமரன் - ம்...

சித்ரா - வா வந்து படுத்துக்கோ...

அமரன் - என்ன...

சித்ரா - படுத்துக்கோ அமரா.... எனக்கு தெரியும்... உன்னோட இந்த ஆசையில் என்னை நீ உன் அம்மாவாக நினைக்கும் ஒரு உணர்வை தவிர வேற ஏதும் எனக்கு தவறா தெரியல அமரா..... உண்மையை சொல்லனும்னா நீ என் மேல கொண்ட காதல் நான் உன் மேல் கொண்ட அன்பு இது எதுவும் காமம் இல்லா காதல் அமரா......

அமரன் - சித்ரா நீ என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லவில்லை என்றாலும் உன்னை விட்டு நான் பிரிந்து இருக்க மாட்டேன்... கண்டிப்பா உன் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்து உன்னை பார்த்து கொண்டேதான் என் மீத வாழ்க்கையை நான் கடந்திருப்பேன்.. போதும் சித்ரா நம் வாழ்க்கையில இழந்த எல்லா நாட்களும் சேர்த்து வைத்து நாம் நம் குழந்தைகளோடு வாழ வேண்டும்.. நம்ம ரெண்டு பெண் பிள்ளைக்கும் இந்த உலகத்துல இருக்கிற எல்லா சந்தோஷமும் கிடைக்கணும்...எனக்கு நீ உனக்கு நான் நம்ப ரெண்டு பிள்ளைகளுக்கும் நம்ம ரெண்டு பேரும்ன்னு இனிமே சந்தோஷமா இருக்கணும்

சித்ரா - உண்மைதான் அமரா....நம்ப கடந்து வந்த காலத்துல நமக்கு எவ்வளவோ பேர் எவ்வளவு கெடுதல் செய்தாலும் நல்லது செய்தவர்களை மட்டும் நாம் நினைவில் கொண்டு நம்மனால முடிஞ்சத அவங்களுக்கு செய்யணும்.. அதுல செந்தாமரை அப்பா இதோ இன்று திருந்தி இருக்கும் உன்னோட அப்பா, உன் அம்மா ஸ்தானத்தில் இருக்கும் ஜானகி அம்மா... உனக்கு நண்பனாகவும் எனக்கு அண்ணனாகவும் இருக்கும் குரேஷி.. இப்படி எல்லாரையும் நம்ம சந்தோஷமா வைத்திருக்க வேண்டும்..

அமரன் - கண்டிப்பா சித்ரா..

சித்ரா - சரி சரி தூக்கம் வருதுன்னு இப்ப ஏன் இந்த கதையெல்லாம் பேசிக்கிட்டு இருக்க  படு....

என்று சித்ரா சொன்ன தருணம் ஜானகி அம்மா சித்ராவின் பெயரைச் சொல்லி அழைக்க..... அதேசமயம் குழந்தை அழும் சத்தம் கேட்டு விஜயகுமார் அவர் அறையில் இருந்து வெளியே வர..

அமரா....ஜானகி அம்மா கூப்பிடுற மாதிரி இருக்கு.....

சித்ரா - போச்சு போச்சு பாத்தியா இப்போ என்னை இந்த ரூம்ல பார்த்தா என்ன நினைப்பாங்க....நீ இருக்க பாரு அமரா போ அப்படி....

அமரன் - அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க நீ எனக்கு ஒரே ஒரு மு....

சித்ரா - ஏய் ஏய் விடு அமரா.....

அமரன் - ஒரே ஒரு முத்தம் சித்து ...இத்தனை வருஷத்துல இந்த ஒரு முத்ததுக்கு கூட நான் worth இல்லையா....

சித்ரா - ஏய் என் கிட்ட வந்த பிச்சிடுவேன்.... ஓடிடு

அமரன் - உனக்கு ஒரு நாள் இருக்கு பாரு...

என்று அமரன் சொல்ல...சித்ராவும் அமரனும் அறையில் இருந்து வெளியே வந்தவர்கள் சித்ராவின் அறைக்குள் நுழைந்த சமயம் சித்ராவின் அறையில் விஜயகுமார் அழகி பாப்பாவை கையில் ஏந்தி கொண்டு இவர்களைப் பார்த்தவர்

விஜயகுமார் - என்னப்பா பாப்பா அழுவுற சத்தம் கூட காதுல விழலையா...ரெண்டு பேரும் அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க...இங்க பாரு குழந்தை அழுது அழுது எப்படி தேம்பிக்கிட்டு இருக்காங்கன்னு.....

ஜானகி - ஐயா பிள்ளையை என்கிட்ட தாங்க....நான் தூங்க வைக்கிறேன்

விஜயகுமார் - இல்ல இல்ல நானே தூங்க வைக்கிறேன்...

அமராவதி - தாத்தா தாத்தா நம்ம எல்லாம் தூக்கனா பாப்பா அழுகையை நிப்பாட்ட மாட்டா.....கண்ணாடி சாரு தூக்கினால் தான் அழுகை நிப்பாட்டு வா...

விஜயகுமார் - என்னது சாரா.... இனிமே நீ என் மகனை அப்பானு தான் கூப்பிடனும் புரியுதா....

அமராவதி - அம்மா சொன்னா நானு அமரன் சாரை அப்பானு கூப்பிடுறேன்....

விஜயகுமார் - என்ன சித்ரா இன்னும் என்ன தயக்கம்.... ஏன் என் மகனை அமராவதி அப்பானு கூப்பிடக்கூடாதா

சித்ரா - ஐயோ அப்படியெல்லாம் இல்ல.... அமரா உனக்கு எப்படி கூப்பிட தோணுதோ அப்படியே கூப்பிடு

அமராவதி - அம்மா உண்மையாவா அப்போ நான் கண்ணாடி சாரை அப்பானு கூப்பிடவா....

விஜயகுமார் - நான் தான் சொல்றேன் இல்ல...நீ அமரனை அப்பானும் சித்ராவை அம்மானுமே கூப்பிடு...யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க....

அமராவதி - ஐ அப்போ எனக்கு அமரன் அப்பா....சித்ரா அம்மா... விசித்ரா அம்மா மொத்தம் மூணு பேரா

விஜயகுமார் - என்ன விசித்ராவா....அது யாருமா விசித்ரா...??

ஜானகி - ஐயா.....அமராவதி உடைய அம்மா தான் விசித்ரா....

அமராவதி - தாத்தா உங்களுக்கு எங்க அம்மாவ தெரியாதா...

விஜயகுமார் - தெரியாதே

அமராவதி - இருங்க இருங்க என் அம்மாவோட போட்டோ என்கிட்ட இருக்கு நான் எடுத்துட்டு வரேன்...

என்று சொன்ன அமராவதி ஓடிச் சென்றவள் அவள் கட்டிலின் பக்கத்திலிருந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வந்து விஜயகுமாரிடம் காட்டியபடி...

அமராவதி - தாத்தா தாத்தா இவங்க தான் என்னோட அம்மா....... இவுங்க பெயர் விசித்ரா.... எவ்வளவு அழகா இருக்காங்க இல்ல.....

என்று அமராவதி சொன்னதும் விஜயகுமார் அந்த புகைப்படத்தை கையில் வாங்கிப் பார்த்தவரின் கண்கள் அவரை மீறி கலங்கிய படி...

விஜயகுமார் - விஜயா விஜயா....இந்த போட்டோல என்னோட விஜயா.....

என்று நெஞ்சை பிடித்துக் கொண்டு விஜயகுமார் பதறியபடி தடுமாறியவரை அமரன் கை தாங்கலாக பிடிக்க......
விஜயா யார்..??
வி சித்ராவுக்கும் இவருக்கும் என்ன உறவு.....
இறுதி பாகத்தில் சந்திப்போம்...
உங்கள் நான் சக்தி 🔱
URS
SK

Continue Reading

You'll Also Like

875K 86.8K 158
Arjun and shalini tie the knot in an arranged marriage. what surprises does the life has for them . How do they find their love for each other ? or W...
45K 893 8
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பெற்ற தாய், தந்தையால் அலட்சியப்படுத்தப்பட்டு வாழ்வில் சொல்ல முடியாத இன்னல்களை அனுப...
160K 4.8K 30
Hi friends... Intha story unga yellaarkum romba pidikum nu ninaikirean... Family & love story... Intha book a ennoda friend Minnal Ku gift pannuran...
355K 11.1K 48
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாத...