உறவாய் வருவாய்...! (முடிந்தது)

By NiranjanaNepol

84.7K 4.5K 609

அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இ... More

அறிமுக உரை
1 விக்ரமின் வருகை
2 எங்கே பொம்மி?
3 பொம்மி
4 சத்தியம்
5 அந்தப் பெண்
6 ஜாதகம்
7 வினோத தீர்வு
8 திருமண திட்டம்
9 மற்றுமொரு நாடகம்
10 பாட்டி வழியில் பெயரன்
11 சின்ன முதலாளி
12 அழைத்தது யார்?
13 பொம்மி
14 வைஷாலியின் அம்மா
15 கோப்பெருந்தேவி
16 கோவில் சந்திப்பு
17 அப்பாவி பெண்ணா?
18 வைஷாலியின் தீர்மானம்
19 ஒப்பந்தம்
20 திட்டம்
21 நந்தினியின் அதிர்ச்சி
23 வைஷாலியின் தந்திரம்
24 மீண்டும் நிச்சயம்...
25 தீ விபத்து
26 தன் வினை தன்னைச் சுடும்
27 நிச்சயதார்த்தம்
28 பிரச்சனையில் நந்தினி
29 பாவம் நந்தினி...
30 குறுஞ்செய்தி
31 மாடியில் நிகழ்ந்த சந்திப்பு
32 பார்ட்டி
33 நந்தினியின் இயலாமை
34 வசீகரிக்கும் விக்ரம்
35 திருமணம்
36 நந்தினியின் தந்திரம்
37 தலையில் இறங்கிய இடி
38 கடவுளின் விருப்பம்
39 முதல் சுற்றுலா
40 குருஜியின் வருகை
41 மரண அடி
42 விக்ரமின் அதிரடியாட்டம்
43 நாடகம் முடிந்தது
44 இல்லறம்
46 எச்சரிக்கை உணர்வு
47 தீர்க்கமான திட்டம்
48 திட்டம் செயலானது...
49 நிஜ முகம்
50 அடுத்த திட்டம்
51 நந்தினியின் நம்பிக்கை
52 அம்மாவின் விருப்பம்
53 விமலாதித்தனின் கோபம்
54 முற்பகல் செய்யின்...
55 இறுதி பாகம்

22 உரிமை

1.3K 84 9
By NiranjanaNepol

22 உரிமை...?

வைஷாலியை உள்ளே அழைத்து வந்தான் விக்ரம்.

"மாம்... இங்க பாருங்க, நான் வைஷாலியை கண்டுபிடிச்சிட்டேன். ஆனா, அவ நான் சொல்றதை நம்ப மாட்டேன்கிறா. எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு தானே?"

அவளை நோக்கி வந்தார் சாவித்திரி.

"மை காட், என்னால நம்பவே முடியல. சின்னா சொல்றது உண்மை தான். உங்க ரெண்டு பேருக்கும் ஆக்சிஜன் ஹாஸ்பிடல்ல கல்யாணம் நடந்துது" என்றார் சாவித்திரி.

"சின்னாவா?" என்றாள் வைஷாலி முகத்தில் அதிர்ச்சியை காட்டி.

"விக்ரமை நான் சின்னான்னு தான்  கூப்பிடுவேன்"

"நான் உங்களை இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கேன். சின்னாங்கற பேரையும் நான் கேட்டிருக்கேன்." என்றாள் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு வைஷாலி.

தனக்குள் எழுந்த பயத்தை விழுங்கினார் நந்தினி. காமினியோ அவரை பார்த்து முறைத்தார்.

"அப்படியா? நீ என்னோட மருமக. உனக்கு நான் சொல்றதுல நம்பிக்கை இல்லைன்னா, என்னோட மாமியார் வயசுல ரொம்ப பெரியவங்க, பக்கத்துல இருக்கிறவங்க ஆக்சிஜன் ஹாஸ்பிடலோட டீன். அவங்ககிட்ட வேணும்னா நீ கேட்டு பாரு. அவங்க உண்மையை சொல்லுவாங்க." என்றார் சாவித்திரி.

நந்தினியை நோக்கி முகத்தை திருப்பிய வைஷாலியின் கண்கள் அகலமாயின.

"நீங்களா?" நந்தினியின் திகிலடைந்த முகத்தைப் பார்த்து, தனக்குள் எழுந்த சிரிப்பை அடக்கியவாறு கேட்டாள் வைஷாலி.

"உனக்கு என்னோட பாட்டியை தெரியுமா?" என்றான் விக்ரம் தனக்கு ஒன்றும் தெரியாதது போல.

"இவங்க உங்க பாட்டியா?" என்றாள் வைஷாலி அவளுக்கும் ஒன்றும் தெரியாதது போல.

"ஆமாம்"

"இவங்க தான், எங்களை வீட்டைவிட்டு  வெளியில் துரத்தி விட்டாங்க..." என்றாள் முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு, நந்தினியை வியர்க்க வைத்து.

"வீட்டை விட்டு துரத்தினாங்களா?" என்றான் குழப்பத்துடன் முகத்தை சுருக்கி படி.

"ஆமாம். இவங்க தான், என்னையும் எங்க அம்மாவையும் வீட்டைவிட்டு அனுப்பினாங்க"

"யாரு உங்க அம்மா? அவங்க பெயர் என்ன?" என்றார் சாவித்திரி.

"கோப்பெருந்தேவி..."

"என்னது..? கோப்பெருந்தேவியா? உங்க அப்பா பேர் என்ன?"

"சிவராமன்"

"அப்படின்னா, நீ பொம்மியா?" என்றான் விக்ரம்.

"என்னோட அப்பா என்னை அப்படி தான் கூப்பிடுவாரு"

"பொம்மி..." என்று சந்தோஷமாய் அவளை அணைத்துக் கொண்டார் சாவித்திரி.

தனது கையிலிருந்து அனைத்தும் நழுவி விட்டதை தெள்ளத் தெளிவாய் உணர்ந்தார் நந்தினி. காமினி கோபத்தில் நறநறவென பல்லைக் கடித்தார். அவரது பேத்தி ரோஷினியோ 'என்ன நடக்கிறது இங்கு?' என்பது போல் நின்றிருந்தாள். 

சரியாக அதே நேரம் வீட்டினுள் நுழைந்தார் விமலாதித்தன். விக்ரம் திருமணம் செய்து கொண்ட அதே பெண் அங்கு நிற்பதைப் பார்த்து அவர் பிரமித்தார்.

"சாவித்திரி... இந்த பொண்ணு...? காமினி ஆன்ட்டி அழைச்சிகிட்டு வந்தாங்களா?" என்றார் ஆவலாக.

"இல்ல. நம்ம சின்னா தான் கண்டுபிடிச்சான்"

"நெஜமாவா? அப்படின்னா ஜோசியர் சொன்னது உண்மையா ஆயிடுச்சு" என்றார் குதூகலமாக.

"ஆமாம். ஆனா அது இவ்வளவு சிக்கரம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கல"

"இவ வேற யாரும் இல்ல. நம்ம சிவராமன் அங்கிளோட பொண்ணு பொம்மி தான், டாட்" என்றான் விக்ரம்.

"என்னது...? நிஜமாவா? நீ சிவராமனோட மகளா?"

ஆமாம் என்று தலையசைத்தாள் வைஷாலி.

"எனக்கு தெரியும். எங்க அம்மா ஏதாவது செஞ்சா, அது எப்பவுமே நல்லதா தான் முடியும்" என்றார் பெருமையுடன்.

"ஆனா, எதுக்காக அவங்க எங்களை வீட்டை விட்டு அனுப்பினாங்க, எதுக்காக எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்கன்னு எனக்கு புரியலையே..." என்றாள் வைஷாலி பாவமாக.

குழந்தை தனமாய் கேள்வி கேட்ட வைஷாலியை பரிதாபமாக பார்த்தார் விமலாதித்தன். அவர் கேள்விக்குறியுடன் சாவித்திரியை கவனித்தார்.

"அவளையும், அவங்க அம்மாவையும் நம்ம அம்மா தான் வீட்டை விட்டு அனுப்பினாங்களாம்" என்றார் மெல்லிய குரலில் சாவித்திரி.

அதிர்ச்சியுடன் நந்தினியை பார்த்தார் விமலாதித்தன். அவரோ வேறு எங்கோ பார்த்துக் கொண்டு நின்றார்.

"ஆமாம்" என்ற வைஷாலி, நந்தினியிடம் சென்றாள்.

"ஏன் பாட்டி? ஏன் அப்படி செஞ்சீங்க? எங்க மேல உங்களுக்கு கருணையே இல்லையா?" என்றாள் நந்தினியின் முகவாய்க்கட்டை பிடித்துக்கொண்டு, சின்னப்பிள்ளை போல.

சாவித்திரியும், விக்ரமும் தங்கள் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டார்கள். அவளிடம் வந்தார் விமலாதித்தன்.

"நீங்க இருந்த ஏரியா நல்ல ஏரியா இல்லம்மா. அங்க பொம்பளைங்க பாதுகாப்பாக இருக்க முடியாது. அதனால தான், அம்மா அங்க இருந்து உங்களை அனுப்பியிருப்பாங்க" என்று விஷயத்தை திறமையாய் சமாளித்தார் விமலாதித்தன்.

அதே நேரம், திருமண விஷயத்தையும் தீர்த்து வைக்க வேண்டுமென்று முன்வந்தார் காமினி. விஷயம் வெளியே தெரிந்தால் அவருடைய மருத்துவமனையில் பெயர் கெட்டுவிடும் அல்லவா...!

"அந்த பொம்பளை, நம்மகிட்ட பொய் சொல்லி இருக்கா போலயிருக்கு... இந்த பொண்ணு, தன்னோட மகள்னு சொல்லி, நம்மளை ஏமாத்தியிருக்கா..."

 "உண்மையா பாட்டி?" என்றாள் வைஷாலி.

வேறுவழியின்றி ஆம் என்று தலையசைத்தார் நந்தினி.

"நெஜமாவா...? அப்படின்னா  நீங்க ரொம்ப நல்லவங்க..." அவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

அதிர்ச்சியில் கண் சிமிட்டினார் நந்தினி. அவருக்கு இது போன்ற விஷயமெல்லாம் பழக்கம் இல்லையே...!

பொங்கி வந்த சிரிப்பை அடக்க படாதபாடு பட்டார் சாவித்திரி, தனது மாமியாரின் முகம் போன போக்கை பார்த்து. உதட்டைக் கடித்தபடி, விக்ரம் இருந்த பக்கம் தலையை திருப்பிக் கொண்டார், அவனை பார்ப்பது போல பாசாங்கு செய்து.

"உங்களோட உண்மையான நோக்கம் தெரிஞ்சா, எங்க அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க" என்று அவரை மேலும் இறுக்கமாய் கட்டிப்பிடித்தாள் வைஷாலி.

ஒன்றும் செய்ய இயலாதவராய் தன் தோழியை பார்த்தார் நந்தினி.

"உங்க அம்மா எங்க இருக்காங்க?" என்றார் நந்தினி.

"அவங்க வீட்ல  இருக்காங்க" என்று தோளை குலுக்கினாள் வைஷாலி.

"உங்க வீடு எங்க இருக்கு?"

"பார்வதி நகர்ல"

வைஷாலியை பார்த்து முகம் சுருக்கினார் நந்தினி. அவர்கள் அங்கிருந்து சென்று விட்டதாய் சுமேஷ் கூறினானே...

அவர் முகம் மாறியதை பார்த்து உள்ளூர புன்னகைத்தான் விக்ரம்.

"எப்படியோ, நமக்கு சிவராமன் மகள் கிடைச்சுட்டா. இவங்களுக்கு நம்ம கல்யாணம் பண்ணி வைக்கணும் மா" என்றார் விமலாதித்தன்.

சரி என்று தலையசைத்துவிட்டு காமினியையும் ரோஷினியையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு, தன் அறைக்குச் சென்றார் நந்தினி.

"நீ என்கூட வா பொம்மி" என்று அவளை பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார் சாவித்ரி.

பூஜை அறையில் இருந்த குங்குமத்தை எடுத்து, அவளுக்கு நெற்றியில் இட்டு விட்டார்.

"நீ ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி நடந்துக்கோ, அப்போ தான், அம்மா உன்னை குறைச்சு எடை போடுவாங்க என்று ரகசியமாய் கூறினார்.

"நான் உண்மையிலேயே அப்பாவி தான் ஆன்ட்டி" என்று தன் கண்களை பாவமாய் சிமிட்டிக் காட்டினாள் வைஷாலி.

வாய்விட்டு சிரித்தார் சாவித்ரி. வைசாலியும் அவருடன் இணைந்து கொள்ள, அவர்கள் சிரிப்பதைப் பார்த்து புன்னகை புரிந்தான் விக்ரம்.

"இங்க வா சின்னா" என்று அவனை அழைத்து அவனுக்கும் நெற்றியில் குங்குமம் இட்டார் சாவித்திரி.

"மாம், எங்க கல்யாணம் எப்போ?" என்றான் வைஷாலியை பார்த்தபடி.

தர்மசங்கடத்தில் இருந்த வைஷாலியை பார்த்த சாவித்திரி,

"என்ன அவ்வளவு அவசரம்?" என்றார்.

"ஒருத்தி என்னை லவ் பண்ண மாட்டேன்னு அடம்பிடிக்கிறா... கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு நிறைய வேலை இருக்கு" என்றான் கிண்டலாய்.

"அப்படியா விஷயம்? கவலைப்படாதே. நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்" என்று சிரித்தார் சாவித்திரி.

அவருடன் ஹைஃபை தட்டிக்கொண்டான் விக்ரம்.

நண்பர்கள் போல நடந்துகொண்ட அவர்களை, இவர்கள் உண்மையிலேயே அம்மா பிள்ளை தானா என்ற சந்தேகத்துடன் ஏறிட்டாள் வைஷாலி.

"நான் கிளம்புறேன் ஆன்ட்டி"

"இவ்வளவு சீக்கிரம் ஏன் கிளம்புற? எங்களோட சேர்ந்து லன்ச் சாப்பிடலாம் இல்லையா?"

"இல்ல ஆண்ட்டி. அம்மா எனக்காக காத்திருப்பாங்க"

"அதெல்லாம் ஒன்னும் நடக்காது. அவ என் கூட இப்போ ஆபீசுக்கு வரப்போறா" என்றான் விக்ரம்.

" எதுக்குடா? "

"அவ என்கூட, எங்க ஆபீஸ்ல சேர போறா, மா"

வைசாலி சாவித்ரியை பார்க்க, சாவித்திரி விக்ரமை பார்த்தார்.

"கல்யாணத்துக்கு பிறகு, அவ வீட்ல இருக்க வேண்டாம்னு நான் நினைக்கிறேன்"

அவன் ஏன் அப்படி கூறினான் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். அவள் வீட்டில் இருந்தால், நந்தினி அவளுக்கு ஓயாமல் தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பார் அல்லவா...? சாவித்திரிக்கும் அது நல்ல யோசனையாகவே தோன்றியது.

"நாங்க ஆஃபீஸுக்கு போறோம்"

சாவித்ரியின் பாதம் பணிந்து, ஆசீர்வாதம் பெற்று கொண்டு அவரிடமிருந்து விடை பெற்றாள் வைஷாலி.

இதற்கிடையில்,

நந்தினியின் மீது ஏறு ஏறு என்று ஏறிக் கொண்டிருந்தார் காமினி.

"என்ன கருமம் நடக்குது இங்க? இதுக்காகத் தான் எங்களை நீ வர சொன்னியா?" என்று சீறினார்.

"உங்க பேரன், என்னை கல்யாணம் பண்ணிக்குவார்னு சொன்னிங்க...? ஆனா அவர் என்னடான்னா, போயும், போயும் ஒரு லோ க்ளாஸ் பொண்ணை கூட்டிக்கிட்டு வந்திருக்காரு...? இவ்வளவு மட்டமான டேஸ்ட் இருக்கிற ஆளை நான் கல்யாணம் பண்ணிக்கணுமா?" என்றாள் ரோஷினி காட்டமாக.

"எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. அந்த பொண்ணை அவன் வாழ்க்கையில இருந்து நான் தூக்கி எறியுறேன்" என்றார் நந்தினி அமைதியாக ஆனால் உறுதியாக.

"உன்னால  என்ன செய்ய முடியும்?"

"என்னை சந்தேகப் படாதே காமினி. உனக்கே தெரியும் நான் லோ க்ளாஸ் ஆளுங்களை எந்த அளவுக்கு வெறுக்கிறேன்னு... இந்த கல்யாணத்தை நான் நிச்சயம் நடக்க விடமாட்டேன்"

"நாங்க கிளம்பறோம்"

ரோஷிணியின் கரத்தைப் பற்றிக் கொண்டு, அங்கிருந்து விடுவிடுவென நடந்தார் காமினி.

மிகுந்த ஏமாற்றம் அடைந்தார் நந்தினி. அவர் நினைத்தது ஒன்று... ஆனால் இங்கு நடந்தது வேறொன்று.

"நல்ல வேளை, இந்த பொண்ணு வைஷாலி, அப்பாவியா இருக்கா. நான் சொன்னதை எல்லாம் கண்மூடித்தனமாக நம்புறா. இதுவே எனக்கு போதும், என்னுடைய காரியத்தை நான் சாதிக்க" என்று மனதில் எண்ணினார் நந்தினி  தவறாக.

காரில்...

"நான் எதுக்காக ஆபீசுக்கு வரணும்னு நினைக்கிறீங்க?" என்றாள் வைஷாலி.

"எதுக்கா? கல்யாணத்துக்கு பிறகு நீ வேலை செய்யப் போறது இல்லையா?"

"இல்ல. நான் கல்யாணத்துக்கு பிறகு வீட்டில் தான் இருக்கப் போறேன்"

அதைக் கேட்டு அதிர்ச்சியும், அதிசயமும் அடைந்தான் விக்ரம்.

"நீ வீட்ல இருந்தா பாட்டி உன்னை தொல்லை செய்வாங்க"

"ஒரு விஷயத்தை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. நான் உங்க வீட்டுக்கு விருந்தாளியா வரப் போறதில்ல. என்னோட வாழ்க்கை முழுக்க நான் அங்க தான் இருந்தாகணும். எத்தனை நாளைக்கு நீங்க என்னை பாதுகாக்க முடியும்? அதுவும் உங்களோட சொந்த பாட்டிகிட்ட இருந்து?"

"வாழ்க்கை முழுக்க உன்னைப் பாதுகாக்க வேண்டியது என்னோட கடமை" என்று அவன் கூறியது வைஷாலிக்கு பிடித்து தான் இருந்தது.

"நான் எப்ப பார்த்தாலும் உங்களை எதிர்பார்த்திருக்க  முடியாது. என்னுடைய பிரச்சனையை என்னையே  ஹேண்டில் பண்ண விடுங்க"

"நீ அவங்கள ஹாண்டில் பண்ணிடுவ அப்படிங்கறதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல. ஆனா..."

"நீங்க அவங்களுடைய நடவடிக்கைகளை மட்டும் கண்காணிச்சிக்கிட்டே இருங்க. அது போதும்"

"நெஜமா தான் சொல்றியா?"

"ஆமாம்"

அவளுடைய அதீத தைரியம் அவனுக்கு வியப்பை அளித்தது.

"என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்றான் விக்ரம் வேண்டுமென்றே.

"நான் ஏற்கனவே உங்ககிட்ட சொன்னேன்... "

"ஆங், சொன்ன... எனக்கு *ஒய்ஃபாய் இருக்குற உன்னுடைய உரிமையை* விட்டுக் கொடுக்க மாட்டேன்னு சொன்ன" என்றான்.

"எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் எல்லாம் சேக்காதீங்க... நான் வெறும் *உரிமையை* பத்தி மட்டும் தான் சொன்னேன்" என்று மறுத்தாள் அவசரமாக.

"உன்னோட உரிமை என்னன்னு கொஞ்சம் சொல்லேன்?" என்றான் வம்படியாய்.

அவனுக்கு பதில் அளிக்க முடியவில்லை வைஷாலியால். அவள் என்ன கூறுவாள்?

"உன்னுடைய உரிமை உனக்கு கிடைக்கனும்னா, அதுக்கு நீ என்னோட மனைவியாகணும். என்னை கல்யாணம் பண்ணி, எனக்கு மனைவியாகாம, உனக்கு உன்னுடைய உரிமை எப்படி கிடைக்கும்?" என்று தரமான கேள்வியை கேட்டான் விக்ரம்.

முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு நேராய் அமர்ந்துகொண்டாள் வைசாலி. சிரித்தபடி காரை செலுத்தினான் விக்ரம்.

தொடரும்...

Continue Reading

You'll Also Like

16.3K 571 23
அக்கா தங்கையின் கதை... தாய் தந்தையை இழந்த சகோதரிகள் தங்கள் சொந்தங்களை தேடிச் செல்லும் கதை...
156K 4.3K 45
ஒருவரை ஒருவர் உண்மையாக காதலித்தும், குடும்ப சூழ்நிலையும், விதியும் சேர்ந்து விளையாட இருவரும் எப்படி சேர்வார்கள் ? என்று பொறுத்திருந்து பார்ப்போம். கத...
58.7K 1.4K 33
நாயகன்- சாய் கிருஷ்ணா நாயகி-நிரோஷினி
92.3K 7.8K 108
It's like a short story. There will not be any further parts. It's just a scenario based short story. Let me know your comments.