மனதை தீண்டி செல்லாதே

By riyasundar

19.7K 504 17

Higest Ranking #26 tamil #57 romance #79 காதல் #42 தமிழ் #35 குடும்பம் #11 உறவு #14 affection #14 நாவல் #4 பு... More

1. வீழ்ச்சியிலும் நிதானம் முதன்மை
2. தாய்மையின் பதட்டம்
3. சூழ்நிலைகளால் தவறாகும் கணிப்பு
4. தவறை திருத்தினாலும் சுவடுகள் எங்கோ?
5. என் முதல் ஹீரோ
6. முதல் சந்திப்பிலேயே ஏனோ தொலைந்தேன்
7. உன்னிடம் பேச துடிக்கிறேன்
8. மனதால் நெருங்கினாலும் அறிவால் விலக துடிக்கிறேன்
9. புதிதாக ஒரு பந்தம்
10. உன்னைக் காணவே காத்திருந்தேன்
11. கண்ணுக்கு கண்ணாக நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா?
12. முன்னரே உணர்ந்திருந்தால்..
13. மனதை மறைக்கும் வழி தெரியாமல்
14. கைகோர்த்து காதல் மொழி பேச
15. விலகிட நினைத்தாலும் விதி இணைக்கிறதே
16. என்னுள்ளே மாற்றம் செய்தாயடா!
17. உன்னில் பல வண்ணங்கள்
19. எப்போது என்னுள்ளே காதல் வந்தது?
20. புரிதலிலும் அன்பிலும் ஆழமாகும் நேசம்
21. எனக்காக நீ செய்யும் ஒவ்வொன்றும்
22. உன் ஒரு பார்வை இதயத்தை கிழித்ததே..
23. நீ இல்லாமல் நானும் வெறும் உடலே..
24. புரிதலிலே உருவான உறவு (இறுதி அத்தியாயம்)
மற்றுமொரு இன்பம் நெஞ்சினிலே (ஆ/ப)

18. இதயம் ஒரு நொடி துடிக்க மறந்தது

495 17 0
By riyasundar

அவள் கேள்வி இருவரையும் குழப்பியது. அகிலேஷ் வனிதாவிடம், " வனி நீ தப்பா புரிஞ்சிட்டு பேசுறேனு நினைக்கிறேன். இது என் friend‌."என்று அவளிடம் பேச முயன்றான்.

அவளோ இடையே புகுந்து, "தெரியும் மிஸ்டர் இனியன் தானே. அன்னைக்கு.." என்று நடந்ததை அவள் அவளுடைய பார்வையில் இருந்து விவரிக்க அகிலேஷ் தலையைப் பிடித்து கொண்டு தன் இருக்கையில் அமர்ந்தான். இனியனுக்கு அவள் விளக்கியதும் அனைத்தும் புரிந்தது.

"என்ன பேசுற வனிதா நீ? Are you mad? இனியன் கண்டிப்பா அப்படி பண்ணிருக்க மாட்டான்" என்றான் உறுதியாக.

வனிதா அதற்கு கோபமாக பதில் பேசுமுன்னர், "சிஸ்டர் சொல்றது உண்மை தான்டா. ஆனால்.." என்று நடந்ததை விவரித்தான்‌.

அதைக் கேட்டதும் அகிலேஷிற்கும் அதிர்ச்சி. வனிதாவிற்கோ இவனைப் போய் இப்படி தவறாக பேசிவிட்டோமே என்று குற்ற உணர்ச்சியாக இருந்தது.

"சாரி அண்ணா. உண்மை தெரியாம தப்பா பேசிட்டேன்" என்றாள்.

"பரவாயில்லமா. உன் இடத்ல யார் இருந்தாலும் அப்படி தான் react பண்ணிருப்பாங்க" என்றான்.

"இருந்தாலும்ணா.." என்று அவள் கூறுமுன், "நோ நோ முடிஞ்சது முடிஞ்சு போச்சு. அதபத்தி இனி பேசக் கூடாது. இவன கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டியாமே. அந்த சோகக் கதைய பேசுவோம்" என்றான் விளையாட்டாக.

அந்த கேலியில் அவளும் கலந்து கொள்ள இடமே கலகலப்பானது.

ஒரு வரம் இப்படியே சென்றது. இங்கே பார்கவி தன் எண்ணை கொடுத்து ஒருவாரம் ஆகியும் அவன் அழைப்பு வராமல் இருக்க மனம் நொந்தாள். இப்படி புலம்பவிட்டு விட்டானே என்று தவிந்திருந்தவளுக்கு சௌர்ணிகாவிடம் இருந்து அந்த நாளின் இரவில் அழைப்பு வர அதை ஏற்று அவள் பேசிய நேரம் சரியாக எட்டரை மணி.

"ஹலோ ஆன்டி. எப்படி இருக்கீங்க? " என்றாள்.

"பார்கவி. அப்பா இல்லையா. ஒரு emergency" என்றார் குரலில் பதட்டுத்தோடு.

"என்னாச்சு ஆன்டி. அப்பா கொஞ்சம் feverish ஆ இருக்குனு tablet போட்டு தூங்கிட்டிருக்காரு. எதுனாலும் சொல்லுங்க நான் பார்த்துக்கிறேன்" என்றாள் தைரியமூட்டும் வகையில்.

"இனியனுக்கு ஒரு சின்ன accident ஆகிருக்கு. உங்க வீடு பக்கத்தில உள்ள ஹாஸ்பிடல தான் admit பண்ணிருக்காங்க. கைல லேசா அடினு அவன் friend அகிலேஷ் சொல்றத பார்த்தா fracture னு நினைக்கிறேன். அவன் கூட தான் இருக்கான். இருந்தாலும் நான் பயப்பட கூடாதனு இரண்டு பேரும் என்கிட்ட மறைக்கிறாங்கனு தோனுது. அதான் அப்பால் போய் பார்த்திட்டு வர சொல்ல முடியுமானு கேட்க கூப்டேன். Call எடுக்காததால உனக்கு dial பண்ணேன். நானும் அங்கிளும் இப்போ out of station. Flights எதுவும் இப்ப available ஆ இல்ல. அதனால எப்படியும் வர நாளைக்கு night ஆகிடும். அதான் இப்ப என்ன செய்யனு யோசிக்கிறேன்" என்றார் தாய்மையின் அன்பில் ‌.

இனியனுக்கு விபத்து என்றதும் அவள் இதயமெல்லாம் பதறியது. எப்போதும் எதையும் நிதானமாக எதிர்நொக்குபவள் முதன்முதலாக தடுமாறினாள். இருப்பினும் அவரிடம், "ஒன்னும் கவலைப்படாதீங்க ஆன்டி. நான் என்னனு பார்த்திட்டு call பண்றேன். Hospital details மட்டும் எனக்கு message பண்ணுங்க" என்று ஆறுதலாக பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

கடவுளிடம் மனதார பிரார்த்தனை செய்து விட்டு வீட்டை பூட்டி தன் இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்தாள். அவர் குறுஞ்செய்தியில் அனுப்பிய மருத்தவமனைக்கு விரைந்து அவன் பெயர் கூற அவனது அறையெண்ணை தகவல் கேட்டு கூறினர்.

அறையை நெருங்கிய போது பேச்சு சத்தம் கேட்டது. கதவை தட்டிவிட்டு உள்ளே வருமாறு கூறவும் உள்ளே சென்றாள். அங்கே இனியன் கையில் ஒரு கட்டு காலில் சிறிய கட்டு என் அமர்ந்திருந்தான். அவன் அருகே இருந்த இருக்கையில் அகிலேஷ் அமர்ந்திருக்க இருவரும் கிரிக்கெட் பார்த்துக் கொண்டு இருந்தனர். அதில் வாக்குவாதத்தில் இருந்ததால் கவனிக்காமல் இருந்த இனியன் சத்தம் கேட்டு திரும்ப அவளை சற்றும் அவன் எதிர்பார்க்கவில்லை.

"பாரு நீ இங்க.." என்று இனியன் என்ன கூறுவதென புரியாமல் தொடர்ந்தான்‌‌.

_________________________________________
வணக்கம் மக்களே 💞,

எப்படி இருந்துச்சுனு மறக்காம சொல்லுங்க 😊

Continue Reading

You'll Also Like

12.5K 678 52
காதல் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத போது மலர்ந்த காதலானது காலப்போக்கில் காதலை இரு மனமும் அர்த்தம் தெரிந்து கொண்டாலும் விதியின் விளையாட்டில் ஜெயிப்...
113K 6.6K 41
ஒரு சராசரி பெண்ணாக வாழும் நம் நாயகி. விதி என்னும் சதியால் ஒரு மாயவனால் அவள் வாழ்வே தலை கீழாகி போக, உரியது என நினைத்ததெல்லாம் வெறும் நிழலாய் மாற...
1.4K 222 7
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு...
369K 12.2K 54
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அ...