இதய சங்கிலி (முடிவுற்றது )

By NiranjanaNepol

104K 4.9K 515

Love story More

1 இதயத்துடிப்பு
2 இந்து குமாரி
3 விளம்பரம்
4 விபரம்
5 மாறிய திட்டம்
6 திருமணம்
7 அர்ஜுனின் வீட்டில் இந்து
8 அபாயமான அணுகுமுறை
9 அர்ஜுனின் செயல்
10 எதிர் வினை
11 திடீர் மாற்றம்
12 மாற்றம் தந்த மயக்கம்
Part 13
Part 14
Part 15
Part 16
Part 17
Part 18
Part 19
Part 20
Part 21
Part 22
Part 23
Part 24
Part 25
Part 26
Part 27
Part 28
Part 29
Part 30
Part 31
Part 32
Part 33
Part 34
Part 35
Part 36
Part 37
Part 38
Part 40
Part 41
Part 42
Part 43
Part 44
Part 45
Part 46
Part 47
Part 48
Part 49
Part 50
Part 51
Part 52
Last part

Part 39

1.7K 85 7
By NiranjanaNepol

பாகம் 39

அர்ஜுனும், இந்துவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி, நெருக்கமாய் கட்டிலில் படுத்திருந்தார்கள். அவர்களுக்கு தூக்கமே வரவில்லை. அழகிய புன்முறுவலுடன் மெல்ல அவள் கண்ணம் தொட்டான் அர்ஜுன். அவன் தன் கையை எடுத்து விடாமல் இருக்க, தன் கையை அவன் கை மீது வைத்துக் கொண்டாள் இந்து.

"நம்ம நாளைக்கு காலையில கோயிலுக்கு போகணும் " என்றான் அர்ஜுன்.

"ம்ம்ம் " அவன் அருகில் நகர்ந்து அவனை கட்டிக்கொண்டாள்.

அர்ஜுனும் அவளை தன் கரங்களால் சுற்றி வளைத்துக் கொண்டான்.

"இப்படி உன்கிட்ட நெருக்கமா இருக்கிறது ரொம்ப கஷ்டம் தெரியுமா?" என்று பெருமூச்சு விட்டான்.

"நான் தூரமா இருக்கணும்னு நீங்க நினைக்கிறீங்களா? "

"நிச்சயமா இல்ல "

"பின்ன?"

"நம்மளுடைய முடிவை மறுபரிசீலனை செய்யலாமான்னு யோசிக்கிறேன்" என்று சிரித்தான்.

"எந்த முடிவு? "

"நாளைக்கு ஃபிக்ஸ் பண்ணியிருக்கிற நம்மளுடைய ஃபர்ஸ்ட் நைட்டை, இன்னைக்கே மாத்திக்கிட்டா என்ன?"

"அப்படி மாத்திக்கிட்டா, உங்களால காலையில் சீக்கிரம் எழுந்துக்க முடியுமா?"

"நிச்சயமா சொல்ல முடியாது"

"அப்படினா தூங்குங்க..."

"எனக்கு தூக்கம் வரலையே"

"நம்ம இடத்தை மாத்துறது நல்லதுன்னு நினைக்கிறேன்..."

"ஏன் இடத்தை மாத்தணும்?"

"நான் உங்க நெஞ்சில படுக்குறதை விட நீங்க மாத்தி படுத்தா கரெக்டா இருக்கும். நீங்க தான், உங்க அம்மாவுடைய இதயத்துடிப்பை தாலாட்டு மாதிரி கேட்டு தூங்குவீங்களே... " என்று சிரித்தாள்.

"அதெல்லாம் பழைய கதை... இன்னைக்கு நான் அப்படி செஞ்சா, அது நிலைமையை இன்னும் மோசமாக்கும்" என்றான்.

தன் தலையை நிமிர்த்தி, அவள் அவனை பார்க்க, அவளை பார்த்து கண்ணடித்தான் அர்ஜுன். அவன் நெஞ்சில் பட்டென்று ஒரு அடி போட்டாள்.

"ஏய்..."

"ம்ம்ம்?"

"நம்ம கோவிலுக்கு போய்த் தான் ஆகணுமா? "

"ஆமாம், ஏன்?"

"நம்ம இன்னொரு நாள் போகலாமே"

" வேண்டாம்"

" ஏன்? "

"என்னை ஸ்கூல் பொண்ணுன்னு சொல்லி கிண்டல் பண்ணிங்க இல்ல... அதுக்கு இது தான் உங்களுக்கு தண்டனை"

"ஓ அப்படியா... எவ்வளவு நாளைக்கு? நாளைக்கு ராத்திரி என்ன பண்ணுவ?"

"அந்தக் கதையை நாளைக்கு பாக்கலாம்... இப்போ கதைக்கு வாங்க"

"நான் கதையை மாத்திட்டா என்ன செய்வ?"

" மாத்துவீங்களா? "

" மாத்த மாட்டேனா? "

"ம்ம்ம்... எனக்கு தூக்கம் வருது" அவள் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

அவளைத் தன் பக்கம் திருப்பினான்.

"பதில் சொல்லு"

"நீங்க ரொம்ப நல்லவரு... தங்கமானவரு... 24 கேரட் கோல்டு..."

"சரி, சரி, போதும் தூங்கு"

அவன் மூக்கை பிடித்து செல்லமாக கிள்ளிவிட்டு, அவனை அணைத்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டாள் இந்து. அர்ஜுனுக்கு தான் அவ்வளவு சீக்கிரம் தூக்கமே வரவில்லை. அவள் அவனருகில் இவ்வளவு நெருக்கமாக படுத்திருந்தால், பாவம் அவனும் தான் என்ன செய்வான்?

மறுநாள் காலை

கோவிலுக்கு செல்ல இருவரும் தயாராக இருந்தார்கள். ஒரு கூண்டு குடையை காருக்குள் வைக்க எடுத்துச் சென்றார் வேலன்.

"என்ன அது?" என்றான் அர்ஜுன்.

" நமக்கு லன்ச்"

" வழியில சாப்பிடலாமே"

"நீங்க தானே சொன்னீங்க, அது ரொம்ப சின்ன கிராமம்னு. ஒரு வேளை சாப்பிட எதுவும் கிடைக்கலன்னா என்ன செய்யுறது?"

"ம்ம்ம்... பரவாயில்லையே." என்று சிரித்தான்.

அப்பொழுது அங்கு ரம்யா வந்தாள்.

"ரம்யா, ஒருவேளை நாங்க வர லேட்டானா, நாளைக்கு, என்னுடைய ஃபிரண்டு ரேவதியை கூட்டிகிட்டு வர பாண்டிச்சேரி போக மறந்துடாத"

"நீங்க கவலைப்படாதீங்க நான் மறக்க மாட்டேன்" என்றாள் ரம்யா.

" தேங்க்யூ "

" போயிட்டு வாங்க"

அவளிடமிருந்து விடைபெற்று சென்றாள் இந்து. அர்ஜுன் அவளுக்காக காரில் அமர்ந்து காத்திருந்தான். அவன் பக்கத்தில் அமர்ந்து சீட் பெல்ட்டை மாட்டி கொண்டாள் இந்து.

"எனக்கு லாங்க் ட்ரைவ் போகணும்னா ரொம்ப பிடிக்கும்" என்றான் காரை ஸ்டார்ட் செய்தபடி.

"முக்கியமா, நீங்க கோவமாக இருக்கும் போதும்... அப்செட்டா இருக்கும் போதும்... கரெக்டா?"

" ஆமாம்"

"இப்ப உங்க மூடு நல்லா இருக்கு தானே?"

"நிச்சயமா... இது தான் நம்மளுடைய ஃபஸ்ட் லாங் டிரைவ்"

அதை கேட்டு களுக்கென்று சிரித்தாள் இந்து.

"ஏன்? என்ன ஆச்சு?" என்றான்.

"நீங்க என்னை பாண்டிச்சேரியிலிருந்து கூட்டிகிட்டு வந்ததை நினைச்சேன்..." என்று அவள் சிரித்தபடி கூற, அவன் முகம் தொங்கிப் போனது.

"நீங்க யாருன்னு நான் கேட்டப்போ, நீங்க என்ன சொன்னீங்க?" என்று அவள் கேட்க,

அவளைப் பார்த்து முறைத்தான் அர்ஜுன்.

"உன்னோட புருஷன்..." என்று அர்ஜுனை போல பேசிக் காட்டி கலகலவென சிரித்தாள்.

"போதும் இந்து..." என்றான் முகத்தை உம் என்று வைத்துக்கொண்டு.

"இவ்வளவு சீக்கிரமா? நீங்க பண்ண அட்டூழியத்தை எல்லாம், நம்ம பசங்க கிட்ட சொல்லும் போது என்ன செய்வீங்க?" என்றாள் சிரிப்பை அடக்கியபடி.

"என்னது?" என்றான் அதிர்ச்சியாக.

" நிச்சயமா சொல்லுவேன்"

" வேணாம், இந்து..."

"நம்ம பசங்ககிட்ட என்ன எல்லாம் சொல்லணும்னு பெரிய திட்டம் போட்டு வெச்சிருக்கேன் தெரியுமா?" என்று மேலும் அவனை வம்புக்கு இழுத்தாள்.

" பைத்தியமா நீ?"

" இப்போ இல்ல...  உங்களால, கொஞ்ச நாளுக்கு முன்னாடி பைத்தியமா இருந்தேன். எவ்வளவு அகங்காரம் படிச்சவர் தெரியுமா நீங்க?"

"நீ என்னை அவாய்ட் பண்ண... அதனால தான் நான் அப்படியெல்லாம் நடந்துக்கிட்டேன்..." என்று தன் செயலுக்கு நியாயம் தேடினான்.

"அப்போ எதுக்கு என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிகிட்டீங்களாம்...? அப்போ நான் எதுவுமே செய்யலையே...?"

"ஆனா, இப்போ நான் அகங்காரம் பிடிச்சவன் இல்லன்னு தெரிஞ்சுகிட்ட தானே...?"

"எவ்வளவு பெரிரிரிரிய போராட்டத்திற்கு பிறகு..."

"நடந்துதா இல்லையா?"

"ஆங்... டெஸ்ட் பண்றேன் என்ற பேர்ல என்னெல்லாம் செஞ்சிங்க? நிச்சயமா நம்ம பேர பசங்க எல்லாரும் நம்ம கதையை கேட்டு ஆச்சரியப்பட்ட போறாங்க..."

"பேரப் பசங்ககிட்ட கூட சொல்ல போறியா?" என்று புருவம் உயர்தினான்.

"பின்ன...? அப்போ எல்லாம் நமக்கு நிறைய டைம் இருக்கும்... இந்த ஜெனரேஷன் பசங்க, தேவை இல்லாத விஷயத்தை எல்லாம் செஞ்சு, டைமை வேஸ்ட் பண்றாங்க. அவர்களுடைய கவனத்தை ஈர்க்கணும்னா ஏதாவது இன்ட்ரஸ்டிங்கா நம்ம அவங்களுக்கு சொல்லணும்"

"அதுக்காக நீ என்னை வில்லனாக்க போறியா?"

"சேச்சே... நீங்க வில்லன் இல்ல ஆன்ட்டி ஹீரோ..."

 ஏதோ முணுமுணுத்தான் அர்ஜுன்.

" நீங்க ஏதாவது சொன்னீங்களா?"

"ஒன்னும் இல்லை" என்றான் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு.

"இல்லையே நீங்க ஏதோ முணுமுணுத்திங்களே..."

"நீ என்னுடைய இமேஜை பிரேக் பண்ண பிளான் பண்ணுவேன்னு நான் நினைச்சு கூட பாக்கல "

"நீங்க அப்படியா நினைக்கிறீங்க?"

"பின்ன என்ன? "

" நான் அப்படி நினைக்கல பா"

"வேற எப்படி?"

"ரொம்ப ஸ்பெஷலா நினைக்கிறேன்..."

முகம் சுளித்தான் அர்ஜுன்.

"நமக்கு நடந்த கல்யாணம் மாதிரி, உலகத்துல யாருக்குமே நடந்து இருக்காது. என்ன சீன்... என்ன ஆக்ஷன்... கடைசி நிமிஷத்துல கல்யாண மாப்பிள்ளை மாறிப் போனாரு... பிரமாணம் எடுக்குறேன்னு, கல்யாண பொண்ணை மாப்பிள்ளை கையில் தூக்கிகிட்டாரு... என் சித்தி தலையில் துப்பாக்கியை வெச்சு, என்னை பாண்டிச்சேரியில இருந்து சென்னைக்கு கூட்டிக்கிட்டு வந்தாரு... தன் பொண்டாட்டியை சாப்பிட வைக்க, ரெண்டு *ஆப்ஷன்ஸ்* வேற கொடுத்தாரு... இது மட்டும் சினிமாவா இருந்தா, சீட்டு நுனியில உட்கார்ந்து தான் பார்த்திருகனும்..." என்றாள் கிண்டலாக.

"இந்து, நீ உண்மையிலேயே என்னை பாராட்டுறியா...? இல்லை கிண்டல் பண்றியா...?" என்றான் குழப்பமாக.

அதைக்கேட்டு களுக்கென்று சிரித்தாள் இந்து.

"அது எடுத்துக்குறவங்களை பொறுத்தது"

"அப்படின்னா நீ எனக்கு ஆப்ஷன் குடுக்குறியா?"

"நிச்சயமா இல்ல... நீங்களும் என்னை மாதிரியே யோசிங்களேன்... எதுக்காக உங்களை நீங்களே வில்லனா நினைக்கிறீங்க?" என்று கூறிவிட்டு சிரித்தாள்.

"என்னை டீஸ் பண்ணுறதை நிறுத்து" என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

தன் உதட்டின் மீது விரலை வைத்துக் கொண்டாள், நல்ல பிள்ளையைப் போல இந்து.

கோவிலுக்கு இன்னும் பத்து கிலோமீட்டர் இருந்ததை தெரியப்படுத்தியது மைல் கல். அங்கிருந்த ஒரு ஸ்வீட் ஸ்டால் அருகில் காரை நிறுத்தினான் அர்ஜுன், இந்துவுக்கு பிடித்த மைசூர்பாகு வாங்குவதற்காக. அந்த ஊரில் இருந்த மிகப் பிரசித்தி பெற்ற பழமையான கடை அது. அங்கு வரும் போதெல்லாம் ஏதாவது வாங்குவது, அர்ஜுனின் அம்மா,  சீதாராணியின் வழக்கம்.

அது வரை, அவர்களுடைய காரை பின்தொடர்ந்து வந்த வேறு ஒரு கார், அவர்களை ஓவர்டேக் செய்து கொண்டு சென்றதை அவர்கள் கவனிக்கவில்லை.

தான் வாங்கி வந்த மைசூர்பாகை, இந்துவிடம் கொடுத்து விட்டு, மீண்டும் காரை ஸ்டார்ட் செய்தான் அர்ஜுன். அந்த மைசூர்பாகை சப்புக்கொட்டி சாப்பிட தொடங்கினாள் இந்து. ஏதோ அதை சாப்பிடவே அவள் பிறந்ததை போல...

மேலும் 5 கிலோ மீட்டர் தூரத்தை அவர்கள் கடந்து வந்தார்கள். அப்பொழுது அவனுடைய கார், *அலைவதை* போல் உணர்ந்தான் அர்ஜுன். காரை நிறுத்திவிட்டு, என்ன ஆனது என்பதை பார்க்க கீழே இறங்கினான். அவர்களுடைய கார் டயர் பஞ்சர் ஆகி இருந்தது.

தொடரும்...

Continue Reading

You'll Also Like

66.7K 2.5K 36
காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உ...
166K 6.7K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
217K 9.9K 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயி...
121K 5.6K 25
பேரன்பின் உருவமாக அவள் வாழ்வில் நுழைபவன் அவன்..❤❤