இதய சங்கிலி (முடிவுற்றது )

By NiranjanaNepol

95.5K 4.9K 515

Love story More

1 இதயத்துடிப்பு
2 இந்து குமாரி
3 விளம்பரம்
4 விபரம்
5 மாறிய திட்டம்
6 திருமணம்
7 அர்ஜுனின் வீட்டில் இந்து
8 அபாயமான அணுகுமுறை
9 அர்ஜுனின் செயல்
10 எதிர் வினை
11 திடீர் மாற்றம்
12 மாற்றம் தந்த மயக்கம்
Part 13
Part 14
Part 15
Part 16
Part 17
Part 18
Part 19
Part 20
Part 21
Part 22
Part 23
Part 24
Part 25
Part 26
Part 27
Part 28
Part 29
Part 30
Part 31
Part 32
Part 33
Part 34
Part 35
Part 37
Part 38
Part 39
Part 40
Part 41
Part 42
Part 43
Part 44
Part 45
Part 46
Part 47
Part 48
Part 49
Part 50
Part 51
Part 52
Last part

Part 36

1.5K 96 9
By NiranjanaNepol

பாகம் 36

மறுநாள் காலை

வழக்கம் போல், அலுவலகம் செல்ல கிளம்பிகொண்டிருந்தான் அர்ஜுன். அப்போது அவன் சட்டையில் இருந்த ஒரு பொத்தான்,  கழண்டு விழுந்தது.

"டேமிட்..." என்றான்.

அப்பொழுது அவர்களுடைய அறைக்குள் நுழைந்தாள் இந்து.

"என்ன ஆச்சுங்க?"

"பட்டன் பிஞ்சு போச்சு" என்று தன் சட்டையைக் கழட்ட போனவனை, கையை பிடித்து தடுத்து நிறுத்தி,

"அவ்வளவு தானே... இருங்க, நான் தைச்சி கொடுக்கிறேன்" என்று அலமாரியிலிருந்து ஊசியையும், நூலையும் எடுத்து, கீழே விழுந்து கிடந்த பொத்தனை எடுத்து, அவன் சட்டையில் வைத்து தைய்கத் தொடங்கினாள்.

பொத்தானை தைத்துக்கொண்டிருந்த இந்துவை, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றான் அர்ஜுன். அவள் இப்படி அவனிடம் நெருங்கி, நெருங்கி வந்தால், அவன் எவ்வளவு நாள் திடமாய் இருக்க முடியும்? அதே நேரம், அவன் அருகில், அவள் வரக் கூடாது என்று, அவன் மனதார நினைத்தான் என்றும் சொல்வதற்கில்லை. உண்மையிலேயே அவள் தாம்பத்திய வாழ்வுக்கு ஏற்றவள் தானா? வித்யா, கோவிந்தனிடம் அப்படி  சொன்னதாக தானே கூறினாள் இந்து. ஆனால், வித்யாவைப் போன்ற ஒரு பேராசைக்கார பெண்மணியை எப்படி நம்புவது? கோவிந்தனை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க, அவள் பொய் கூட கூறியிருக்கலாம். அவளுடைய வார்த்தையை நம்புவது சரியாகாது.  ஆனால், தான் அவளை நிராகரிப்பதாக இந்து நினைத்துக் கொண்டால் என்ன செய்வது? என்ற எண்ணமும் அர்ஜுனுக்கு பயத்தை அளித்தது. அவர்களுக்கு இடையில் இருக்கும் ஒரு புரிதலை அது நிச்சயம் பாதிக்கும். ஆனால், அவளுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற பயத்துடன் எப்படி அவன் அவளை நெருங்க முடியும்? என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்தான் அர்ஜுன்.

"என்னை இப்படி வைச்ச கண் வாங்காம பாக்குறதை நிறுத்துங்க. நம்ம உறவைப் பத்தி நீங்க ரொம்ப யோசிக்க வேண்டாம். எனக்கு புரியுது. நம்ம நினைக்கிறபடி எல்லாம் நடக்கிறது இல்லை. எதார்த்தத்தை நம்ம ஏத்துகிட்டு தான் ஆகணும். அம்மா சொன்னதை நம்ம பெருசா எடுத்துக்க கூடாது." என்று அவள் கூற அசந்து போனான் அர்ஜுன்.

அவன் என்ன நினைக்கிறான் என்பதை, அவள் எப்படி தான் தெரிந்து கொள்கிறாளோ... அவள் அங்கிருந்து செல்ல எத்தனித்த போது. அவள் கையை பிடித்து நிறுத்தினான் அர்ஜுன்.

"நான் என்ன நினைக்கிறேன்னு உன்னால் எப்படி புரிஞ்சுக்க முடியுது?" என்றான் ஆச்சரியமாக.

தன் தோள்களை அனாயாசமாய் குலுக்கினாள் இந்து.

"ஐ லவ் யூ, இந்து" என்று அவள் நெற்றியில் இதழ் ஒற்றினான்.

"எனக்கு தெரியும்... சாப்பிட வாங்க"

சரி என்று தலையசைத்து விட்டு அவளைப் பின்தொடர்ந்தான் அர்ஜுன்.

 சங்கர் இல்லம்

தனக்கு காபி கொடுத்துவிட்டு, தன் முன்னால் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்த ரஹீமை, புரியாமல் பார்த்தார் சங்கர்.

"உங்களுக்கு ஏதாவது வேணுமா?" என்றார்.

"உங்ககிட்ட முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும்" என்றார் தயக்கத்துடன்.

" சரி சொல்லுங்க"

" மேடம் இங்க தான் இருக்காங்க" என்றார் மெல்லிய குரலில்.

"எந்த மேடம்?" என்றார் முகத்தை சுருக்கியபடி.

" மாஷா மேடம்" என்றார் ரகசியமாக.

"என்ன சொல்றீங்க நீங்க?" என்றார் அதிர்ச்சியுடன்.

"அவங்க நேத்து இங்க வந்தாங்க. அவங்க இங்க இருக்கிறதை உங்ககிட்ட சொல்ல கூடாதுன்னு சொன்னாங்க. ஆனா, அவங்க போன்ல பேசிக்கிட்டிருந்ததைக் கேட்டதுக்கப்புறம், என்னால, அவங்க இங்க இருக்குறதை சொல்லாம இருக்க முடியல"

"அவர் என்ன பேசினா?" என்றார் பீதியுடன்.

"அவங்க அர்ஜுன் தம்பி மேல ரொம்ப கோவமா இருக்காங்க. அவருடைய கல்யாண ரிசப்ஷன்ல, அவரை ஏதோ செய்ய பிளான் பண்ணி இருக்காங்க"

 தீவிரமாக யோசித்தார் சங்கர்.

"அவ சொல்றத கேட்டு நடக்குற மாதிரி அவளை நம்ப வைங்க. அவ இங்க இருக்கிற விஷயம், எங்களுக்கு தெரியும்னு அவளுக்கு தெரியக்கூடாது" என்று எச்சரித்தார்.

"சரிங்கய்யா"

ரஹிம் அதிர்ச்சி அடைந்தார், அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டு ஹீனா நிற்பதை பார்த்து. அவள் எதுவும் பேசுவதற்கு முன், தன் உதட்டின் மீது விரலை வைத்து, அவளை பேசாது இருக்குமாறு எச்சரிக்கை செய்தார் சங்கர்.

"அவங்க இங்க தான் இருக்காங்களா பா?" என்றாள் மெல்லிய குரலில் ஹீனா, அதிர்ச்சியில்.

"அப்படித் தான் ரஹிம் சொல்றாரு" என்றார் சங்கர்.

ஹீனா, ரஹீமை பார்க்க, அவர் ஆம் என்று தலையசைத்தார்.

"நான் சொன்னதை செய்ங்க ரஹிம்" என்றார் சங்கர்.

"சரிங்க, ஐயா" என்று கூறிவிட்டு சமையலறைக்குச் சென்றார் ரஹீம்.

"நான் அவங்களை என்ன செய்றேன்னு பாருங்க..." என்று கூறிவிட்டு, அவள் ஸ்டோர் ரூமை நோக்கி செல்ல முயன்ற போது,

"போகாத, நில்லு... அவ இங்க இருக்கிற வரைக்கும் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நம்மால அவளை கண்காணிக்க முடியும். நமக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சுன்னு அவளுக்கு தெரிஞ்சா, இங்க இருந்து தப்பிச்சி போக அவ முயற்சி செய்வா. அதுக்கு அப்புறம் அவளை நம்ம கண்காணிக்க முடியாது."

"நம்ம போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ணலாம்பா" என்றாள் அவள்.

"அவ போலீஸ்ல இருந்து தான் தப்பிச்சி இருக்கா. அதை மறந்துடாதே. அவ யாரை வேணும்னாலும் விலைக்கு வாங்குவா"

"இப்ப நான் என்ன செய்யணும்னு சொல்றீங்க?"

"உங்க அண்ணன் கிட்ட சொல்லு. என்ன செய்யணும்னு அவன் முடிவு பண்ணுவான்" என்றார் திடமாக.

"நம்ம ஏன் அவங்களை அந்த ரூம்ல வச்சு பூட்டிட கூடாது?"

"உங்க அண்ணன் அப்படி செய்ய சொன்னா, நிச்சயம் செய்யலாம். அவனைக் கேட்காம எதுவும் செய்ய வேண்டாம்ன்னு நான் நினைக்கிறேன்"

"சரி... நான் அவர் கிட்ட சொல்றேன்." என்றால் ஹீனா.

.....

சென்னை மாநகரத்தின் பிரசித்தி பெற்ற மருத்துவ மனையின், வரவேற்பறையில், பத்து நிமிடமாக காத்திருந்தான் அர்ஜுன். புகழ் பெற்ற இதய சிகிச்சை நிபுணரான சுந்தரை சந்திக்க அவன் அனுமதி பெற்று இருந்தான். தன் முறைக்காக காத்திருந்தான்.

அப்பொழுது வரவேற்பாளர் அவன் பெயரைக் கூறி அழைத்தார்.

"மிஸ்டர் அர்ஜுன்..."

" எஸ்... " என்று எழுந்து நின்றான் அர்ஜுன்.

"யூ மே கோ..."

"தேங்க்யூ" என்று கூறிவிட்டு சுந்தரின் அறைக்குள் நுழைந்தான் அர்ஜுன்.

சிவந்த நிறத்துடன், ஐம்பது வயது என்று நம்ப முடியாத அளவிற்கு இளமையான தோற்றத்தில் இருந்தார் டாக்டர் சுந்தர்.

"ஐ அம் அர்ஜுன்" என்று தன்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான் அர்ஜுன்.

"வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?" என்ற சுந்தரின் குரலில் பணிவு இருந்தது.

"எனக்கு முக்கியமான ஒரு விஷயத்தை பத்தி தெரிஞ்சுக்கணும். எனக்கு ஜென்யூன் ரிப்போர்ட் வேணும்"

"யா... ஷ்யூர் "

அவரிடம் இந்துவின் ஃபைலை நீட்டினான்.

"இது என் வைஃபோட ரிப்போர்ட். அவங்களுக்கு ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான்டேஷன் பண்ணி இருக்கு"

அந்த ரிப்போர்ட்டை படித்துப் பார்த்தார் சுந்தர். அவர் படித்து முடிக்கும் வரை பொறுமையாய் இருந்தான் அர்ஜுன்.

"நீங்க என்ன தெரிஞ்சுக்க நினைக்கிறீங்க?"

"நாங்க கல்யாண வாழ்க்கையை இன்னும் ஆரம்பிக்கல. என்னுடைய வைஃப், என்னை விட ரொம்ப சின்னவங்க. எங்க ரெண்டு பேருக்கும்  ஒன்பது வயசு வித்தியாசம். எங்களுடைய ரிலேஷன்ஷிப்பை நெக்ஸ்ட் லெவலுக்கு எடுத்துக்கிட்டு போகலாமா வேண்டாமான்னு எனக்கு தயக்கமா இருக்கு"

"முதல்ல நான் உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல நினைக்கிறேன். அவங்க உங்களைவிட சின்னவங்களா இருக்கலாம்... ஆனா, அவங்களுக்கு கல்யாண வயசு தான். அதைப் பத்தி நீங்க கவலைப்பட வேண்டியதில்ல"

அர்ஜுன் நிம்மதியுடன் தலையசைத்தான்.

"ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான்டேஷன் பண்ணதுக்கு அப்பறம், அவங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்துதா?"

"இல்ல டாக்டர், அதுக்கப்புறம் அவங்களுக்கு எந்த பிரச்சனையும் வரல"

"தாம்பத்திய நேரத்துல அவங்க எப்பவாவது அன்ஈஸியா ஃபீல் பண்ணாங்களா?"

"நாங்க இன்னும் ஆரம்பிக்கவே இல்ல டாக்டர்"

"அப்புறம் ஏன் தயங்குறீங்க?"

"எனக்கு பயமா இருக்கு. அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அதை என்னால தாங்க முடியாது"

"அவங்களுக்கு ஒன்னும் ஆகாது. நீங்க ஒரு வித்தியாசத்தை புரிஞ்சுக்கணும். அவங்க ஹார்ட் பேஷன்ட் இல்ல...  அவங்களுக்கு ஹார்ட் டிரன்ஸ்பிளாண்டேஷன் தான் பண்ணியிருக்கு. பலவீனமான அல்லது பிரச்சனை உள்ள இதயத்தை அவங்களுக்கு நிச்சயம் டாக்டர்ஸ் பொறுத்தி இருக்க மாட்டாங்க. நீங்க தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்ன்னு, அவங்களுக்கு ஹார்ட் டிரன்ஸ்பிளாண்டேஷன் பண்ண டாக்டர்ஸ் சொல்லி இருப்பாங்களே..."

அப்பொழுது இந்து கூறியதை நினைத்து பார்த்தான் அர்ஜுன்.

"அம்மா கோவிந்தன்கிட்ட எந்த பிரச்சனையும் வராதுன்னு சொன்னாங்க"

ஆமாம் என்று தலையசைத்தான் அர்ஜுன்.

"இதுல பயப்பட எதுவுமில்லை. ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான்டேஷன் பண்ண நிறைய பேர், சந்தோஷமா குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுகிட்டு தான் இருக்காங்க. சோ, ஜஸ்ட் கோ அஹெட்..." என்றார் சுந்தர் புன்னகையுடன்.

"தேங்க்யூ டாக்டர்" என்று அவருடன் சந்தோஷமாய் கை குலுக்கினான் அர்ஜுன்.

வெளியே வந்து நிம்மதி பெருமூச்சு விட்டான் அர்ஜுன். நிம்மதி என்றால், அப்பாடா என்றிருந்தது அவனுக்கு. அவன் தன் திருமண வாழ்வில் முன்னேறிச் செல்லலாம்... என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...  இந்துவிற்கு ஒன்றும் ஆகாது. அவனுக்கு வானுக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும் என்று தோன்றியது. எவ்வளவு நிம்மதி... என்ன ஒரு சந்தோஷம்...

அதே சந்தோஷத்துடன் காரில் ஏறி அமர்ந்தான்.

"இந்து செல்லம்... நேத்து ராத்திரி என்ன சொன்ன...? நான் உன்னை பார்த்து பயப்படுறேனா...? பார்க்கலாம்... யாரு யாரை பார்த்து பயப்படுறாங்கன்னு..." என்று கள்ளப் புன்னகை பூத்தான் அர்ஜுன்.

தொடரும்...

Continue Reading

You'll Also Like

20.9K 686 28
ஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..
13K 348 35
இது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்
42.6K 1.2K 45
காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r
86K 4.5K 55
அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல...