உன்னை விடமாட்டேன் (Stopped)

By LayolaJustinaMary

5.7K 683 250

Kutty story. KM love life. just 3-5 parts More

கல்யாணம்
சத்தியம்
தவம் நீ
ஒரு தலை காதல்
பொக்கிஷம்
பாப்பா எப்ப வரும்
ஆண் தேவதை
காதல்

அவருக்கு பிடிச்சது

561 72 40
By LayolaJustinaMary

உன்னை விட மாட்டேன் - 5

தன் காதல் கதையை கதிரிடம் முல்லை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டு இருக்க

கதிர்: அதெல்லாம் சரிடி.. என்ன விழுந்து விழுந்து love பண்ணிடு ஜீவா அண்ணன கட்டிக்க ஏன்டி மணமேடை வர வந்த

முல்லை: அதுவா....

கதிர்: அது தான் சொல்லு..

முல்லை: உனக்கு ஒரே அடியா எல்லா flashback ஐயை சொல்லு வாங்கலா

கதிர்: அடியேய்... மனுசன புலம்ப விடாத டி மரியாதையா சொல்லு

முல்லை: அதெல்லாம் இப்ப சொல்ல முடியாது போடா

கதிர்:  எப்பதான்டி சொல்லுவ

முல்லை: அத இப்ப சொன்ன story ku end போட வேண்டியது தான். ஆத்தர் நம்மள honey moon அனுப்ப யோசிச்சு இருக்காங்க. போய்டு வந்து FB சொல்றேன்.

கதிர்: இது என்னடி புது கதையா இருக்கு. இந்த கதிர் வாழ்க்கையில எந்த ஆத்தரும் அதெல்லாம் உடனே செய்ய மாட்டாங்களே.

முல்லை: KM பிரிக்கறதா புகார் வருதாம் அதான் இந்த திடீர் முடிவாம்.

கதிர்: எப்படியோ KM fans ஆள இந்த கதிருக்கு நல்லது நடக்குது.

முல்லை: அப்படியே நல்லது பண்ணிடாலும் சார் பின்னிபெடல் எடுத்துடுவாரு.

கதிர்: ஏன்டி நான் பெடல் எடுத்து நீ பாக்கல

முல்லை: யாரு நீனு.... அதான் பாத்தனே FN la

கதிர்: உனக்கு வாய் ஓவரா போய்கிட்டு இருக்கு...

முல்லை: அதுக்கு துரை என்ன பண்ண போறிங்க...

கதிர்: வாய்க்கு பூட்டு போட போறேன்...

முல்லை பேச தொடங்கும் முன் அவள் வாய்க்கு போடப்பட்டது பூட்டு 😘

இதுக்கு மேல அவங்க room ஆ எட்டி பாக்குறது தப்பு வாங்க ஓடி போய்டலாம்🏃🏃🏃

மறுநாள்......

ஆண்கள் அனைவரும் கடைக்கு சென்று விட

பெண்கள் மதிய உணவு செய்வதை பற்றி பேசிக்கொண்டு இருக்க

முல்லை கதிருக்கு பிடித்த உணவு வகைகளை சொல்ல அது மாமாவிற்கு பிடிக்காது ஜீவாவிற்கு பிடிக்காது என தனம் அனைத்தையும் வேண்டாம் என கூற

கதிருக்கு பிடிக்காது ஒரு உணவை மற்றவர்களுக்கு பிடிக்கும் என சமைக்க தயாராக

முல்லை: அது சமைக்க கூடாது

தனம்: ஏன் சமைக்க கூடாது

முல்லை: கதிருக்கு அது பிடிக்காது

தனம்: அவனுக்கு பிடிக்கலனா என்ன.. மத்தவங்களுக்கு பிடிச்சு இருக்குல

முல்லை: அவருக்கு பிடிக்காதத அவரு ஏன் சாப்பிடனும்

தனம்: அவன் எது குடுத்தாலும் சாப்பிடுவான்.. மத்தவங்க அப்படி இல்ல

முல்லை: மத்தவங்க அப்படி இல்லன... அவங்களையும் எது குடுத்தாலும் சாப்பிட நீங்க தான் சொல்லனும்... அத விட்டுடு என் புருஷனுக்கு பிடிக்காதத செஞ்சு அவர சாப்பிட சொல்றீங்க

தனம்: இங்க அப்படி தான்

முல்லை: பிடிச்சத சாப்பிட கூட என் புருஷனுக்கு இந்த வீட்ல உரிமை இல்லையா

தனம்: நா செய்றத தான் இங்க அவன் சாப்பிடனும்

முல்லை: அப்படி ஒன்னும் அவரு சாப்பிட வேணாம்

தனம்: அப்ப அவன சாப்பிடாம இருக்க சொல்லு

முல்லை: அவரு ஏன் சாப்பிடம இருக்கனும்...
வகை வகையா சமைக்க தெரிஞ்ச அவரு பொண்டாட்டி நான் இருக்கும் போது..

தனம்: நீ சமைக்க போறியா..

முல்லை: ஆமா..

தனம்: இந்த வீட்ல நா மட்டும் தான் சமைப்பேன்

முல்லை: உங்கள யாரு சமைக்க வேணாம்னு சொன்னா

தனம்: அப்புறம் நீ சமைக்குறனு சொன்ன

முல்லை: நா என் புருஷனுக்கு தான் சமைக்குறேனு சொன்னேன். உங்கள சமைக்க வேணாம்னு சொல்லல

தனம்: ஒரே வீட்ல இரண்டு சமையலா..

அத்த...

லெட்சுமி: ஏன் தனம் கத்துற

தனம்: அவ சொன்னத கேட்டிங்களா

லெட்சுமி: அவ சரியா தான் சொல்றா

தனம்: அத்த.... குடும்பம் பிரிஞ்சுடும்..

லெட்சுமி: நீ அவ சொன்னப்பவே... கதிருக்கு பிடிச்சத சமைக்குறேனு சொல்லி  இருந்தா இந்த பிரச்சனையே வந்து இருக்காது.

தனம்: அத்த...

லெட்சுமி: நீ சாதம் எல்லாருக்கும் வைச்சுடு.... மத்தவங்களுக்கு பிடிச்சதையும் செஞ்சுடு. முல்ல கதிருக்கு பிடிச்சத செய்யட்டும்.

மீனா அவ புருஷனுக்கு செய்யட்டும்.

மீனா: 😲 நா நா...

முல்லை MV : அவ சமைச்சு ஜீவா மாமா சாப்டா ஆளு காலி தான்😆

மீனா MV : என் சமையல சாப்பிட்டா  ஜீவா நிலைமை.. அய்யையோ....

தனம்: என்ன... மீனா நீயும் இவள மாதிரி எதாவது ஆரம்பிக்க யோசிக்கிறியா

மீனா: அப்படி எல்லாம் இல்ல... எப்பயும் போல நீங்களே சமைங்க.. நா எல்லாம் குடும்பத்த பிரிக்கிறவ இல்ல

தனம்: குடும்பத்த பிரிக்க தான் இங்க ஒருத்தி இருக்காலே

முல்லை: சமைக்க தெரியாதுனு ஒத்துக்க வக்கு இல்ல.. என்ன பாத்து குடும்பத்த பிரிக்கிறனு பேசுறா பாரு

மீனா: ரொம்ப பேசாத முல்ல

முல்லை: உன்ட எவன்டி பேசுனான்.. நான் உண்மைய உலகத்துக்கு சொன்னேன்

தனம்: முல்லலல...

முல்லை: கத்தாதீங்க... நா போய் என் புருஷனுக்கு சமைக்கனும்

என்று சொல்லி விட்டு சென்ற முல்லை கதிருக்கு பிடித்தவற்றை சமைத்து வைத்துவிட்டு கதிருக்காக காத்து கொண்டிருந்தாள்.

ஆண்கள் அனைவரும் மதிய உணவு உண்ண வீட்டிற்கு வந்தனர்.

தனம் மூர்த்தி ஜீவாவிற்கு பரிமாற. முல்லை கதிருக்கு பரிமாறினாள்.

இருவருக்கும் இரு வேறு உணவு வகைகள் பரிமாறப்பட்டது.

கதிருக்கு வைக்கப்பட்ட அனைத்தும் அவனுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகள். இது வரை இந்த வீட்டில் அவைகள் சமைக்கப்பட்டது இல்லை.

புரிந்து கொண்டான் கதிர், முல்லை தனக்காக செய்து இருக்கிறாள் என்று

அவன் மனதில் அளவில்லா மகிழ்ச்சி.

தனக்கு என்ன பிடிக்கும் என அதை செய்து தரும் ஒருத்தி.

இதுவரை அவனுக்கு யாரும் இது போல பிடித்ததை கொடுத்தது இல்லை.

இந்த வீட்டில் அவன் எந்த நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறான் என்று இன்று தான் அவன் உணர்கிறான்.

மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரே வீட்டில் இரண்டு சமையல் அது தவறில்லையா?

முல்லையை தவறாக நினைக்க மாட்டார்களா?

தனக்காக அவள் அன்புடன் செய்யும் ஒவ்வொன்றும் மற்றவர்களுக்கு தவறாக தெரியுமே?

குடும்பத்தை பிரிப்பவள் என்று பெயர் கிடைக்குமே?

தன் மீது கொண்டு காதலுக்காக அவள் இதை ஏற்று கொள்வாள். இது அவனுக்கு நன்கு தெரியும்.

அவளின் காதலுக்கு நான் தகுதியானவனா?

இல்லை... இல்லை...

மூர்த்தி: என்ன தனம் இது ...

மூர்த்தியின் சத்தம் கேட்டு சுயநினைவிற்கு வந்தான் கதிர்.

தனம்: மாமா முல்ல தான் கதிருக்கு தனியா...

மூர்த்தி: தனி சமையலா...

முல்லை: தனி சமையல் இல்ல... பிடிச்சதை சமைச்சேன் அவ்வளவு தான்

மூர்த்தி: இந்த வீட்ல இரண்டு சமையலா

தனம்: ஆமா.. மாமா.. அவ குடும்பத்த பிரி...

லெட்சுமி: தனம் தேவை இல்லாதத பேசாத

மூர்த்தி: அம்மா.. எது தேவை இ...

லெட்சுமி: மூர்த்தி உனக்கும் தான் சொல்றேன். உன் பொண்டாட்டி உனக்கு பிடிச்சத சமைக்குற மாதிரி முல்ல அவ புருஷனுக்கு சமைக்கிறா இதுல தப்பு இல்ல.

இனி இதபத்தி யாரு பேசக்கூடாது. முல்லைய பத்தி தப்பா பேசக்கூடாது

அனைவரும் உணவருந்தி விட்டு தங்கள் அறைக்கு சென்றனர்.

லெட்சுமியின் மனநிலை....

தான் தன் பிள்ளைகளை பார்க்க முடியாத நிலை வந்த பிறகு தன் பிள்ளைகள் சிரமப்பட்டு தான் வளந்து வந்தனர்.

அதில் லெட்சுமியின் செல்ல மகன் கதிருக்கு இங்கு எதுவும் சரியாக கிடைப்பதில்லை.

அவனின் படிப்பு அவன் விரும்பியும் அவனுக்கு அது மறுக்கபபட்டது.

கடையில் அதிகப்படியான வேலை பளு அவன் மீது சுமத்தப்படுகிறது.

பிடித்த உணவு கூட அவனுக்கு கிடைக்கவில்லை.

திடீர் என முல்லை அவனை மணக்கவில்லை என்றால் அவனுக்கு திருமணம் என்ற ஒன்று நடக்க வாய்ப்பில்லை.

அதை அவனுக்கு செய்து வைக்கும் நிலையில் லெட்சுமி இல்லை.

மற்றவர்களுக்கு மனமும் இல்லை.

இவை எல்லாம் நன்கு அறிந்தவர் லெட்சுமி. ஆனால் அவரால் அதை சரி செய்ய முடியவில்லை.

இன்று அதை சரி செய்ய வந்துள்ளால் முல்லை.

முல்லை கட்டாயத்தில் தான் கதிரை மணந்தாள்.

அவளுக்கு அவனை பிடித்துள்ளதா?

அவனை அவள் ஏற்றுக்கொண்டாளா?

எப்படி கதிர் உரிமைக்கா அவள் குரல் கொடுக்கிறாள்?

எது எப்படியோ தன் செல்லமகன் நன்றாக வாழ்ந்தால் போதும்.

அதற்கு தன்னால் முடிந்த உதவியை அவனுக்கும் முல்லைக்கும் செய்ய வேண்டும்.

அவன் இழந்த மகிழ்ச்சி மரியாதை உரிமை கௌரவம் அவனுக்கு கிடைக்க வேண்டும்.

இவற்றை எண்ணிக்கொண்டே உறங்கி போனார் லெட்சுமி.

KM room...

கதிர்: முல்ல...

முல்லை:என்ன கதிரு..

கதிர்:....

முல்லை: கதிரு... கதிரு...

கதிர் முல்லையை கட்டிக்கொண்டு அழத் தொடங்கினான்.


சந்திப்போம்....🙏

Continue Reading

You'll Also Like

5.7K 683 9
Kutty story. KM love life. just 3-5 parts
36.4K 3.8K 28
மூன்று குடும்ப பெண்மணிகளின் சீரியல்களுக்குள் தொலைந்த வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அசாத்திய, அட்வெஞ்சராக மாறுவதை நகைச்சுவை கலந்து தொடுத்துள்ளேன்...
2 0 1
தமிழ் ஹைக்கூ
211 20 6
ஒரு சிறுமியின் கற்பனையில் உருவாகும் கதையில் மடப்பள்ளி சமையலுக்காக கொண்டு வரப்படும் நம் கதையின் நாயகர்கள் மற்றும் நாயகிகள் அவர்களுடைய வாழ்வை அந்த அறைய...