விழியின் ஒளியானவள் (முடிவுற்ற...

By Aashmi-S

19.7K 984 325

இது என்னுடைய ஐந்தாவது கதை இந்த கதையில் நாயகி பிறந்தது முதல் கண் பார்வை இல்லாதவள் ஆனால் அதை ஒரு குறையாக கருதாம... More

விழியின் ஒளியானவன்
ஒளி 1
ஒளி 2
ஒளி 3
ஒளி 4
ஒளி 5
ஒளி 6
ஒளி 7
ஒளி 8
ஒளி 9
ஒளி 10
ஒளி 11
ஒளி 12
ஒளி 14
ஒளி 15
ஒளி 16
ஒளி 17
ஒளி 18
ஒளி 19
ஒளி 20
ஒளி 21
Amazon kindle free
ஒளி 22
ஒளி 23
ஒளி 24
ஒளி 25
ஒளி 26
ஒளி 27
ஒளி 28
ஒளி 29
ஒளி 30
ஒளி 31
ஒளி 32
ஒளி 33
ஓளி 34
ஓளி 35
ஒளி 36
ஓளி 37
ஒளி 38
ஒளி இறுதிப்பகுதி

ஒளி 13

462 26 13
By Aashmi-S

மித்ரன் ஹரி மற்றும் விஷ்வா இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு டிடெக்டிவ் வர சொல்லி இருந்த இடத்திற்கு கிளம்பினான். அங்கு அவன் வந்து சேர்ந்தபோது அவனுக்காகவே அந்த டிடக்டிவ் காத்துக்கொண்டு இருந்தார்.

அதை பார்த்த மித்ரன் அவரிடம் "சாரி கொஞ்சம் நேரம் ஆயிடுச்சு மன்னிச்சிடுங்க" என்று தன்னுடைய மன்னிப்பைக் கேட்டுக் கொண்டே வந்து அமர்ந்தான். அதற்கு அவர் "பரவாயில்லை மித்ரன் நானும் வந்து பத்து நிமிடம் தான் ஆகிறது அதனால் எந்த பிரச்சனையும் இல்லை" என்று கூறினார்.

மித்ரன் அவரைப் பார்த்து சிரித்து விட்டு "நீங்கள் சென்ற விஷயம் நல்லபடியாக முடிந்ததா நான் கேட்ட தகவல்கள் அனைத்தும் கண்டுபிடித்து விட்டீர்களா" என்று கேட்டான்.

அந்தத் டிடெக்டிவ் மித்ரன் முகத்தை பார்த்துவிட்டு "மித்ரன் நீங்க எதுக்காக அந்த பொண்ண பற்றிய விபரங்கள் கேட்டீங்க என்று எனக்கு முதலில் தெரியாது ஆனால் அந்த பெண்ணை பற்றி விசாரிக்கும் போதுதான் அனைத்தும் தெரிந்தது உங்களிடம் ஒரு உண்மையை கூற நினைக்கிறேன். அது என்னவென்றால் உங்களுக்கும் அந்த பெண்ணிற்கும் நடந்த திருமணம் திட்டமிட்டு செய்யப்பட்டது ஆனால் இதற்கும் அந்த பெண்ணிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது" என்று கூறி மித்ரன் முகம் பார்த்தார்.

மித்ரனுக்கு ஏற்கனவே இந்தத் திருமணம் திட்டமிட்டு செய்யப்பட்டது என்பது புரிந்து இருந்தது. ஆனால் இதில் விஷ்ணு சம்பந்தப்பட்ட இருப்பாள் என்றுதான் அவன் இவ்வளவு நாளும் நினைத்து இருந்தான் ஆனால் அந்த டிடெக்டிவ் நடந்த எதற்கும் விஷ்ணுவிற்கும் சம்பந்தம் இல்லை" என்று கூறுவது எனக்கு குழப்பமாக இருந்தது அதே குழப்பத்துடன் அவர் முகத்தைப் பார்த்தான்.

அந்த டிடெக்டிவ் அவன் குழப்பமான முகத்தை பார்த்து சிரித்து விட்டு "உங்களுடைய மனைவி பெயர் விஷ்ணு பிரியா வெங்கடேசன் மற்றும் ஆண்டாள் இருவருக்கும் பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம். ஆனால் பிறந்தது முதல் அவளுக்கு கண் பார்வை கிடையாது" என்று கூறி மித்ரன் முகம் பார்த்தார் விஷ்ணுவிற்கு கண் தெரியாது என்ற விஷயம் தெரிந்தவுடன் மித்ரன் அதிர்ச்சியில் உறைந்து போனான்.

அவனுடைய அதிர்ந்த முகத்தை பார்த்து மறுபடியும் சிரித்து விட்டு விஷ்ணு பற்றிய தகவல்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக கூறினார் அதில் விஷ்ணு சாதித்த விஷயங்கள் கல்லூரியில் அவளுக்கு கிடைத்த உண்மையான நட்பு அதாவது அஸ்வின் மற்றும் அரவிந்த் பற்றிய விவரங்களை கூறிவிட்டு அவர்கள் இருவரின் புகைப்படத்தையும் மித்ரன் கையில் கொடுத்தார்.

அஸ்வின் முகத்தை பார்த்த மித்ரன் இன்னும் அதிர்ச்சி அடைந்தான். பின்பு அவர் முழுவதுமாக கூறி முடிக்கட்டும் என்று நினைத்து அவர் முகத்தை பார்த்தான்.

அவர் மகிழினி புகைப்படத்தை எடுத்து மித்திரன் கையில் கொடுத்துவிட்டு "உங்கள் மனைவி பிறந்தது முதல் இன்றுவரை அவளுடன் இருப்பது இந்த உயிர்த்தோழி தான் உங்களுடைய திருமணத்தில் நிச்சயமாக இவளை பார்த்து இருப்பீர்கள் என்று எனக்கு தெரியும். அதேபோல் இன்னொரு விஷயத்தையும் கூறுகிறேன் அது என்னவென்றால் உங்களுடைய திருமணம் நடப்பதற்கு 50 நாட்களுக்கு முன்பு தான் உங்கள் மனைவியின் பெற்றோர் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்று இருக்கின்றனர்.

இதில் நீங்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் உங்களுடைய திருமணம் நடப்பதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே மித்ரன் என்ற ஒருவன் அவளுடைய பெற்றோருக்கு அறிமுகமாகியிருக்கிறார். அவர் தனக்கு விஷ்ணுவை பிடித்திருப்பதாகவும் கண்டிப்பாக அவளைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அவர் கூறிய தகவல் அனைத்தும் பொய் எப்படி எல்லாம் ஏமாற்ற வேண்டுமோ அப்படி எல்லாம் ஏமாற்றி கடைசியில் உங்களையும் உள்ளே இழுத்துவிட்டு இந்த திருமணம் நடந்திருக்கிறது இது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் மனைவிக்கும் சேர்த்து செய்யப்பட்ட சதிவலை. இன்னும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. ஆனால் அதை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வீர்கள் என்று எனக்கு தெரியவில்லை" என்று கூறி மித்ரன் முகத்தை பார்த்தார்.

ஒன்றன்பின் ஒன்றாக கேட்க கேட்க விஷ்ணு வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக மித்ரனுக்கு புரிய ஆரம்பித்தது. தான் தான் தவறாக நினைத்து இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டான். இன்னும் ஏதோ கூற வந்து அவர் தயங்கி நிற்பதை பார்த்தவன் "எதுவாக இருந்தாலும் தயங்காமல் கூறுங்கள் எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை" என்று கூறினான்.

அந்த டிடெக்டிவ் மித்ரன் முகத்தை பார்த்து கொண்டே "நீங்கள் அன்று திருமணம் முடிந்தவுடன் கிளம்பி சென்று விட்டீர்கள் அதன் பிறகு உங்களுடைய மனைவி அவர்கள் ஊரில் யாரும் இருந்து உங்களை தொடர்பு கொள்ள கூடாது என்று கூறியிருக்கிறார். அவரால் தான் உங்கள் வாழ்க்கை கஷ்டத்தில் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டு யாரும் உங்களை தொடர்பு கொண்டு உங்களை தொல்லை செய்யக்கூடாது என்று கூறியிருக்கிறார். ஆனால் அவருக்கு தெரியாமல் அவருடைய உயிர்த்தோழி உங்களை சந்திக்க முடிவு செய்து வந்தபோது நீங்கள் வெளிநாட்டில் இருந்த காரணத்தினால் உங்களை சந்திக்க முடியாமல் போயிருக்கிறது. இப்போது உங்கள் மனைவி அவர்களது தோழி மற்றும் ஒரு சிலர் சேர்ந்து தங்களால் முடிந்த சிறு சிறு பிராஜெக்ட் வேலைகளை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் அதிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்படுத்துகிறார்கள் பொறாமை கொண்ட சிலர். அதேபோல் உங்கள் மனைவியின் தோழி மகிழினி தான் உங்கள் தம்பி ஹரி விரும்பும் பெண்" என்று கூறி முடித்தார்.

அவர் கூறிய அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவன் இறுதியாக கூறிய விஷயத்தை நினைத்து அவனுக்கு மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. ஏனென்றால் முதல் பார்வையிலேயே மகிழினி மேல் அவனுக்கு ஒரு பாசம் வந்து இருந்தது. அதனால் அவளுக்கு மகிழினி ஹரி இருவரும் விரும்புவதை எந்தவித பிரச்சனையும் இருக்கவில்லை அப்போதுதான் மித்ரன் காலையில் நடந்த ஒரு விஷயம் ஞாபகம் வந்தது இன்று காலை ஹரி ஆக்சிடென்ட் என்று கூறியது அவனுக்கு நினைவில் வந்தது.

அது ஞாபகம் வந்தவுடன் அது தன் மனைவியாகத் தான் இருக்கும் என்ற விஷயமும் அவனுக்கு உரைத்தது. அதன் பிறகு ஒரு நிமிடம் மேல் அங்கே இருக்க முடியவில்லை அதனால் உடனடியாக அங்கிருந்து கிளம்ப முடிவு செய்து அந்த டிடெக்டிவ் பார்த்து "எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நீங்க கொடுத்த எல்லா தகவலுக்கும் ரொம்ப நன்றி. உங்களுக்கு தேவையான பணம் அனைத்தையும் உங்களுடைய அக்கவுண்டில் போட்டுவிடுகிறேன். இப்பொழுது எனக்கு ஒரு அவசரமான வேலை இருக்கிறது அதனால் உடனடியாக கிளம்புகிறேன்" என்று கூறி அவருடைய காதலி கூட எதிர்பார்க்காமல் கிளம்பி விட்டான்.

உடனடியாக மருத்துவமனை செல்ல நினைத்தவனாய் அங்கிருந்து கிளம்ப அவனுடைய அவசரத்தை பார்த்து ஏதோ ஒரு பிரச்சனை என்பதை யூகித்துக் கொண்ட அந்த மனிதர் அமைதியாக அவன் கிளம்புவதற்கு அனுமதி அளித்து விட்டார். மருத்துவமனை செல்ல நினைத்தவனை அவனுடைய கம்பெனியில் ஏற்பட்ட சிறு பிரச்சனை செல்ல விடாமல் தடுத்தது. அதனால் தன்னுடைய தம்பி இருவரும் அங்கு இருப்பதால் எந்தவித பிரச்சனையும் இருக்காது என்பதை அறிந்து கொண்டவன். விரைவாக தன்னுடைய வேலை அனைத்தையும் முடித்துவிட்டு அங்கு வந்து சேர்ந்தான்.

அங்கு மருத்துவமனை வந்திருந்த ஹரி மற்றும் விஷ்வா இருவரும் மகிழ்க்கு மிகவும் உதவியாக இருந்தனர். அவளுக்கு ஹரி ஆறுதல் கூறிய போது இருவரையும் பார்த்து ஒரு சோர்ந்த சிரிப்பு சிரித்த மகிழினி "ஹரி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா நான் காலேஜ்ல இருந்து அவசரமாக போல முக்கிய காரணம் அடுத்த நாள் விஷ்ணுவிற்கு திருமணம் இருந்தது அதனால் தான் உன்னை கூட பார்க்காமல் அவ்வளவு அவசரமாக ஓடினேன். ஆனால் என்னுடைய விஷ்ணுவிற்கு திருமணம் எப்படி நடந்தது தெரியுமா அவளுடைய அப்பா அம்மா பார்த்த மாப்பிள்ளை யார் என்று தெரியாமல் வெறும் மித்ரன் என்ற பெயரை மட்டும் வைத்து தெரியாத யாரோ ஒருவரை என்னுடைய விஷ்ணுவிற்கு திருமணம் செய்து வைத்து இருக்கிறோம் நானும் என்னுடைய ஊரில் உள்ள அனைவரும். இதில் அந்த மனிதன் கோபப்பட்டு திருமணத்தை மட்டும் முடித்து விட்டு சென்று விட்டார்.

தாலி கட்டும் சமயத்தில் வேறொருவர் இருப்பதை உணர்ந்த விஷ்ணு அதிர்ச்சியில் வாய் பேச முடியாமல் அமைதியாகி விட்டாள். அதன்பிறகு அனைத்தும் நடந்து முடிந்து விட அவள் வாழ்க்கை இப்படி இருக்கிறதே என்று நாங்கள் இருந்தபோது அவளுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர் அந்த கூறினார்.

அதாவது விஷ்ணுவை திருமணம் செய்வதாக கூறி அவரின் பெயர் மகேஷ் அவன் விஷ்ணு திருமணம் முடியும் வரை அங்கு தான் காத்திருந்து இருக்கிறான். ஆனால் எதற்காக இப்படி விஷ்ணு வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கினான் என்று எங்களுக்கு சுத்தமாக புரியவில்லை அதேபோல் தன்னை திருமணம் செய்தவரை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று விஷ்ணு திட்டவட்டமாக கூறி விட்டாள். அதை மீறி நாங்கள் அவரை சந்திக்க சென்றாலும் எங்களால் அவரை சந்திக்க முடியவில்லை அப்படி என் விஷ்ணு யாருக்கு என்ன பாவம் செய்தாள் அவர் வாழ்க்கையில் கஷ்டங்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது" என்று இதுவரை இருந்த முகத்தையும் பார்க்காமல் கூறி முடித்து விட்டு குனிந்து அமர்ந்து விட்டாள்.

அண்ணன் தம்பி இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவளுக்கு நன்றாக புரிந்தது தன்னுடைய ஆனால் இந்த திருமணம் நடந்து இருக்கிறது இதுவரை விஷ்வா மனதில் தன் அண்ணனை திருமணம் செய்தவள் வேண்டுமென்றே செய்திருக்கிறாள் திட்டமிட்டு செய்து இருக்கிறார் என்ற எண்ணம் மொத்தமாக வடிந்தது. அவனுக்கு தற்போது தன் அண்ணனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சி தான் வந்தது ஆனால் விஷ்ணு நல்லபடியாக திரும்பி வரவேண்டும் அவளுக்கு கண் பார்வை கிடைத்து விட வேண்டும் என்று இருவரும் மனதிற்குள் வேண்ட ஆரம்பித்தனர்.

அனைத்தும் நல்லபடியாக முடிந்து விஷ்ணுவும் கண்களை திறந்தாள் பிறந்தது முதல் இதுநாள் வரை எந்த ஒரு விஷயத்தையும் பார்க்காத விஷ்ணு முதல்முதலாய் பார்த்து தன்னுடைய ஆருயிர் தோழி மகிழினி முகத்தை தான் அதன் பிறகு பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஹரி மற்றும் விஷ்வா இருவரையும் பார்த்தாள். மூவரையும் பார்த்து அவளது கண்களில் இருந்து கண்ணீர் வந்த போதே அவளுக்கு கண் பார்வை வைத்து விட்டது என்பதை அறிந்த மருத்துவர்கள் மற்றும் உள்ளே நின்ற மூவரும் மிகவும் மகிழ்ந்து போனார்கள்.

அதன்பிறகு மருத்துவர் ஒரு சில அறிவுரைகளை கூறி விட்டு வெளியே சென்றார் அப்போது சரியாக மித்ரன் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் அவன் முகத்தை பார்த்த விஷ்ணு மட்டும் அமைதியாக இருக்க மற்ற மூவரும் அதிர்ந்தனர். அவர்கள் மூவரையும் கண்களாலேயே எச்சரித்தனர் சகஜமாக உள்ளே வந்து நின்று கொண்டான்.

அவருடைய பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவர்கள் அமைதியாக நின்று கொண்டனர். அப்போது தான் மருத்துவர் உடன் உள்ளே வந்த ஒரு நர்ஸ் விஷ்ணுவின் நகைகள் அனைத்தும் கொண்டு வந்து கொடுத்தார் எப்பொழுதும் ஆபரேஷன் தியேட்டர் செல்வதற்கு முன்பு அழைத்து அதனை உரிமையாளர்களிடம் கொடுத்து விடுவார்கள். ஆனால் மகிழினி இருந்த நிலைமையை பார்த்தவர்கள் அவள் சரியான பிறகு கொடுத்துக் கொள்ளலாம் என்று வைத்து இருந்தனர்.

இப்போது அவள் சகஜமாக மாறி விடவே அனைத்தையும் கொண்டு வந்து கொடுத்தனர் அதில் விஷ்ணுவின் தாலியும் இருந்தது. அதைப்பார்த்த மகிழினி நிமிர்ந்து மித்ரன் முகத்தை பார்த்தாள். அவன் கண்களாலேயே அவளுக்கு சமாதானம் கூறினான். சிறிது நேரத்தில் விஷ்ணு மறுபடியும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள். அதை பார்த்த மற்ற மூவரும் பதற அங்கே நின்று கொண்டிருந்த நர்ஸ் "எதற்காகவும் கவலைப்படாதீர்கள் அவங்க இப்பதான் கண்முழித்து இருக்காங்க அவங்களுக்கு மயக்க மருந்து கொடுத்ததோட ரியாக்சன் இன்னும் இருக்கும் இன்னும் ஓரிரு மணி நேரங்களில் சகஜமாக மாறி விடுவார்கள். அதனால் கவலைப்பட வேண்டாம்" என்று கூறினார். அதன் பிறகு தான் அங்கு இருந்த அனைவருக்கும் நிம்மதி பெருமூச்சு வந்தது.

அனைவரையும் ஒரு பார்வை பார்த்த மித்ரன் மகிழினி கையிலிருந்த தாலியை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த விஷ்ணு அருகில் சென்று அவள் கழுத்தில் அணிவித்து விட்டான். பின்பு மூவரையும் பார்த்து வெளியே வருமாறு சைகை காண்பித்துவிட்டு வெளியே சென்றான்.

மித்ரன் பின்னால் விஷ்வா செல்ல ஹரி மகிழினி கையைப் பிடித்து "முன்னாடி போறது இரண்டுமே என்னோட அண்ணன் விஷ்ணுவை கல்யாணம் செய்து இருப்பது என்னுடைய முதல் அண்ணன் இனி அவளுடைய வாழ்க்கைக்கு எந்தவித பிரச்சனையும் வராது அதற்கு நான் பொறுப்பு அதனால் எதை நினைத்து பயப்படாமல் வா" என்று கூறி அழைத்து வந்தான். அது வரை ஒருவித பயத்தில் இருந்த மகி அவன் தாலி எடுத்து விஷ்ணு கழுத்தில் கட்டிய போது சிறிது தெளிந்தாள். பின்பு ஹரி கூறிய வார்த்தையில் முழுவதுமாக தெளிந்து அமைதியாக வந்தாள்.

மகிழினி முகத்தில் இருந்த தெளிவை வைத்தே ஹரி தாங்கள் இருவரும் அவனுடைய அண்ணன் என்பதை கூறி விட்டான் என்பதை உணர்ந்துகொண்ட மித்ரன் மகிழினி முகத்தை பார்த்து "நானா சொல்ற வரைக்கும் நான்தான் விஷ்ணுவின் கணவன் என்ற உண்மையை நீ அவளிடம் கூறக்கூடாது" என்று கூறினான்.

மூவரும் எதற்காக மித்ரன் இவ்வாறு கூறுகிறான் என்று புரியாமல் அவன் முகம் பார்த்தனர். மூவரையும் பார்த்த மித்ரன் "ஹரி கூறியது போல எனக்கு அவளைப் பார்த்தவுடன் பிடித்து விட்டது. ஆனால் விஷ்ணுவோ என்ன தான் அனைத்து இடங்களிலும் சாதித்து இருந்தாலும் அவள் மனதில் ஒரு குற்றவுணர்ச்சி இந்தத் திருமணத்தைப் பற்றி இருக்கிறது. அந்த நாள் நான் அவளை உடன் இருந்து பார்த்து ஒவ்வொரு விஷயத்தையும் அவளுக்காக செய்து காதலித்து அவளுடைய மனதில் இடம் பிடிக்கப் போகிறேன் அதற்கு நீங்கள் மூவரும் தான் எனக்கு உதவ வேண்டும்" என்று கூறி முடித்தான்.

அதைக்கேட்ட மூவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது விஷ்வாவிற்கு கூடுதல் ஆச்சரியமும் வந்தது பெண்கள் மேல் தன்னுடைய அண்ணனுக்கு இருந்த வெறுப்பு எவ்வளவு என்பது அவனுக்குத் தெரியும் அது அனைத்தும் மாறியது மட்டுமில்லாமல் அவன் காதலிக்க ஆரம்பித்தது அவனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. ஆனாலும் மகிழ்ச்சியாக இருந்தது ஹரி உச்சகட்ட மகிழ்ச்சியில் நின்று கொண்டு இருந்தான்.

மகிழினி சிறிது நேரம் யோசித்துவிட்டு மித்ரன் முகத்தை பார்த்து "நீங்க சொல்றதுக்கு எல்லாம் எனக்கு சம்மதம் ஆனால் எப்பொழுது விஷ்ணுவிற்கு உங்கள் மேல் ஒரு ஈர்ப்பு அல்லது காதல் வருகிறதோ அப்போதே நான் நீங்கள் தான் அவளுடைய கணவர் என்ற உண்மையை சொல்லி விடுவேன். அதற்கு காரணம் என்னவென்றால் ஏற்கனவே ஒருவர் கையால் தாலி வாங்கி விட்டு இன்னொருவருடன் வாழ்வதற்கு விஷ்ணு நிச்சயம் விரும்ப மாட்டாள். ஆனால் அதே சமயம் உங்களை தொந்தரவு செய்யவும் அவள் விரும்ப மாட்டாள் அதனால் அவளுடைய மனதில் குழப்பம் ஏற்பட்டு அவள் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியாது. அப்படி ஒரு சூழ்நிலை வரும் போது நிச்சயமாக நீங்கள் கூறவில்லை என்றாலும் நான் உண்மையை கூறி விடுவேன்" என்று தெளிவாக தன்னுடைய முடிவை கூறினாள்.

மகிழினி முடிவைக் கேட்ட மற்ற மூவருக்கும் அவர்களின் நட்பை பார்த்து மனதில் பெருமிதம் கொள்ள தான் தோன்றியது. தன்னுடைய தோழி எதற்காகவும் வருந்தக் கூடாது என்ற காரணத்திற்காக அனைத்தையும் யோசித்து செய்யும் அவளை நினைத்து மூவருக்கும் பெருமை கூடவே பாசமும் வந்தது.

மித்ரன் மகிழினி அருகில் வந்து "நிச்சயமாக உன்னுடைய தோழி இனி வருத்தப்படும் நிலைமைக்கு வர மாட்டாள். அதே போல் நீயும் இனி எதை நினைத்தோம் கஷ்டப்பட நிலைமைக்கு வருவதற்கு நாங்கள் மூவரும் விடமாட்டோம் அதேபோல் ஒரு சில வேலைகள் நீ எனக்காக செய்ய வேண்டியிருக்கிறது அதை செய்வாயா" என்று கேட்டான்.

மகிழினி அதற்கு சம்மதமாக தலையை அசைக்க சிறிது நேரத்தில் விஷ்ணு செய்துகொண்டிருந்த வேலை அனைத்தும் மித்ரன் கம்பெனியோட இணைந்தது. இனி வேலை செய்வதற்கு அனைவரும் மித்ரன் கம்பெனி செல்ல வேண்டும் அனைவரும் இணைந்து ஒன்றாகவே வேலை பார்க்க வேண்டும். எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் விஷ்ணு எடுக்கும் முடிவை மித்ரன் ஒரு முறை அலசி ஆராய்ந்த பிறகே அந்த முடிவு இறுதி செய்யப்படும். அந்த முடிவை மித்ரன் நிராகரிக்க வேண்டுமென்றால் அதற்கு தகுந்த காரணத்தை கூற வேண்டும். இப்படி பல விதிகளோடு இவர்களின் ஒப்பந்தம் தயாரானது விஷ்ணு உடம்பு சரியில்லாமல் இருந்த காரணத்தினால் மகிழினி அனைத்திற்கும் கையெழுத்திட்டு கொடுத்தாள்.

அனைத்தையும் வாங்கி பார்த்த மித்ரன் மனதில் "இனி என்னோட செல்லக்குட்டி என் பக்கத்திலேயே இருக்கப் போறா நானும் எல்லா பொண்ணு மாதிரி அவளை தப்பா நினைச்சிட்டேன். வாழ்க்கையில எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்கா இனி அவளோட வாழ்க்கையில ஒவ்வொரு நிமிஷமும் நான் சந்தோஷத்தை மட்டும்தான் கொடுக்கணும் முதல்ல எல்லா விஷயத்தையும் வீட்ல சொல்லி அப்பா அம்மாகிட்ட சம்மதம் வாங்கணும்" என்று எண்ணிக் கொண்டு அமர்ந்து இருந்தான்.

சிறிது நேரத்தில் விஷ்ணு கண்விழிக்க மகிழினி அனைவரையும் பார்த்து முதல்ல நான் போய் இந்த விஷயம் எல்லாத்தையும் சொல்லி விட்டு உங்களை அழைத்துச் செல்கிறேன். அதுவரை நீங்கள் அனைவரும் இங்கேயே இருங்கள் என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள்.

விஷ்ணு கண் விழித்து அமர்ந்த இருக்க அவள் அருகில் சென்ற மகிழினி முதலில் வேலை சம்பந்தமாக முடிவெடுத்த அனைத்தையும் கூறினாள். அதை முழுவதுமாக கேட்ட விஷ்ணு தன்னுடைய முடிவை கூற ஆரம்பித்தாள்.

விஷ்ணு முடிவு என்னவாக இருக்கும் அவள் அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்து மித்ரன் உடன் இணைந்து வேலை செய்வாளா?

இனி அவள் வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே நிலைத்து இருக்குமா?

இதுபோன்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்த அத்தியாயங்களில் விடை காண்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.

Continue Reading

You'll Also Like

65.6K 3.6K 65
உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுப...
107K 3.4K 44
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் ப...
80.2K 5K 54
வாழ்க்கை எப்படி எப்போது மாறும் என்று யாருக்கும் தெரியாது. அது போகும் போக்கில் செல்ல பழகிவிட்டால் பல ஆச்சரியங்களை அது நமக்கு பரிசளிக்கிறது. அப்படிப்பட...
502 10 3
என்னோட முதல் கதை... இப்போ அமேசான் re எடிட்க்காக மொத்தமா மாத்தி இருக்கேன்🧘🧘