விழியின் ஒளியானவள் (முடிவுற்ற...

Od Aashmi-S

19.7K 984 325

இது என்னுடைய ஐந்தாவது கதை இந்த கதையில் நாயகி பிறந்தது முதல் கண் பார்வை இல்லாதவள் ஆனால் அதை ஒரு குறையாக கருதாம... Více

விழியின் ஒளியானவன்
ஒளி 1
ஒளி 2
ஒளி 3
ஒளி 4
ஒளி 5
ஒளி 6
ஒளி 7
ஒளி 8
ஒளி 9
ஒளி 10
ஒளி 12
ஒளி 13
ஒளி 14
ஒளி 15
ஒளி 16
ஒளி 17
ஒளி 18
ஒளி 19
ஒளி 20
ஒளி 21
Amazon kindle free
ஒளி 22
ஒளி 23
ஒளி 24
ஒளி 25
ஒளி 26
ஒளி 27
ஒளி 28
ஒளி 29
ஒளி 30
ஒளி 31
ஒளி 32
ஒளி 33
ஓளி 34
ஓளி 35
ஒளி 36
ஓளி 37
ஒளி 38
ஒளி இறுதிப்பகுதி

ஒளி 11

428 26 12
Od Aashmi-S

மித்ரன் தான் எவ்வாறு திருமணம் செய்து கொண்டேன் என்ற கதையை தனக்கு தெரிந்த வரையில் கூறினான். ஆனால் ஹரி நிதானமாக யோசித்து தன் அண்ணனுக்கு ஏதோ ஒரு இடத்தில் சூழ்ச்சி நடந்துள்ளது என்பதை தெரியப் படுத்தினான். அப்போதுதான் மித்ரன் அதை யோசிக்க ஆரம்பித்தான். தான் முதலில் கோபத்தில் மட்டுமே யோசித்து கொண்டு இருந்தவன் எதையும் தெளிவாக யோசிக்க வில்லை ஆனால் தன்னுடைய தம்பி நடந்த அனைத்தையும் கேட்ட போது அவனுக்கு ஒவ்வொரு விஷயமாக சொல்லும் போதுதான் ஏதோ ஒரு இடத்தில் தன்னை வேண்டுமென்றே சிக்க வைத்திருக்கிறார்கள் என்ற விஷயம் புரிந்தது. ஆனால் இதில் விஷ்ணுவும் துணை என்று அவன் நினைத்தது தான் விதியின் செயல். அதன் பிறகு அந்த விஷயத்தை முடித்துவிட்டு தன் தம்பியின் காதல் கதையை கேட்க ஆரம்பித்தான்.

ஹரியும் தன்னுடைய கதையை கூற ஆரம்பித்தான் முதல் முதலில் அவன் மகியை பார்த்தது அவள் கல்லூரி வந்த முதல் நாள் பார்ப்பதற்கு கிராமத்து அழகு தேவதை என்று தெளிவாக தெரிந்தாலும் அவள் முகத்தில் ஒரு சோகம் இருந்தது. அது ஊரை விட்டு பிரிந்து வந்து இருப்பதற்கான காரணம் போல என்று எண்ணிக் கொண்டான் ஹரி. ஆனால் ஏனோ அவளறியாமல் அவன் நெஞ்சத்தில் புகுந்து விட்டாள் மகிழினி.

அன்று கல்லூரியில் அனைவரும் முதலாமாண்டு மாணவ மாணவிகளை ராகிங் செய்து கொண்டு இருந்தனர். ஆனால் ஹரி மற்றும் அவனுடைய நண்பர்கள் அதில் சிக்கல் இல்லை அதற்கு முக்கிய காரணம் ஹரியின் அண்ணன் இருவரும் அந்த கல்லூரியில் தான் படித்தனர். அவர்கள் படிக்கும் காலங்களில் மிகவும் பிரபலமாக இருந்த காரணத்தினால் இதனை பெரிதாக ஒன்றும் செய்யவில்லை அதே போல் இவனுடைய பார்வை மகிழினி பக்கம் இருப்பதைப் பார்த்தவர்கள் அவளையும் சீண்ட நினைக்கவில்லை.

ஹரி மனதில் அவளுடைய சோகத்தை போக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால் எவ்வாறு அவளிடம் சென்று பேசுவது என்று முடிவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். அதேபோல் அவனுடைய இன்னொரு மனதில் கண்டிப்பாக இங்கு அவளுக்கு தோழிகள் கிடைத்தால் நிச்சயமாக அவள் மகிழ்ச்சியாக மாறிவிடுவாள் என்று எண்ணிக்கொண்டான்.

ஆனால் அதற்கு வாய்ப்பளிக்காமல் அவனுடைய பேபி எப்பொழுதும் தனிமையில் இருப்பதை பார்த்த அவன் எப்படியாவது அவளிடம் சென்று பேச வேண்டும் என்று முடிவு செய்தான். அப்படி ஒருநாள் பேச சென்ற போதுதான் அவள் விஷ்ணு பற்றி புலம்பிக்கொண்டு இருந்தாள். அவன் அவளுடைய காதலனை பார்க்க முடியாமல் இருக்கிறாளா அல்லது காதல் தோல்வியினால் இவ்வாறு இருக்கிறாளா என்று எண்ணி அந்த இடத்தை விட்டு அகல முடிவு செய்தான்.

ஆனால் ஏனோ அவனுடைய மனம் வலித்தது அதனால் அவளிடம் பேசவேண்டும் என்ற முடிவை கைவிட்டு விட்டு தூரத்திலிருந்தே அவளைப் பார்க்க ஆரம்பித்தான். ஆனால் அவன் எப்போதும் தனிமையில் இருப்பதை பார்த்தவன். அவள் பக்கத்தில் சென்று அவள் பேசுவதை தொடர்ந்து கேட்க ஆரம்பித்தான்.

அப்போதுதான் அவனுக்கு தெரிய ஆரம்பித்தது அவள் மிகவும் வருத்தமாக குழம்பி தள்ளுவது தன்னுடைய தோழியை நினைத்து என்று அதை அறிந்த போது அவனுடைய மனம் மிகவும் பரவசம் அடைந்தது. அதிலிருந்தே தான் அவளை எவ்வளவு விரும்புகிறோம் என்ற விஷயத்தை ஹரி உணர்ந்து கொண்டான்.

அதனால் அவரிடம் இதைப் பற்றி நேரடியாக பேச முடிவு செய்தான் அதே போல் அவள் முதல்வரிடம் முடித்து ஊருக்கு கிளம்புவதற்கு முன்பு அனைத்தையும் சொல்லியும் விட்டான் ஆனால் அவள் பதில் கூறுவதற்கு முன்பாகவே அங்கிருந்து சென்று இருந்தான். அதற்கு முக்கிய காரணம் நிச்சயமாக மகிழ்கிறேன் தன்னுடைய காதலை ஏற்க மாட்டாள் என்பதை அவன் அறிந்து இருந்தான் அதனால் அவள் பதிலுக்கு நிற்காமல் சென்று விட்டான்.

அதே போல் அவள் மறுபடி வந்தபோது தன்னைப் பற்றி அவன் நினைத்துக் இருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டவன். தன்னுடைய காதலை ஏற்றுக் கொண்டதாக முடிவு செய்து சென்றுவிட்டான். ஆனால் ஒரு விஷயத்தை விளையாட்டாக எடுப்பது ஏதாவது சிக்கலில் தன்னுடைய காதலை கொண்டு சென்று விடுவோம் என்று நினைத்து பயப்படத் தான் செய்தான். ஆனால் தான் அவ்வாறு பேசி சென்ற பிறகு மகிழினி சிரித்தது அவனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

அதன் பிறகு எப்பொழுதும் அவள் தனியாக இருக்கும் நேரத்தில் அவளுடன் இணைந்து இருக்க ஆரம்பித்தான் ஹரி. அவளுக்கும் அது பிடித்து இருந்தது என்பதை அவள் இவனை விரட்டாமல் இருந்த நேரத்திலேயே புரிந்து கொண்டான். ஆனால் பெரும்பாலான நேரத்தில் அவள் அவளுடைய தோழி பற்றி கூறியதை வைத்தே அவளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொண்டான். ஆனால் அவனுடைய ஆர்வம் புரியாமலேயே அவளுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் கூறிவிட்டாள்.

அனைத்தையும் கேட்ட அவன் மனதில் அவளுக்கு தன்னுடைய அண்ணன் மித்ரன் சரியாக இருப்பான் என்ற எண்ணம் வந்தது. ஏனென்றால் விஸ்வா கூட ஏதாவது ஒரு சில நேரங்களில் அவசரமாக முடிவு எடுப்பான் ஆனால் மித்ரன் அவ்வாறு பெரும்பாலும் செய்யமாட்டாள் அதை ஏதாவது செய்து விட்டாலும் கோபம் தணிந்த பிறகு பொறுமையாக யோசித்து அனைத்தையும் சரி செய்து விடுவான். அதனால் விஷ்ணுவிற்கு மித்ரன் சரியாக இருப்பான் என்று நினைத்தான். ஆனால் அவளுக்கு ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்த விஷயம் தெரிந்தவுடன் அமைதி காத்தான். ஆனால் அதிலும் மித்ரன் பெயர் வரவே ஒரு நிமிடம் தன்னுடைய அண்ணன் வீட்டிற்கு தெரியாமல் அவர்களை காதலித்து இருக்கிறானோ என்ற எண்ணம் கொண்டான். அதனால்தான் அவன் அப்போது அதிர்ச்சி அடைந்தான்.

அன்று அவன் கேலியாக கேட்டது உண்மையில் தன்னுடைய மனதில் இருந்த எண்ணத்தை தான் ஆனால் அதை கண்டிப்பாக நடத்த முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு கொஞ்சம் குறைவாகவே இருந்தது. அதனால்தான் அதை கேலியாக மாற்றிவிட்டான். அதை அறியாத மகி அவன் செய்ததை கேலி என்று நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்துவிட்டாள்.

அதன் பிறகு இருவரும் வழக்கமாக பேசி தங்களுடைய மனதில் இருக்கும் எண்ணங்களை கூறிக்கொண்டனர். ஆனாலும் தன்னுடைய காதலை கூறாமல் ஹரியின் செய்கைகளை ரசித்து கொண்டு இருப்பாள் அவனும் அவள் தன்னை ரசிப்பதை தெரிந்தும் தெரியாதது போல் பேசிக்கொண்டே இருப்பான். இப்படி எங்க வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா போய்கிட்டு இருந்துச்சு" என்று தன்னுடைய இரண்டு அண்ணன் களையும் பார்த்தான்.

இவ்வளவு நேரம் அவன் கூறியதை பொறுமையாக கேட்ட விஷ்வா அவன் முதுகில் 4 வைத்து "நாங்க நீ போட்ட கடலை எதையும் கேட்கல எப்படி அந்த பிள்ளை உன் மூஞ்சிக்கு ஓகே சொல்லிச்சி அதை மட்டும் சொல்லு" என்று கூறினான்.

ஹரி தன்னுடைய இரண்டு தோள்களையும் குலுக்கி கொண்டு "பெருசா எதுவும் இல்லை இதுல மேக்ஸிமம் அவளோட ஃப்ரெண்ட் பத்தி சொன்னேன் தானே அந்த பிள்ளைக்கு வாழ்க்கையில பிரச்சனை அதற்காக இவ சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்கு போயிட்டா திரும்பி வரும்போது அவளைப் பார்ப்பதற்கு ரொம்ப பாவமா இருந்துச்சு நான் என்ன ஏதென விசாரிக்க போனேன். அப்போது அவள் நன்றாக அழுதுவிட்டு எதுவும் கூறாமல் சென்று விட்டால் அதன் பிறகு மறுபடியும் ஊருக்கு சென்று வந்த பிறகு அனைத்து கதைகளையும் கூறியவள் தன் மனதில் இருப்பதையும் கூறினாள்.

ஆனால் அவளுக்கு சம்மதம் இருந்தாலும் அவளுடைய பெற்றோர் மற்றும் தோழி அதுபோல தோழர்கள் இருவர் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே இந்த திருமணம் நடக்கும்" என்று கூறிவிட்டாள் என்று கூறி முடித்தான். ஹரிக்கு விஷ்ணு வாழ்க்கை பற்றி விஷ்ணுவை பற்றி முழுமையாக கூறுவதற்கு விருப்பம்தான் ஆனால் இன்னொரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவளுடைய வாழ்க்கையை பற்றி கூறுவதற்கு அவன் மனது இடம் கொடுக்கவில்லை அதனால் அவன் அதை மறைத்து விட்டான். இப்போதே இதை அனைத்தையும் கூறியிருந்தால் அல்லது தன்னுடைய காதலியின் புகைப்படத்தை காட்டி இருந்தால் தன்னுடைய அண்ணன் வாழ்க்கை இந்த நிமிடமே சரியாக மாரி இருக்கும் என்பதை அவன் அறியாமல் போனான்.

மித்ரன் ஹரி தலையில் தடவிக் கொடுத்து "கண்டிப்பா உனக்காக அந்த பொண்ணு வீட்ல நாங்க பேசுவோம் நீ கவலை படாதே" என்று கூறினான்.

ஹரி அவன் முகத்தை பார்த்து "நீ எனக்காக அவங்க வீட்ல ஒன்னும் பேச வேண்டாம் எனக்கு தெரிந்து அவருடைய வீட்டில் உள்ளவர்களிடம் பேசுவது பெரிய விஷயம் கிடையாது. அவளுடைய தோழி மற்றும் தோழர்கள் சம்மதம் தெரிவித்தால் தொடர்ச்சியாக அனைத்தும் நல்லபடியாக முடிந்து விடும். அதற்கு முதலில் நீ உன்னுடைய பொண்டாட்டியோடு சேரவேண்டும் நீ சேர்ந்தால்தான் என்னை அவர்கள் வீட்டில் நம்புவார்கள் இல்லையென்றால் உன்னைப்போல் நானும் கழட்டிவிட்டு வந்துவிடுவேன் என்று நினைத்துக் கொள்வார்கள். அதனால ஒழுங்கா போய் எல்லா பிரச்சினையும் கண்டுபிடி போ இல்லனா அம்மாகிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிடுவேன்" என்று கூறிவிட்டு ஜூஸ் குடிப்பதற்காக கிச்சனுக்கு சென்று விட்டான்.

ஹரி பேசி சென்றதைப் பார்த்து சிரித்த மித்ரன் முதலில் தன்னைத் திருமணம் செய்த பெண்ணை பற்றி முழுமையாக விசாரித்து முடிவெடுக்க வேண்டும் அதேபோல் அவளுடைய வாழ்க்கைக்கு ஒரு வழி செய்தாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தன் அருகில் இருந்த இன்னொரு தம்பியை பார்த்தான். அவன் தன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்து அவன் தோளில் தட்டி கவலையே படாத எல்லாம் சீக்கிரம் சரி செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டு தன்னுடைய உடையை மாற்ற சென்றான்.

கிச்சன் சென்ற ஹரி மனதில் "இந்த பேபிக்கு நம்ம மேல கொஞ்சம் கூட அக்கறையே இல்லை காலேஜ் முடிஞ்சு ஒரு நாள் ஆச்சு நேத்து நம்ம மூஞ்சை பார்க்காமல் போயிடுச்சு இன்னும் ஃபோன் பண்ணி கூட எதுவும் பேசல இருக்கு அந்த பேபி ஏன் போன் பண்ணல அப்படின்னு போன் பண்ணி கேட்போம்" என்று மகிழினி எண்ணிற்கு அழைத்தான். ஆனால் அங்கே அவள் விஷ்ணு உடன் இருந்த காரணத்தினால் அதை ஏற்காமல் இருந்துவிட்டாள். ஒரு முறை அழைத்து பார்த்த ஹரி அவள் அழைப்பை ஏற்கவில்லை என்றவுடன் "சரி பேபி ஏதாவது வேலையா இருக்கும் முடிச்சிட்டு வந்து போன் செய்கிறாளா அப்படின்னு பாப்போம் இல்லனா நாம திரும்ப சாயங்காலம் போன் பண்ணுவோம்" என்று எண்ணிக்கொண்டு வெளியே வந்தான். அங்கு தன்னுடைய அண்ணன்கள் இருவரும் இல்லாமல் இருப்பதை பார்த்துவிட்டு அவனுடைய அறைக்கு சென்றான்.

அதேநேரம் வீட்டில் விஷ்ணு அனைவரிடமும் தைரியமாக பேசினாலும் உள்ளுக்குள் ஏனோ தன்னைத் திருமணம் செய்தவரை நினைத்து கவலையாக இருந்தது. அதையே நினைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். அவளருகில் மகிழினி என்ன செய்வது எப்படி இதை அனைத்தையும் சரி கட்டுவது என்று தெரியாமல் குழம்பு இருந்தாலும் விஷ்ணு கூறுவது போல சில நாட்கள் இவை அனைத்தையும் விட்டு பிடிப்பதே நல்லது என்று எண்ணிக்கொண்டு அமர்ந்து இருந்தாள்.

இங்கே நிகழ்காலத்தில் விஷ்ணுவின் அறைக்குள் நுழைந்த ஹரி அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான். ஹரி கார் ஓட்ட அவனருகில் அமர்ந்து இருந்த விஷ்ணு தான் சந்தித்த நிகழ்வை லேசான புன்னகை புரிந்தாள். ஹரி அவளுடைய புன்னகை முகத்தை பார்த்து சிரித்து விட்டு "என்ன அம்மு ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி இருக்கு உன் புருஷன் ஏதாவது ட்ரீட் ஏதாவது தந்தானா" என்று கேட்டான்.

செல்லமாக அவன் முதுகில் அடித்த விஷ்ணு "வீட்டுக்கு போனபிறகு என்னோட புருஷன் கிட்ட நீயே கேட்டுக்கோ" இப்ப கொஞ்சம் அமைதியா வா என்று கூறி விட்டு சீட்டில் சாய்ந்து கண்மூடி கொண்டாள்.

ஹரி பிரித்துக்கொண்டு கார் ஓட்ட ஆரம்பித்தான் விஷ்ணு மறுபடியும் தன்னுடைய எண்ணங்களில் மூழ்க ஆரம்பித்தாள்.

எதிர்பாராமல் நடந்த திருமணத்திற்கு பிறகு ஊரில் உள்ள அனைவரும் அவளுக்கு உறுதுணையாக இருந்த காரணத்தினால் தான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் வந்தது. ஆனால் தன்னை திருமணம் செய்தவரை நினைத்து கவலையாக இருந்தாலும் அவளுக்கு நிச்சயமாக ஒரு நல்ல வாழ்க்கை அமையும் என்று எண்ணிக்கொண்டு ஆசைப்பட்டபடி வேலைகள் அனைத்தையும் ஆரம்பித்து அதை கவனமாக கவனமாக செய்ய முடிவு செய்தாள்.

ஆனால் அவள் ஆரம்பித்தவுடன் எதுவும் அவ்வளவு சுலபமாக நடக்கவில்லை எவ்வளவு அலைய வைக்க முடியுமோ அவ்வளவு அலையடித்தன ஆனாலும் சோர்ந்து போகாமல் தங்களால் முடிந்த வரையில் மிகவும் கஷ்டப்பட்டு அனைத்து வேலைகளையும் நேர்மையாக செய்ய ஆரம்பித்தனர் விஷ்ணு மகிழினி மற்றும் அந்த ஊரில் உள்ள சில இளவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள்.

விஷ்ணு ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து யோசித்து செய்வதை பார்த்து அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் பெருமையாக இருந்தாலும் இப்படிப்பட்ட பெண்ணின் வாழ்க்கை இவ்வாறு ஆகிவிட்டதே என்று உள்ள கலக்கம் அடைந்து கொண்டிருந்தனர். மகிழினி தன்னுடைய தோழி வாழ்க்கையை சரி செய்யலாம் என்று ஏதாவது முயற்சி செய்ய அவளால் எங்கும் வெளியே செல்ல முடியாமல் விஷ்ணு வைத்து இருந்தாள்.

விஷ்ணு தெரிந்த அனைத்தையும் செய்கிறாளா அல்லது எதிர்பாராதவிதமாக இவை அனைத்தும் நடக்கிறதா என்று மகி சில நேரம் யோசித்தாலும் அனைத்தும் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று வெங்கடேசன் மற்றும் ஆண்டாள் இருவரின் புகைப்படம் முன்பு நின்று வேண்டி கொள்வாள்.

இதற்கிடையே வழக்கமாக போன் செய்வது போல் அஸ்வின் மற்றும் அரவிந்த் இருவரும் போன் செய்ய விஷ்ணு நடந்த இதையும் அவர்களிடம் கூறக் கூடாது என்று கூறியிருந்த காரணத்தினால் தாங்கள் ஆரம்பிக்கப் போகும் வேலையை பற்றி மட்டும் கூறினாள் மகிழினி. அதைக் கேட்ட அவர்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர் அதன்பின்பு அவர்களால் முடிந்த அளவு எவ்வளவு உதவி செய்ய முடியுமோ அவ்வளவு உதவி செய்தனர். அதனால் கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் விஷ்ணு ஆசை நிறைவேறியது இவர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதற்கான அனைத்து விதமான சான்றிதழ்களும் முறையாக எங்கிருந்து பெற வேண்டுமோ அத்தனையும் பெற்றுவிட்டனர்.

அதேபோல் விஷ்ணு முதலில் வேலை செய்த கம்பெனி முதலாளி அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தார். அவர் மூலமாக முதலில் சின்ன சின்ன பிராஜெக்ட் அனைத்தும் வர ஆரம்பித்தன அனைவரும் சின்ன வேலையாக இருந்தாலும் முறையாக செய்தால் தான் பெரிய பெரிய வேலைகள் கிடைக்கும் என்பதை உணர்ந்தவர்கள் தங்களுடைய வேலையை முழுமையாக கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.

இதற்கிடையே மித்ரன் பற்றி மகிழினி விஷ்ணுவிற்கு தெரியாமல் விசாரித்த போது அவன் ஏதோ ஒரு அவசர வேலையாக வெளிநாடு சென்றிருக்கும் விஷயம் தெரியவந்தது. இதனால் அவன் வரும்வரை அமைதியாக இருப்போம் அவன் வீட்டில் இப்படி இந்த திருமணத்தை பற்றி கூறி இருக்கிறான் என்று தெரியாமல் நாமாக சென்ற பிரச்சினையை ஏற்படுத்தி விட்டு விடக்கூடாது என்று நினைத்து மகிழினி அமைதி காத்து விட்டாள்.

அவள் நினைத்தது போல் மித்ரன் முதலில் விஷ்ணு பற்றி விசாரிக்க தான் முடிவு செய்து ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி தொடர்பு கொண்டான். ஆனால் அவனுடைய முக்கிய வேலை காரணமாக அவனால் இங்கே இருக்க முடியவில்லை அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டி வந்தது. இவன் எப்பொழுதும் வேலை விஷயமாக வெளிநாடு செல்வதால் அவனுடைய தந்தை அவனை வெளிநாடு செல்லுமாறு கூறினார். தந்தையிடம் வெளிநாடு செல்லவில்லை என்று கூறினாள் அதற்கு காரணம் கூற வேண்டும் அப்படி என்றால் அவனுக்குத் திருமணம் நடந்த அனைத்தையும் கூற வேண்டும் என்பதை யோசித்தவன் அமைதியாக வெளிநாடு சென்று விட்டான். ஆனால் அதற்கு முன்பு தன்னுடைய தம்பி இருவரையும் பார்த்து "விஸ்வா ஹரி நான் ஒரு முக்கியமான வேலையா வெளிநாடு போறேன் எப்படியும் திரும்பி வருவதற்கும் இரண்டு மூன்று மாதங்கள் ஆகும் அதுவரை என்னுடைய திருமண விஷயத்தை வீட்டில் கூறி விடாதீர்கள். வெளிநாடு வேலை முடிந்து வந்தவுடன் முதல் வேலையாக அந்த பெண்ணை பற்றி விசாரித்து அனைத்தையும் சரி செய்து விடுகிறேன்" என்று கூறினான்.

விஷ்வா மனதில் அண்ணன் வாழ்க்கை இவ்வாறு ஆகிவிட்டதே என்ற கோபம் இருந்தாலும் தன் அண்ணனின் வார்த்தைக்காக அமைதி காத்தான். ஹரி மனதில் வேறு எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது அது என்னவென்றால் "மகிழினி ஏதோ ஒரு பிரச்சினையில் சிக்கி இருக்கிறாள். அதில் நிச்சயமாக விஷ்ணுவிற்கு பெரிய பாதிப்பு இருக்கும் என்பதை யோசித்தவன். அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற குழப்பத்தில் இருந்தார் அதனால் அவனுக்கு அப்போது அவனுடைய அண்ணன் பிரச்சனை பெரிதாக தெரியவில்லை தன்னுடைய அண்ணன் சமாளித்துக் கொள்வான்" என்று எண்ணிக் கொண்டு அமைதியாக தலையசைத்தான்.

அதன் பிறகுதான் அவன் நிம்மதியாக தன்னுடைய வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டான். அதேபோல் தான் தொடர்பு கொண்ட டிடெக்டிவ் ஏஜென்சியிடம் தான் மூன்று மாதத்தில் வந்து விடுவதாகவும் அதற்குள் அனைத்து விதமான தகவல்களையும் சேகரித்து வைக்குமாறு கூறிவிட்டு சென்று விட்டான் அவர்களும் தாங்கள் கண்டிப்பாக அனைத்தையும் தயாராக வைத்திருப்போம் என்று கூறினார்கள்.

அவன் வெளிநாடு பயணம் மேற்கொண்டு தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் இங்கே விஷ்ணு தன்னுடைய வேலையில் மிகவும் கவனமாக இருந்தால் சின்ன சின்ன விஷயங்கள் கூட பார்த்து பார்த்து செய்த காரணத்தினால் அவர்களுடைய பெயர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்தது. ஒருவர் நன்றாக இருந்தால் அது பிடிக்காமல் அவரை ஏதாவது செய்ய இந்த உலகில் நிறைய மக்கள் இருக்கிறார்கள்.

அதேபோல் விஷ்ணு தன்னுடைய சொந்த முயற்சியில் இவ்வளவு நேர்மையாக முன்னேறிக் கொண்டு இருப்பதை பார்த்து கோபமடைந்த மகேஷ் மற்றும் பவித்ரா இருவரும் மிகுந்த கோபம் அடைந்தனர். இதனால் இருவரும் அவள் ஒரு வெளி வேலையாக வெளியே சென்றிருந்த போது அவளைத் தனிமையில் சந்தித்தனர். எப்பொழுதும் அவளுடன் இருக்கும் மகிழினி அன்றும் அவளுடன் சென்று இருந்தார் ஆனால் அங்கே வேறு ஒரு வேலை இருந்ததால் அவள் விஷ்ணுவை விட்டு ஒரு ஒரு மணி நேரம் சென்றாள்.

அந்த நேரத்தைப் பயன்படுத்திய இருவரும் அவளிடம் வந்து ஒரு அரை மணி நேரம் பேசினார்கள். முதலில் விஷ்ணுவின் முகத்தில் கோபம் தெரிந்தது போகப்போக அவள் முகத்தில் ஒரு இயலாமை ஒரு வருத்தம் ஒரு மனவலி வெளிச்சம் போட்டு காட்டியது. அதை பார்த்த அந்த இரண்டு நயவஞ்சக மனிதர்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

இவை அனைத்தையும் திருப்தியாக பார்த்துவிட்டு அவர்கள் இருவரும் சென்று விட்டனர். சிறிது நேரத்தில் தான் என்ன யோசிக்கிறோம் எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் தன்னுடன் மகிழினி வந்ததை கூட மறந்து தன் போக்கில் சென்று கொண்டு இருந்தாள் விஷ்ணு.

வேலை முடிந்து வந்த மகிழினி தன்னுடைய தோழியை காணாமல் அங்கும் இங்கும் தேட ஆரம்பித்தாள். அங்கிருந்த ஒரு சிலரிடம் விசாரித்த போது அவள் சென்ற வழியை கூறினார்கள் அவர்கள் சொன்ன வழியில் விஷ்ணு பின்னாலேயே அவசரமாக ஓட ஆரம்பித்தாள். மகிழினி ஆனால் அவளுடைய கண் முன்பே அந்த அசம்பாவிதம் நடந்தது.

என்ன நடந்தது என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும். இனி வரும் அத்தியாயங்களில் விஷ்ணு மற்றும் மித்ரணி புரிதல் காதல் விஷ்ணு மகிழினி நட்பு ஹரி மகிழினி காதல் குடும்பம் என்று அனைத்தையும் பார்க்கலாம்.

Pokračovat ve čtení

Mohlo by se ti líbit

58K 2.3K 36
காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உ...
136K 3.5K 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே க...
61.5K 4.1K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...
10.6K 687 19
இதயத்தை கொய்த கொலையாளி - பாகம் 2