காதல் மன்னவா எனைதேடி வாராயோ (...

Por adviser_98

23.8K 1.1K 3K

ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே... Más

தேடல் - 1
தேடல் - 2
தேடல் - 3
தேடல் - 4
தேடல் - 5
தேடல் - 6
தேடல் - 7
தேடல் - 8
தேடல் - 9
தேடல் - 10
தேடல் - 11
தேடல் - 12
தேடல் - 13
தேடல் - 14
தேடல் - 15
தேடல் - 16
தேடல் - 17
தேடல் - 18
தேடல் - 19
தேடல் - 20
தேடல் - 20
தேடல் - 21
தேடல் - 22
தேடல் - 23
தேடல் - 24
தேடல் - 26
தேடல் - 27
தேடல் - 28
தேடல் - 29
தேடல் - 30
தேடல் - 31
தேடல் - 32
தேடல் - 33
தேடல் - 34
தேடல் - 35
தேடல் - 36
தேடல் - 37
தேடல் - 38
தேடல் - 39
தேடல் - 40
தேடல் - 41
தேடல் - 42
தேடல் - 43
தேடல் - 44
தேடல் - 45
தேடல் - 46
தேடல் - 47
தேடல் - 48
தேடல் - 49
தேடல் - 50
தேடல் - 51
தேடல் - 52
தேடல் - 53
தேடல் - 54
தேடல் - 55
தேடல் - 56
தேடல் - 57
தேடல் - 58
தேடல் - 59
தேடல் - 60
தேடலின் முடிவு (நன்றியுரை)
என் இதயங்களுக்கு

தேடல் - 25

207 18 77
Por adviser_98

அந்த மருத்துவமனையே ஒரு சில நொடிகளில் பரபரத்து அடங்க அஜிம்சனா உறக்கத்திலிருந்து எழுந்து சுற்றி பரபரப்பாய் பார்த்தாள்..

வினய் முன்னெச்செரிக்கையாய் இவர்களை நோக்கி வர நிரன் ஒரு புறம் வினய் ஒரு புறம் அவளுக்கு காவலர்களை போல் நின்று கொண்டனர்..

அஜிம்சனா தற்செயலாக நிரனின் ஒரு கரத்தை மென்மையாய் பிடித்து கொள்ள அவளை திரும்பி பார்த்த நிரன் இங்கிருந்து வீட்டிற்கு கிளம்பலாம் என கூற வரவும் அங்கிருந்த நோயாளிகளையும் ஒவ்வொரு நோயாளர்களின் குடும்பத்தினரையும் அமைதி படுத்தி கொண்டிருந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுள் ஒரு செவிலி நிரனின் பெயரை கூறி அழைத்தார்...

வேறு வழியின்றி இம்மூவரும் மருத்துவரை பார்க்க செல்ல அவனின் காயங்களை பரிசோதித்த மருத்துவர் குருகுருவென்ற பார்வையோடே
" நீங்க ஜெயில்லேந்து தப்பிச்சு வந்தவரா?? "
" எந்த நாட்லையாவது தீவிரவாதியா மாட்டிக்கிட்டு இப்போ தான் இண்டியாக்கு வந்தீங்களா ??"
" எந்த செயலுக்காக நீங்க இவ்ளோ அடி வாங்கியிருக்கீங்க.. "
" உங்க ஆதார் கார்ட் காட்டுங்க .. இல்ல வேற எதாவது நாட்டுலேந்து வந்துர்க்கீங்களா... பாஸ்போர்ட் காட்டுங்க... ஐடி காட்டுங்க "

என அவனை தீவிரவாதியாகவே முடிவு செய்து எண்ணற்ற கேள்விகளை கேட்டதுமில்லாமல் மருத்துவர் என்ற பட்டத்தை மறந்து சீபீசீ ஐடி கணக்காய் அவர் விசாரிக்க அவன் பூமி வாசியே இல்லையென்றபோது இதில் எங்கிருந்து அவனது உரிமை படிவத்தை காட்டுவதென்று தெரியாமல் வினய் ஏதேதோ சொல்லி சமாளித்து " தோ தூத்துக்குடில தான் எங்க ஐடி இருக்கு... " " அது நாளைக்கு தான் வரும் " " நாங்க அண்டர்க்ரௌண்ட் வர்க்கர்ஸ் " " இதோ பொண்டாட்டி கொடுமை " என ஒளறி கொட்டி அஜிம்சனாவிடமிருந்து ஒரு முறைப்பை பெற்று கொண்டதோடு அந்த மருத்துவரிடமிருந்து நிரனை காப்பாற்றி வெளியே வந்தான்...

இவர்கள் படாது பாடு படுவதை ஷரூரா பார்த்து விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தாள்...

" வாடை சேரும் பேராழி
நியாபகங்கள் ஆறாய் சிதறி
தூங்கப் போகும் செல்லம் யார்
விடைகள் ஏந்தும் ஆறை பார்

இந்த நீரில், நீ போனால்
தீர்வு காண, பாதை உண்டாகும்
மூழ்கி உள்ளே திளைப்பாய்
நீ ஆழம் போனால், தொலைவாய்

அவள் பாடுவாள் நீ கேட்பாயா?
அங்கங்கே பார் அவள் மாயங்கள்
பயம் தோன்றினால் உடைப்பாயா?
அவளை நீ எதிர்கொள்வாயா?

வாடை சேரும் பேராழி
அங்கொரு அன்னை நினைவாய் உலவி
எல்லாம் தொலைந்து போனாலும்
மீண்டும் வந்து, உன் கை சேரும் " என அப்பாட்டு முடிவடையவும் யாரி சத்யாவின் நெஞ்சிலே கண்கள் மருகி உறக்கத்தை தழுவ ப்ரஜின் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த டிவினின் தோளிலே சாய்ந்து உறங்கியிருந்தான்...

சக்தி தன் மகள் உறங்கி விட்டாளா என பார்க்க அவன் மகளோ அவனை மார்த்து கை தட்டி மற்றொரு பாட்டை போட கூறினாள்...

சக்தி : என்ன குட்டிமா நீ தூங்க டைமாச்சு பேபி என தூக்கி பாவமாய் கூற சனாயா கண்டு கொண்டதை போலே இல்லாமல் அவன் தலை முடியை பிடித்து இழுக்க சரியாக நிரன் வினயோடு உள்ளே வந்த அஜிம்சனா " குட்டி சனா " என ஓடி வந்து சனாயைவை தூக்கி கொண்டாள்...

அஜிம்சனா : குட்டி சனா... இங்க பாரு இங்க பாரு... நான் தான் பெரிய சனா.. என் செல்லமே... என்ன பாரு டி நா வந்ததுலேந்து நீ தூங்கிக்கிட்டே இருக்கியே... இங்க பாரு இங்க பாரு அப்பா முடில விளையாடுவோமா... ஹான் கார் ஓட்டலாம் புடிச்சிக்கோ புடிச்சிக்கோ என சக்தி கத்த கத்த கேட்காமல் அவ்விரு சனாக்களும் சக்தியின் தலையை பிடித்து கொண்டு கற்பனை கார் ஓட்டத் தொடங்கியிருந்தனர்...

சனாயா சிரித்து சிரித்து அஜிம்சனாவின் கூந்தலோடு விளையாட அவ்விருவரையும் கண்டு சிரித்தபடியே யாரியை ப்ரஜினோடே கட்டிலில் படுக்க வைத்த சத்யா நிரனின் பரிசோதனையை பற்றி கேட்க தொங்கினான்...

வினய் அங்கு நடந்ததை கூறி பெருமூச்சு விட டிவினும் சக்தியும் நீண்ட சிரிப்பலையை எழுப்பியடங்கவும் சத்யா மெடர்மான் மற்றும் அல்ற்றா மூன் நாயகர்களுக்கும் உரிமை படிவங்களெடுக்க முடிவு செய்தான்...

வினய் : சிரிக்காதீங்க டா... எல்லாம் அந்த குரோபடரான் ராஜாவால வந்தது... அவரு இவன இப்டி அடிக்காம இருந்துர்ந்தா இதெல்லாம் நடந்துருக்குமா...

சத்யா : ஆமா கேக்கனும்னு நெனச்சேன் அவரு ஏன் டா உன்ன இப்டி தண்டிச்சாரு... எதுக்காக உனக்கு தண்டனை

நிரன் : ஹ்ம்ம் ஒன்னும் இல்லடா... நா அவரு சொல்றத கேட்டு இவளையும் யாரியையும் விட்டுட்டு வர மாட்டேன்னு சொன்னேன்... அவரால யாரிய பேத்தியா ஏத்துக்க முடியாதாம்... எனக்கு கவலையே இல்லன்னு சொல்லிட்டு நா கெளம்பும் போது என்ன அரெஸ்ட் பன்னிட்டாரு.. அவளையும் யாரியையும் கடத்துரதுக்கு ஆள் அனுப்புனாரு... நா போக சொன்னதால அவ யாரியோட எங்க வீட்லயே இருந்துருக்கா... அந்த இடத்த கண்டுப்புடிக்கிரதுக்காக என் கிட்ட இடத்த சொல்ல சொன்னாங்க... நா சொல்ற வர அடிச்சிக்கிட்டே இருக்க சொன்னாரு... அப்ரம் நா கடுப்பேத்துனதால அப்டியே போய்ட்டாரு... கொஞ்ச நேரங்களிச்சு தான் அவ யாரியோட அங்கேயே வந்தா... ஹ்ம் அப்ரம் தான் டா நீ வந்த

யதீஷ் : ஏன் ப்ரதர்...கதைல குரோபடரான் நல்லவரா தான இருந்தாரு... ஏன் இப்போ இப்டி கெட்வரா இருக்காரு என கீழே வந்தவன் கேட்கவும் தன்னால் தான் தன் கணவனுக்கு பிரச்சனையா என அவன் கூறுவதில் உறைந்திருந்த அஜிம்சனா தன் கண்ணீரை துடைத்து கொண்டுபதிலளித்தாள்..

அஜிம்சனா : அவரு நல்லவரு தான் அண்ணா

சக்தி : ம்ச் அவரெல்லாம் நல்லவருன்னு சொல்லாத குட்டிமா என எரிச்சலாய் கூறினான்....

அஜிம்சனா : இல்லண்ணா நல்வரு தான்.. என்ன கொஞ்சம் தன்னலமும் புடிச்சவரு.. அவருக்கு எதோ ஒரு காரணத்துனால என்ன புடிக்கல.. யாரி எங்க பொண்ணாவே இருந்துர்ந்தாலும் அவரு ஏத்துக்குற்றுந்துர்க்க மாட்டாரு... ஏதோ அவன் இளவரசனா போனதால அவரு ஸ்டண்டர்ட்ஸ் பாக்குறாரு...

நிரன் : ஹ்ம்... அப்டியே ஏதோ நம்மள சேந்து வாழ விட்ட மாரி பேசாத என சட்டென தன் பொருமை இழந்து கத்த அவனின் சத்தத்தில் சனாயா திடுக்கிட்டு அஜிம்சனாவோடு ஒன்றினாள்...

அஜிம்சனா : கத்தாத நிரன்.. நம்ம மேலையும் தப்பு இருக்கு... உன்ன அவரு பையனா ஏத்துக்குற்றுந்தப்போ நீ அவருக்கு தெரியாம கல்யாணம் பன்னிக்கிட்டன்னு கோவப்படுரதுல ஒன்னும் தப்பில்லையே என கேட்டபடியே சனாயைவையும் மற்ற குழந்தைகள் இருக்கும் அறையில் ஏதோ செய்து கொண்டிருந்த மீராவிடம் கொடுத்து விட்டு வந்தாள்...

நிரன் : தெரிஞ்ச மாரி பேசாத டி... அவரு ஒன்னும் நா கல்யாணம் பன்னிக்கிட்டதால கோவப்படல.. உன்ன நா காதலிச்சு கல்யாணம் பன்னது தான் அவருக்கு புடிக்கல...

அஜிம்சனா : இரெண்டும் தான்... நாம தெரியாம கல்யாணம் பன்னிக்கிட்டோம்.. நீ இளவரசனா இருந்தும் சாதாரன குடும்பமே இல்லாத என்ன கல்யாணம் பன்னிக்கிட்ட என இருவரும் பதிலுக்கு பதில் பேசத் தொடங்கவும் அவர்களிடையே நடக்கும் குட்டி குட்டி சண்டைகள் இதுவல்ல என்பது தெளிவாகவே மற்றவர்களுக்கு புரிந்தது

நிரன் : நானும் அப்டி தானே... ஒரு வர்ஷம் ( நிலவின் கணக்குப்படி ) முன்னாடி வரைக்கும்... எனக்கு நீ மட்டும் தான டி இருந்த... இந்த ஒரு வர்ஷத்துல தானே எல்லாமே மாறுச்சு... நம்ம ஃப்ரெண்ஸ் வந்தாங்க.. அவருக்கு புதுசா என் மேல பாசம் வந்துச்சு... எனக்கு இளவரன்னு ஒரு பட்டம் வேற கெடச்சிது... நமக்கு யாரி கெடச்சா... அப்போ நா உன்ன காதலிச்சது தப்புன்னு சொல்றியா...

அஜிம்சனா : நா அப்டி ஒன்னும் சொல்லல நிரன்.. நீ இளவரசனான பிறகு உனக்கு துணையா வரப் போற பொண்ணுக்கு ஒரு தகுதி இருக்கனும்னு நிலவே எதிர்பார்க்கும்னு தான் அவரு அப்டி பன்னீர்ப்பாரு

நிரன் : அவருக்கு முதல்ல சப்போர்ட் பன்றத நிறுத்துரியா நீ... இப்டியே எனக்காகவும் யாரிக்காகவும் மட்டுமே யோசிச்சு யோசிச்சு யார் யாரோட பக்கத்துல இருந்தும் யோசிச்சு உன் வாழ்கைய இழக்க போறல்ல நீ என இறுதியாய் கத்தியதில் அனைவரும் அங்கு கூடியிருந்தனர்

சத்யா : போதும் நிரன்... நீ உன் பொருமைய இழந்துக்குட்டு இருக்க என அஜிம்சனாவின் முன் வந்து நிற்க கண்களை திறையிட்டு மறைக்க தொடங்கிய கண்ணீரை மறைக்க இயலாமல் உதட்டை கடித்து அவனை நோக்கி கொண்டிருந்தவளுக்கு அதற்கு மேல் பேச பதில் வரவில்லை... 

நிரன் : அவ தான டா ஆரம்ச்சது.. போடா உனக்கு தான் தெரியாதே

சத்யா : அதுக்குன்னு நீ என் தங்கச்சிய கத்துவியா... உங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சுன்னா எங்க யாருக்கும் அவ மேல உரிமை இல்லன்னு ஆகீடாது

நிரன் : ஹ்ம் நா எப்போ அவ உன் தங்கச்சி இல்ல உனக்கு அவ மேல உரிமை இல்லன்னு சொன்னேன்

அஜிம்சனா : சரி போ..தும் அண்ணா... நா.. போறேன் என எங்கும் பார்க்காமல் உடைந்த குரலில் கூறியவள் அங்கிருந்து வேகமாய் மாடிக்குச் செல்ல அங்கிருந்த மற்றவர்களை கவனிக்காமல் அவளை பின் தொடர்ந்து ஓடினான் நிரன்...

ஷ்ரவன் : இவன் ஏன் டா இப்டி இருக்கான் என புரியாமல் அனைவரையும் பார்க்க... புன்னகையோடே

சத்யா : காதல் எந்த நேரத்துல எப்டி வேணா ஒருத்தன மாத்தும் டா என கூறி கொண்டே ஓரக்கண்ணால் அரானாவை பார்த்தான்....

அஜிம்சனா அவளறைக்குள் செல்லவும் அவளை பின் தொடர்ந்துச் சென்ற நிரன் அவளை திருப்பி வேகமாய் அணைத்து கொள்ள அவனை இறுக்கி அணைத்து கொண்ட அஜிம்சனா தன் கண்ணீரணைக்கு வழி விட்டு கதறி அழுதாள்...

நிரன் " சாரி சாரி சாரி சாரி சாரி சாரி " என மீண்டும் மீண்டும் கூறி அவளை தன் உடல் வலியை பொருட்படுத்தாது இறுக்கி அணைக்க அழுகையை நிறுத்தி விட்டு அவனை விட்டு பிரிந்த அஜிம்சனா அவனது சட்டையை விளக்கினாள்... இதயத்தின் அருகிலே விழுந்திருந்த ஒரு வடுவை அழுகையோடு வருடி " ஐம் சாரி நிரன் " என விசும்ப அவள் தலை தன் நெஞ்சில் சாய்த்து மீண்டும் அணைத்து கொண்டான் அவன்

யதீஷ் : இப்போ நா இத கேக்கலாமா இல்ல கேக்கக் கூடாதான்னு தெரியல இருந்தாலும் கேக்குறேன்... லியான் தொலைஞ்சு போய்ட்டாருன்னு தெரிஞ்சப்போ நிரன் நிலவுல உயிருக்கு போராடிக்கிட்டு இருந்தாருன்னு சொன்னீங்களே... அப்போ என்ன ஆச்சு

ஆர்வின் : ஹ்ம் அப்போவும் இதே மாரி தான் யதீஷ்.. நிரன் அஜிக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சிக்கிட்டதும் குரோபடரான் ராஜா நிரன அஜிய விட்டு வரனும்னு சொல்லீர்க்காரு.. அந்த அழுத்தக்காரன் அவரு கிட்டையே முடியாதுன்னு சண்ட போற்றுக்கான்.. அவரு அஜிய விட்டு வரலன்னா ஹவள கொன்னுடுவேன்னு சொன்னாரு போல... இவன் பதிலுக்கு அவரு கழுத்துல ஈசியா ஒரு கோட போட்டுட்டான்... அவன் இளவரசனாவே இருந்தாலும் ராஜாவ தாக்குனதால அரெஸ்ட் பன்னீர்க்காங்க... ராஜா சரியானதுமே நிரனுக்கு ஐநூறு சவுக்கடி தண்டனையா குடுத்துர்க்காரு... அஜிய விட்டுட்டு வரேன்னு சொல்ற வர அடிக்க சொல்லீர்க்காரு... அவன் கடைசி வர அஜிய விட்டுட்டு வரேன்னு சொல்லாவே இல்ல... அதனால சவுக்கடி 500 ஐயும் தாண்டி ஒரு கட்டத்துல நிரன் உடல் மொத்தமும் வெட்டுப்படவும் கடைசி அடி அவன் இதயத்துல பட்டப்போ அது வர அரை மயக்கத்துல இருந்தவன் மூச்சுப் பேச்சில்லாம போய் விழுந்தானாம்.. இது எதுவுமே தெரியாத அஜி, அவங்க கழுத்துல இருக்க டாலர் மூலமா அவளுக்கு பாஸான நிரனோட வலி அவள ஒரு நாள் முழுக்க மயக்கத்துல வச்சிருந்துச்சு... அப்ரம் அவ எழுந்து அவன் பிழைப்பானா தெரியாம கஷ்டப்படுட்டு இருந்தப்போ நாங்க அவங்கள இங்க கூட்டீட்டு வந்தோம்... ஹ்ம்ம்ம்ம் என நீண்ட பெருமூச்சுடன் முடித்தான்...

யதீஷ் அதை நம்ப முடியாமல் கேட்டு கொண்டிருந்தான்... இத்துனை வலிகளை அவர்கள் அனுபவிக்க வேண்டுமா என்ற கவலையுடன்...

அன்றைய மாலையில் மெதுமெதுவாய் செங்கதிரோன் மேகத்திற்குள் மறைந்து நிலமகளடி சாய அதை வெறித்து கொண்டு அமர்ந்திருந்த தாரா இன்றும் தான் எதிர்பார்த்த நாளில்லை என்பதை உணர்ந்து ஏமாற்றத்தோடு தன் கன்னத்தில் வலிந்த கண்ணீரை துடைத்தாள்...

ஒரு வருடம் களித்து...

தேடல் தொடரும்...

ஹாய் இதயங்களேஏஏஏஏஏ... எது ஒரு வருடமாஆஆஆஆ அப்டீன்னு நீங்க கேக்குறீங்களோ... ஹிஹி என்ன செய்ரது கதையல்லாம் இழுக்கக் கூடாது இல்லையா... அதோட ஸ்கூல வேற திறந்துட்டாய்ங்கையா... நீ ஸ்கூல் போற மாரி பேசாதன்னு சொல்றது கேக்குது... இருந்தாலும் நா படிக்கனும்ல.. ஹிஹிஹி சரி சரி அடுத்த யூடி நாளைக்கே வந்துடும்... பாப்போம்... கான்ட்டஸ்ட் ஸ்டோரிக்கும் நாளைக்கு யூடி உண்டு... அதற்கும் உங்களின் ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்... " குமரியாண்ட எழிலலாளினி" ஓக்கே இதயங்களே குட் நைட் டாட்டா...

DhiraDhi

Seguir leyendo

También te gustarán

56 6 3
A physicist finds himself in an alien planet, 2.5 million light-years away and 340 years into the future apart, in a cyborg's body! He learns that hi...
213K 9.9K 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயி...
10 1 1
𝙴𝚐𝚐𝚊𝚍𝚊 𝚑𝚎𝚛𝚘 𝚗𝚊𝚖𝚎 𝚖𝚊𝚑𝚎𝚜𝚑. 𝚁𝚘𝚖𝚋𝚊 𝚔𝚘𝚠𝚊𝚖 𝚠𝚊𝚛𝚊 𝚊𝚊𝚕. 𝙰𝚠𝚊𝚗𝚍𝚊 𝚏𝚛𝚒𝚎𝚗𝚍𝚜 𝚎𝚕𝚕𝚊𝚛𝚞𝚖 𝚑𝚒𝚝𝚕𝚎𝚛 𝚍𝚞 𝚜𝚘...
213K 6.3K 43
அளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு