தேடல் - 26

179 18 19
                                    

அந்த அலைக்கழிக்கும் மாலை வேளையில் அசதியாய் வீட்டிற்குள் நுழைந்த ஷ்ரவனை மகிழ்ச்சியில் முக்குள்ளிக்க செய்யவே " மாமா " என அவனை நோக்கி ஓடி வந்து அவன் கால்களை அணைத்து கொண்டாள் மூன்று வயதான சனாயா

ஷ்ரவன் புன்னகையுடன் சயானாவை தூக்கி கொஞ்ச அவளை துரத்தியபடியே வந்த ஸ்வத்திக்காவும் ஷ்ரவனை இடித்து நின்றாள்...

அவர்களை கலைப்பதை போலவே வாயிலில் ஒரு காரின் டயர் க்ரீச்சிடும் சத்தம் கேட்க ஷ்ரவனிடமிருந்து இறங்கி " யதுப்பா " என அழகாய் தன் கீச் கூரலில் கத்தி கொண்டே சனாயா வெளியே ஓட அவள் குட்டி காலடி தடத்தை கேட்டு கொண்டே தன் காரை விட்டிறங்கிய யதீஷ் அவளை அள்ளி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான்...

யதீஷ் : பேபி டால் என்ன பன்றீங்க சாபாட்டாச்சா என கேட்க அதுக்கு தலையை டிங்கு டிங்கென ஆட்டினாள் அவள்...

சனாயா : வா வா யதுப்பா என்ன தூக்கீட்டு போ... ரைடு போலாம் என அடம் பிடிக்க யதீஷ் அதற்கு ஒத்துக்கொள்ளும் முன்பாக

ஸ்வத்திக்கா : அடியேய் இப்போ தான உன் யதுப்பா வீட்டுக்குள்ளையே வந்தாரு... அதுக்குள்ள எங்க ஓடுர... நைட்டு ரைடு போலாம் உள்ள வா...

சனாயா : வர மாட்டேன் போ ..

யதீஷ் : பேபிடால் அத்தை கிட்ட அப்டிலாம் கத்த கூடாது... நைட் ரைட் போலாம்.. இப்போ வாங்க நாம போய் தம்பி தங்கச்சி கூட விளையாடலாம் என அவளை சமாதானம் செய்ய

ஸ்வத்திக்கா : பாத்தியா உன் யதுப்பா அத்தை சைடு தான்... அப்டி தான அண்ணா

சனாயா : அஹென் யதுப்பா என் சைடு

யதீஷ் : ஆள விடுங்க சாமி... நா ஃப்ரெஷ்ஷப் ஆக போறேன்... மச்சான் வரலையா என சனாயாவை ஸ்வத்திக்காவிடம் கொடுத்து விடேடு ஷ்ரவனை தாண்டி ஓடினான்...

ஷ்ரவன் : வரேன் டா என யதீஷ் விரைவில் தங்கள் அனைவருடன் சகஜமானதை எண்ணி கொண்டு உள்ளே செல்ல வழியிலே டீவி பார்த்து கொண்டிருந்த சக்தி டிவினிக்கும் ஒரு அட்டெண்டென்சை போட்டு விட்டு அவர்களோடு மோட்டார் சைக்கிலை வைத்து ப்ரும் ப்ரும் என சத்தமெழுப்பி கொண்டு விளையாடி கொண்டிருந்த இரண்டரை வயது ப்ரஜனையும் கொஞ்சி விட்டு மாடியேறியவன் படிகளிலே தன் மகளுக்கு உணவூட்ட கடினப்பட்டு கொண்டிருந்த அஜிம்சனாவிற்கு ஒரு புன்னகையளித்ததோடு அவனை கண்டு முறைத்த யாரியை தானும் செல்லமாய் முறைத்து அவளுடன் விளைளாடிவிட்டு மாடியில் தனக்காய் என்றும் பால்கெனியில் காத்திருக்கும் அரானாவிற்கு மாலை வணக்கத்தை கூறி விட்டு ஆராய்ச்சி கூடத்திலிருந்த ஃத்வருண் மித்ரான் ஆர்வினுக்கு ஹாயையும் அவர்களுக்கு உதவிக் கொண்டிருந்த தங்கைகளுக்கு புன்னகையையும் வழியிலே அவனுக்கு தேனீரை கொடுத்த அனாமிக்காவிற்கு குட்டி நன்றியையும் அலுவலச அறையிலிருந்த வினய் மீரா மீனாவிற்கு ஒரு வணக்கத்தையும் ஓரக்கண்ணால் தன்னவளுக்கு ஒரு லுக்கையும் விட்டு விட்டு தன் அறைக்குச் செல்லும் முன்பாக வழியிலுள்ள ஜன்னலருகில் அமர்ந்து விண்ணை நோக்கி கொண்டிருந்த தாராவின் தலையை வருடி ஒரு புன்னகையளித்து விட்டு தன்னறைக்குள் நுழைந்தான் யதீஷ்...

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)Where stories live. Discover now