தேடல் - 25

207 18 77
                                    

அந்த மருத்துவமனையே ஒரு சில நொடிகளில் பரபரத்து அடங்க அஜிம்சனா உறக்கத்திலிருந்து எழுந்து சுற்றி பரபரப்பாய் பார்த்தாள்..

வினய் முன்னெச்செரிக்கையாய் இவர்களை நோக்கி வர நிரன் ஒரு புறம் வினய் ஒரு புறம் அவளுக்கு காவலர்களை போல் நின்று கொண்டனர்..

அஜிம்சனா தற்செயலாக நிரனின் ஒரு கரத்தை மென்மையாய் பிடித்து கொள்ள அவளை திரும்பி பார்த்த நிரன் இங்கிருந்து வீட்டிற்கு கிளம்பலாம் என கூற வரவும் அங்கிருந்த நோயாளிகளையும் ஒவ்வொரு நோயாளர்களின் குடும்பத்தினரையும் அமைதி படுத்தி கொண்டிருந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுள் ஒரு செவிலி நிரனின் பெயரை கூறி அழைத்தார்...

வேறு வழியின்றி இம்மூவரும் மருத்துவரை பார்க்க செல்ல அவனின் காயங்களை பரிசோதித்த மருத்துவர் குருகுருவென்ற பார்வையோடே
" நீங்க ஜெயில்லேந்து தப்பிச்சு வந்தவரா?? "
" எந்த நாட்லையாவது தீவிரவாதியா மாட்டிக்கிட்டு இப்போ தான் இண்டியாக்கு வந்தீங்களா ??"
" எந்த செயலுக்காக நீங்க இவ்ளோ அடி வாங்கியிருக்கீங்க.. "
" உங்க ஆதார் கார்ட் காட்டுங்க .. இல்ல வேற எதாவது நாட்டுலேந்து வந்துர்க்கீங்களா... பாஸ்போர்ட் காட்டுங்க... ஐடி காட்டுங்க "

என அவனை தீவிரவாதியாகவே முடிவு செய்து எண்ணற்ற கேள்விகளை கேட்டதுமில்லாமல் மருத்துவர் என்ற பட்டத்தை மறந்து சீபீசீ ஐடி கணக்காய் அவர் விசாரிக்க அவன் பூமி வாசியே இல்லையென்றபோது இதில் எங்கிருந்து அவனது உரிமை படிவத்தை காட்டுவதென்று தெரியாமல் வினய் ஏதேதோ சொல்லி சமாளித்து " தோ தூத்துக்குடில தான் எங்க ஐடி இருக்கு... " " அது நாளைக்கு தான் வரும் " " நாங்க அண்டர்க்ரௌண்ட் வர்க்கர்ஸ் " " இதோ பொண்டாட்டி கொடுமை " என ஒளறி கொட்டி அஜிம்சனாவிடமிருந்து ஒரு முறைப்பை பெற்று கொண்டதோடு அந்த மருத்துவரிடமிருந்து நிரனை காப்பாற்றி வெளியே வந்தான்...

இவர்கள் படாது பாடு படுவதை ஷரூரா பார்த்து விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தாள்...

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)Unde poveștirile trăiesc. Descoperă acum