💓 என்றும் என்னவள் நீயே 💓 (c...

Від dollyaysha

71.8K 2.2K 983

தன் வாழ்வில் சந்தித்த ஒரு பெண்ணினால், பெண்களை வர்க்கத்தையே வெறுக்கும் நாயகன் இரக்க நாயகியின் காதல் வலையில் வி... Більше

💓 Introduction 💓
💕 என்னவள் நீயே - 01 💕
💕என்னவள் நீயே - 02 💕
💕 என்னவள் நீயே - 03 💕
💕 என்னவள் நீயே - 04 💕
💕 என்னவள் நீயே - 05 💕
💕 என்னவள் நீயே - 06 💕
💕 என்னவள் நீயே - 07 💕
💕 என்னவள் நீயே - 08 💕
💕 என்னவள் நீயே - 09 💕
💕 என்னவள் நீயே - 10 💕
💕என்னவள் நீயே - 11💕
💕 என்னவள் நீயே - 12 💕
💕 என்னவள் நீயே - 13 💕
💕 என்னவள் நீயே - 14 💕
💕 என்னவள் நீயே - 15 💕
💕 என்னவள் நீயே - 16 💕
💕 என்னவள் நீயே - 17 💕
💕 என்னவள் நீயே - 18 💕
💕 என்னவள் நீயே - 19 💕
💕 என்னவள் நீயே - 20 💕
💕 என்னவள் நீயே - 21💕
💕 என்னவள் நீயே - 22 💕
💕 என்னவள் நீயே - 23 💕
💕 என்னவள் நீயே - 24 💕
💕 என்னவள் நீயே - 25 💕
💕 என்னவள் நீயே - 26 💕
💕 என்னவள் நீயே - 27 💕
💕 என்னவள் நீயே - 28 💕
💕என்னவள் நீயே - 29 💕
💕 என்னவள் நீயே - 30 💕
💕 என்னவள் நீயே - 31 💕
💕 என்னவள் நீயே - 32 💕
💕 என்னவள் நீயே - 33 💕
💕 என்னவள் நீயே - 34 💕
💕 என்னவள் நீயே - 35 💕
💕 என்னவள் நீயே - 36 💕
💕 என்னவள் நீயே - 38 💕
💕 என்னவள் நீயே - 39 💕
💕 என்னவள் நீயே - 40 💕
💕 என்னவள் நீயே - 41 💕
💕 என்னவள் நீயே - 42 💕
💕 என்னவள் நீயே - 43 💕
💕 என்னவள் நீயே - 44 💕
💕 என்னவள் நீயே - 45 💕
💕 Thanking 💕

💕 என்னவள் நீயே - 37 💕

999 49 47
Від dollyaysha


"வைஷு, கொஞ்சம் wait டி" என்று அருணின் நெஞ்சில் இருந்த வைஷ்ணவியை விலத்திவிட்டு சென்றான் அருண்.

அந்த dinning table ஐ நோக்கி அவள் செல்ல முற்பட, அவளது கால்களில் பலூன்களோ தடுத்தன. அப்போது தான் தரையை ஆராய்ந்தாள் வைஷ்ணவி.
தரை முழுவதும் சிவப்பு வெள்ளை பலூன்கள், dining table யை சுற்றியும் இருந்தது. பெரிய table இல்லாவிட்டாலும் சிறிய வட்ட மேசை. ரோஜா இதழ்கள் பரவசெய்து அவளுக்கு விருப்பமான pasta செய்து வைக்கப்பட்டிருந்தது. மேசையில் நடுவே அழகிய roses bouquet. மேசையில் அங்காங்கே candles பற்ற வைத்தும் காணப்பட்டது. இவை எல்லாவற்றையும் ஆச்சரியப்பட்டு பாரத்துக்கொண்டு இருக்க,
"papa, do you love this??" என்று கேட்டபடி பலூன்களில் இடையில் நடந்து வந்தான் அவளது காதல் மன்னன்.

வந்தவன், அவள் முன்னே ஒரு முழங்காலை மடித்து தரையில் வைத்தும், மற்றைய காலை நிறுத்தியும், இரு கைகளையும் பின்னால் மறைத்தபடி,
" I love you வைஷு, my papa, my lifeline, my usuru, my baby, my pondati" என்றபடி பின்னால் மறைத்திருந்த கையை நீட்ட, அதில் அவளுக்கு பிடித்தமான இளம்சிவப்பு தனி ரோஜாப்பூவொன்று இருந்தது.
நடப்பதையெல்லாம் நம்ப முடியாமல் கண்களோ சந்தோசத்தால் கலங்கியது.
எல்லாம் உண்மையா? என்று நினைக்க, அவளது கன்னங்களை காற்றோ இதமாக தட்டி இது நிஜம் என்று சொல்லிக் கொடுத்தது.

"என்னடி, என் propose யை ஏற்றுக் கொள்ள மனசு இல்லையா?" என்று முகத்தை அப்பாவியாக வைத்தபடி கேட்க,
நின்று கொண்டிருந்த வைஷ்ணவியோ ஒடிச்சென்று முழங்காலில் நின்ற அருணின் கையிலிருந்த ரோஜாவை எடுத்தபடி, அவனை இறுக்க கட்டியணைத்தாள்.

"papa, இன்னும் இறுக்கமாக்கி கட்டிபிடிச்சா நா கீழ விழுந்துருவேன்டி. என் கூட சேர்ந்து நீயும் விழுவடி" என்று சொல்ல,
"பரவல்லடா" என்று மேலும் கட்டியணைப்பை இறுக்கினாள். இருவரும் முழங்காலில் நின்றுகொண்டு இருக்க, வானில் பட்டாசுகளும் வெடித்து அவர்களது காதலுக்கு ஆசி வழங்கின.
வைஷ்ணவியின் தோள்களில் பட்டுக்கொண்டிருந்த கூந்தலை தன் கரங்களால் சற்று ஒதுக்கி, வைஷ்ணவியின் கன்னத்தில் முத்தமிட்டான் அருண்.
"என்னடி, என் காதலுக்கு பதில் இன்னும் சொல்லவில்லையே" என்று வருத்தமாக அவளது காதருகில் சொல்ல,
" I love you baby, I love you arun, I love you so much" என்று சொன்னாள். அவளது கண்ணீரோ அருணின் tshirt யை நனைக்க,
"என்னடி, first time பார்க்குறேன் love வ சொல்லிட்டு அழுகிற பொண்ண" என்று அணைப்பிலிருந்து அவளை விடுவிடுத்து,
தன் கரங்களில் அவளது முகத்தை தாங்கினான்.

" அருண், I am so happy. நா எவ்வளவு சந்தோசமா இருக்கேன்னு எனக்கு வார்த்தையால சொல்ல முடியல. Today I will be the happiest girl. உன்னோடு வாழனும்னு கனவு கண்டேன். நீ என்ன எப்போதாவது என் காதல accept பண்வாய்னு தெரியும். ஆனா accept பண்ணா இப்படி தான் feel ஆகும்னு தெரியலடா. I love this feeling. சந்தோசத்துல என்ன செய்றன்னு புரிது இல்லடா" என்று பேசிக் கொண்டு போக,
தீடீரென வைஷ்ணவியை தன்னோடு இழுத்து அவளது இதழை சிறைப்பிடித்தான் அருண்.

சிறு கணத்தில் அருண் இதழை விடுவிக்க,
வெட்கத்தில் வைஷ்ணவியின் கன்னங்கள் சிவப்பாக மாறியது. கீழே குனிந்து தரையை பார்த்துக் கொண்டிருக்க,
" என் papa க்கு வெட்கம் வந்து விட்டதோ?? "
என்று சொல்ல, பதிலும் இல்லை.
" வைஷு, நா நினைச்சு சரி தான். இந்த ரேடியோவ ஆஃப் பண்ண ஒரே ஒரு வழி kissing தான்"
ஈஈஈ என்று இளித்தாள் வைஷ்ணவி.

இருவரும் சேர்ந்து memories காக selfie எடுத்தனர். அருண் பக்கமாக வைஷ்ணவியை அணைத்தபடி ஓர் selfie. அப்போது தான் வைஷ்ணவி அவதானித்தாள். இருவரும் சிவப்பு நிற tshirt. அருணின் tshirt ஒருபக்கத்தில் LO என்றும் தன்னுடைய tshirt இல் VE என்றும் இருந்தது. இருவரும் சேர்ந்திருக்கும்போது,
ஒரு முழு இதய வடிவில் LOVE என்று முழு சொல்லோடு அர்த்தத்தையும் உணர்த்திக் கொண்டு இருந்தது.
"நம்ம tshirt போல தான் நாமும் நம்ம love உம், My life incomplete without you" என்றான் அருண்.

"சரி, வா சாப்பிடலாம்" என்று அவளை அழைக்க,
இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட தொடங்கினர்.
கரண்டியால் அப்போதும் கஷ்டப்பட்டு சாப்பிடவே, அருணோ ஊட்டிவிட்டான்.
அன்றைய உணவோ அவளுக்கு மென்மேலும் சுவையாக இருந்தது. கடைசி கவளத்தில், வேண்டுமென்றே அருணின் விரலை கடித்துவிட்டாள்.
" paaaaapaaa " என்று கத்த,
"ஏன்டா?"
" இனி உனக்கு ஊட்டிவிடமாட்டேன். வேணும்னு தானே கடித்த?" என்று கேட்க,
" இல்ல தங்கமே, pasta ரொம்ப taste டா இருந்ததா, pasta ன்னு நினைச்சு உங்க கையென்று தெரியமா கடித்துட்டேன்.
Sorry டா" என்று சொன்னாள் வைஷ்ணவி. அவனோ விளையாட்டுத்தனத்துக்கும் சேர்த்து, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான். இவள் தன்னை எவ்வாறு சமாளிப்பாள் என்ற ஆவலுக்கும் சேர்த்து.

" ஐயோ sorry அருண். தங்கமே, என் கண்மணியே, என்ட செல்லமே " என்று அவள் செல்லப் பெயர்கள் சொல்ல, முதல்தடவை தன்னவள் சொல்லும் சொற்களோ அவனது காதை இனிக்க செய்தது.
" நா என்னடா பண்ணனும்? உன் கோவம் போக?" என்று கேட்க,
"அத நீ தான்டி பார்த்து செய்யனும். என் கிட்டவே கேட்டா எப்படி??" என்று அருண் சொல்ல, யோசனையில் மூழ்கினாள். கொஞ்சம் room ல போய் கோவிச்ச, Google ல சரி கேட்டு பார்க்க இருந்தது. இதெல்லாம் புதிய experience ஆ இருக்கே இதற்கு முன் இப்படி யாரையும் சமாளித்ததும் இல்லையே. என்ன பண்ணலாம்?? என்று யோசிக்க, அவளே பார்க்க அருணிற்கோ பாவமாக இருந்தது.

"சரி, சரி விடுடி. நா சும்மா உன்ன குழப்பினேன். ஓவரா எதையும் யோசிக்காதே" என்று மேசையில் இருந்த அவளது மென்மையான கரத்தை தன் கரத்திற்குள் சிறை செய்தான். வைஷ்ணவியோ சிறை செய்யப்பட்டிருந்த அந்த கரங்களில் அருணின் மேல் கரத்தை எடுத்து முத்தமிட்டாள். அத்த முத்தத்தின் அழுத்தம் அவள் எவ்வளவு அருணை உண்மையாக நேசிக்கிறாள் என்று அருணிற்கோ புரிந்தது.

பின் மற்றைய கரத்தால் அருணின் நெற்றியிலில் விழுந்திருந்த முடியை ஒதுக்கிவிட்டு மென்மையாக முத்தமொன்றை நெற்றியில் கொடுத்தாள். கண் புருவங்களின் மேலால் தன் விரல்களால் வரைந்து, கண் மூடிகளின் மேலும் முத்தம் கொடுத்தாள். அவனது மூக்கிலும் கோலம் வரைந்து, மூக்கை சற்றே ஆட்டிவிட்டு, தன் மூக்குடன் உரசவும் செய்தாள். மீசையிலும் தாடியிலும் தன் விரல்களை விட, அதுவோ அவளை தீண்ட, கூச்சப்பட்டுக் கொண்டே சந்தோசம் அடைந்தாள் வைஷ்ணவி. பின் அருணின் இதழை முதன்முதலாக கண்களால் பார்த்து இரசித்தவள், அருணின் உதட்டோரம் தனது விரலால் கீறியும் பார்த்தாள். அவ்வாறு தன் இதழால் அருணின் இதழை மென்மையாக ஒற்றி எடுக்கவும் செய்தாள்.
" sorry டா. நான் வேண்டுமென்று தான் கடித்தேன். நீ எப்படி react பண்வன்னு பார்க்க" என்று அவனின் கண்களை பார்த்து அவள் சொல்ல, அவனும்,
"நானும் உன்ன சும்மா தான்டி குழப்பினேன்" என்று அவளது தலையை தடவி விட்டான்.

இருவரும் உண்டுவிட்டு,
தங்களது பாடசாலை கதைகள், காலேஜ் கதைகள் என்று பல இனிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கூடுதலாக சேர்ந்து சிரிக்கவே செய்தனர்.
அவ்வாறிருக்க,
" papa, உனக்கு உன் baby எப்படி இருக்கனும்டு ஆசை? "
" அப்படியொன்றும் பெரிசா இல்ல. நீ நீயாக இரி. என்னால நீ மாற கூடாது. இந்த attitude, character தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். நகைச்சுவையான பேச்சு, கடமையுணர்வு, என் மேல வைத்திருக்க அக்கறை, பாசம். ஆனா பிரச்சினயோ சந்தோசமோ எதுவாக இருந்தாலும் என் கூட share பண்ணிக்கனும். அது சரி நான் எப்படி இருக்கனும் baby? " என்று கேட்டாள் வைஷ்ணவி.
" நீயும் நீயாக இரு. I love this character. அவசரமா வார கோவத்த கொஞ்சம் control பண்ணிக்கோ. இவ்வளவு தான் " என்றவன்,

" நம்ம relationship ல ஏதும் rules வைக்கனுமா?? " என்று வினவினான் அருண்.

" அப்படியெல்லாம் தேவைல்லடா"
" are you sure? "
" ம்ம்ம்"
" என்னடி papa??"
" baby, நமக்கிடையில என்ன சண்ட வந்தாலும் அன்று தூங்க போக முதல் அத solve பண்ணிக்கனும். கோவத்துல தூங்க போக கூடா"
" papa, என்ன நடந்தாலும் ஒத்தர ஒத்தர் விட்டு கொடுக்க கூடாது. நா கோவித்துவிட்டு போன நீ என்ன sharp பண்ண வரணும். அத மாதிரி நானும் தான். நமக்கு இடைல ego வரவே கூடாது"
" baby, உன்ன திருமணம் முடித்தா எப்படியும் நா தானே எழுப்புவேன். இப்ப என் ஃபோன் call ல தான் நீங்க எழும்பனும், தூங்கனும் கூட"
" இதெல்லாம் ஒரு rule ஆ டி??? "என்று சொல்ல,
" not daily. தேவைக்கேற்ப மாறுபடுமே. And என்ன தவிர வேற எந்த பொண்ணயும் பார்க்க கூடா"என்றாள் அவள்.
" ஐயோ" என்று தலையில் கை வைத்தான் அருண்.
" and last உன்கிட்ட நானும் என்கிட்ட நீயும் எதையும் மறைக்க கூடாது. இவ்வளவு தான் rules baby. " என்றபடி வைஷ்ணவி கடிகாரத்தை பார்க்க,
அதுவோ,
12மணியை காட்டியது.

" ஐயோ baby, tomorrow workshop வேற start ஆகுது. Early ஆக எழும்பனுமே. வா தூங்கலாம்" என்று சொன்னபடி அவனை இழுத்துக் கொண்டு போக, அருணின் மனதில் சஞ்சலம் உண்டாகியது. அவள் சொன்ன கடைசி rule காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

" நா முதல்ல fresh ஆகிட்டு வாரேன் " என்று சுடிதார் ஒன்றை எடுத்துக் கொண்டு சென்று சில நிமிடங்களில் அதை இரவுடையாக அணிந்து அறைக்குள் வந்தாள். ஆனால் அருணோ அவள் இழுத்துக் கொண்டு விட்ட அதே இடத்திலே நின்று கொண்டு இருந்தான் பலத்த யோசனையுடன். இன்று தான் propose கூட பண்ணேன். இந்த உண்மையை தெரிந்தால் இன்றே breakup ஆகுமோ என்ற பயத்துடன் இருந்தான். ஒருவேளை என்னை விட்டு சென்று விடுவாளோ?

" baby, போ போ, fresh ஆகிட்டு வா" என்று அவனது bag இல் இருந்த tshirt, bottom ஒன்றை கையில் திணித்து அவனை குளியலறைக்கு அனுப்பினாள்.
பல நிமிடங்களுக்கு கதவு திறப்பட, கொட்டாவி விட்டு கண்ணை கசக்கிக் கொண்டு தன்னவள் தனக்காக காத்துக் கொண்டிருந்ததை பார்க்க பாவமாக இருந்தது.

" baby, எங்க தூங்க போற? " என்று வைஷ்ணவி கேட்க,
" sofa ல தான் papa "  என்று சொன்னதும், sofa வை arrange செய்து கொடுத்துவிட்டு,
அருணின் அருகே வந்தவள், கால்களால் எந்தி அவனது நெற்றியை முத்தமிட்டு,
" good night baby, என் life ல இன்றைய நாள மறக்கமுடியாத நாளா மாத்தினதுக்கு. I love you usuru. Thanks for everything " என்று சிரித்தபடி அவள் போக முற்பட,
அவளது கரங்களை பிடித்து இழுத்தான் அருண்.

சற்றும் எதிர்ப்பார்க்காத வைஷ்ணவி அவனது நெஞ்சில் விழுந்தாள்.
" வைஷு, இத கேட்டா நீ எப்படி react பண்வீயோ தெரியலடி. ஆனா இன்று தானே நீ சொன்ன நமக்கிடையில ஏதும் ஒளிவு மறைவு இருக்க கூடாதுன்னு. அதனால நா இப்பவே சொல்லனும்டி" என்று வைஷ்ணவியின் முகத்திலும், நெற்றியிலும் விழுந்த கூந்தலை காதில் சொறுகிய வண்ணம் கூறினான் அருண்.
"சரி baby, தயங்காம சொல்லுடா" என்று அவனின் கண்களை பார்த்து மிக்க காதலோடு கேட்டாள் வைஷ்ணவி.

" I have a past to say to you. அபினேஷ்ட தங்கை. அதான் ஸ்னேஹா. She is my ex girlfriend" என்று அருண் கூறியதும், நெஞ்சிலிருந்த ஸ்னேஹாவோ அவனை விட்டு விலகி கோபத்துடன் செல்வாள் என்று நினைத்த அருணிற்கோ ஆச்சரியமாக இருந்தது. மாறாக அவனை இன்னும் அணைப்பில் இறுக்கிக் கொண்டு காந்த சிரிப்பால் அவனை கவர்ந்து கொண்டு எதையோ சொல்ல வந்தாள் வைஷ்ணவி.

தொடரும் 💕

Продовжити читання

Вам також сподобається

149K 5.4K 36
No1 : 29.4.2018 to 2.5.2018😍 hiii friends..!! ? This is my first story ... ? wattpad la stories read panna start pannathuku aprm nammalum eluthala...
1.5K 236 7
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு...
காயம்✔️ Від مريم سهلة

Філософія та духовні розповіді

969 126 14
கவலைகளே இல்லாமல் சிட்டாய்ப் பறந்து திரிந்தவள் மனதில் ஒரு காயம் ஏற்படுத்தப்பட்டு விடுகிறது. அது எவ்வாறு ஏற்பட்டது, யார் அதனை ஏற்படுத்தியது, பின்னர் அந...