29. எண்ணம் ஈடேறுமா

1.1K 75 44
                                    

ராகவ் ரவியிடம் காட்டிய அந்த புட்டேஜை பார்த்து முடித்தவளுக்கு இப்பொழுது அவர்களின் உரையாடலின் அர்த்தம் புரிய, அவள் இதழ்கள் தானாய் முனுமுனுத்தன.

"வாரே வா..!"

உடனே தனதருகிலிருந்த கைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு அழுத்தி காதில் வைத்தாள்.

அழைப்பு ஏற்கப்பட்டதும் தாமதமின்றி,
"ஹலோ அண்ணா.." என அவள் அழைத்ததும்

"ஹ்ம்ம் ஹலோ சொல்லு ஆதிரா. என்ன விஷயம்?" என உறுதியான குரல் ஒலித்தது எதிர்புறத்திலிருந்து.

"என்ன விஷயமா? எப்பவும் எதாவது விஷயத்தோட தான் கால் பண்ணனுமா?"

"நானா அப்படி சொல்லலையே. நீ எப்பவும் பண்றதை தான் சொல்றேன்." என அவன் சொல்லவும் சிரித்துக்கொண்டவள்,

" எப்போ நீ இந்தியா வர?" என்றாள்.

"வர்ற வேலை எதாவது இருந்தா வருவேன். ஆனா இப்போதைக்கு இல்லையே."

"சரியா போச்சு அண்ணா. உன்னை வர்ற வைக்குறதுக்கு உனக்கு ஒரு வேலைய வேற நானே ரெடி பண்ணனுமா?"

"இப்போ நான் அங்க வந்து என்ன பண்ண போறேன்?"

"என்ன பண்ண போறியா? தங்கச்சி வாழ்க்கை இங்க ஊசலாடிக்குட்டு இருக்கு நீ என்னன்னா பொறுப்பில்லாமல் பேசுற. எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்."

"உன் வாழ்க்கை உன் கையில். அதுல நான்‌ என்ன மா ஹெல்ப் பண்ணனும்? அப்படியே எதாவது ஹெல்ப் வேணும்னாலும் உன் மாமா கிட்ட கேட்க வேண்டியது தானே."

"இப்போ யாரையும் நான் நம்புறதா இல்லை. மாமா நம்ப சைட்ல இருந்து மாறி ரொம்ப நாள் ஆச்சி."

"நம்ப சைட் இல்லை. உன் சைட்..!"

"வாட்டெவர்.." என கண்களை உருட்டியவள், "ஹெல்ப் பண்ண முடியுமா முடியாதா?" எனவும்,

"என்ன ஹெல்ப் சொல்லு." என்றான்.

"வர்த்தா எனக்கொரு விஷயம் சிக்கிருக்கு. இதை வச்சி கண்டிப்பா அந்த ஆரவையும் மாயாவையும் பிரிச்சிடலாம்."

விண்மீன் விழியில்..Where stories live. Discover now