28. விழகும் திரை

Start from the beginning
                                    

"ஹாய் அண்ணா..! எப்படி இருக்கிங்க?" என கேட்டப்படி எதிர் சோஃபாவில் அர்ஜுன்‌ அமர,

"நல்லா இருக்கேன் டா." என அவன் கூறவும் ரவி அமர்ந்திருந்த இரண்டு பேர் அமரும் சோஃபாவில், அவனருகில் தொப்பென அமர்ந்தாள் திவ்யா.

"என்ட சேட்டா சுகந்தனல்லே?" என அவள் குறும்புடன் கேட்க, அவளை ஓரக் கண்ணால் முறைத்தவன்,

"இதை விட்டா உனக்கு வேற எந்த டயலாக்கும் தெரியாதே." என்றான்.

"டயலாக் தானே. நேத்து தான் கும்பகோணம் போற ட்ரைன்ல இரண்டே வாரத்தில் மலையாளம் கத்துக்குறது எப்படின்னு ஒரு புக்கு வாங்குனேன். அடுத்த வாட்டி மீட் பண்ணும் போது வேற டயலாக் பேசுறேன்." பார்வையும் கவனமும் கையிலிருந்த போனில் பதிந்திருக்க, குரலில் கேலியுடன் கூறினாள் அவள்.

"ஹ்ம்ம். மலையாளம் கத்துக்குறதுக்கு முன்னாடி  சேட்டனுடைய இன்னொரு அர்த்தம் என்னனு கத்துக்கோ." என்றான் அவன் அர்த்தம் பொதிந்த குரலில்.

அதை உணர்ந்தவளாய் நிமிர்ந்து அவனை ஒரு குழம்பிய பார்வை பார்த்தவள், "அது என்ன அர்த்தம்?" என்று வினவ, அவன் பதில் பேசாமல் மர்மமாய் சிரித்துக்கொண்டான்.

"சரி அதை விடுங்க. உங்க ப்ரெண்ட்ஸ் எல்லாரும் மிங்கிள் ஆயிட்டாங்க. நீங்க இன்னும் சிங்கிலா சுத்திட்டு இருக்கிங்க?"

"சிங்கம் எப்பவும் சிங்களா தான் சுத்தும்." என காலரை தூக்கி விட்டு கொண்டான் அவன்.

"அந்த சிங்கத்துக்கே இது அசிங்கம். ஒரு பொண்ணை கூட கரெக்ட் பண்ண தெரியலைன்னு சொல்லுங்க." என்றவள், அவனது முறைப்பை பொருட்படுத்தாமல் தனது ஃபோனில் எதையோ தேடி எடுத்து அவனிடம் காட்டி,

"இந்த பொண்ணு எப்படி இருக்கா? செம்மையா இருக்காள? என் பெஸ்ட் பிரண்ட். இன்பேக்ட் உங்க சேனல்லையே எல்லார விட அவளுக்கு உங்களைத் தான் ரொம்ப பிடிக்குமாம். அவ உங்களோட பெரிய ஃபேன்." என அவள் அடுக்கவும் அவளை நம்ப முடியாத பார்வை அவன் பார்க்க,

விண்மீன் விழியில்..Where stories live. Discover now