29.ஆர்த்திமுருகேசன்

Start from the beginning
                                    

விஜய், " ம்ம் அதுவா மாது.  எனக்கே தெரியல என்னோட ஆழ் மனசுல எப்போ உங்கிட்ட மனைவின்னு உரிமை எடுத்ததுனு. எப்போ என் மனசுக்குள்ள காதல் வழியா நீ வந்தன்னு.

நீ ஆஸ்பிட்டலில தலையில கட்டோட பார்த்தப்போ என்னோட உயிரே துடிக்கிற மாதிரி இருந்தது.

அந்த நிமிடம் தான் எனக்குள்ள வந்த உன்னையும் காதலையும் உணர்ந்தேன் மாதுமா.

என்னை மீறி என்னோட மனசும் உயிரும் உனக்காக துடிச்சத பார்த்தேன். அப்பவே முடிவு பண்ணிட்டேன் நீதான் என்னோட மனைவினு" என எல்லாவற்றையும் கூறி முடித்தவன் கடைசியில், "ஐ லவ் யூ மாதுமா" என காற்றுக்குக்கூட வலிக்காத வகையில். தன் காதலை கூறினான் மாதுவின் விஜய்.

இச்சொல்லும் காதலும் செவி வழியே  ஊடுருவி மாதுவின் மனதுக்குள் சென்று இதயத்தில் ஆயிரம் மின்னல்களை உற்பத்தி செய்து கண்ணில் சிறு சிறு தூறலாக வெளி வந்தது மாதுவின் காதல். 

மாது வாய் திறப்பதற்குள் விஜய், வீட்டில் யாரோ தன்னை அவசரமாக அழைப்பதாக கூறி பிறகு பேசலாம் மாது என அழைப்பை துண்டித்தான். 

       அப்போதுதான் அங்கு விஜயின் அப்பா நெஞ்சுவலி என துடிக்க அறிவழகி விஜய்யை அழைத்தார்.

        அவன் அலைபேசியை அணைத்துவிட்டு போனாலும் விஜயின்  நினைவுகள் மாதுவை அணைத்துதான் இருந்தது. அவளும் விஜயின் காதல் சொற்களின் பிடியில் இருந்ததால் அந்த மாய அணைப்பிலிருந்து விடுபட எண்ணமும் அவளுக்கு எழவில்லை.

வெறும் வார்த்தைகளால் மாதுவின் உயிரையும் காதலையும் எப்படி தன்வச படுத்தினான் என்பது மாதுவின் மனதில் மாயம் செய்த அந்த மாயக்காரன் மட்டுமே அறிந்தது ஆகும்.

அவை வெறும் வார்த்தைகள் அல்ல உயிரை உறைய வைக்கும் கருவி என்பது மாதுக்கு மட்டுமே தெரியும்.

    மன்னவர் பேரை சொல்லி
    மல்லிகை சூடி கொண்டேன்...

    இசைஞானியின் விரல் நுனி கலையிலும் ஜானகி அம்மாளின் தேன் கொதிக்கும் குரலிலிலும்,  எங்கிருந்தோ வந்த பாட்டு கூட செவிகளை தீண்டி இம்சை செய்யும்போது நவயுக மங்கையான மாதுவையே ஓர் நொடி காதலில் கரைந்து கற்பனையில் மிதந்து வெட்கம் உதிரும் சிரிப்பை மலர செய்தது.

மனம் வருடும் ஓவியமே!Where stories live. Discover now