காலம் - 51

Start from the beginning
                                    

சொத்திற்காக ஷீலாவின் குழந்தையை அபாண்டமாய் கொன்று அவரை தண்டித்து விட்டோமே என்று லிங்கமும் தான் தன் அண்ணனின் குழந்தையை கொன்றதாலே தன் மனைவிக்கு இந்நிலை என்று ராமுவும் கவலையுடன் யோசித்து கொண்டிருந்த நேரம் ஷீலா புன்னகை முகமாய் தோளில் உறங்கியிருந்த குழந்தையுடன் உள்ளே வந்தார்...

ஷீலா : இந்தா பாப்பா... தம்பி தூங்கீட்டான்...

தமையந்தி : நீங்க பெரிய ஆளு தான் சித்தி... இவன் அழுகைய இந்த இரெண்டு மாசத்துல என்னால நிறுத்தவே முடியல... நீங்க கொஞ்ச நேரத்துல சரி பன்னிட்டீங்களே... என குழந்தையை கை தாங்கலாய் வாங்கியவள் தோளில் போட்டவாறு கூற அதற்கு மெமையாய் புன்னகைத்த ஷீலா சமையலறைக்குள் புகுந்து கொண்டார்...

வீட்டிற்கு வந்த அஃப்ரி தஸ்னி சஹா நடு கூடத்திலே நின்று வாணத்திற்கும் பூமிக்கும் குதிக்காத குறையாக மகிழ்ச்சியாய் கத்தி கொண்டிருந்த தாஹினியை கண்டதும் காலைல அப்டி இருந்துட்டு இப்போ எப்டி இப்டி மாறுனா... என விழி விரித்து கொண்டு வந்தவர்களின் கண்களில் சரியாய் அகப்பட்டான் இரண்டாம் மாடியின் இறுதியில் இருந்த அறையின் கதவில் சாய்ந்தவாறு கண்ணிமைக்காமல் சுற்று முற்றும் எதையும் கண்டு கொள்ளாமல் உறைந்த புன்னகையுடன் அவனவளை இரசித்தவாறு நின்றிருந்த அவர்களின் தமையன்...

எங்கேந்து வந்தாள்... ஏன் கத்துகிறாள் ஏன் குதிக்கிறாள் என்ன சொல்கிறாளென்றே புரியாது அவர்கள் முன் குதித்து கொண்டிருந்த தாஹினியை பார்த்து கொண்டிருந்த சபீ ஹனா மற்றும் ஹஃப்னா மூவரும் தாஹினியின் பின் வந்த மூவரையும் கவனித்து விட... தஸ்னி இம்மூவருக்கும் கண்ணாலே ஏதோ சொல்ல முதலில் புரியாது விழித்த ஹஃப்னா மற்றும் சபீயின் மண்டையில் கொட்டி புரிய வைத்த ஹனா விரல்களை நீட்டி எண்ண... சரியாக மூன்று என்ற எண் முடியவும் தாஹினி பின்னிருந்த மூவரும்... அவள் முன்னிருந்த மூவரும் ஒரு சேர " ஹப்பி ஃபர்ஸ்ட் ஃவெட்டிங் அனிவெர்செரி லவ்லி கப்பில்ஸ் " என்று கத்திய கத்தில் திடுக்கிட்ட தாஹினி உறைந்து நிற்க.. ககதவில் சாய்ந்து நின்றிருந்த தமிழ் தடுமாறி கீழ் விழ போய் தன் நிலை பெற்று எழுந்து நின்றான்....

காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது)Where stories live. Discover now