1 (அவளின் சீற்றம்)

Start from the beginning
                                    

சிறிது நேரத்தில் அனைவரும் கிளம்பிய பிறகு அந்த பெரிய மாளிகையில் அவனும் அவளும் மட்டுமே. அவளுக்கு இப்போது சிறிது சிறிதாக உடம்பில் சுரணை வர ஆரம்பித்தது. கூடவே இவனோடு தனிமையில் இருக்கும் நிலையை எண்ணி அச்சமும் வரவே தாறுமாறாக துடிக்கும் இதயத்தை அடக்கியபடி இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் இழந்த தைரியத்தை மீட்க போராடினாள் அவள்.

அவளது தைரியமீட்பு போராட்டத்தை முகம் பிரதிபலிக்க அதை ஏளனம் கலந்த பார்வையுடன் கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு அவளது வதனத்தில் தெரிந்த தோற்றுப் போன பாவம் ஒன்றே அவனுக்கு பரமதிருப்தியை அளித்தது. 

எங்கே சென்றது தொட்டதெற்கெல்லாம் எடுத்தெறிந்து தன்னை துச்சமாய் பேசுபவளின் வாய்த்துடுக்கு, அகராதி எல்லாம். இந்த முகத்தில் தன்னை காணும் போது உண்டாகும் திமிர், அகங்காரம் எல்லாம் இன்று துடைத்தெறியப்பட்டு கலக்கம் மட்டுமே உறைந்திருப்பது பார்ப்பதற்கு எவ்வளவு அழகு.

அதே திருப்தியுடன் அவர்களின் திருமணத்துக்கு தயாரான விருந்தை ஒரு பிடி பிடித்தான் அவன். அவளோ இன்னும் சிலையாய் பெரிய அறையில் நடுவில் நிற்க அதன் பக்கவாட்டில் பரந்திருந்த டைனிங் ஹாலின் கண்ணாடி மேஜையில் அமர்ந்து சாப்பாட்டைச் சுவைத்து கொண்டிருந்தவனுக்கு அவளது பட்டினி ஒரு நொடி ஒரே ஒரு நொடி மனதை உறுத்தியது.

பின்னர் இவள் தன்னை என்னவெல்லாம் பேசியிருப்பாள் என்ற எண்ணத்துடன் தோன்றிய சினத்தை அடக்கிக் கொண்டு தன் வேலையை முடித்தான். இன்று முழுவதும் பட்டினி கிடந்திருக்கிறான் அவளுக்காக. இரு வேளை உணவை தியாகம் செய்துவிட்டு திருமணம் முடிந்ததும் மாலை நேரத்தில் தான் அவன் வயிற்றுக்குள் உணவை அனுப்பினான்.

அவன் சாப்பிட்டு முடித்து எழுந்த பின்னர் மீதமிருந்த பணியாட்கள் அந்த இடத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். ஹாலின் நடுவில் சிலையாய் நிற்பவளை எகத்தாளமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனது அறைக்குள் சென்றான். வேக வேகமாய் உடைகளை களைந்தவன் ஷவரின் அடியில் நின்று கண்களை மூடிக்கொண்டான்.

என் அருகில் நீ இருந்தால் 💞Completed💞Where stories live. Discover now