25. மாமா உன் பொண்ண குடு

Start from the beginning
                                    

அவன் ஆசைப்பட்ட தந்தை போல் மட்டுமில்லை உலகிலுள்ள அத்தனை பிள்ளைகளின் ஆசை தந்தையும் அவராகத் தான் இருப்பார். 

ஏன் இத்தனை கொடிய முடிவு அவருக்கு என எண்ணும் வேலையிலேயே அவர்களின் முதல் சந்திப்பு  அனுமதியின்றி அவன் நினைவில் வந்து போனது.

June 28, 2017.

அந்த உயர்ரக ஹோட்டலில் காரை பார்க் செய்துவிட்டு வெளியே இறங்கிய மாயாவின் கண்கள் அங்கிருந்த அனைத்துக் காரையும் அலசிக்கொண்டிருந்தன.

அதில் தன்னவனின் கார் இல்லை என்று உணர்ந்து லேசான கோபமுடன் அங்கேயே நின்றுக்கொண்டிருந்தவளிடம், "மாயா ஏன் நிக்குற வா உள்ளேப் போகலாம்." என்றார் அவளோடு வந்த அவளது தந்தை வினை.

"அ.. அது.. ஒன்னுமில்லை வினு. வா போகலாம்." என்றவள் அவரின் பின்னால் சென்றப்படியே, 'இவன் இருக்கானே.. இன்னைக்கு எவ்வளவு முக்கியமான நாள்.. இன்னைக்குக் கூட சீக்கிரம் வரலை.' என்று ஆரவை மனதில் அர்ச்சனை செய்தப்படி தன் தந்தையை தொடர்ந்தவள், தன் போனில் பதட்டத்துடன் வேகமாய் அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.

பதட்டம் இருக்காதாப் பின்னே தான் மணமுடிக்க நினைப்பவனை தன் தந்தைக்கு அறிமுகம் செய்யப் போகிறாள் அல்லவா. தட்டுத் தடுமாறி நேற்றிரவு இந்த விஷயத்தைப் பற்றி வினையிடம் சொன்னப் போது அவரின் முகமே அவருக்கு இதில் பெரிதாய் இஷ்டம் இல்லை என்பதை காட்டிக்கொடுத்து விட்டது. இருப்பினும் ஒன்றும் கூறாமல் அவனைப் பார்க்க சம்மதித்திருக்கும் தன் தந்தைக்கு அவனை பிடிக்குமோ பிடிக்காதோ என்ற பயம் வேறு விடாமல் அவளை துரத்திக் கொண்டே இருந்தது.

அவன் "ஹலோ.." என்றது தான் தாமதம், "இன்னும் வராம என்ன டா பண்ணிட்டு இருக்க.. எதாவது சொதப்புனனு வையேன்.." எனத் தன் தந்தைக்கு தெரியாமல் கண்களை உருட்டி கிஸுகிஸுவென பேசியவளிடம், "கொஞ்சம் நான் சொல்றதைக் கேளு.." என்றவனை இடைமறித்தாள்.

"என்னச் சொல்லப் போற? படத்துல வர்ற ஹீரோஸ் மாதிரி, 'வழில ஒருத்தருக்கு ஆக்ஸிடென்ட். அவரை ஹாஸ்பிடல்ல சேர்க்கப் போயிருக்கேன்னு கதை விடப் போறியா?" என்றவளின் சொற்களைக் கேட்டு களுக்கென சிரித்தவன், தான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்து நின்று அவர்களுக்கு கைக் காட்டினான்.

விண்மீன் விழியில்..Where stories live. Discover now