30

2.4K 148 82
                                    

ஒரு மாதத்திற்கு பின்

மதுரையிலேயே பிரசித்தி பெற்ற மற்றும் பழமையான கூடலழகர் பெருமாள் கோவில். அன்று விடிந்தும் விடியாத காலை வேளையில் கொஞ்சம் கொஞ்சமாய் தன கூட்டினுள் இருந்து வெளிவந்த ஆதவனின் கதிர்பட்டு தன் கம்பீரத் தோற்றத்துடன் ஒளிர அன்று ராம பிரானும் சீதா பிராட்டியும் தங்கள் கரம் பிடித்து மனம் புரிந்த திருநாள் வைபவத்தில் தனது ஒன்பது வருட காதலை தனது லயாவை தாள லயத்துடன் தன மனைவியாக ஏற்க காத்திருந்தான் மாறன் .

பட்டு வேட்டி சட்டையில் கழுத்தில் மாலையும் நெற்றியில் குங்குமமும் அவனது ஆண்மைக்கு மேலும் அழகு சேர்க்க தன் அருகில் நின்று தன்னை கேலி பேசிக்கொண்டிருந்த நண்பர்களையோ தம்பியையோ கண்டுகொள்ளாதவன் மாப்பிள்ளை அழைப்பு முடிந்து எப்பொழுதடா சன்னதிக்கு சென்று தன் சரி பாதியை பாப்போம் என்று தவமிருக்க துவங்கினான் .

அவனை மிகவும் சோதிக்காமல் விரைவிலேயே சன்னதிக்கு அருகில் அவனை அழைத்து வந்துவிட தன எதிரில் கழுத்தில் மாலையுடன் மயில் கழுத்து நிற வெள்ளி ஜரிகை வாய்த்த பட்டு சேலையில் தலையில் வண்ண மலர்கள் அந்த கார்க்கூந்தலை அலங்கரித்திருக்க பெண்ணவளோ மிதமான ஒப்பனையில்

தங்க ஆபரணங்களை மிஞ்சும் வெட்கமெனும் ஆபரணம் சூடி தேவதையென காட்சி அளித்தால் ஆடவனின் கண்களிற்கு .அவன் தன்னை விழுங்குவதை போல் பார்ப்பதை உணர்ந்த இலக்கியா வெட்கம் தாளாமல் மேலும் தன் தலையை குனிந்து கொள்ள அவனோ லேசாக தனது தலையை சாய்த்து அவள் வதனத்தை பார்த்து சிரித்தான் .

அவன் அருகில் இருந்த ராஜா அவன் வாயில் தனது கைக்குட்டையை வைத்து துடைத்து அதை புழிவதை போல் சைகை செய்தவன் "அண்ணே மதுரைல இன்னொரு தடவ வெள்ளத்தை கொண்டு வந்துராதையா நீ "என்று கூறி சிரிக்க மாறனோ அவனை முறைக்க முயன்று தோற்று சிரித்துவிட்டான் .

கிண்டல்களும் கேலிகளும் அந்த இடத்தை நிறைக்க சிறிது நேரத்தில் புரோகிதர் வந்து மங்கள நாணை அங்கிருக்கும் அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்க கூறினார் .அனைவரும் அந்த சுபவேளையில் ஆனந்தமாய் திளைத்திருக்க மகாவோ இலக்கியா கழுத்தில் இருக்கும் ஆபரணங்களின் சவரன் எண்ணிக்கையை மனதிலேயே கணக்கிட்டுக் கொண்டிருந்தாள்.

உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி(முடிவுற்றது)Where stories live. Discover now