அத்தியாயம் 36

Start from the beginning
                                    

"அவ தான் டயர்ட் ஆகிட்டா அத்தே, அதான் கூட்டிட்டு வந்தேன்.." என்றவன் "நான் பேசிக்கிறேன் அத்தே" என்றபடி.ரூமிற்குள் நுழைந்தான்.

"ம்..நீ எங்களை சொல்லுறே? சரி நீ வா நம்ம எதிர் வீட்ல கொஞ்ச நேரம் இருக்கலாம் வா" என்றபடி வருண் தாயை அழைத்து கொண்டு எதிர் வீட்டிற்கு சென்றான்.விஷ்ணுவும் அவர்கள் பின்னாலே சென்றான்.

ஜன்னலை பிடித்து கொண்டு நின்று இருந்தவளை பின்னால் இருந்து கட்டிக் கொண்டு "என் அழகீ..அவங்க உன் அம்மா தானே..இட்ஸ் ஓகே விடுறா." என்றான்.

"என்ன உன் மாமியாருக்கு சப்போர்ட்டா..ம்ச்..போ" என்றாள் சுரத்தையில்லாமல்.

"சரி அவங்களுக்காக நான் சாரி கேட்கிறேன்" என்றான் அவள் கன்னத்தில் தன் கன்னத்தை தேய்த்தான்.

"இந்த சாரி எல்லாம் எனக்கு ஒன்னும் வேண்டாம், நீ கிளம்பு உங்க மாமியார் இதுக்கு வேற என் தலையை தான் உருட்டும்..ம்ச்..நீ போ" என்று முறைத்தாள் அவனை திரும்பி பார்க்காமல்.

"சரி நம்ம சாரி சொல்லுறேன், அப்ப ஓகேவா" என்றான் விடாமல்.

"நிஜமாவா.." என்றபடி மெதுவாய் அவன்புறம் திரும்பினாள்.

"ம்.."என்றவன் அவள் முகத்தை கையிலெடுத்து அவன் கண்களை பார்த்து "கண்ணுக்குள்ள இருக்க கண்ணீர் வெளியே வராமல் அப்பிடியே உள்ளே போனா தேங்க்ஸ் கூட சொல்லுவேன்" என்று மெலிதாக சிரித்தான்.

"சும்மா போங்கு தானே" என்றாள் அடிக்கண்ணில் அவனை பார்த்தபடி.

அவள் நெற்றியில் முத்தமிட்டு "இல்ல" என்றான்.

"தங்கம்டா நீ.."என்றபடி மூக்கை நன்றாக உறிஞ்சி கொண்டு "இப்ப பாரு..கண்ணுல கண்ணீர் இல்லையில்ல" என்றாள் குழந்தை மாதிரி.

"ம்" என்று மெலிதாக சிரித்தவன் அவள் கன்னத்திலும் இதழிலும் மாறி மாறி முத்தமிட்டான்.

சிறிது நேரத்தில் அவனிடம் இருந்து சிரித்து கொண்டே நகர்ந்தவள். "இது என்னை தாஜா பண்ண மட்டும் தான்..ஓகே வா" என்று குழந்தைதனமாய் ஒற்றை விரலை நீட்டி.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now