காலம் -15

Start from the beginning
                                    

வேதநாயகி குணத்தில் பித்தளை குண்டமென்று வேண்டுமானால் கூறலாம்... ஆனால் அதற்கு தங்க நிற பெயின்ட்டடித்து ஊரை ஏமாற்றி வருகிறார்... பார்க்க தான் அவர் நல்லவர்... ஆனால் உள்ளுக்குள் முழுக்க முழுக்க பேராசை நிறம்பியவர்.... பணத்தில் புறழும் ஆசை கனவில் வந்தது போல...  தகுதி தாரம் பார்த்து பழகுபவர்....

அனைவரிடமும் ஏதோ தியாக செம்மலை போட்டு காட்டி கொண்டாலும் சிலரிடம் நேருக்கு நேராகவே முகத்தை சுழிப்பார்... அப்படி ஒரு முறை சுழித்ததனால் மூக்கில் ஏற்பட்ட காயம் இன்றும் அழியவில்லை... கொஞ்சம் மறதி வேறு... அதை அவர் சாதாகமாய் தான் எடுத்து கொள்வார்.... ஏனெனில் மறதி இருப்பதை காரணமாய் கூறியே செய்து கொடுக்கிறேன் என கூறிய அனைத்து காரியங்களையும் தட்டி கழித்து விடுவார்... இதனால் ஊர் மக்கள் பலர் அவதி பட்டிருக்கின்றனர்....

ஆனால் இம்மறதி தான் அவர்கள் செய்த அனைத்து அட்டூழியங்களுக்கும் முற்று புள்ளி வைத்த நேரம் அது அடுத்த புள்ளி வைத்தும்... தானே அறியாமல் கமாவாக மாற்றி இப்போது மரண சாசனத்தை எழுத போகிறதென்று இவர்கள் அறியப்போவதில்லை....

ராமலிங்கம் அவரின் அண்ணன் குணத்தை ஒத்தவர்... பணத்திற்காக எது வேண்டுமானாலும் செய்வார்... தனக்கு என்றுமே மரியாதை இருக்க வேண்டும் என்ற அடங்காத்தனம் அவருக்கு... தன்னை கண்டால் அனைவரும் உடனே நடுங்க வேண்டும் என்ற பேராசை வேறு...

இதில் தன்னையே ஒருவன் நடுங்க வைத்து விட்டானே என அவ்வப்போது கழுத்திலிருந்த தழும்பை தடவி பார்த்து கொள்வார்....

வைத்தியநாதன்... லிங்கத்தின் பினாமி... அவர் செய்யும் அனைத்து காரியத்திற்கும் இவர் உடந்தை... லிங்கத்தின் வலது கை இடது கை அனைத்தும் இவரே... லிங்கத்தை அது செய் இது செய் என ஏற்றி விடுவதும் இவரே...

சுந்தராசு இருவது வருடத்திற்கும் மேலாக லிங்கம் செய்து வரும் அனைத்தும் குற்றங்களையும் அரசாங்கத்தின் பார்வையிலிருந்து மறைத்து வைத்திருக்கும் பாவி...

காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது)Where stories live. Discover now