அறிவிப்பு

1.6K 71 98
                                    

வணக்கம் நட்புறவுகளே...

நான் உபயோகிக்கும் நட்புறவு என்ற வார்த்தையை என் உள்ளத்தில் இருந்து பயன்படுத்துகிறேன் இங்கு இருக்கும் அனைவரையும் என்  உறவாகவே கருதுகின்றேன்...

என்  கதைகளில் அரக்கனோ அழகனோ.. மற்றும் முன் ஜென்ம தேடல் நீ.  ஆகிய  இரண்டு கதைகளை தற்சமயம் இங்கிருந்து நீக்கியுள்ளேன்..   அவைகளை மீண்டும்  பதிவிடும் படி பலர் தன்மையாகவும் ஒரு சிலர் வன்மையாகவும் கேட்டிருந்தீர்கள்.. அதற்கான பதிலை அங்கேயே கொடுத்துவிட்டேன்.. இருந்தும் என் மனதில் சில நெருடல்  அது என்னவென்றால் ஒரு சிலர்   எண்ணம் இங்கு பலருக்கும் இருக்க வாய்ப்புண்டு..  அதனை  தெளிவுபடுத்தவே இந்த பதிவு..

இது எனக்கு தனிப்பட்ட முறையில் கேட்கப்பட்ட கேள்விகள்..

இங்கிருந்து ஏன்  கதையை நீக்கினீர்கள்.. நான் பாதி தான் படித்தேன் மீதியும் படிக்க வேண்டும்.. மறுபடியும் பதிவு செய்யுங்கள்..

இதற்கான என் பதில்...

இல்லை சகோ..  அது amazon kindle பதிவிட்டு உள்ளேன்... இங்கு மீண்டும் பதிவிட சில காலம் ஆகும்... மன்னிக்கவும்..

ஓ... பணத்திற்கு விற்க துவங்கிவிடீர்களா..  அப்படியென்றால் இங்கு எதற்கு  எழுத்துகின்றீர்கள்.. அங்கேயே எல்லா  கதைகளையும் விற்க வேண்டியது தானே.. இங்கு படிக்கும் வாசகர்களை பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரிகின்றது... கலையை  விற்க வெட்கமாக இல்லை..
இதே ரீதியில் இன்னும் பல வன்மையான கேள்விகள்  என்னிடம் எழுப்பப்பட்டது..

இதற்கு அவருக்கு வேண்டிய பதில் கொடுத்துவிட்டேன்..

அதே பதிலை இங்கு பதிவிடுகின்றேன்..

கலையை விற்கின்றேன் என்றால்.. ஒரு ஓவியன் ஒரு சிற்பி தன் படைப்புகளை எவருக்கும் ஓசியாய் கொடுப்பது இல்லை.. அவர்கள்  செய்தால் நியாயம் எழுத்தார்கள் செய்தால் கலை விற்பனை..


ஆம் நான் பணத்தாசை கொண்டவள் தான்.. என்  பணத்தின் ஆசை  எதனை நிறைவேற்றுகின்றது தெரியுமா?..

வீட்டில் சும்மா தானே  இருக்கின்றாள் என்று ஏளனமாய் பார்த்தவர்கள் வாயடைக்க உதவியது...

என் மகளின் பள்ளியின் ஒரு term  fees நீங்கள் சொன்ன கலையை  விற்ற காசில் தான் காட்டினேன்..  அந்த நொடி நான் உணர்ந்த அளவில்லா ஆனந்தம்.. இன்னும் என் மனதில் பசுமையாய் நிறைந்திருக்கின்றது..   கல்யாணம் ஆன நாளிலிருந்து எனக்கு உடை எடுத்து கொடுத்த என்  கணவருக்கு இந்த தீபாவளிக்கு நான்  புது துணி எடுத்து கொடுத்தேன்.. அவர் கண்களில் நான் கண்ட   மகிழ்ச்சி தான் என்  பணத்தாசை...

மகனுக்கு பாரமாய் உட்கார்ந்து திண்கின்றேன் என்று  வசை பாடியவர்களுக்கும் உடை எடுத்து கொடுத்து.. கர்வமாய் அறிவித்தேன்.. நான் அவரின் பாரம் அல்ல.. சரிபாதி என்று...

இது தான் என் பணத்தாசை.. இதற்கு மேலும் என்னை விமர்சிக்க  நினைத்தால்.. உங்கள் எண்ணத்திற்கு என்னை மாற்றிக்கொள்ள முடியாது...

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரின்
எண்ணத்திற்கு  மாறத்  துவங்கினாள்..
நான் பச்சோந்தியாக மட்டுமே இருக்க வேண்டி வரும்...

...  என் வலிகளை இங்கு கொட்டிவிட்டேன் என்   வார்த்தைகள் உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்...

இது எனக்கான பதிவு  மட்டும் அல்ல.. இங்கு  உள்ள படைப்பாளிகள் அனைவரின் சார்பாக  பதிவிடுகின்றேன்...

எங்களுக்கு வரும்   பணத்தை  நாங்கள்.. சம்பளமாக கருதவில்லை.. என்  படைப்பிற்கு கிடைத்த அங்கீகரமாய் பார்க்கின்றோம்..

என்றும் நட்புடன்...

லதாகணேஷ்..

தேவதை பெண்ணொருத்திWhere stories live. Discover now