நிரலி-9

Start from the beginning
                                    

கல்யாணம்னா வயசு முக்கியம்  அவங்களுக்கு தகுந்தார் போல படிப்பு கண்டிப்பா இருக்கனும்மா மனசு மட்டும் இல்லை வயசும் ஒத்துபோகணும்.. இல்லைனா எவ்வழியோ கருத்து வேறுபாடு.... அது ரெண்டு பேரும் ஏத்துக்க முடியாம பெரிய பெரிய பிரச்னை தான் வரும்..
கிட்டத்தட்ட இருபது வயசு வித்தியாசம் உள்ள மனுசனுக்கு என்னை கல்யாணம் செய்து கொடுத்தீங்களே.. அவரு இன்னும் இருபது வருஷம் நல்லா இருப்பாருனு வச்சுக்கோங்க அடுத்து வரபோற என்னோட இருபது வருஷ வாழ்க்கை பத்தி கொஞ்சம் யோசிச்சீங்களா...

அதுக்காக வயசு வித்தியாசம் இருந்து மத்தவங்க வாழலையானு கேட்கலாம்..  வாழுவங்க நான் இல்லைனு சொல்லல.. ஆனால் அவங்க எல்லாம் நிம்மதியா சந்தோசமா வாழுறாங்களானு ஒரு தடவை ஒரே ஒரு தடவை அவங்க கிட்ட கேட்டு பாருங்க.. அவங்க மௌனம் மட்டும் தான் பதிலா வரும்..

இங்க நிறைய பொண்ணுங்க வாழ்க்கை பெத்தவங்கலாளே அழிக்கப்படு்து அதுல என் வாழ்க்கையும் ஒன்னு.. அவ்ளோதான் நான் இனி அந்த வாழ்க்கை தான் வாழப்போறேன்... என் வாழ்க்கை முடுஞ்சு போன அத்தியாயம் அதை யாரும் புதுப்பிக்க நினைக்க வேண்டாம்.. எனக்கு செய்த கொடுமையை என் தங்கைக்கு செய்திட வேண்டாம்.. பாவம் அவளுக்கு என்னை போல செத்து செத்து வாழ முடியாது..

பெத்தவங்க அவங்க விருப்பத்தை பொண்ணுமேல திணிக்கிறதே தப்பு.. இதுல பிடிவாதத்துக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிக்குறது எவளோ பெரிய தப்பு...

ஆமா இப்போ சொல்றேன் எனக்கு அங்க இருக்கது நரகத்தை விட கொடுமையா தான் இருக்கு.. வாழ்க்கைல எந்த பொண்ணும் அனுபவிக்க கூடாத எல்லா கொடுமையும் அனுபவிச்சுட்டேன்.. அனுபவிக்குறேன் இனியும் அந்த கொடுமையை அனுபவிக்க தயாரா தான் இருக்கேன் எதுக்கு தெரியுமா..

இதோ இதோ இங்க உக்காந்துருக்காரே என்னைய இந்த உலகத்துல நல்ல படியா வாழ வைப்பாருனு நெனச்சு... எல்லா முடிவும் அவரே எடுக்கட்டும்னு அவர் கைல கொடுத்துட்டு எல்லாத்தையும் இழந்து நான் ஒரு நடைபிணமா வாழுறத அவரு கண் குளிர பாக்கணும் அதுக்காக தான்...

நிரலி (நிறைவுற்றது)... Where stories live. Discover now