சந்திப்போமா..?-25

Начните с самого начала
                                    

"அவ எனக்கு மருமகன்றதே அப்பப்போ மறந்து போயிடுது என்ன அவ அப்பாவ போல பார்த்தா எனக்கு மாத்திரய கைல கொடுக்காம தூங்க மாட்டாப்பா நான் பெற்று இருந்தா கூட இவ்ளோ தங்கமான ஒருத்திய பெத்து இருக்க முடியாது.... கடைஷி வரை என் பையன்கூட அவ சந்தோஷமா வாழவே இல்லப்ப....."

"மாமா கவலை படாதீங்க அக்கா கூட கொஞ்சம் நாள் பழகின   எனக்கே உயிர் போன மாதிரி வலி அப்போ உங்க வலிய நான் கற்பணை கூட பன்ன முடியாது எனக்கு  புரியுது பட் இப்போ நிறைய வேலை இருக்கு மாமா நான் போயி ஒரு கம்ப்லெய்ன்ட் குடுத்துட்டு வர்றேன் நீங்க காரியம் பன்னறதுக்கான வேலைய பாருங்க இப்போ குணா கிட்ட எதையும் எதிர்பார்க்க முடியாது ஸோ நானும் நீங்களும் தான் நம்ம உணர்வுகள ஒரு பக்கம் தூக்கி போட்டுடு அக்காவோட கடைஷி நிமிஷத்தயாவது சிறப்பா பன்வோம்"

"மாப்பிளை போலீஸ் ஸ்டேஷன் ஏன்ப்பா?"

"மாமா இது கொலை உங்களுக்கு பார்த்தா தெரியலையா"

"தெரியுதுப்பா பட் எங்க சுமிய யாருப்பா கொல்லுவா அவ தங்கமில்லயா"

"யாரோ பன்னிறூக்காங்க யார்ன்னு பார்த்து தண்டிக்க வேணா அவ மரணத்துக்கு நாமலே  நியாயம் தேடி கொடுக்க வேண்டாம்"

"நீ படிச்ச பய ஸோ பார்த்து பன்னுப்பா" என்று விட்டு அமர்ந்து விட்டார்

சுமியின் கைகள் ஒரு துப்பட்டாவை இருக்கி பிடித்து இருந்தது அதை கண்ட கயல் அதை கையிலிருந்து எடுக்க முயற்சித்தாள்

"இளாவோட துப்பட்டாவ எப்டி இருக்கி பிடிச்சி இருக்கான்னு பாரு குணா அவ சாகும் போது கூட அத விடல எவ்ளோ துடிச்சிருப்பா... அய்யோ அவளுக்கு பதில வாழ்ந்து கெட்டு போன என்னயே எடுத்து இருக்கலாமே இறைவா"
என்று கூறி அழுதாள் ஜானகி

இளாவின் துப்பட்டா என்றதும் கயலின் மண்டையில் பலமாக இடித்தது

"இளா எங்கம்மா"

"ஜானகி பதில் பேசவில்லை"

"அம்மா இளா எங்க?"

"இது தான்டி அவ ரூம் இப்போ அதுவா முக்கியம்" என்று அவளை கத்திவிட்டு தேம்பி அழுதாள்

சந்திப்போமா (முடிவுற்றது)Место, где живут истории. Откройте их для себя