நிரலி -2

Start bij het begin
                                    

கணவன் எவ்வளவு ஆறுதல் மொழிகள் கூறியும் சித்ரா மனதில் இருந்த ஆண் பிள்ளையின் ஆசை சற்றும் குறையவில்லை... பெண்ணோ ஆணோ இரண்டு பிள்ளை போதும் என்று முடிவெடுத்திருந்த ராஜாவின் மனதை கரைக்க எண்ணி ஏதேதோ பேச நாளடைவில் எந்த முன்னேற்றமும் இல்லை... பின் தன் அம்மாவை பேச சொல்லலாம் என எண்ணி தாயை வீட்டுக்கு வர வைத்திருந்தாள்..

வீட்டுக்கு மாமியார் வந்திருக்க வாங்க அத்தை எப்படி இருக்கீங்க என கேட்ட படி நிரலியை மடியில் அமர்த்திக்கொண்டு தனது இரண்டாவது மகளை கொஞ்சிக்கொண்டிருக்க... தம்பி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என கூற மனைவியும் முகத்தை குனிந்த தலை நிமிராமல் இருக்கவும் என்ன ஏதோ மனைவி சொல்ல முடியா விஷயம் போல என நினைத்து சொல்லுங்க அத்தை என கேட்க...

அது ஒன்னும் இல்லை மாப்பிளை நேத்து போய் என் மகளோட ஜாதகம் பார்த்துட்டு வந்தேன்.... நிச்சயம் அடுத்த பிள்ளை சிங்கக்குட்டி தான்... நீங்க ஏதோ ரெண்டு பிள்ளை போதும்னு சொல்டிங்கனு சித்து சொன்னா.. அதான் என ராகமிழுக்க... ஒஹ்ஹஹ் என்று மட்டும் கூறிய ராஜா வேறொன்றும் கூறாமல் பிள்ளைகளை கீழே மெத்தையில் கிடத்தி அவர்களுக்கு தேவையான விளையாட்டு பொருட்களை போட்டுவிட்டு...

ஒரு நிமிஷம் அத்தை நில்லுங்க வரேன் என கூறிவிட்டு உள்ளே சென்ற ராஜா ஒரு பெரிய பெட்டி எடுத்து கொண்டு வந்து... நேரே தன் மனைவியை தாண்டி மாமியாரிடம் சென்றவர்... அத்தை இதுல உங்க பொண்ணு பொருள் எல்லாம் இருக்கு அப்பறம் இன்னைக்கு இல்லை என்னைக்கு வேண்டுமானாலும் நீங்க கொடுத்த பொருள் எல்லாம் வண்டி வச்சு ஏத்திக்கோங்க அப்பறம் உங்க பொண்ணுக்கு தரலாமா நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிவச்சு எத்துணை ஆம்பிள பிள்ளை வேணும்னாலும் பெத்துக்க சொல்லுங்க எனக்கு என் ரெண்டு பொண்ணுக போதும் என கூறிவிட்டு வாசலை நோக்கி கைகாட்ட...

சித்ராவும் அவளின் தாயாரும் உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்... ராஜா கூறிவிட்டு ஒன்றும் நடவாதது போல் தன் பிள்ளைகளோடு விளையாட சென்றார்... பின் சித்ரா ஓடி வந்து ஹையோ நான் தெரியாம ஆசை பட்டுட்டேன் எனக்கு நீங்களும் நம்ம ரெண்டு பிள்ளைகளும் மட்டும் போதுங்க என கூற...

நிரலி (நிறைவுற்றது)... Waar verhalen tot leven komen. Ontdek het nu