ஜாக்கி என் நாயின் பெயர்... நாய்னா நன்றி என்று சொல்லுவாங்க but நான் அப்படி நினைச்சதில்ல because எனக்கு நாய்னா வெறுப்பு.... ஒரு நாள் கூட அதைத் தூக்கி கொஞ்சியதில்லை.. ஏன் உணவு கூட வைத்ததில்லை... ஆனாலும் ஜாக்கி அதை பற்றி கவலைப்பட்டதில்லை... ஒவ்வொரு லீவுக்கும் நான் வீட்டுக்கு வரும் போது கேட் வரை ஓடி வந்து வரவேற்கும்... என் குணம் தெரிஞ்சோ என்னமோ என்னிடம் நெருங்காது என்னைப் பார்வையிலேயே அளவெடுக்கும் இதைப் பிறகுதான் நான் அவதானித்தேன்............ என்னைப்பற்றி சொல்லணும்னா நான் வீட்டுக்கு ஓரே பொண்ணு அப்பா இல்லை. அம்மா மட்டும் தான் அவங்க ரீச்சிங் பண்றாங்க. நான் universityல படிக்கிறன்... இயல்பாவே கொஞ்சம் பயந்த சுபாவம் எனக்கு ... இப்படி இருக்கும் போது நான் சொந்த ஊருக்கு வந்தன்... எனக்கு விடுமுறை விட்டிருந்தார்கள்.. நிறைய நாள் கழித்து அம்மாவைக் காண ஆவலோடு வந்தன்... இப்படி நாட்கள் கழிய ஒருநாள் அம்மா பரீட்சை என்று பள்ளிக்கு போயிட்டாங்க.. நான் வீட்டிலே தனியாய் இருந்தேன் ஜாக்கி தன் இடத்தில் படுத்திருந்தது... திடீரென காலிங்பெல் சத்தம் கேட்க அம்மாவோ என்று எழும்பி விரைந்து கதவை திறந்தேன்... எதிர் வீட்டு டாக்டர் அங்கிள் நின்று கொண்டீருந்தார்.... வாங்க அங்கிள் என்று வரவேற்றேன். என்னம்மா எப்ப வந்தனி என்று கேட்டார். நேற்று அங்கிள் என்று சொன்னேன். மரியாதையின் நிமித்தம் நிற்க இருமா என்றார். நானும் அமர்ந்து பேச ஆரம்பித்தேன்..... சிறிது நேரம் பேசிட்டு அம்மா பற்றி கேட்க நான் விசயத்தைச் சொன்னேன் அவரும் சரி என்று பேசிட்டு இருந்தார். நான் சிறிது நேரத்தில் காபி போட எழும்பி கிச்சனுக்குப் போனேன்.. திடீரென என் பின்னால் ஒரு அரவம் கேட்க சடாரென்று திரும்பினேன்.. எதிரே டாக்டர் அங்கிள் நின்று கொண்டிருந்தார். நான் மிகவும் பயந்து விட்டேன். என்ன அங்கிள்?? என்று திக்கித்திணறி கேட்க தண்ணி என்றார்.. நானும் படபடப்பை ஆடக்கிக் கொண்டு காபி போட்டேன்... அவர் என்னை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு பருகினார். திடீரென்று அவர் என் கையை பிடித்து இழுத்து பலவந்தப்படுத்தினார்... நான் கத்தத் தொடங்கினேன்... எனக்கு யாரை உதவிக்கு கூப்பிடுவது தெரியவில்லை. அப்போது வெளியே படுத்து இருந்த ஜாக்கியைப் பார்த்து கத்தினேன்... எனது முதல் அழைப்பை கேட்டு வீறு கொண்டு ஓடி வந்தது... என் கதறலைப் பார்த்து என்ன புரிந்ததோ???! பாய்ந்து அவரின் கையைக் கவ்வியது அவர் வலியால் கத்தி என் கையை விடுவித்தார்.... ஜாக்கி பாய்ந்து அவரை வீழ்த்தி உடலெங்கும் கடித்தது.. ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் கத்தியபடி வீட்டை விட்டு வெளியேற நான் ஜாக்கியை அழைத்து கதவை சாத்தினேன்.. முதல் முறையாக அதை கட்டிக் கொண்டு அழத் தொடங்க அது என் கண்களில் நக்கி ஆறுதலளித்தது.. அன்று உணர்ந்தேன். யார் உண்மையான நாய் என்று?? எந்த நாயைக் கண்டு விலகி நடக்க வேண்டும் என....... மறுநாள் ஜாக்கியை அணைத்து முத்தமிட்டுவிட்டு தற்காப்பு கலை வகுப்பு நோக்கி நடந்தேன். ஏனென்றால் ஜாக்கி என்றும் இந்த மாதிரி நாய்களிடம் இருந்து என்னைப் பாதுகாக்க எப்போதும் வராது இல்லையா.....?!
