❤கானல்-33❤

Start from the beginning
                                    

"சொல்றா என்ன சுற்றி என்ன நடக்குது தயவு செய்து பொடி வெச்சி பேசாம சொல்லேன் தப்பு பன்னவன் தண்டனை அனுபவிக்காமலூம் இருக்க மாட்டாங்க. முட்டாளுங்க தெளியாம இருக்கவும் மாட்டாங்க இதுல நீ நான் பன்ன தப்ப சொல்லேன் சொல்லியும் புரிஞ்சிக்காம போற அளவு நான் கெட்டவனாவே இருக்குறது எனக்கு பிடிக்கலை வினோ" என்றான் கலங்கிய குரலில்
அருகில் வந்த சுரேஷ் "நீ முட்டாள் இல்ல தப்பு பன்னவுமில்லை பட் யாரோ ஒரு அறிவாளியான குற்றவாளி உன்ன தப்பு பன்ன வெச்சி முட்டாள் ஆக்கிட்டு இருக்காங்க அதற்கு அவங்க பயன்படுத்துற ஆயுதம் தான் அன்பு,நம்பிக்கை"

"நீயுமா சுரேஷ்"

"நீயுமா சுரேஷில்ல தமிழ் நான் தான்யா வினோ ஹாஷு சுமதி தனூஷ் மாமா சனா ன்னு எல்லாரும் ஒன்னா இருக்கோம் உனக்கு எதிரா இல்ல உன் அன்பு, நம்பிக்கையும் அதிகமா இருக்குற ஒருத்தங்களுக்கு எதிரா"

"சுரேஷ் இங்க எதுவும் வேண்டாம் வா மாடி ரூம்க்கு போலாம்" என்று விட்டு தமிழின் கையை பற்றி கூட்டி சென்றான் வினோ

கதவை லாக் செய்தான் சுரேஷ் "டேய் இப்பவாச்சும் சொல்லுங்க" என்று தமிழ் கத்தியதும்

"சொல்றேன்டா" என்று ஆரம்பித்த வினோ "இத பார் தமிழ் உங்க அம்மா சரியில்லை டா..... அவங்க கேடு கெட்ட பெண்ணாக இருக்காங்க" என்றதும் தான் வினோதின் கன்னத்தை பதம் பார்த்தது தமிழின் கை

தமிழ் அடித்தது வலித்தும் அதை பொருட்படுத்தாது

"அவங்க உன் காம்பேனில வர்க் பன்னின அருநாச்சலத்தை கொலை கூட பன்னாங்க அத நேர்ல பார்த்த சாட்ச்சி நம்ம தான்யா தான்" என்றதும்

"வேண்டாம் வினோத் இதற்கு மேல அம்மா பற்றி தப்பா ஒரு வார்த்தை பேசினா கவியோட கழுத்துல உள்ள தாலிக்கு நான் பொறுப்பீல்லை" என்றான் கோவமாக கண்கள் இரத்தமென சிவந்து இருந்தது

"பேசுவேன்டா என் கவிக்கு நான் கொடுத்தது தாலிய இல்ல காதல அவளோட தாலி இறக்கி நீ கெட்டவனாகுறதும் இப்போ நீ இருக்குறதும் ஒன்னு தான் டா முட்டாள்"

கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது)Where stories live. Discover now