நறுமணம் 73

Start from the beginning
                                    

"இதோ வரேன்....அஞ்சு நிமிஷம்...."னு ஸ்வாத்தி கிட்சன்ல இருந்து கத்துனா...

சொன்ன மாதிரியே அஞ்சு நிமிஷத்துல காஃபி கொண்டு வந்து அவனுக்கு குடுத்துட்டா...

"ஏன் டி இங்க நான் ஒருத்தன் அரைமணி நேரமா காஃபி கேட்டுட்டு இருக்குறேன்....எனக்கு தரல...ஆனா அவன் கேட்ட உடனே தருற...."

"மொதல்ல இன்னைக்கு என்ன நாள்னு கண்டுபுடிச்சு சொல்லுங்க....அதுக்கப்புறம் காஃபி குடுக்குறேன்....சொல்லன்னா டிஃபனும் கட்டு...."னு கோவமா சொல்லிட்டு போய்ட்டா

நான் ப்ரவீன பாத்தேன்....அவன் என்னைய பாத்து சிரிக்க ஆரம்பிச்சிட்டான்

"ஏன்டா சிரிக்க மாட்ட....நல்லா டைம்க்கு எல்லாம் கிடைக்குதுல்ல....உனக்கும் கல்யாணம் ஆகும் அப்போதான் என் ஃபீலிங்ஸ் புரியும்...."

"அண்ணா சும்மா பொலம்பாத....அவுங்க கோவப்படுறதுலையும் ஞாயம் இருக்குது....இன்னைக்கு என்ன நாளுன்னு எனக்கு கூட ஞாபகம் இருக்கு....ஆனா நீ மறந்துட்ட....போய் வீராப்பா தாலி கட்டி அண்ணிய கூட்டிட்டு வர தெரிஞ்சதுல....அதை இந்த பொண்ணான நாள்ல தான் பண்ணுன்றதை ஏன் மறந்த....இன்னைக்கு உங்க கல்யாண நாள் டா...."

"ஐய்யோ மறந்துட்டேன்....அதுக்கு தான் கோவப்படுறாலா....நல்ல வேலை ஞாபகம் படுத்துன...."

"அதான் படுத்திட்டேன்ல இப்பையாவது போய் அண்ணிக்கிட்ட ஸ்கோர் பண்ணு....இல்லன்னா இன்னைக்கு ஃபுல்லா சாப்பாடு கிடைக்காது...."னு‌ சிரிச்சிட்டே சொன்னான்

நானும் சரின்னு சொல்லிட்டு கிட்சன்கு போனேன்....போய் பின்னாடி இருந்து‌ அவள ஹக் பண்ணுனேன்

"இங்க எதுக்கு வந்திங்க...."

"ம்ம் என்‌ பொண்டாட்டிக்கூட ரொமேன்ஸ் பண்ண வந்தேன்...."

"ஓ நான் உங்க பொண்டாட்டின்னு ஞாபகம் இருக்குதா...."

"இருக்குறதுனால தான் உன்னைய கட்டிப்புடிச்சிட்டு இருக்குறேன்...."

 நறுமுகை!! (முடிவுற்றது)Where stories live. Discover now