காதல் சொல்ல வந்தேன்

145 7 1
                                    


  உன் பொண்ணான மென்மையான மலரின் இதழ் போன்ற பாதங்கள் தரையில் நடந்து வருகையில்...!!!

வானத்தில் மேகங்கள் சூரியனை
மறைத்து உன் மென்மையான மேனியை பாதுகாத்து...!!!

உன் அழகை கண்டு அந்த மேகங்கள் மழைத்துளிகளாக தமது ஆனந்தத்தை கொண்டாடின...!!!

திடிரென இளம் காற்று வீச உன் கூந்தல் கரு மேகங்கள் போல அசைவதை பார்த்து மயிலும் தனது தோகை விரித்து ஆட தொடங்கியது...!!!

பளிங்கு கல்லில் உள்ள பளிங்கு போல சில மழைத்துளிகள் உன் நெற்றியில்...!!!

தாமரை இலையில் உருண்டு விளையாடும் நீர் துளிகள் போல உன் உதட்டில் பட்டும் படாமல் விழுந்து போகும் ஒரு மழைத்துளி...!!!

நீ கை வீசி அந்த மழைத்துளிகளோடு விளையாடும்
தருணம் அந்த மழைத்துளிகள் நானாக இருக்க கூடாதா என்ற எண்ணம்...!!!

மழைத்துளிகள் சில பூக்களில் விழ...!!! கனம் தாங்காமல் அந்த பூக்கள் உதிர்ந்து விட...!!! அந்த பூக்களை உன் கைகளால் தொட்டு எடுத்து பார்க்கும் பொழுது உன் கண்களில் ஏனோ கலக்கம்...!!!
உன் கலக்கமடைந்த கண்களை பார்க்கும் பொழுது என் கண்களில் ஓர் ஏக்கம்...!!!

அந்த அழகான மழைத்துளிகள் விழும் ஓசையோடு நீ நடந்து செல்கையில் உன் அசையும் வளைவுகளில் விழுந்து எழ மறுக்கின்றேன்...!!!

தூரத்தில் இருந்து உன்னை ரசிக்கும் எனக்கு உன் அருகில் வர ஒரு தயக்கம்...!!! இருந்தும் ஏனோ என்னுள் ஓர் மயக்கம்...!!!

காதல் சொல்ல வந்தேன் உன் அருகே ரோஜா மலரோடு...!!!
உன் முகம் கண்டேன் பல ஆண்டுகள் உன்னோடு வாழ்ந்த எண்ணம்...!!!
இது கனவா? இல்லை நனவா? என்ற குழப்பத்தோடு...!!!

என்னை பார்த்து நீயோ புன்னகை செய்தாய்...!!! அந்த சில நொடிகள் மகிழ்ச்சி வெள்ளம்...!!! மழை வெள்ளம் போல் என்னை மூழ்கடித்தது...!!!

உன் அழகிய விழிகளால் என்னை அழைத்தாய்...!!! உன் விழியை பார்த்தபடியே காலடி வைத்தேன் உன் அருகே வர...!!!

அடுத்த நொடி என் காலடி அருகே இன்னொரு காலடி...!!!
நிமிர்ந்தேன்...!!!

அருகே ஒருவன்...!!!
உன் விழி அவனை நோக்க...!!!
அவன் விழி உன்னை நோக்க...!!!
என் விழி உன்னை நோக்க...!!!
புரிந்துக் கொண்டேன்...!!!
உன் புன்னகை எனக்கில்லை என்பதை...!!!

மகிழ்ச்சி வெள்ளம் கண்ணீர் வெள்ளமாக மூழ்கடித்தது என்னை...!!!

நீ அவன் கைகோர்த்து நடக்க...!!!
என் கைகோர்த்திருந்த ரோஜா மலர் கைநழுவி சேற்றில் விழுந்தது என்னை அறியாமல்...!!! 

காதல் சொல்ல வந்தேன்Where stories live. Discover now